![]() |
|
வடக்கு கிழக்கு ஆளுனராக கடற்படை முன்னாள் அதிகாரி தெரிவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வடக்கு கிழக்கு ஆளுனராக கடற்படை முன்னாள் அதிகாரி தெரிவு (/showthread.php?tid=1350) |
வடக்கு கிழக்கு ஆளுனராக கடற்படை முன்னாள் அதிகாரி தெரிவு - மேகநாதன் - 01-16-2006 <span style='color:red'><b>வடக்கு கிழக்கு ஆளுனராக கடற்படை முன்னாள் அதிகாரி தெரிவு! </b> ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரியான ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவை நியமிப்பதற்கு ஸ்ரீலங்காவின் அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸ தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய ஆளுனரும், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி வெளிவிவகார அமைச்சருமான டிரோன் பெனாண்டோ தற்போது வெளிவிவகார அமைச்சின் ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்றும் தெரியவருகின்றது. கடற்படைத் தளபதிக்கு அடுத்த நிலையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியர் அட்மிரல் மொஹான் விஜய விக்கிரமசிங்க. கடற்படைத்தளபதி நியமனத்தில் ஏற்பட்ட கசப்புணர்வினை அடுத்து அவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</span> <b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b> - மேகநாதன் - 01-16-2006 <span style='font-size:25pt;line-height:100%'>தமிழீழ தேசத்தில் சிறிலங்கா படைக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் அரச பயங்கர்வாதம் படையினர் மூலமாக கட்டவித்துவிடப்படும் இவ் வேளையில், வடக்கு கிழக்கு ஆளுனராக முன்னாள் கடற்படை உயரதிகாரியை நியமிப்பதானது, அமைதி முயற்சி மீதான சிறிலங்காவின் \"இரன்டகத்தை\"க் காட்டுகிறது. அதேவேளை,மக்கள் படைகளால் சிங்களக் கடற்படையினருக்கெதிரான தாக்குதல்கள் நிகழ்த்தப்படும் வேளையில் இந் நியமனம் மேலும் பிரச்சினைகளை உண்டுபண்ணக்கூடும்...</span> - மேகநாதன் - 01-21-2006 <span style='color:blue'><b>வடக்கு - கிழக்கு ஆளுநராக முன்னாள் கடற்படை அதிகாரி நியமிப்பு </b> வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநராக சிறிலங்காவின் முன்னாள் கடற்படை அதிகாரி ரியல் அட்மிரல் மொகான் விஜய விக்கிரம நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன கடிதத்தை நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, மொகான் விஜய விக்கிரமவிடம் கையளித்தார். இதுவரை காலமும் வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றி வந்த டிரோன் பெர்னாண்டோ அரச தலைவரின் வெளிவிவகாரத்துறை ஆலோகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கான நியமன கடிதத்தை நேற்று மகிந்தவிடம் பெற்றுக் கொண்டார்.</span> <i><b>தகவல்மூலம்;- புதினம்</b></i> - தூயவன் - 01-21-2006 இந்த உப்புச்சப்பில்லாததைத் தானே தமிழனுக்கு தீர்வு என்று கட்டி விட அடிவருடிகள் ஆலவட்டம் பிடித்தவை. கடைசியில் இப்ப ஒரு தமிழனுக்கும் 90க்கு பிறகு அதன் முதலமைச்சராக வரமுடியவில்லை என்பது சிங்களத்தின் அதி உச்ச ஆக்கிரமிப்பிற்கு எடுத்துக்காட்டு. |