Yarl Forum
தட்டிக் கேட்க ஆள் இல்லாட்டில் அமெரிக்கன் தம்பி தண்ட பிரதண்டம - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தட்டிக் கேட்க ஆள் இல்லாட்டில் அமெரிக்கன் தம்பி தண்ட பிரதண்டம (/showthread.php?tid=1342)



தட்டிக் கேட்க ஆள் இல்லாட்டில் அமெரிக்கன் தம்பி தண்ட பிரதண்டம - வினித் - 01-16-2006

<b>தட்டிக் கேட்க ஆள் இல்லாட்டில் அமெரிக்கன் தம்பி தண்ட பிரதண்டம் - கவுன்சிலர் தயா இடைக்காடர் பகிரங்க சவால். </b>
ஜ செவ்வாய்கிழமைஇ 17 சனவரி 2006 ஸ ஜ யோககுமார் ஸ


இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் அண்மையில் தமிழர் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு பிரித்தானிய கவுன்சிலர் தயா இடைக்காடர் பகிரங்க சவால் விடுத்துள்ளார். புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் பிரித்தானியக் கிளையின் ஏற்பாட்டில் சிங்கள படையினராலும் ஈ.பி.டி.பி துரோக கும்பலினாலும் கூட்டாக இனைந்து கோரமான முறையில் கொல்லப்பட்ட தர்சினியின் இரங்கல் நிகழ்வில் உரையாற்றிய கரோ பிரதேச கவுன்சிலர் தயா இடைக்காடர் பகிரங்க விவாதத்திற்கு கொழும்பின் அமெரிக்க தூதுவரை அழைத்துள்ளார். அமெரிக்கா இன்று பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று கூறிக்கொண்டு உலகில் பல பாகங்களிலும் நாடகம் ஆடிவருகிறது. இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று தற்போது உலகம் முழுக்க நடாத்தும் நாடகத்தை அன்று பிரித்தானியாவை ஜ.ஆர்.ஏ இயக்கம் தாக்கும் போது ஏன் நடாத்தவில்லை. அன்றைய காலப்பகுதியில் அமெரிக்கா ஏன் அமைதி காத்து கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. ஜ.ஆர்.ஏ தனது போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அமெரிக்காவில் நிதி சேகரித்தபோதும், பிரித்தானியாவுடன் யுத்தம் செய்யும்போதும் அமெரிக்கா எங்கே போனது.



அந்தக் காலப்பகுதியில் அமெரிக்கா அமைதியாக இருந்து என்ன செய்தது என்று அனைவரும் அறிவீர்கள். ஆனால் இன்று உலகம் முழுவதும் பயங்கரவாதம் என்றும், அதற்கு எதிரான யுத்தம் என்றும் கூறிக்கொண்டு படையெடுப்பதும், மிரட்டுவதுமாக இருக்கிறது. ஜ.ஆர்.ஏ இயக்கம் தனது வட அயர்லாந்து மக்களின் சுதந்திரித்திற்காக போராடவும் அதற்காக பிரித்தானியாவுக்கு எதிராக யுத்தம் புரியவும் அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் அனுமதி இருந்தால் தமிழர்கள் இலங்கையில் தமது சொந்த வாழ்விடத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு சிங்கள படைகளுடன் போராடுவதற்கு உரிமை இருக்கிறது என்பதை அமெரிக்காவிற்காவின் கொழும்பு தூதுவர் அறிந்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் கொழும்புக்கான தூதுவரிடம் கூறிவைக்க விரும்புகின்றேன். ஜ.ஆர்.ஏ இயக்கத்திற்கு போரிடுவதற்கும், நிதிசேகரிக்க இடம் கொடுத்த அமெரிக்கா பிரித்தானியாமீது யுத்தம் நடக்கும்போது அமைதியாக இருந்தவிட்டு, இன்று தமிழருக்கு வேறு ஒரு நியாயம் காட்ட முற்படுகிறது. அமெரிக்கா இன்று ஈராக்கில் படையெடுத்திடுக்கிறது தற்போது ஈரானுடன் முரண்பட்டுக்கொண்டு இருக்கிறது அனைத்தும் பயங்கரவாதத்திற்கு எதிரான நகர்வு என்கிறது. அவ்வாறெனில் சந்திரிக்கா செய்த அரச பயங்கரவாதத்திற்கு எதிராக ஏன் அமெரிக்க சந்திரிக்கா அரசுடனும், தற்போதைய சிங்கள அரசிடமும் முரண்படவில்லை என்று நான் கேட்கிறேன்.




பிரித்தானியாவின் பிரதமர் ரொனி பிளேயர் மனித உரிமைகள் தொடர்பாக கதைக்கிறார். ஆனால் தர்சினியின் மனித உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது இதற்கு எவரும் குரல் கொடுக்கவராதது ஏன்? அமெரிக்காவின் கொழும்பு தூதுவர் அண்மையில் ஒருகருத்து தெரிவித்திருக்கிறார். இலங்கையின் அரச படைகள் பலம் பொருந்திய படைகளாம் அவர்களின் ஆயுதப்பலம் அதிகமாம் இவற்றை பறிப்பதற்குத்தான் தமிழர் ஆயுதம் ஏந்தி போராடுகிறார்கள் என்பதை அமெரிக்க தூதுவர் மறந்துவிடக்கூடாது.


<b>இதற்கு நான் ஒரு நகைச்சுவையினை கூறவிரும்புகின்றேன். அமெரிக்காவின் மிகப்பெரும் இராணுவ அதிகாரிகள் தமது நிபுணத்துவத்தை இலங்கையின் விமான படையினருக்கும், படைத்துறையினருக்கும் பயற்சி கொடுத்தக்கொண்டு இருந்தார்கள். நீண்ட மணிநேரமாக விளக்கம் கொடுத்துக்கொண்டு இருந்தனர். 10 ஆயிரம் அடி போனால் என்ன நடக்கும், 20 ஆயிரம் அடி வானத்தில் பறந்தால் என்ன நடக்கும், 30 ஆயிரம் அடி வானத்தில் பறந்தால் என்ன நடக்கும் என்று பாரிய இராணுவ ஒத்திகையினை அமெரிக்கப் படைகள் இலங்கை இராணுவத்திற்கு மிகப்பெரும் செலவில் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். அமெரிக்க பயற்சியில் அலுத்தப்போன இலங்கைப் படைகள் இவற்றை மீண்டும் தரைக்கு இறக்குவது எப்படி என்று அமெரிக்க படைத்துறை நிபுணர்களிடம் கேட்டனர் அதற்கு அமெரிக்க படைத்துறை நிபுணர்கள் சொன்ன பதில் அதனை புலிகள் பார்த்துக்கொள்வார்கள் என்பது.</b>


என்று கூறி தனது உரையினை நிறைவு செய்தார். இந்த நிகழ்வில் கரோ கவுன்சில் பிரதி தலைவர் சஞ்சே டிக்கோ லிபரல் டெமோகிரடிக் கட்சியின் சதக் பிராந்திய கவுன்சிலர் மிஸ் எலிசா மான் கிங்ரன் கவுன்சில் மேஜர் ஜோகன் யோகரட்டனம் ஆகியோருடன் பிரித்தானியாவிற்கான ஜரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் றொபேட் ஈவன்ஸ் கலந்து சிறப்பித்தார்.


http://www.nitharsanam.com/?art=14619