Yarl Forum
பைந்தமிழ் இனம் காக்க பணி நன்றே செய்திடுக - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பைந்தமிழ் இனம் காக்க பணி நன்றே செய்திடுக (/showthread.php?tid=13)



பைந்தமிழ் இனம் காக்க பணி நன்றே செய்திடுக - valvaizagara - 04-30-2006

பைந்தமிழ் இனம் காக்க
பணி நன்றே செய்திடுக!


போர் பெய்த மழையினிலே ஊர் விட்டுப்போனவரே!
பாரெங்கும் பரந்திருக்கும் பாசப் பிணைப்புகளே!
ஆரெவரோ என்றுங்கள் அகம் மூடி நடிக்காமல்
பைந்தமிழ் இனம் காக்க பணி நன்றே செய்திடுக!

முண்டமாய் உடலும் - சதைப் பிண்டமாய் உறுப்புகளும்
கண்ட கண்ட இடமெல்லாம்
அழுகிய பிணங்களாக ஆர் பெற்ற பிள்ளைகளோ?

அண்டை அயலொடு அவனியிலே
பேர் பெற்ற அமைதிப் பெருநாடுகளும்
கண்டாரோ? கருத்தில் கொண்டாரோ?
ஈழத் தமிழினத்தின் இன்னல் நிலை.

செப்ப ஒரு நாவிருந்தும் செப்பாத செந்தமிழா!
உற்றாரும், உறவுகளும் ஊரோடு எரிகையிலே
ஒப்பாரிப் பாட்டுக்கூட உனக்கெடுக்கத் தெரியலையோ?

முத்துமணி ரத்தினமும் மெத்தையொடு மெல்லிடையும்
சுத்திவரும் சுகம் தரவா சொந்ததேசம் கேட்கிறது?
அத்தையென்றும், மாமனென்றும் அண்ணனென்றும், தங்கையென்றும்
சுத்தி வரும் சொந்தம் இத்து செத்துச் செத்துப் பிழைக்கிறது.

மெத்த மெத்தக் கதைபேசி மேடைகளில் முடிசூட்டி
வித்துவம் நிறைத்தோரே! வெத்து வேட்டாய் ஆகலாமோ?
சத்துமிகு கவி செய்து சந்ததியை நிமிரச் செய்யும்.
எத்தவத்தைச் செய்தேனும் எம்மினத்தை வாழ வையும்.

வித்தைகளும், வேதங்களும் முத்தமிடும் நேரமல்ல
நத்தைபோல நகர்வெதற்கு? சித்தமெல்லாம் சாகிறது.
குத்துவலி வேதனையும் குண்டுமழைச் சாரலிலும்
பட்ட ரணவாதையிலும் பரிதவிக்குது எங்கள் இனம்.

மேலைத் தேச நாடுகளே! மென்னிதயம் திறந்து பாரும்.
ஈழத்தமிழ் இன்னல் மாற்றி ஏற்ற பாதுகாப்புத் தாரும்.
[/color]

[color=red]தலைப்பு திருத்தம் செய்யப்பட்டுள்ளது


- gowrybalan - 04-30-2006

<span style='font-size:25pt;line-height:100%'>கவிதை நன்றாகவுள்ளது...ஆனால் இதனை புலத்தில் இருந்து ஒருவர் எழுதி இருந்தால் இன்னும் உணர்வுபூர்வமாக இருக்கும். நன்றி தொடருங்கள்.....</span>