![]() |
|
அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! (/showthread.php?tid=1293) |
அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! - மேகநாதன் - 01-19-2006 <span style='color:red'><b>தமிழர்களின் எதிர்ப்பு நிராகரிப்பு: அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! </b> சிறிலங்காவில் அவசரகால சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அவசரகால சட்டம் நீட்டிப்புக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தச் சட்ட நீட்டிப்பைத் தடுக்கும் வகையில் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டாரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டனர். இருப்பினும் எதுவித வாக்கெடுப்பும் நடத்தாமலேயே அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் அவசரகால சட்ட நீட்டிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில் அப்பாவி மக்கள் மீதான சித்திரவதை உச்சத்தை அடைந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையும் முறையாக நடத்தப்படவில்லை" என்றார் இரா.சம்பந்தன். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்றத்தை இயங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அனுமதிக்க வேண்டும். நாடாளுமன்றச் செயற்பாடுகளினூடாக தங்களது கோரிக்கைகளை அவர்கள் தெரியப்படுத்த வேண்டும். இராணுவத்தினர் மீதான தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகள் பொறுப்பல்ல என்று கூறிவிட்டனர். அதனால்தான் பொதுமக்கள் வாழ்விடங்களில் நாங்கள் தேடுதல்களை நடத்துகிறோம் என்றார். நீதிமன்ற பிடியாணை உத்தரவுகள் ஏதுமின்றி சந்தேக நபர்களை நீண்டகாலத்துக்கு கைது செய்து தடுத்து வைக்க சிறிலங்கா அரச படையினருக்கும் காவல்துறையினருக்கும் இந்த அவசரகால சட்டம் அனுமதி அளிக்கிறது. கடந்த சில மாதங்களாக நடைமுறையில் இருந்து வரும் இச்சட்டத்தினால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்படுவதும், தடுத்து வைக்கப்படுவதும், காணாமல் போவதும் தொடர் நிகழ்வுகளாகி வருகின்றன. அப்பாவி மக்களை சந்தேக நபர்கள் என்ற பெயரில் இராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்வதும் அதிகரித்துள்ளன. அவசரகால சட்டத்தின் கீழான இராணுவ வன்முறைகளால் அச்சமடைந்த தமிழ் மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குச் சென்று வருகின்றனர். பெருந்தொகையானோர் பாதுகாப்பு கருதி விடுதலைப் புலிகளின் பிரதேசத்துக்குள் அகதிகளாகச் சென்றுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் அவசரகாலச் சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</span> <i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i> - மேகநாதன் - 01-19-2006 [size=18]<b>வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே அவசரகாலச்சட்டம் மேலும் ஒருமாதம் நீடிப்பு.</b> சிறீலங்கா அரசாங்கத்தினால் அவசரகாலச்சட்டம் மேலும் ஒருமாதம் நீடிக்கப்பட்டுள்ளது. அவரசகால நீடிப்பானது ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை எந்த வித வாக்கெடுப்பும் நடத்தப்படாமலேயே நிறைவேற்றப்பட்டுள்ளதாக சிறீலங்கா நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. இன்று பாராளுமன்றத்தில் தமிழ்க் கட்சிகள் பாராளுமன்ற நடவடிக்கைகளை எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்றத்தை முடக்கியபோதும் எந்தவொரு வாக்கெடுப்புக்களும் நடத்தப்படாமால் அது நிறைவேற்றப்பட்டது. தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள், வன்முறைகள், கைதுகள் போன்றவற்றை மேற்கொள்ள சிங்கள பேரினவாத சக்திகள் திட்டமிட்ட மேற்கொண்ட நடவடிக்கை என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். <b><i>தகவல் மூலம்- பதிவு</i></b> |