Yarl Forum
டென்மார்க் விழாவால் விழாது இருப்பீர்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: டென்மார்க் விழாவால் விழாது இருப்பீர்! (/showthread.php?tid=129)



டென்மார்க் விழாவால் விழாது இருப்பீர்! - வினித் - 04-20-2006

<b><span style='font-size:25pt;line-height:100%'>டென்மார்க் விழாவால் விழாது இருப்பீர்!</span>

[b]சில வருடங்களுக்கு முன்பு வரை ஐரோப்பிய, கனடா நாடுகளில் வாழுகின்ற மக்கள் வாரம் ஏதாவது ஒரு கலை(?)விழாவை நடத்திக் கொண்டிருந்தார்கள். அநேகமான கலைவிழாக்கள் திரையிசை நடன விழாக்களாக இருந்தன. நாடக விழா என்றால் கூட அதில் திரையிசை நடனங்களே அதிகமாக இடம்பெறும். இப்பொழுது இது போன்ற விழாக்கள் வெகுவாகக் குறைந்து விட்டன. இந்த விழாக்களில் வன்முறைகள் பெருகியது இதற்கு ஒரு முக்கிய காரணம். அத்துடன் எமது தமிழர்கள் தொலைக்காட்சி நாடகங்களில் மூழ்கி அறிவை வளர்த்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணம். ஆனாலும் ஒரு சில விழாக்கள் அங்கும் இங்கும் நடந்தபடிதான் இருக்கின்றன.

விழாக்கள் அதிகரித்திருந்த அன்றைய நாட்களில் பெருவாரியான தமிழர்களுக்கு அதுவே பொழுது போக்காக இருந்தது. அப்பொழுது புலம்பெயர் தமிழர்களுக்குள் ஊடுருவுவதற்கு சிறிலங்கா அரசு பல வழிகளில் முயன்று கொண்டிருந்தது. இதற்கு தமிழர்களால் நடத்தப்படுகின்ற விழாக்களையும் பயன்படுத்த முற்பட்டது. சிறிலங்காவின் தூதரகங்களின் ஊடாக இதற்கான முயற்சிகள் நடைபெற்றன. கொள்கைப் பிடிப்பின்றி வெறும் பொழுது போக்குக்காகவும் பணம் ஈட்டுவதற்காகவும் விழாக்களை நடத்துகின்றவர்களை அணுகிய சிறிலங்கா தூதரக அதிகாரிகள் விழாக்களுக்கு நிதி உதவி செய்யத் தயாராக இருப்பதாக தூண்டில் போட்டனர். ஒரு சில விழாக்கள் சிறிலங்கா தூதரகத்தின் நிதி உதவியுடன் நடந்தன. இது பல பேர் அறியாத ஒரு உண்மை. ஆனால் விழாக்களின் காலம் முடிவடைகின்ற நேரத்திலேயே சிறிலங்கா தூதரகங்கள் இது போன்ற முயற்சிகளில் இறங்கியதால், அவர்களால் இந்த ஊடுருவல் முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை.

இன்று சிறிலங்கா அரசின் ஊடுருவல்கள் ரிபிசி வானொலியிலும் சில இணையத் தளங்களிலும் இருப்பதைக் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.

ஆனால் இந்த ஊடகங்கள் மூலமும் சிறிலங்கா அரசு எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்ல. முக்கியமாக இளம் தலைமுறை மீது இந்த ஊடகங்களால் சொல்லிக்கொள்ளும்படியான செல்வாக்கு எதையும் செலுத்த முடியவில்லை. ஆகவே இளம்தலைமுறையினர் மீது ஊடுருவும் வகையில் மீண்டும் விழாக்களை பயன்படுத்து முடிவெடுத்திருக்கிறார்களோ என்கின்ற சந்தேகம் வலுக்கின்ற மாதிரியான சம்பவங்கள் நடைபெறத் தொடங்கி உள்ளன.

டென்மார்க்கில் வரும் 29.04.06 அன்று ஒரு திரையிசை நடன விழா நடைபெற உள்ளது. "கலக்கப் போவது யாரு" என்னும் பெயரில் திரையிசை நடனப் போட்டியோடு வேறு சில நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. இளைஞர்களைக் கவரும் நோக்கில் கவர்ச்சிகரமான பெண்களின் படங்களோடு இந்த நிகழ்ச்சி விளம்பரம் செய்யப் படுகிறது. வெளிநாடுகளில் இருந்து சில நடனக் குழுக்கள் இதில் பங்கு பற்ற உள்ளன. மிகவும் ஆராவரமாக இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்த விழா தீய சக்திகள் வேறொரு வடிவில் தமிழர்கள் மத்தியில் ஊடுருவுவதற்கான தொடக்க விழா என்பதே உண்மை. இந்த விழாவை நடத்துபவர்களாக அறிவிக்கப்பட்டிருப்பவர்கள் வெளியுலகத்தை பொறுத்தவரை அப்பாவிகள். ஆனால் இந்த "அப்பாவிகளை" இயக்குகின்ற பாவிகள் பலரும் அறிந்தவர்கள். "டென்மார்க் விவகாரங்களின் பின்னணி" என்னும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தவர்களாகிய மதி, வதனன் மற்றும் அவர்களை சார்ந்தவர்களே இந்த விழாவின் பின்னணியில் இருக்கின்றார்கள். இந்த மதி, வதனன் போன்றவர்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏற்கனவே பலமுறை ஆதரங்களுடன் நிரூபிக்கப்பட்ட விடயம் அது.

இந்த விழாவை நடத்துவதாக சொல்லிக் கொள்பவர்கள் சில இணையத் தளங்களை நடத்துகிறார்கள். இந்த இணையத் தளங்கள் பதிந்து கொடுத்தவர்கள் மதி, வதனன் ஆகியோரின் "தமிழ் ஜனநாயக அமைப்பின்" ஒருங்கிணைப்பாளரே. அது மட்டுமன்றி இந்த விழாவிற்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு மதி சென்று வந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்ட டென்மார்க் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் விழா மேடையில் இவர்களோ, அல்லது இவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களோ தோன்றுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இவைகளை விட வேறு பல ஆதாரங்களும் உண்டு.

இந்த விழாவில் சேர்க்கப்படும் நிதியில் ஒரு பகுதி அன்னை இல்லத்திற்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். இந்த அன்னை இல்லம் கூட குமாரதுரை குடும்பத்தினரால் பராமரிக்கப்படுவதாக டென்மார்க்கில் பேசிக் கொள்வார்கள். ஆனால் பிரச்சனை அதுவல்ல. பிரச்சனை இந்த விழாவின் பின்னணியில் உள்ளவர்களின் உள்நோக்கம் சம்பந்தமானதே. கலையின் பெயரால் இளைஞர்கள் மத்தியில் ஊடுருவதுதான் இவர்களின் நோக்கம். பல நாடுகளிலும் இருந்த வரும் இளைஞர்களுடன் நட்பை ஏற்படுத்தி, தமது பக்கம் ஈர்த்து, பின்பு விடுதலைக்கு எதிராக அந்த இளைஞர்களை பயன்படுத்துவதே இவர்களின் திட்டம். பொய்யான பெயர்களில் விழாவை நடத்தி, பல பார்வையாளர்களைக் கலந்து கொள்ளச் செய்து, அவர்களை தம்முடைய ஆதரவாளர்களாக பிரச்சாரம் செய்கின்ற திட்டமும் உள்ளது.

இந்த திட்டங்களை உணர்ந்து கொண்ட பல டென்மார்க் தமிழர்கள் இந்த விழாவின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்த தொடங்கி விட்டார்கள். இதையடுத்து அந்த விழாவை தாங்களே நடத்துவதாக சொல்லிக்கொள்பவர்கள் தமது தீய சக்திகளுடனான தொடர்புகளுக்கான ஆதாரங்களை மறைக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். விளம்பரங்களிலும் சிறிது மாற்றம் செய்துள்ளனர். அத்துடன் இந்த விழாவிற்கும் மதி, வதனன் ஆகியோருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று சாதிக்கின்றனர். ஆனால் இவைகள் எல்லாம் இவர்களின் குட்டு வெளிப்பட்டுவிட்டதன் வெளிப்பாடே.

ஆகவே இளம் தலைமுறையே! மிகவும் விழிப்பாக இருங்கள்! தீய சக்திகளை இனம் கண்டு கொள்ளுங்கள்! கலையின் பெயராலும், நட்பின் பெயராலும் தவறான பாதைக்கு சென்று விடாதீர்கள்! இது போன்ற கவர்ச்சிகரமான விழாக்களால் விழுந்து விடாமல் இருங்கள்!
</b>
வி. சபேசன் (20.04.06)


Mathi Kumarathurai plans anti-cultural events in Denmark - Vasan - 04-20-2006

Karuna paramilitary group’s international spokesperson Mathi Kumarathurai is planning to host a ‘European Tamil Dance Competition’ on 29th April 2006 in Denmark, sources said. Posters advertising for the event feature a semi-nude photo of an Indian model which Tamil sources said are aimed as enticing Tamil youth to participate in Mathi’s anti-cultural activities.

The show is being organised by Mathi group front runner, Thavarajah Sabanathan.

Sources said that funds from the show will contribute towards maintaining paramilitary groups in Sri Lanka. Nordic Sri Lanka Monitoring Mission (SLMM) officials warned that paramilitary groups funded by foreign terror elements were taking the island close to civil war.

Meanwhile, posters published by Mathi claimed that the event would contribute some of the funds to ‘Anai Illam’. Danish sources said that the secret police in the country was investigating alleged links between the Kumarathurai family and Sri Lanka based paramilitaries.

http://www.sibernews.com/the-news/world-ne...rk-200604164212


- வினித் - 04-20-2006

ஆனால் ரிரின் னில் விளம்பரம் போகுது என்ன தான் நடக்குதோ??????????? :roll: :roll: :roll: :roll:


- Subiththiran - 04-20-2006

Quote:ஆனால் இந்த விழா தீய சக்திகள் வேறொரு வடிவில் தமிழர்கள் மத்தியில் ஊடுருவுவதற்கான தொடக்க விழா என்பதே உண்மை. இந்த விழாவை நடத்துபவர்களாக அறிவிக்கப்பட்டிருப்பவர்கள் வெளியுலகத்தை பொறுத்தவரை அப்பாவிகள். ஆனால் இந்த "அப்பாவிகளை" இயக்குகின்ற பாவிகள் பலரும் அறிந்தவர்கள். "டென்மார்க் விவகாரங்களின் பின்னணி" என்னும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தவர்களாகிய மதி, வதனன் மற்றும் அவர்களை சார்ந்தவர்களே இந்த விழாவின் பின்னணியில் இருக்கின்றார்கள். இந்த மதி, வதனன் போன்றவர்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏற்கனவே பலமுறை ஆதரங்களுடன் நிரூபிக்கப்பட்ட விடயம் அது.

இந்த விழாவை நடத்துவதாக சொல்லிக் கொள்பவர்கள் சில இணையத் தளங்களை நடத்துகிறார்கள். இந்த இணையத் தளங்கள் பதிந்து கொடுத்தவர்கள் மதி, வதனன் ஆகியோரின் "தமிழ் ஜனநாயக அமைப்பின்" ஒருங்கிணைப்பாளரே. அது மட்டுமன்றி இந்த விழாவிற்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு மதி சென்று வந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்ட டென்மார்க் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் விழா மேடையில் இவர்களோ, அல்லது இவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களோ தோன்றுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இவைகளை விட வேறு பல ஆதாரங்களும் உண்டு.


எங்கள் இனமே எதிரிகளுக்கு துணை போறதை நினைச்சா கவலையாக இருக்கு. Cry


- Ilayathambi - 04-20-2006

ரிரிஎன் தொலைக்காட்சியில் கொழும்பில் வீடு கட்டி வசதியாக வாழலாம் என்று விளம்பரம் வருவதில்லையா? சிறிலங்காவிற்கு அந்நிய செலவாணியை ஈட்டிக் கொடுக்கும் பலசரக்குப் பொருட்களுக்கு விளம்பரம் வருவதில்லையா?
அப்படித்தான் இதுவும் இருக்கும்



- வினித் - 04-20-2006

Ilayathambi Wrote:ரிரிஎன் தொலைக்காட்சியில் கொழும்பில் வீடு கட்டி வசதியாக வாழலாம் என்று விளம்பரம் வருவதில்லையா? சிறிலங்காவிற்கு அந்நிய செலவாணியை ஈட்டிக் கொடுக்கும் பலசரக்குப் பொருட்களுக்கு விளம்பரம் வருவதில்லையா?
அப்படித்தான் இதுவும் இருக்கும்

அதுக்காக கருணாவின் பேட்டியும் போட முடியுமா?


- கந்தப்பு - 04-21-2006

[size=18]டென்மார்க் விவகாரங்களின் பின்னணி!

டென்மார்க்கில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியகம் டென்மார்க் காவல்துறையினரால் சோதனை இடப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு தேசியத்திற்கு எதிரான வானொலிகளிலும், இணையத்தளங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. ஆழிப் பேரலைக்கு சேர்க்கப்பட்ட நிதியில் மோசடி நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டே இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றதாக அந்தச் செய்திகள் தெரிவித்தன. ஆனால் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிமனையில் அவ்வாறு எவ்விதமான சோதனை நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை என்பதே உண்மை. அப்படியென்றால் உண்மையில் என்னதான் நடந்தது?

டென்மார்க்கில் வாழுகின்ற குமாரதுரையை ரிபிசி வானொலியை கேட்பவர்கள் அறிந்திருப்பார்கள். இவருக்கு பல பிள்ளைகள் பிறந்து, அவர்கள் குமாரதுரையைப் போலவே இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செயற்பாடுகளை செய்து வந்தாலும், இதில் மதி மற்றும் வதனன் எனப்படும் இரண்டு மகன்களுமே மிக அதிகமான துரோக வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களின் கைங்கர்யமே புனர்வாழ்வுக் கழகம் பற்றிய இந்தப் பொய்யான செய்தி.

டெனிஸ் மொழியில் வல்லமை உள்ளவர்களாகிய மதியும் வதனனும் டெனிஸ் மக்கள் மத்தியில் தமிழின விடுதலைக்கு எதிரான பரப்புரையை மிக வேகமாக செய்து வருகின்றார்கள். தங்களின் மொழி அறிவைக் கொண்டு பல டெனிஸ் ஊடகவியலாளர்களுடன் நெருங்கிய நட்பை பேணி வருகின்றார்கள். இதன் மூலம் டென்மார்க் ஊடகங்கள் சிலவற்றில் தொடர்ந்து விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செய்திகள் வருகின்ற மாதிரி பார்த்துக் கொள்கிறார்கள். இதன் உச்சக் கட்டமாக "டிஆர்1" என்னும் டென்மார்க் தொலைக்காட்சி ஒன்றில் விடுதலைப் போராடத்திற்கு எதிரான நிகழ்ச்சிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது. அந்தத் தொலைக்காட்சியில் தோன்றிய மதியும் வதனனும் "டென்மார்க்கில் விடுதலைப்புலிகளுக்கு வேலை செய்பவர்களை தாங்கள் ஒழித்துக்கட்டாமல் ஓயப் போவதில்லை" என்று சவால் விட்டார்கள். டென்மார்க்கில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக வருகின்ற அனைத்துவிதமான செய்திகளுக்கும் மதியும் வதனனும் பின்னணியில் இருந்து ஆலோசனை வழங்கியபடி இருக்கின்றர்கள். இவர்களின் ஆலோசனையின் பேரில் டென்மார்க்கில் நடந்த சென்ற மாவீரர் தின நிகழ்வில் இந்த தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள் உள்நுளைந்து நிகழ்ச்சிகளை வீடியோ படம் பிடித்திருந்தார்கள். தற்பொழுது அந்த மாவீரர் தின நிகழ்வில் சிறுவர்கள் புலிகளின் சீருடையில் நடனமாடியதை தொலைக்காட்சியில் காண்பித்து தவறான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதே போன்று ஆழிப் பேரலை நிதியில் மோசடிகள் நடந்துள்ளதாக இந்த தொலைக்காட்சி நிறுவனத்தினருக்கு மதியும் வதனனும் வழங்கிய தவறான தகவலை அடுத்து, தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிமனைக்கு சென்ற "டிஆர்1" தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள், அங்கு பணியில் நின்றவர்களுடன் உரையாடி விட்டு வந்தார்கள். அப்பொழுது அந்தப் பணிமனையையும் அங்கிருந்த தேசியத் தலைவரின் படத்தையும் தங்களின் ரகசிய வீடியோக் கமெராவில் பதிவு செய்திருக்கிறார்கள். தற்போதைய நிகழ்ச்சிகளில் அதைக் காட்டி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் செய்தியே விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான வானொலிகளிலும், இணையத்தளங்களிலும் திரிவு படுத்தப்பட்டு, புனர்வாழ்வுக் கழகப் பணிமனையில் டென்மார்க் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்ததாக வெளியாகி இருந்தது. இந்த தவறான செய்தியை முதலில் மதியும் வதனனும் பொறுப்பாகவுள்ள தமிழ் ஜனநாயக அமைப்பே பரப்பியது. இதையடுத்து இந்த அமைப்பின் மீது தற்பொழுது டென்மார்க் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக டென்மார்க் பத்திரிகைகளின் பிந்திய செய்தி தெரிவிக்கின்றது.

மதியும் வதனனும் குறித்த ஒரு செய்தி மிகவும் சுவாரஸ்யமானது. இவர்கள் கருணா குழுவிற்காக இணையத்தளங்களை உருவாக்கி நடத்தி வருகின்றார்கள். அது மட்டுமன்றி இவர்களில் ஒருவரே கருணா குழுவின் பேச்சாளராகிய சேரன் என்பவர் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் நடத்துகின்ற கருணா சார்பு இணையத்தளங்களில் "கருணா குழுவின் பேச்சாளர் சேரன்" என பல முறை இடம்பெற்றுள்ளதை பலர் கவனித்திருப்பார்கள். அண்மையில் இணையத்தளம் ஒன்றை நடத்துகின்ற நண்பர் ஒருவர் கருணா குழுவினருடன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டிருந்தார். கருணா குழுவினரின் தொலைபேசி இலக்கங்கள் வெப்ஈழத்திலும் வேறு தளங்களிலும் வெளியிடப்பட்டிருந்ததும், அதன் முலம் அவர் கருணா குழுவினரின் தொலைபேசி இலக்கங்களை பெற்றிருந்ததும் இதில் குறிப்பிடத்தக்கது. முதலில் கருணா குழுவைச் சேர்ந்த சிலருடன் பேசிய பொழுது, அவர்கள் யாருக்கும் சேரனை தெரிந்திருக்கவில்லை. பின்பு கருணா குழுவின் ஊடகப் பொறுப்பாளர் என சொல்லிக்கொள்ளும் தூயவனின் தொலைபேசி இலக்கத்தை அந்த நண்பர் பெற்று தூயவனுடன் பேசிய பொழுது, சேரன் என்பவர் ஐரோப்பாவில் இருப்பதாகவும், அவரே எமது வெளிநாட்டுப் பேச்சாளர் எனவும் தூயவன் தெரிவித்தார். ஆனால் அவர் ரிபிசி ராம்ராஜ் அல்ல என்றும் மேலும் தூயவன் தெரிவித்தார். இந்த சேரன் யார் என்று மேலும் ஆராய்ந்த பொழுது, பல தடயங்கள் மதியையும் வதனனையுமே சந்தேகிக்க வைக்கின்றன.

இவ்வாறு மதியும் வதனனும் டென்மார்க்கில் ஒரு பக்கம் ஜனநாயகம் என்னும் பெயரில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்ளுகின்ற அதே வேளை, இன்னொரு பக்கம் தமிழீழத்தின் பயங்கரவாதிகளான கருணா குழுவுக்காகவும் வேலை செய்து வருகின்றார்கள்.

இந்த விடயத்தை இங்கே எழுதுகின்ற பொழுது, நான் மீண்டும் மீண்டும் தலையில் அடித்து சொல்லுகின்ற ஒரு விடயத்தை ஞாபகப்படுத்தி முடிக்க விரும்புகிறேன். ஐரோப்பிய மக்கள் மத்தியில் செய்யப்படுகின்ற தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான பரப்புரைகள் எவ்வளவு தூரம் பின்தங்கி உள்ளது என்பதையே இவைகள் அனைத்தும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. "எழுக தமிழ்" பற்றிய கட்டுரையில் ஐரோப்பிய மக்கள் மத்தியில் எவ்வாறு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எழுதியிருந்தேன். ஆனால் உண்மையில் அந்த முறைகளை விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்கள்தான் பின்பற்றி வருகின்றார்கள். அவ்வாறு பின்பற்றி வெற்றியும் கண்டு வருகின்றார்கள். விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்கள் இளம் தலைமுறையிடம் சென்றடைவது மிகவும் ஆபத்தானது. ஐரோப்பிய மொழியையும், ஐரோப்பியர்களின் சிந்தனையும் அறிந்த அவர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபடத் தொடங்கினால், எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதை டென்மார்க்கில் கண்கூடாக கண்டு வருகின்றோம். ரிபிசி வானொலியிலும் அண்மைக் காலமாக ஜேர்மனியில் இருந்து ஒரு 17 வயதுப் பையன் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளான். இது போன்ற விடயங்கள் எவ்விதத்திலும் அலட்சியப்படுத்தக் கூடியவை அல்ல. இனியும் காலம் தாழ்த்தாது, எமது இளம் தலைமுறை தமது பணிகளை சரியான முறையில் செய்யத் தொடங்க வேண்டும்.



-வி.சபேசன் (07.04.06)

www.webeelam.com