![]() |
|
முன்னை நாள் அரச உத்தியோகத்தர் துன்னாலையில் சுட்டுக்கொலை. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: முன்னை நாள் அரச உத்தியோகத்தர் துன்னாலையில் சுட்டுக்கொலை. (/showthread.php?tid=1238) |
முன்னை நாள் அரச உத்தியோகத்தர் துன்னாலையில் சுட்டுக்கொலை. - நர்மதா - 01-22-2006 இராணுவ புலனாய்வாளர்களால் முன்னை நாள் அரச உத்தியோகத்தர் துன்னாலையில் சுட்டுக்கொலை. முன்னைநாள் அரச மாவட்ட செயலகத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் கோரமான முறையில் இன்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். முன்னை நாள் அரச செயலகத்தின் தொழில்நுட்ப உத்தியோகஸ்தரான இளையதம்பி இராமகிருஸ்ணன் என்பவரே இவ்வாறு அரச புலனாய்வுப் பிரிவினரால் கோரத்தனமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராகச் செயற்பட்டு வந்த இவர் தினமும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று வருவதால் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் பின்தொடரப்பட்டு வந்துள்ளார். காட்லிக் கல்லூரியின் முன்னைநான் மாணவர் தலைவனும் பிரித்தானியாவின் பிரபல சர்வதேச தொலைபேசி அட்டை நிறுவனமொன்றின் பிரதம பொறியிலாளருமாகக் கடமையாற்றும் கடம்பன் (மொறட்டுவ பல்கலைக்களகத்தில் 1993 ம் ஆண்டு பொறியில் பீடமாணவனாக இணைந்தவர் 1992 ஆண்டு காட்லி உயர்தர மாணவன்) மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மருத்துவர் கேசவன் (காட்லிக் கல்லூரியின் 1991 ஆண்டு உயர்தர மாணவர் பிரிவு) ஆகியோரின் தகப்பனார் என்பதும் குறிப்பிடத்தக்கது நிதர்சனம் |