![]() |
|
யாழில் அரச ஊழியர்களுக்கு கொலை அச்சுறுத்தல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: யாழில் அரச ஊழியர்களுக்கு கொலை அச்சுறுத்தல் (/showthread.php?tid=1218) |
யாழில் அரச ஊழியர்களுக்கு கொலை அச்சுறுத்தல் - kuruvikal - 01-24-2006 <img src='http://www.tamilnet.com/img/publish/2006/01/epdp0123_01.JPG' border='0' alt='user posted image'> தேச விரோத தமிழ் குழுக்களால் யாழில் அரச ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதே பாணியில் இங்கு களத்திலும் சிலர் அச்சுறுத்துவதை அவதானிக்கலாம்..! <b>அரச ஊழியர்களுக்கு ஈ.பி.டி.பி. கொலை அச்சுறுத்தல்</b> [திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 19:50 ஈழம்] [ம.சேரமான்] யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா அரச ஊழியர்களுக்கு இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி.குழுவினர் கொலை அச்சுறுத்தல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர். சுதந்திரமும், தன்னாட்சியும் இறைமையும் உள்ள இலங்கை சனநாயகக் குடியரசின் அரசியல், நீதி, நிர்வாகத்தை பயங்கரவாத வன்முறைக் கலாசாரத்தில் சீரழிக்கும் தேசவிரோதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளோடு கடந்த காலங்களில் தாங்கள் நெருக்கமாக செயல்பட்டதை நான் அறிவேன். இருந்தும் நீர் வன்னி செல்லாது யாழ். மண்ணில் தொடர்ந்து இருப்பதால் உம்மை எம்முடன் இணைந்து செயற்படுத்தி உமது பிரதேச மக்களை அணிதிரட்ட விரும்புகின்றேன். இது விடயமாக 23.1.2006 அன்று மாலை 3 மணிக்கு வதிரி பிரதேச சபை நூலகத்திற்கு வருகை தருமாறு அறிவிக்கின்றேன். வருகை தந்தால் உமக்கும், உமது குடும்பத்திற்கும் எதிர்காலம் உண்டு. இல்லையேல் மானிப்பாயில் போஜன் குடும்பத்திற்கு நிகழ்ந்ததை நினைலுவூட்டி உன் வரவை எதிர்பார்க்கிறோம் என்று அந்த அச்சுறுத்தல் கடிதத்தில் தெரிவிக்கப்படுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, சிறீதர் திரையங்கு, யாழ்ப்பாணம் என்ற முகவரியோடு மனுத்தோழர் என்பவரது கையொப்பமுடன் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதினம்.கொம் படம் தமிழ்நெற்.கொம் - மேகநாதன் - 01-24-2006 இச் செய்தியை <b>"யாழ்ப்பாணத்தில் சிங்களத்தினதும் ஒட்டுக்குழுக்களினதும் அடாவடி " </b> என்பதிலேயே போட்டிருக்கலாமே.. தொடர்புடைய செய்தியாய் இருக்கிறது... <i><b>சும்மா தனித் தனியாய் போடாமல், இப்படி தெளிவாகத் தொடர்புடைய செய்திகளுடனே போட்டால், செய்திக் கோர்வையாய் வாசகர்களுக்குப் பிரயோசனமாய் இருக்கும்</b></i> தனிதனி செய்திகளாகப் போடும் இதர உறவுகளும் கவனிக்கலாமே... களக் கண்காணிப்பளர்கள் அன்புடன் இவ் ஆக்கபூர்வமான கருத்தைக் கவனிக்கவும்... - MUGATHTHAR - 01-24-2006 ஒருமாதிரி மானிப்பாய் கொலைக்கு தேச விரோதிகள் உரிமை கோரியிருக்கிறார்கள் ........ ஏற்கனவே மக்கள் பயந்து வாழும் நிலையில் மேலும் கொலை அச்சுறுத்தல்கள் மக்களை உளவியல் ரீதியில் மிகவும் பாதிக்கிறது என்பது அங்கிருப்பவர்களுடன் கதைக்கும் போது தெரிகிறது........... |