Yarl Forum
அம்பலப்படுத்தப்பட வேண்டிய அரச பயங்கரவாதம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அம்பலப்படுத்தப்பட வேண்டிய அரச பயங்கரவாதம் (/showthread.php?tid=1165)



அம்பலப்படுத்தப்பட வேண்டிய அரச பயங்கரவாதம் - மேகநாதன் - 01-27-2006

[size=18]<b>அம்பலப்படுத்தப்பட வேண்டிய அரச பயங்கரவாதம்</b>
<i><b>செந்திரு</b></i>

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒட்டுமொத்த அமைதிவழி எதிர்ப்பினால் சிறீலங்காவின் நாடாளுமன்றம் மூன்று நாள்கள் முற்றாக முடங்கிப் போனது. தமிழ் மக்களின் தாயக மண்ணில் அப்பாவித் தமிழ் மக்களின் கொலைகள் தமிழ்; பெண்களின் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பாலியல் வன்முறைகள் தமிழ் இளைஞர்கள் காரணம் எதுவுமின்றி கைது செய்யப்படுதல்இ காணாமற் போதல்இ படையினரின் அடாவடித்தனங்கள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் யோசெப் பரராஜசிங்கத்தின் படுகொலைஇ திருகோணமலையில் ஐந்து அப்பாவித்தமிழ் மாணவர்களின் படுகொலைகளுக்கு நீதிவேண்டியும் கண்டன எதிர்ப்புத் தெரிவித்துமே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தியிருந்தனர்.

1948ல் இருந்து பலசட்ட மூலங்கள் தமிழ்பேசும் மக்களை அழித்தொழிப்பத ற்காக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு சட்டங்களாக ஆக்கப்பட்டுள்ளன. அவ்வாறு நிறைவேற்றப்பட்டவைகளில் முக்கியமானவை மலையகம் வாழ் தமிழ் மக்களின் குடியுரிமை தமிழ் நீதிமன்ற மொழியாக சிங்களத்தைத் திணித்தமைஇ புதிய குடியரசு யாப்புமூலம் சிங்கள பௌத்த மேலாண்மையை உறுதிசெய்தமைஇ இலங்கை ஒரு ஒற்றையாட்சி அரசமைப்புள்ள நாடு என்று வரையறுக்கப்பட்டுள்ளமைஇ சிங்கள மொழிக்கு அரசியல்யாப்பு மூலம் ஆட்சி மொழி உயர்வு கொடுக்கப்பட்டமைஇ பௌத்தமதம் நாட்டின் மதமாக முதலிடம் பெற்றமைஇ தமிழ் இளைஞர்களின் எழுற்சியை புலிகள் தடைச்சட்டம் பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற மனித உரிமை மீறல்களை சட்டங்கள் நிறைவேற்றப்பட்டமை போன்றவையாகும்.

அப்பொழுது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மால் முடிந்தளவு அச்சட்டங்களுக்கெதிராக உரையாற்றியிருந்தனர். இரவிரவாக விவாதங்கள் நடைபெற்று அச்சட்டங்கள் பேரினவாதிகளின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு வந்தன. தமிழ் இனத்தின் உரிமைகளைப் பறிப்பதற்காக சட்டங்களை சனநாயம் என்ற தலைகளை என்றும் அடிப்படையில் சிங்கள பௌத்த பேரினவாதிகள் நிறைவேற்றிவந்தனர்.

நீண்ட உரைகளை ஆற்றியதுடன் அப்பொழுது எதிர்ப்பு முடிந்துவிடும் ஆனால் இம்முறைதான் முதன் முதலாக தமிழ் நாடளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை தமது எதிர்ப்பைக்காட்டியுள்ளனர். தமிழ் மக்களின் மேல் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அரச பயங்கரவாதத்தை சர்வதேசம் கண்டு கொள்ள இந்த எதிர்ப்பு நடவடிக்கை வழிசெய்திருக்கும் என நம்பலாம்.

இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைக் கண்டு சீரணிக்க முடியாத ஜாதிகஹெல உறுமயவும் ஜே.வி.பி யினரும் இதனைக் கண்டித்துள்ளனர். நாடாளுமன்ற மரபுக்கு முரணாக செங்கோலை எடுத்துக்கொண்டு ஓடியவர்களும் மஞ்சள் உடைகளுடன் அடாவடித்தனங்களில் இறங்கியவர்களும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமைதிவழி எதிர்பார்ப்பை பயங்கரவாதத்தை நியாயப்படுத்தவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்துகின்றனர். புலிப்பயங்கரவாதத்தை நியாயப்படுத்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முற்படுவதாக குறை கூறுகின்றனர்.

சர்வதேச சமூகத்தின் முன்னால் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை பயங்கரவாதம் என்று சிறிலங்கா அரசு பரப்புரை செய்து வந்தது. அந்த நிலையில் இருந்து அது மாறவும் இல்லை மாறப்போவதும் இல்லை தமிழ் மக்கள் மீது யுத்தநிறுத்தம் நடைமுறையில் இருக்கும் இக்காலப்பகுதியில் கட்டவிழ்த்து விட்டுள்ள அரச பயங்கரவாதத்தை மூடிமறைக்க தனது பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது. அவசரகாலச்சட்டம் என்ற போர்வையில்; தமிழ் இளைஞர்கள் வேட்டையாடப் படுகின்றனர்.

படையினர் கோரமுகத்துடன் மக்களைத் துன்புறுத்தி அடக்கிவிடலாம் என்ற பயங்கர எண்ணத்துடன் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். யுத்தநிறுத் ஒப்பந்தத்தில் எவையெவையெல்லாம் ஒப்புக்கொள்ளப்பட்டனவோ அத்தனையும் அவசர காலச் சட்டவிதிமுறைகள் மூலம் மீறப்பட்டுள்ளன.இந்த அவசரகாலச்சட்டத்தை அங்கீகரிப்பது சிறிலங்காவின் நாடாளுமன்றமே. எனவே சிறிலங்காநாடாளுமன்றம் அரச பயங்கரவாதத்தை அங்கீகரிக்கும் நிறுவனமாகவே திகழ்கின்றது.

அரச பயங்கரவாதம் எந்தளவு கொடிய நிகழ்வுகளை தமிழ் மண்ணில் நிகழ்த்தியுள்ளது என்பதற்கு திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலைநிகழ்வும் மாணிப்பாயில் தாயும் மகள்கள் இருவருமாக மூவர் நள்ளிரவினில் படுகொலைசெய்யப்பட்டதும் அவரது கணவரும் மகனும் படுகாயமடைந்த நிகழ்வும் சான்றாக உள்ளன.

திருகோணமலையில் அம் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை மரணவிசாரணை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கொலையைச் செய்தவர்களை உடன் கைது செய்யுமாறு நீதிபதி கட்டளையிட்டுள்ளார். யாரைக் கைது செய்யப் போகின்றார்கள்? மாமனிதர் பரராஜசிங்கத்தைக் கொலைசெய்தவர்களை கைது செய்தார்களா? மாமனிதர் குமார் பொன்னம் பலத்தை கொலைசெய்தவர்களைக் கைது செய்தார்களா? மாமனிதர் சிவராமைக் கொலை செய்தவர்களை கைது செய்தார்களா? இப்படி எத்தனை கொலைகள் நடந்துள்ளன. எவராவது கைது செய்யப்பட்டனரா? இல்லையே உண்மையில் இக்கொலைகள் அரச பயங்கரவாதத்தின் செயல்களேயன்றி வேறுறெவ்வாறாக இருக்கமுடியும்.

திருமலையில் உள்ள சிங்கள மக்களை பாதுகாக்க 24 பேரைக்கொண்ட சிறப்ப அதிரடிப்படையினர் சென்றாதாகவும் அவர்களுக்கும் ஐந்து தமிழ் மாணவர்களின் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த 24பேரையும் சனாதிபதியி;ன பாதுகாப்பு ஆலோசகர் கொட்டக தெனியாதான் அனுப்பியதாகவும் செய்திகள் தெரியவருகின்றன.

ஆனால் தான் பாதுகாப்புச் செயலர் கோதபாயா ராஜபக்ஷவின் பணிப்புக்கமையவே அந்த 24 பேரையும் அனுப்பியதாக கொட்டகதெனியா கூறுகிறார் 24பேர் சிங்கள மக்களைக் காப்பாற்ற அனுப்பப்பட்டனர் என்பதை எவரும் நம்பப் போவதில்லை. இவ்வாறு அனுப்புபவர்கள் மூலம் அரஜாயகங்களைச் செய்து தமிழ் மக்களைப் பயமுறுத்திப் பணிய வைக்கவே அவர்கள் முயலுகின்றார்கள் என்பது தெளிவாகின்றது.

இதே கொட்டக தெனியா கொழும்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த காலத்தில்தான் இரவுவேளைகளில் சுற்றிவளைப்புகளும் கைதுகளும் பெண்கள் இரவு உடைகளுடன் பொலிஸ்நிலையங்களில் அடைத்துவை கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றமை நினைவு கூறப்படவேண்டியதாகும். இவற்றை ஊக்குவித்த சந்திரிக்கா பின்னர் அவரது நடவடிக்கைகள் அத்துமீறிப்போவதையும் அதனால் சாயம் வெளுக்கப் போவதையும் உணர்ந்து அவரை விலக்கி வேறிடத்தக்கு மாற்றியிருந்தார். ஓய்வுபெற்ற கொட்டக தெனியா ஹெலஉறுமயவின் பேச்சாளராக இணைந்து கொண்டார் அவரைத்தனது பாதுகாப்பு ஆலோசகராக நியமித்ததன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ எதனை நிறைவேற்ற ஆசைப்படுகிறார் என்பது தெளிவாகவே உள்ளது.

ஒருவரை அறியவேண்டுமானால் அவரது நண்பர்களை யார் என்று அறிந்தால் போதுமானது அதேவேளை ராஐபக்ச யார் யாரை எதற்காக தன்னைச் சுற்றிவைத்துள்ளார் என்பதைப் பார்ப்பதன் மூலம் அவரது உண்மையான எண்ணம் என்பது என்பது வெளியே தெரியும்.

அதாவது ராஐபக்சவின் எண்ணங்களேஇ அவரது ஆலோசகர்கள் மூலம் வெளியே தென்படுகின்றது. தேர்தல் நேரத்திலே சிங்கள இனவாத கட்சிகளுடன் தமிழீழ விரோத உடன்பாடுகளில் கையொப்பம் இட்டது அவரது சுய உருவத்தின் வெளிப்பாடேயாகும். இன்று சிறிலங்காவின் கட்சிக ளுடன் இணக்கப்பாடு காண்பதாக காண்பித்துக்கொண்டு ஒற்றையாட்சிக்குள் சிங்கள பௌத்த மேலான்மையை உறுதிப்படுத்து வதில்லையே ராஐபக்ச அக்கறை கொண்டுள்ளார்.

அவரது இரண்டு மாத ஆட்சியின் பெறுபேறுகள் அதனையே காட்டி நிற்கின்றன. தமிழ் மக்கள் சொல்லொனாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். மீண்டும் இடப் பெயர்வுகள் தொடங்கியுள்ளன. மக்கள் பாதுகாப்புக்காக படையினரின் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து விடுதலைப் புலிகள் ஆளுமைக்குள் உள்ள பகுதிகைள நோக்கிச் செல்கின்றார்கள். வேறு பல குடும்பங்கள் தமிழ் நாட்டுக்குச் சென்று கொண்டிருகின்றனர்.

தமிழ் மக்கள் தங்களின் பாதுகாப்புக்குப் படையினரின் ஆக்கிரமிப்புப் பகுதி அச்சுறுத்தலாக இருக்கும் என்பதனாலையே விடுதலைப் புலிகளின் பகுதிகளை நோக்கிச் செல்லுகின்றனர். ஆனால் அரசு மக்களைப் பாதுகாக்கவேன்று கூறிக்கொண்டு மேலும் படையணிகளை தமிழர் தாயகப் பகுதிகளுக்குள் அனுப்பி வருகின்றது. இது மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை பெரிய கேள்விக் குறியாகியுள்ளது.

இந்த இக்கட்டான நெருக்கடியான சூழ்நிலையில் தான் எரிக்சொல்கேமின் இலங்கைத்தீவுக்கான பயணம் அமைந்துள்ளது. எல்லோரும் இவரின் பயணத்தை பலத்த எதிர்பார்ப்புடன் நோக்குகின்றனர். இதேநேரம் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கமும் வருகை தரவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இவர்களின் பயணத்திற்கான ஏற்பாடுகளை எதிர்ப்பதில் ஹெல உறுமய முன்னதாக நிற்கின்றது.

மகிந்த ராஐபக்ச ஒஸ்லோவில் பேச்சுவார்த்தை கிடையாது என்பதை உறுதியாக இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. ஆனால் தமிழர் தரப்போ உடன் யுத்த நிறுத்த உடன்பாடு முழுமையாக அமுல் படுத்தவேண்டும் என்று கூறுகின்றது. இதனை மகிந்த ராஐபக்ச ஏற்பாரா என்பது தெரியவில்லை. ஏனெனில் அவர் கௌரவமான சமாதானம் தேவையெனவும் அதற்காக யுத்த நிறுத்த உடன்பாட்டில் மாற்றங்கள் தேவையெனவும் கூறி வருகின்றார்.

சர்வதேச யுத்த நிறுத்த உடன்பாட்டை அமுல்படுத்தும்படி கூறும் வேளையில் மகிந்தவின் போக்கு அதற்கு மாறாகவே இருக்கின்றதுஇ வெளியே சமாதானம் என்று கூறிக்கொண்டு படை நடவடிக்கை மூலம் தீர்வு காண்பதையே மகிந்த விரும்புவது போலவே அவரது செயற்பாடுகள் அமைந்துள்ளன. தோல்வி ஏற்படின் கிளிநொச்சிக்கே சென்று தேசியத் தலைவர் பிரபாகரனுடன் பேசுவேன் என்று கூறியவர் பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை விதிப்பதும் இவரதுயுத்த மனோநிலைகள் உறுதிப்படுத்துவதாகவே உள்ளன.

காலத்தை இழுத்தடித்து இராணுவ அடக்குமுறை மூலம் தமிழ் மக்களை நசுக்குவதே சிங்களத்து திட்டமாகும்;.

விடுதலைப் புலிகளே தமது காவலர்கள் என்பது தமிழ் மக்களது நம்பிக்கையாகும். இதை சிதைக்கும் விதத்திலேயே தமிழ் மக்கள் மீது சிங்கள படைத்தரப்பு அராஜகத்தை தீவிரப்படுத்தி வருகின்றது. எனவே தமிழ் மக்களின் பாதுகாப்பபை உறுதிப்படுத்த வேண்டியது புலிகளின் கடமையாகும். இதனையே தமிழ் மக்கள் இன்று எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

இதேநேரம் உலகில் பரந்து வாழும் தமிழ் உறவுகள் தாம் வாழுகின்ற நாட்டு அரசுகளுக்கு இங்கு நடக்கும் அராஜகத்தை தெளிவு படுத்தி உண்மைகளை வெளிக்கொணரும் பாணியில்யில் முழுமையாக ஈடுபடவேண்டும்.

<b>இலங்கைத்தீவிலே நடப்பது தமிழ் மக்களின் விடுதலைப் போரும் சிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமுமே என்பதை உணரவைப்பது உலகில் பரந்து வாழும்மக்களின் கடமையாகும் இது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாத்தை உலகறியச் செய்யும் சிறந்த வழியாகும். அதேவேளை பலமொனறே தமிழரின் உரிமையைக் காக்கின்றஇ விடுதலையைப் பெற்றுத்தரத்தக்க சக்தி என்பதை தமிழ்மக்கள் உணரவேண்டும். குறிப்பாக எமது இளம் தலைமுறை இது விடயத்தில் காத்திரமான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

<i>[b]தகவல் மூலம்- ஈழநாதம்- மட்டக்களப்பு பதிப்பு</b></i>