Yarl Forum
ரா...ரா.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: ரா...ரா.. (/showthread.php?tid=1140)



ரா...ரா.. - SUNDHAL - 01-29-2006

தமிழ் சினிமாவான "சந்திரமுகி' படத்தில் இடம் பெற்ற தெலுங்குப் பாடலான "ராரா... சரசுக்கு ராரா...' என்ற பாடலைப் பாடியவர் மலையாள பாடகியான பின்னி. கேரள பல்கலை கழகத்தின் மூலம் கர்னாடக சங்கீதத்தில் முதுகலைப் பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டமும் பெற்றுள்ள பின்னி, முதல் முதலாக திரைப்படத்திற்காக பாடிய பாடலே "ராரா...' பாடல்தான். இவர் பிரபல இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணாவின் சிஷ்யை என்பது கொசுறு செய்தி.