Yarl Forum
சுனாமி அகதிகளுக்காக வழங்கப்பட்ட கோதுமைமா விற்பனைக்காக கொண்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சுனாமி அகதிகளுக்காக வழங்கப்பட்ட கோதுமைமா விற்பனைக்காக கொண்டு (/showthread.php?tid=1110)



சுனாமி அகதிகளுக்காக வழங்கப்பட்ட கோதுமைமா விற்பனைக்காக கொண்டு - கீதா - 01-30-2006

சுனாமி அகதிகளுக்காக வழங்கப்பட்ட கோதுமைமா விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டபோது கைப்பற்றப்பட்டது
சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலக உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கோதுமைமாவை திருட்டுத்தனமாக விற்பதற்காக கொண்டு செல்லப்பட்ட வேளை கல்முனை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஐவர் கைதாகியுள்ளனர். கல்முனையில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
உலக உணவுத்திட்டத்தின் கீழ் அம்பாறை அரச அதிபரால் வழங்கப்பட்ட மாமூடைகளை ஏற்றிக் கொண்டு கல்முனையை அடுத்துள்ள பெரிய நீலாவணைக்கு லொறியொன்று சென்றுள்ளது.
அங்கு சென்ற சில நிமிடங்களிலேயே அதே லொறி கல்முனையை நோக்கி திரும்பிச் செல்வதைக் கண்டு சந்தேகமடைந்த மக்கள் இது குறித்து கல்முனைப் பெ?994;ிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து உஷாரான பொலிஸார் பாண்டிருப்பு வீதிச் சோதனைச் சாவடியில் வைத்து லொறியை மடக்கிப் பிடித்தனர். கல்முனை பலநோக்குக் கூட்டுறவுச்சங்கமூடாக பெரிய நீலாவணை ப. தோ. கூ. சங்கக்கிளைக்கு 260 மூடைமா கொண்டு செல்லப்பட்டதாகவும், அதில் 100 மூடையை கல்முனை வர்த்தகர் ஒருவருக்கு விற்றதாகவம் அதனைக் கையளிக்க கொண்டு செல்கையிலேயே பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கல்முனை தலைமைப் பொலிஸ் அதிகாரி விஜயதிலகவின் கட்டளையின் பேரில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் எம்.கே. இப்னு அசார் தலைமையிலான பொலிஸ் குழுவினரே மேற்படி அதிரடி நடவடிக்கையிலீடுபட்டு லொறியை கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் லொறியின் சாரதி, நடத்துனர், நாட்டாமை ஆகியோரும் மாவை விற்ற பெரிய நீலாவணை ப. நோ. கூ. கிளை முகாமையாளர், வாங்கிய கல்முனை வர்த்தகர் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டனர். முதல் மூவரும் சிங்களவர். ஏனைய இவரும் முஸ்லிம்களாவர். சனிக்கிழமையன்று கல்முனை மாவட்ட பதில் நீதிவான் எம்.எம். ஜெமீல் முன்னிலையில் சந்தேக நபர்கள் ஐவரும் ஆஜர் செய்யப்பட்டதாக பதில் நீதிவான் சந்தேக நபர்களை தலா 20 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ததுடன் மேலதிக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாரை கேட்டுள்ளார்.
மாவும் லொறியும் நீதிமன்றில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இணைப்பு : : kugan
Mon, 30 Jan 2006, 18:13:22 GMT
http://www.toplankasri.com/index.php?subac...t_from=&ucat=1&