Yarl Forum
விடியும் மலையகம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: விடியும் மலையகம் (/showthread.php?tid=1108)



விடியும் மலையகம் - Mathuran - 01-31-2006

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் மலையக மக்கள் முன்னணியும் கூட்டாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளது.


ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா. குழுவினருக்கும் பெ.சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணியின் குழுவினருக்கும் இடையே திங்கட்கிழமை நுவரெலியாவில் நடந்த 2 ஆம் சுற்றுப் பேச்சுகளில் இதற்கான இணக்கம் காணப்பட்டது.

கொழும்பில் சனவரி 26 ஆம் நாளன்று முதல் சுற்றுப் பேச்சுகள் நடந்தன.

"மலையகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் மற்றும் குழுக்களை ஒரே கூட்டமைப்பின் கீழ் ஒன்றிணைக்கவும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் சக்திகளுடன் இணைந்து செயற்படவும் இரு கட்சிகளும் முடிவு செய்துள்ள என்று பெ.சந்திரசேகரன் தெரிவித்தார்.

இ.தொ.க. குழுவில் சச்சிதானந்தன், வி.ராதாகிருஸ்ணன், நடராஜபிள்ளை, துரை மதியுகராஜா ஆகியோரும் மலையக மக்கள் முன்னணியின் குழுவில் லாரன்ஸ், எஸ். விஜயகுமாரன், சரத் அத்துகோரல, விஜயசந்திரன், இராஜகுலேந்திரன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

இதனிடையே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி மற்றும் மலையக மக்கள் முன்னணியினருடன் உள்ளுராட்சி கூட்டணி தொடர்பாக பேச்சுகளை நடத்த உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் திஸஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தமது கட்சியினரது கருத்தை அறிந்த பின்னரே ஐக்கிய தேசியக் கட்சியின் அணியில் இணைவது தொடர்பாக முடிவெடுக்க இரு கட்சித் தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.

நன்றி: புதினம்