Yarl Forum
மேலும் 05 தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் ஊழியர் கடத்தல். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மேலும் 05 தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் ஊழியர் கடத்தல். (/showthread.php?tid=1095)



மேலும் 05 தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் ஊழியர் கடத்தல். - விது - 01-31-2006

மேலும் 05 தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் ஊழியர் கடத்தல்.

http://www.nitharsanam.com/?art=14970


- DV THAMILAN - 01-31-2006

தமிழர் புனர்வாழ்வுக்கழக தொண்டர்கள் மட்டக்களப்பு வெலிக்கந்தை இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து கடத்தப்பட்டமை மனிதாபிமான பணிகளை மேற்கொள்ளும் தொண்டு நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட சவால். இவ்வாறு தெரிவித்தார். தமிழர் புனர்வாழ்வக்கழக நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி றெஜி வெலிக்கந்தையில் வைத்து புனர்வாழ்வுக்கழகத் தொண்டர்கள் நேற்று முன்தினம் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எங்கள் பணியாளர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு வன்னி, கொழும்பு ஆகிய அலுவலகற்களுக்கு முறையிட்டுள்ளோம். அதே போல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கொழும்புக் கிளைப்பொறுப்பதிகாரி மற்றும் பல்வேறு மனிதநேய அமைப்புக்கும் தெரிவித்தோம். இதே போல பாதுகாப்பு அமைச்சு சிறிலங்கா சனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச செய்தித் தாபனங்கள், வெளிநாட்டு து}தரகங்கள், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுக்கும், தெரியப்படுத்திருந்தோம். எம்மால் வழங்கப்பட்ட தகவல்கள் தமக்கு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அதே வேளை இந்த இந்தக்கடத்தல் சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களையும் தருமாறு கேட்டிருக்கிறார்கள்.

இராணுவத்துடனும், அவர்களின் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸ் பிரிவு ஆகியவற்றின் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இதற்கான வழிவகைகளை ஆராயுமாறும் அவர்களிடம் கூறியிருக்கின்றோம், இராணுவம் பொலிஸ், தரப்பு இப்படியான சம்பவம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்றும் இத்தகைய சம்பவம் எதுவும் நடக்கவில்லை எனவும், தெரிவித்ததாக அவர்கள் எமக்குக் கூறியிருக்கின்றார்கள்.
ஆனால் இந்தச் சம்பவம் அநாகாPகமான செயல் இந்தப் பணியாளர்கள் மிகவும் வறுமைக் கோட்டுக்க் கீழ்ப்பட்டவர்கள். அப்பாவித்தனமான பொதுமக்கள் தம்முடைய ஜீவனோபாயத்தைப் போக்குவதற்காகவே இதில் கடமையாற்றுகிறார்கள்.
பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் அரச பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் எந்தளவு அக்கறையுடன் இருக்;கின்றார்கள் என்பதை இந்தச் செயல் எடுத்துக் காட்டுகின்றது. இதனையே இன்று அனைவரும் கேட்கிறார்கள்.
இந்தச் செயல் கோழைத்தனமானது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.அதே போல சர்வதேச மட்டத்தில் அனைவரும் இதனைக் கண்டிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


- sathurangan - 02-01-2006

மகிந்தவின் சிந்தனையா? Nஐவிப்பியின்ற சிந்தனையோ இது. இதையாவது அமெரிக்கா கண்டுட்டுது அதையும் எங்கடை பெடியளுன்ட மேல பழி போடாம இருந்தா சரி.