Yarl Forum
சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!! (/showthread.php?tid=1088)



சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!! - வினித் - 02-01-2006

சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!!

[புதன்கிழமை, 1 பெப்ரவரி 2006, 17:29 ஈழம்] [ம.சேரமான்]

சிறிலங்கா அரசாங்கத்து மருத்துவர்களும், செவிலியர்களும் தேவையெனில் நாம் அனுப்பலாம். அதற்கு மேல் உதவ வேண்டும் எனில் அது குறித்து நாம் யோசிக்க வேண்டும் என்று தமிழக முதலவர் ஜெ. ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


சென்னை ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை ஜெயலலிதா அளித்த நேர்காணல்:

தமிழகத்துக்கு இலங்கை அகதிகள் வருவது எமக்கு 1983 ஆம் ஆண்டு நிலைமையை நினைவுபடுத்துகிறது. அப்போது பெருந்தொகையானோர் அகதிகளாக வந்தனர்.

நாளாந்தம் மேலும் மேலும் அகதிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அகதிகள் வருகை மூலம் அங்கே அவர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழ்நிலை இல்லை என்று தெரிகிறது என்றார்.

இலங்கை இனப்பிரச்சனைக்கு இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பிலான கேள்விக்கு ஜெயலலிதா அளித்த பதில்:

சிறிலங்கா அரசாங்கம் என்ன கோரிக்கைகளை முன்வைக்கிறது என்பதைப் பொறுத்தே உதவிகள் அமைய வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் அவர்களுக்குத் தேவையெனில் நாம் அனுப்பலாம். அதற்கு மேலான உதவிகள் எனில், அது குறித்து நாம் மேலதிகமாக யோசிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

ஈழத் தமிழர் பிரச்சனையில் கடும் போக்கை கடைபிடிப்பவர் ஜெயலலிதா என்று இந்து போன்ற ஆங்கில ஊடகங்கள் அவரைச் சுட்டிக்கு ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நசுக்கி நச்சுக்கருத்துகளை பரப்பி வரும் நிலையில் ஈழத் தமிழர்களின் யதார்த்த நிலைமையை புரிந்து ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துகள் இந்திய அரசியலில் முக்கியமானவையாக கருதப்படுகிறது என்று சென்னை ஊடகவியலாலர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

<b>இருப்பினும், மே மாதத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கவர்ச்சிக்காகவும், வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை தன் கட்சியுடன் இணைப்பதற்கு ஏதுவான தற்காலிக சூழலை உருவாக்குவது போன்ற பிரேமையை ஏற்படுத்தும் இரகசியத் திட்டத்துடனுமே, ஜெயலலிதா இத்தகைய திடீர் மாற்றுக்கருத்தை வெளிப்படுத்தியிருப்பதாக, ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</b>

www.puthinam.com


- adithadi - 02-01-2006

தற்போது தமிழகத்தில் தமிழீழ மக்களின் போரட்டத்திற்கு மிகுந்த ஆதரவு காணப்படுகின்றது, ஆதலால் ஜெ.ஜெ ம், தனது கொள்கையில் மாற்றம் கொண்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சிகளின் சார்பு தமிழீழ போரட்த்திற்கு ஆதரவாக இருப்பதால், மத்தியிலும் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகின்றது. ஆதலால் இவ் ஆண்டு தமிழீழ மக்களின் விடுதலையை தீர்மானிக்கும் ஆண்டாக இருக்கும் என நான் நம்புகிறேன்.


- Vasampu - 02-01-2006

<b>வினித் எழுதியது:</b>

<b>இருப்பினும், மே மாதத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கவர்ச்சிக்காகவும், வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை தன் கட்சியுடன் இணைப்பதற்கு ஏதுவான தற்காலிக சூழலை உருவாக்குவது போன்ற பிரேமையை ஏற்படுத்தும் இரகசியத் திட்டத்துடனுமே, ஜெயலலிதா இத்தகைய திடீர் மாற்றுக்கருத்தை வெளிப்படுத்தியிருப்பதாக, ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். </b>


இணைக்கும் போது புரியாமல் 5.30மணி நேரத்தின் பின்னாவது புரிந்திருக்கின்றது.


- puthiravan - 02-01-2006

********

எப்ப பார், ஏதாவது குறைகண்டு பிடிக்கிறதே வேலையா போச்சு.

-அங்க பாத்தா, பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு அனுதாபம் தெரிவிப்பீர் எண்டு பாத்தா சம்பந்தம்மில்லாமல் ஏஜன்சிமாரை சாடுறீர்.
-கடத்தப்பட்ட பெண்பற்றிய ஒரு செய்திக்கு அனுதாபம் தெரிவிப்பீர் எண்டு பாத்தா ஆதாரம் கேக்கிறீர்.

ஐயா சொல்றன் என்று கோபிக்க வேண்டாம், ******* அது தான் உமக்கு தமிழ் உணர்வு மிச்சம் கம்மியாக இருக்கு.

********

கருத்துக்களை கவனத்துடன் முன்வைக்கவும் அவை சிலநேரம் சக கள உறுப்பினரை தனிப்பட விமர்சிப்பதாக அமையலாம் - மதன்


- வினித் - 02-01-2006

Vasampu Wrote:<b>வினித் எழுதியது:</b>

<b>இருப்பினும், மே மாதத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கவர்ச்சிக்காகவும், வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை தன் கட்சியுடன் இணைப்பதற்கு ஏதுவான தற்காலிக சூழலை உருவாக்குவது போன்ற பிரேமையை ஏற்படுத்தும் இரகசியத் திட்டத்துடனுமே, ஜெயலலிதா இத்தகைய திடீர் மாற்றுக்கருத்தை வெளிப்படுத்தியிருப்பதாக, ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


இணைக்கும் போது புரியாமல் 5.30மணி நேரத்தின் பின்னாவது புரிந்திருக்கின்றது.

யாருக்கு புதினதிக்க? இல்லை எனக்க?


செய்தி பார்த்த பின் தானே ஆய்வாளர்கள் கருத்து கூற முடியும்


இதன் முலம் தெரிகிறது நீங்கள் யார் எண்டு :!: :!:

நான் முதல் செய்தி பதியும் போது புதினத்தில் கூட இது இனைக்க பட வில்லை பின் தான் மேலதிக இனைப்பு எண்டு போட்டு இருக்கு தீக்கோழி பற்றி


[b](மேலதிக இணைப்பு) சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!!</b>

http://www.eelampage.com/

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்
சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்


- விது - 02-01-2006

ஞாயம் என்றும் வெல்லும் செல்வி ஜெயலலிதா அதற்கு விதிவிலக்கல்ல....