![]() |
|
எம்மவர் மட்டும் எங்கே...? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: எம்மவர் மட்டும் எங்கே...? (/showthread.php?tid=1086) |
எம்மவர் மட்டும் எங்கே...? - Jenany - 02-01-2006 பனியின்றி குளிரின்றி இந்த வருடத்தின் முதல் சிரிப்பு இயற்கையின் சிரிப்பில் துளிர்ப்பது மரம் மட்டுந்தானா..! மலர்வது மலர் மட்டுந்தானா..! மனிதர்களுந்தான்..! நகரமே சிரித்தது யேர்மனியின் அந்த நகரமே சிரித்தது சிரித்துக் களித்தது இயற்கையும் சிரிக்க மனிதரும் சிரிக்க மலராய்த் தெரிந்தது குட்டைப் பாவாடைகளும் கட்டை ரீசேர்ட்டுகளும் தலை காட்டா விட்டாலும் சிட்டுக் குருவிகளாய் இளசுகள் உதட்டோடு உதடுரசி மூக்கோடு மூக்குரசி கெஞ்சலும் கொஞ்சலுமாய்..... வட்ட மேசைகளைச் சுற்றி வட்ட மிட்ட கதிரைகளில் பெரிசுகளும் சிறிசுகளும் கண் பார்த்துக் கதை பேசி மெல்லுதட்டில் தமை மறந்து ஐஸ் சுவைத்து...... கை கோர்த்து நடக்கையிலும் காதலுடன் இடை தழுவி உடல் உரசி மனம் சிலிர்க்க மலர் பரிமாறி.... இயற்கையோடு இயற்கையாக சிரித்து... சிலிர்த்து... ஊரே களித்திருக்கையில் இந்நகரில் வாழும் இருபது தமிழரில் ஒருவரையும் காணோமே...! வன்னியும் வாகரையும் மனத் திரையில் ஓட எங்கேயும் பிற்சேரியாவிலும் ரெஸ்ரோறண்டிலும் கனவுகளைக் கழுவிக் கொண்டிருக்கிறார்களோ.....??? நன்றி சந்திரவதனா செல்வகுமாரன் - kuruvikal - 02-01-2006 நம்மவர்கள்...காலச் சுழியில் சிக்கி..கோலங் குலைஞ்சு..இப்படித்தான் நிக்கினம்.. கடலிடை தள்ளாடும்..சுள்ளி போல..எங்க போகினம் என்றது அவைக்கே தெரியாது..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 02-02-2006 யதார்த்தம் பேசும் எம்மவர் கவிதையை இங்கு இணைத்தமைக்கு நன்றி ஜனனி |