Yarl Forum
ஏற்ற துணை எங்கே? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: ஏற்ற துணை எங்கே? (/showthread.php?tid=1080)



ஏற்ற துணை எங்கே? - கறுப்பி - 02-02-2006

ஐரோப்பாவில் பிறந்து வளரும் பிள்ளைகளுக்கு ஏற்ற துணை எங்கே இருக்கின்றார்கள்?


- ஊமை - 02-02-2006

இலங்கைத்தமிழர்கள் எங்கெல்லாம் பரந்து வாழ்கிறார்களோ அங்கெல்லாம் ஏற்ற துணைகள் இருக்கிறார்கள். ஏன் உங்களுக்கு திடீரென அந்த சந்தேகம்.


Re: ஏற்ற துணை எங்கே? - MUGATHTHAR - 02-04-2006

கறுப்பி Wrote:ஐரோப்பாவில் பிறந்து வளரும் பிள்ளைகளுக்கு ஏற்ற துணை எங்கே இருக்கின்றார்கள்?
சந்திர மண்டலத்திலை....................
பின்னை என்ன ஜரோப்பியாவிலை பிறந்தவுடனை கொம்பா முளைச்சிருக்கு மனமிருந்தால் வடலியடைப்புக்கையும் துணையை தேர்ந்தெடுக்கலாம் கண்டியளோ......... எங்கடையாக்கள் கப்பல் ஏறினவுடனை நடக்கிறதை விட்டுட்டு பறக்கிறதிலை ஆசைப்பட்டா வலு கஷ்டம்


Re: ஏற்ற துணை எங்கே? - தூயவன் - 02-04-2006

ஏன் முகத்தார் இதுக்கெல்லாம் கோபிக்கின்Pர்கள்? கறுப்பிக்கு அந்த வயது வந்துட்டுதாம். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


Re: ஏற்ற துணை எங்கே? - MUGATHTHAR - 02-04-2006

தூயவன் Wrote:ஏன் முகத்தார் இதுக்கெல்லாம் கோபிக்கின்Pர்கள்? கறுப்பிக்கு அந்த வயது வந்துட்டுதாம். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வயசுக்கு வந்திட்டா என்னை தொடர்பு கொள்ளுறதுதானே............. உந்தா வித்தியாச யோசிக்கப்போறாங்கள் நான் சொன்னது என்ரை உழைப்பும் டல்லாக்கிடக்கு ஏதாவது பொருத்தமான பகுதியா மாட்டி விட்டா எனக்கும் ஒரு வாசிதானே எண்டு பாத்தன்


Re: ஏற்ற துணை எங்கே? - Mathan - 02-04-2006

கறுப்பி Wrote:ஐரோப்பாவில் பிறந்து வளரும் பிள்ளைகளுக்கு ஏற்ற துணை எங்கே இருக்கின்றார்கள்?

ஐரோப்பாவில் பிறந்து வளரும் பிள்ளைக்களுக்கு துணை கிடைப்பதில் சில சிக்கல்கள் உள்ளது உண்மை தான். அவர்கள் தமிழர்களின் கலாச்சாரத்திற்கும் தாம் பிறந்து வளர்ந்த நாடுகளின் கலாச்சாரத்திற்கும் இடையே நின்று பரிதவிப்பதால் தான் இந்த பிரச்சனை. அவர்கள் எப்படி வளர்க்கப்பட்டிருக்கின்றார்கள் எந்தளவு மேற்கத்தைய கலாச்சாரம் எந்தளவு தூரம் அவர்கள் உள்வாங்கியிருக்கின்றார்கள் என்பதை பொறுத்தே இதை தீர்மானிக்கலாம்.


Re: ஏற்ற துணை எங்கே? - Mathan - 02-04-2006

MUGATHTHAR Wrote:ஜரோப்பியாவிலை பிறந்தவுடனை கொம்பா முளைச்சிருக்கு மனமிருந்தால் வடலியடைப்புக்கையும் துணையை தேர்ந்தெடுக்கலாம் கண்டியளோ......... எங்கடையாக்கள் கப்பல் ஏறினவுடனை நடக்கிறதை விட்டுட்டு பறக்கிறதிலை ஆசைப்பட்டா வலு கஷ்டம்

ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்து அந்தநாட்டு கலாச்சாரத்தை பெருமளவில் உள்வாங்கி கொண்ட ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணத்தை பேசி ஊரில் செய்து வைக்கும் போது சில சிக்கல்கள் எழலாம். இருவருக்கும் இடையே கலாச்சார வேறுபாடு இருப்பதால் ஒருவருக்கு சரி என்று தோன்றுவது மற்றவருக்கு பிழையாக தெரியும் இது போன்ற மனவேறுபாடுகள், புரிந்துணர்வின்மை அதிகரிக்கலாம்.