![]() |
|
புளுடோ - பனிக்கட்டி கிரகம்!!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: புளுடோ - பனிக்கட்டி கிரகம்!!! (/showthread.php?tid=1073) |
புளுடோ - பனிக்கட்டி கிரகம்!!! - Rasikai - 02-02-2006 <b>புளுடோ - சூரியனை சுற்றி வரும் நவக்கிரகங்களில் கடைசியாக இருக்கும் பனிக்கட்டி கிரகம்.</b> <img src='http://img138.imageshack.us/img138/5200/vinkalam4ws.gif' border='0' alt='user posted image'> சூரிய குடும்பத் திலுள்ள கிரகங்களில் நாம் மிகவும் குறைவாக அறிந்து வைத்திருக்கும் குட்டி கிரகம். புளுடோவை பற்றி நாம் அறிந்த அனைத்து தகவல்களையும் ஒரு சிறிய போஸ்ட் கார்டில் அடக்கி விடலாம். ஆனால் இந்த நிலை இனி தொடரப் போவதில்லை புளுடோவை நோக்கி பயணிக்க இதோ தயாராகிவிட்டது நாசாவின் புதிய நியூ ஹாரிசான் விண்கலன். பலவிதங்களில் புளுடோ ஒரு வித்தியாசமான கிரகம்தான். மற்ற கிரகங்கள் வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வருகையில் புளுடோ மட்டும் நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகிறது. இதனால் சில சமயம் இதற்கு முந்தைய கிரகமாக உள்ள நெப்டியூன் கிரகத்தின் வட்டப்பாதையில் குறுக்கே புகுந்தும் தாண்டியும் ஓவேர் டேக் செய்தபடி சுற்றி வருகிறது. 1979 முதல் 1999 வரை 20 ஆண்டுகளுக்கு புளுடோ கிரகம் நெப்டியுனுக்கு முன்பாக குறுக்கே வந்திருந்தது. 1989முதல் புளுடோ அதன் நீள்வட்டப்பாதையில் சூரியனை விட்டு தொலைவில் சென்று கொண்டிருக்கிறது. மீண்டும் அது சூரியனை நெருங்கு வதற்குள் 2230ஆம் வருடம் வந்துவிடும். புளுடோவில் ஒரு நாள் என்பது பூமியை பொருத்தவரை 6 நாட்கள் 9 மணி நேரத்திற்கு சமம். ஒரு வருடம் என்பது நம்மை பொறுத்தவரை 248 வருடங்கள். அடேங்கப்பா... இதுபோக புளுடோவிற்கு 3 நிலவுகள் உண்டு. அதன் அளவில் பாதியளவுள்ள சாரன் எனப்படும் நிலவோடு தற்போது புதிதாக மேலும் 2 நிலவுகள் (இன்னும் பெயரிடப்பட வில்லை) 1999ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அளவில் பார்த்தால் புளுடோ நமது பூமியின் நிலவான சந்திரனை விடவும் சிறியதுதான். எனவே புளுடோவை ஒரு கிரகமாகவே கருதக்கூடாது அது ஒரு பெரிய விண்கல்லே என்று சில விஞ்ஞானிகள் போர்க்கொடி உயர்த்தினாலும் பெரும்பாலானவர்கள் புளுடோவை ஒரு கிரகமாக ஒப்புக்கொள்ளலாம் என்று ஓட்டு போடுகின்றனர். பூமியிலிருந்து புளுடோவிற்கு செல்லக்கூடிய இந்த பயணத்தின் தூரம் எவ்வளவு தெரியுமா வெறும் 500 கோடி கிலோ மீட்டர்கள்தான். இந்த தூரத்தை கடக்க நமது விண்கலத்திற்கு 13 வருடங்களாகும். ஆனால் நாம் சரியான சமயத்தில் விண்கலனை செலுத்தினால் பயணத்தின் இடையில் குறுக்கிடும் ஜுபிடர் கிரகத்தின் ஈர்ப்பு சக்தி எல்லைக்கு அருகில் சென்று அதன் உதவியால் விண்கலனின் வேகத்தை அதிகரிக்கலாம். ஜனவரி 11க்கும் பிப்ரவரி 2க்கும் இடைப்பட்ட நாட்களுக்குள் விண்கலன் விண்ணில் ஏவப்பட்டால் ஜுபிடர் கிரகத்தின் உதவியோடு ஒன்பதரை வருடங் களுக்குள்ளேயே (2015இல்) புளுடோ கிரகத்தை அடைந்து விட முடியும். முதல் காரியமாக புளுடோ விலிருந்து 1 கிலோ மீட்டர் வரையும் அதன் நிலவான சாரனுக்கு அருகே 27000 கிலோ மீட்டர் வரையும் சென்று புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வைக்கப்படும். சாதாரணமாகவே புளுடோ கிரகத்தில் வெப்பம் மைனஸ் 300 டிகிரிக்கும் கீழே குளிர்ந்து விறைத்திருக்கும். விஷயம் இப்படியிருக்க நமது விண்கலம் புளுடோவை நெருங்கும் சமயத்தில் அது சூரியனை சுற்றி வரும் நீள் வட்டப் பாதையிலிருந்து அதிக தொலைவில் இருக்குமென்பதால் அதீத குளிரிருக்கும். (நல்ல வேளை இந்த விண் கலத்தில் மனிதர்களை அனுப்பப் போவதில்லை). ஒருவேளை புளுடோ பயணத்தின் முடிவில் ஏதேனும் எரிபொருள் மிச்சமிருந்தால் - விண்கலனை மேலும் தொடர்ந்து செலுத்தி புளுடோவை தாண்டியிருக்கும் குயிப்பர் பெல்ட் எனப்படும் பகுதியில் ஏராளமாக மிதந்து கொண்டிருக்கும் ராட்சத விண் கற்களை பற்றி ஆராய அனுப்பலாம் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஏதோ விண்வெளிப்பயணம் என்றால் சும்மா என்று நினைத்து விட்டீர்களா... தற்போதுள்ள பட்ஜெட்டின்படி நியூ ஹாரிசான் விண்வெளிப்பயணத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பின்படி 3000 கோடி ரூபாய்கள் செலவாகும். அதில் இங்கிருந்து ராக்கெட் _லம் பூமியின் புவியீர்ப்பு சக்தியை தாண்டுவதற்கே 900 கோடியை ஏப்பம் விட்டுவிடும். இத்தனை செலவு செய்து இந்த பயணம் தேவை தானா என நம் மனதில் கேள்வி எழலாம். தற்போது நமக்கு பூமி என்பது பாதுகாப்பானதாக தோன்றினாலும் வருங்காலத்தில் என்றாவது ஒருநாள் மனித குலம் பூமியை விட்டு குடி பெயர வேண்டிய ழே;நிலை ஏற்படலாம். அந்த சமயத் தில் நாம் இப்போது மேற்கொள்கிற இந்த பயணங்களின் _லம் பெறப்பட்ட தகவல்கள் பேருதவியாக இருக்கும். புளுடோ கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயம் இல்லை. ஆனால் சூரியன் உருவான கால கட்டத்தில் அங்கு நிலவிய தட்பவெப்ப நிலையை பற்றியும் வருங்காலத்தில் அங்கு என்னென்ன மாற்றங் கள் நிகழக்கூடும் என்பதையும் இந்த பயணத்தின் _லம் அறிய முடியும். நீள்வட்டப்பாதையில் தற்போது சூரியனை விட்டு புளுடோ விலகிச்சென்று கொண்டிருப்பதால் இப்போது இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் புளுடோவை ஆராய்வதற்கு 200 வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும். இந்த நியூ ஹாரிசான் பயணம் வெற்றிகரமாக முடிந் தால் நவக்கிரகங்களை பற்றிய அனைத்து தகவல்களை யும் ஓரளவிற்கு தெளிவாக அறிந்தவர்களாகிவிடுவோம். ஆனால் இந்த பயணம் நம் தேடலுக்கு ஒரு முடிவாக இருக்கப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் சூரிய குடும்பத்தை தாண்டிய நமது தேடலுக்கு இந்தப் பயணம் ஒரு ஆரம்பமாகவே இருக்கும். -பாலாஜி dinakaran.com - ப்ரியசகி - 02-03-2006 Quote:இதனால் சில சமயம் இதற்கு முந்தைய கிரகமாக உள்ள நெப்டியூன் கிரகத்தின் வட்டப்பாதையில் குறுக்கே புகுந்தும் தாண்டியும் ஓவேர் டேக் செய்தபடி சுற்றி வருகிறது. ஆய்..புளுடோக்கு லொள்ளு தான்..ரோட்டில தான் ஓவர் டேக் பண்றாங்க..புளூடோ என்ன்டான்னா..விண் வெளியிலேயே பொலீசார் தொல்லை இல்லாமல்..நெப்டியூன் கூட விளையாடுறார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ரசி அக்கா..நல்ல தகவல்கள்..நன்றி..அறிய தந்தமைக்கு..விஞ்ஞானிகள்..எவ்ளோ ஆராயுறாங்க..எவ்ளோ கண்டு பிடிக்கிறாங்க..எனக்கு வெக்கமா இருக்கு நான் ஒண்டும் கண்டு பிடிக்கலையே எண்டு..
- Danklas - 02-03-2006 ப்ரியசகி Wrote:ஆய்..புளுடோக்கு லொள்ளு தான்..ரோட்டில தான் ஓவர் டேக் பண்றாங்க..புளூடோ என்ன்டான்னா..விண் வெளியிலேயே பொலீசார் தொல்லை இல்லாமல்..நெப்டியூன் கூட விளையாடுறார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இப்பவாவது உணர்ந்தீங்களே,,, ரசிகை அக்காச்சிக்கும் உதே கவலைதானாம்,,,, <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்னை கேட்டவங்க நாசாவில வந்து புலனாய்வு வேலை செய்யச்சொல்லி,, நமக்கு நாசாவில வேலை செய்யிறது பிடிக்கல்ல,,, அதேவேளை யாழ் களத்தில பல கிரகங்களை கண்டுபிடிக்கவேண்டி இருக்கு (எந்த கிரகம் எந்த உருவத்தில இருக்கு எண்டு கண்டுபிடிக்கிறது) அதான் மோகன் கூப்பிட்ட உடன வந்துட்டன்,,, <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- arun - 02-03-2006 Planet Profile Mass (kg)............................................1.29 x 1022 Diameter (km)........................................2300 Mean density (kg/m3) ...............................2030 Escape velocity (m/sec)..............................1100 Average distance from Sun (AU).......................39.53 Rotation period (length of day) (in Earth days)......6.39 Revolution period (length of year) (in Earth years)..247.7 Obliquity (tilt of axis) (degrees)...................122.5 Orbit inclination (degrees)..........................17.15 Orbit eccentricity...................................0.248 Mean temperature (K).................................37 Visual geometric albedo..............................about 0.5 Atmospheric components...............................perhaps methane and nitrogen Surface materials....................................perhaps methane ice - arun - 02-03-2006 புளுடோ இன் உள்ளமைப்பை பார்வையிட இங்கே அழுத்தவும் http://solarsystem.nasa.gov/multimedia/gal.../Pluto_Core.jpg - adsharan - 02-03-2006 நல்ல தகவல்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி ரசிகை - தூயவன் - 02-04-2006 ப்ரியசகி Wrote:ஆய்..புளுடோக்கு லொள்ளு தான்..ரோட்டில தான் ஓவர் டேக் பண்றாங்க..புளூடோ என்ன்டான்னா..விண் வெளியிலேயே பொலீசார் தொல்லை இல்லாமல்..நெப்டியூன் கூட விளையாடுறார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நானும் முந்தி ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனான் தான். பிறகு ஊரில் "குழந்தை பிடிகாரன்" என்பது போல கன்டு பிடிகாரன் என்று என்னைப் பற்றி வதந்தியைக் கட்டிவிட்டதால் தான் அதை அப்படியே அமத்தீட்டன். :oops: - தூயவன் - 02-04-2006 Danklas Wrote:இப்பவாவது உணர்ந்தீங்களே,,, ரசிகை அக்காச்சிக்கும் உதே கவலைதானாம்,,,, <!--emo& இது வரைக்கும் எவ்வளவு கண்டு பிடித்துவிட்டீர்கள்?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 02-04-2006 தூயவன் Wrote:இது வரைக்கும் எவ்வளவு கண்டு பிடித்துவிட்டீர்கள்?? :wink: <!--emo& ஓ அவர் இப்ப கன்டு பிடிச்சுட்டார். இனிமாட்டைத்தான் பிடிக்கணும். :evil: :evil: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 02-05-2006 Rasikai Wrote:தூயவன் Wrote:இது வரைக்கும் எவ்வளவு கண்டு பிடித்துவிட்டீர்கள்?? :wink: <!--emo& அப்ப நம்ம தோஸ்து :wink: - RaMa - 02-05-2006 தகவலுக்கு நன்றிகள் ரசிகை. - வர்ணன் - 02-06-2006 செய்தி இணைப்புக்கு - நன்றி ரசிகை- அருண் உங்கள் இணைப்பும் மிகவும் பயனுடையதாய் இருக்கிறது- நன்றி இருவருக்கும்! 8) - ப்ரியசகி - 02-06-2006 தூயவன் Wrote:Rasikai Wrote:தூயவன் Wrote:இது வரைக்கும் எவ்வளவு கண்டு பிடித்துவிட்டீர்கள்?? :wink: <!--emo& இது களம் அறிந்த விசயமாச்சே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இல்லை ஜெயம் ரவி முட்டுறப்போல தான் நிக்குறார்..அதை பார்த்து சொன்னன் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 02-07-2006 ப்ரியசகி Wrote:தூயவன் Wrote:இது களம் அறிந்த விசயமாச்சே..Rasikai Wrote:அப்ப நம்ம தோஸ்து :wink:தூயவன் Wrote:இது வரைக்கும் எவ்வளவு கண்டு பிடித்துவிட்டீர்கள்?? :wink: <!--emo&ஓ அவர் இப்ப கன்டு பிடிச்சுட்டார். இனிமாட்டைத்தான் பிடிக்கணும். :evil: :evil: <!--emo& ஆமா!! ஏன் எப்ப பார்த்தாலும் அரட்டை அடித்துக் கொண்டே இருக்கின்றீர்கள். இப்பவெல்லாம் மட்டறுத்தினர் அப்படியே வெட்டுப் போடுகின்றார்கள் தெரியுமா?. அவர்களுக்கு கஸ்டம் கொடுக்காதீர்கள்! :evil: ( அப்பாடா! நான் பழியில் இருந்து தப்பித்தேன் :wink: ) - ப்ரியசகி - 02-07-2006 Quote:ஆமா!! அது நான் கேட்க வேண்டிய கேள்வி. hock: .அது மட்டுமில்லை..இதுக்கெல்லாம் மட்டுநிறுத்தினர்கள் வெட்ட வாளோட வர மாட்டார்கள்..அவர்களுக்கு வெட்ட வேற நிறையவே இருக்கு. :wink: மாட்டி விடுறவங்களைத்தான் தேடிப்பிடித்து வெட்டுவார்களாம்..அது தெரியுமா உங்களுக்கு? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> (அப்ப்போ சகிக்கு நோ ப்ரொப்ளம் :wink: ) |