![]() |
|
பாராளுமன்றத்தில் கண்ணாம்பூச்சி விளையாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பாராளுமன்றத்தில் கண்ணாம்பூச்சி விளையாட்டு (/showthread.php?tid=1066) |
பாராளுமன்றத்தில் கண்ணாம்பூச்சி விளையாட்டு - Danklas - 02-03-2006 <b>குண்டுப் புரளி பரபரப்பின் மத்தியில் தமிழ்க்கூட்டமைப்பு - டக்ளஸ் சண்டை</b> பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் சமூக அபிவிருத்தி அமைச்சரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் ஏற்பட்ட தர்க்கத்தினால் சபை சிறிதுநேரம் அமளிதுமளிப்பட்டது. குண்டுப் புரளியினால் சபை ஒத்திவைக்கப்பட்டதனால் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த தமிழ்க் கட்சிகள் ஏமாற்றத்துக்கும் கோபத்துக்குமுள்ளாகின. இந்நிலையில் சபையில் அமர்ந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்க் கூட்டமைப்பினை ஏளனம் செய்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த தமிழ்க் கூட்டமைப்பின் கஜேந்திரன், ஈழவேந்தன், ரவிராஜ் ஆகியோர் டக்ளஸ் தேவானந்தாவை நெருங்க முற்பட்ட போது, கிஷோர், சிவனேசன் ஆகியோர் அவர்களை தடுத்து சமாதானப்படுத்தினர். ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பிரதியமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயும் இன்னும் சிலரும் இணைந்து தமிழ்க் கூட்டமைப்பினரை வசைபாடினர். <b>நேருக்கு நேர் மோத அழைத்த அளுத்கமகே </b> இந்நிலையில் டக்ளஸுக்கு ஆதரவாக களத்திலிறங்கிய பிரதியமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தமிழ்க் கூட்டமைப்பினரை நோக்கி ` வாய்ப்பேச்சை விட்டுவிட்டு துணிவிருந்தால் டக்ளஸுடன் நேருக்கு நேர் சபைக்கு நடுவே மோத வருமாறு அழைத்தார். அதையடுத்து சிவாஜிலிங்கம் சவாலையேற்று சபைக்கு நடுவேயிறங்க <b> வினோநோகராதாலிங்கம் எம்.பி. தடுத்துவிட்டார்.</b> இக் களேபரத்தின் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்ட ரவிராஜ், கஜேந்திரன் ஆகியோர் அமைச்சர் டக்ளஸை திட்டித் தீர்த்தனர். டக்ளஸும் சளைக்காது ஏட்டிக்குப் போட்டியாக வசைபாடினார். இதனால் பாராளுமன்றம் சிறிது நேரம் அமளிதுமளிப்பட்டது. அவ்வேளை சபைக்குள் நின்ற படையினர் மற்றும் அதிகாரிகள் ஆச்சரியமடைந்த நிலையில் காணப்பட்டனர். <b>கட்டித் தழுவிய டக்ளஸ் - சிவாஜி</b> டக்ளஸுடன் மோதவருமாறு பிரதியமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தமிழ்க் கூட்டமைப்பினரை மீண்டும் அழைக்க சிவாஜிலிங்கம் சபைக்கு நடுவேயிறங்க, டக்ளஸும் சபைக்கு நடுவே இறங்கினார். இருவரும் மோதிக் கொள்ளப் போகிறார்கள் என்ற அதிர்ச்சியில் பலர் பார்த்திருக்க, இருவருக்கும் நடுவே பிரதியமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே நிற்க ஒருவரும் [size=18]எதிர்பாராத வகையில் சிவாஜியும் டக்ளஸும் ஒருவரையொருவர் கட்டித் தழுவியவாறு சிரித்தனர். <b>சிவாஜியை இழுத்து சென்ற வினோ </b> ஆயினும், உடனடியாக தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.யான வினோநோகராதலிங்கம் ஓடிவந்து சிவாஜிலிங்கத்தை இழுத்துச் சென்றார். இதன் பின்னர் அவர்களுக்கிடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றது. இதன் பின்னர் டக்ளஸுக்கும் அரசுக்கும் எதிராக கோஷமெழுப்பியவாறு தமிழ்க் கூட்டமைப்பினர் சபையை விட்டு வெளியேறிச் சென்றனர். நன்றி தினகுரல்....
- Danklas - 02-03-2006 தமிழ் தேசிய கூட்டமைப்பினர்களுக்கு டக்கிள்சின் (எனது) ஒரு வேண்டுக்கோள், பாராளுமன்றத்தில் சிங்கள பேரினவாதிகளோடு சண்டை செய்யுங்கள், மோதுங்கள், அதைவிட்டுவிட்டு என்னோடு மோதாதீர்கள், நாயின் வேலை தனது எஜமானார் போடு எலும்புக்கு நன்றி உணர்வோடு வாலை ஆட்டுவதுதான், சோ அதை நான் நன்றாக செய்துகொண்டு இருக்கிறேன், அது எனது கடமையும் கூட,, ஆனால் நீங்கள் ஏகோபித்த தமிழர்களின் ஆதரவோடு பாராளுமன்றம் வந்தவர்கள், ஆகவே ஒரு பயனுள்ள வகையில் பாராளுமன்றத்தில் உங்களின் நேரங்களை செலவிடுங்கள், அதைவிட்டுவிட்டு டக்கிளஸோடு மோதாதீர்கள்,, எனக்கோ எனது கட்சிக்கோ எந்தவித குறிக்கோளும் இல்லை,, ஆகவே நான் சொல்வதை கவனத்தில் எடுக்காதீர்கள், எனது பேச்சை, ஆப்பு இழுத்தவர், சித்தசுவாதினமற்ற சித்தார்த்தன் போன்றவர்களின் காமெடிப்பேச்சுக்களை தமிழ்மக்கள் கணக்கில் எடுக்காதபொழுது தமிழ்மக்களின் பிரதி நிதிகளாக பாராளுமன்றம் வந்த நீங்கள் அங்கே எங்களின் பேச்சை சிரியசாக எடுத்து ஆத்திரப்பட்டு உணர்ச்சிவசப்படுவது எந்த விதத்தில் நியாயம்? :roll: சிங்களகுள்ள நரிகள் ஏத்திவிட்டு கூத்துபார்ப்பது எதற்காகத்தெரியுமா? என்னோடு மோதவிட்டுவிட்டு அந்த சாக்கில் உங்களை போட்டுத்தள்ளுவதுதான், அதை செய்துவிட்டு உங்களின் தலைமைமீது பழியை போடுவதற்கு,,, ஆகவே புரிந்துகொள்வீர்கள்,,,
- Niththila - 02-03-2006 என்ன அங்கிள் உங்களுக்கும் மப்பா இல்லை நகைச்சுவை பகுதியில போட வேண்டியதை இங்க மாத்தி போடடுட்டீங்களா :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MUGATHTHAR - 02-04-2006 மகிந்தானந்த அளுத்கமகே பிறகு கூறினார் சா நல்லதொரு குத்துசண்டை போட்டியை காசு குடுக்காம் பாப்பம் எண்டு இருந்தன் கடைசிநேரத்திலை கவுத்துப் போட்டாங்களே.............. - தூயவன் - 02-04-2006 MUGATHTHAR Wrote:மகிந்தானந்த அளுத்கமகே பிறகு கூறினார்ஏன் முகத்தார்!! சபாநாயகர் தெரிவில் நடந்ததை அவர் பார்க்கவில்லையோ? :wink: - sathurangan - 02-04-2006 மோதவிட்டு கழுத்தறுக்கப்பாத்தவைக்கு ஏமாத்தமா இருக்கும். பாலிமண்டுல கதிரையிருக்கிற வரை டக்களஸ் தமிழனாக இருக்கமாட்டார். அவர் பதவி கொடுக்கிறதுகளை வி;ட்டு எங்களுக்குப் பரிஞ்சு பேசினா கிடைக்கிற பாதுகாப்பு அம்போ தான். |