![]() |
|
சாதிவெறி இன்னும் தீரவில்லை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சாதிவெறி இன்னும் தீரவில்லை (/showthread.php?tid=1060) |
சாதிவெறி இன்னும் தீரவில்லை - Nitharsan - 02-03-2006 [b]சாதிவெறி இன்னும் சத்தியமாய் தீரவில்லை எங்கள் தமிழ் போராட்டமும் அவ்வெறியை தீர்க்கவில்லை பலநூறு மைல்கள் பறந்து வந்தும் ஐயையோ பார்கின்றோமே சாதியது இங்குமல்லோ ஆதியிலே சாதியில்லை பாதியிலே வந்ததென்று சேதியாகச் சொல்லுறாங்க ஓதியே வைச்சாங்க மோதித்தான் சாகிறாங்க கோதித்ததான் பார்க்கிறாங்க மீதியாய் ஒன்றும் இல்லை சாதியால் அழிவுதாங்க. பார்பனரோ கொண்டு வந்தார் ஏற்பவரோ ஏற்றி விட்டார் தீர்ப்பவரோ இன்று இங்கு திண்டாட்டப் படுறாங்க மோர்மிளகாய் செய்து தந்தால் முட்டி மோதித் தின்னுவாங்க ஊர்காரர் உள்ளே வந்தால் எட்ட நில்லு என்கிறாங்க சாதியில்லை என்று தான் அம்பேத்கர் சொன்னாங்க வாதியாக பெரியாரும் அதைத்தானே சொன்னாங்க நாதியாக்கி ஒளவையாரும் பெண்சாதி ஆண்சாதின்னு ஓதியே சொன்னாங்க அதுவும் தெரியவில்லை உண்மை நிலை புரியவில்லை உயர்சாதி என்றாங்க பண்ணும் நிலை பாவம் நீங்க கோயிலுக்குள் போறாங்க உண்ணும் உணவிலேயும் சாதிதான் சொல்லுறாங்க எண்ணும் நிலை என்றும் இல்லை விண்ணாடம்தான் பேசுறாங்க அவன் எங்கள் குடிமகனாம் நான் உடையார் பரம்பரைதான் இவன் அந்தப் பக்கமாம் அவன் கரையோரப்பக்கமாம் தான் அடிமை வேலைதானே கழிவறைகள் கழுவினாலும் நான் பெரிய சாதி என்று செய்யும் தொழில் மறைக்கிறாங்க ஈழச்சண்டை வந்த போது சாதிச்சண்டை போனதென்றார் சூழச் சண்டை இல்லை என்றார் சாதிவெறி அகன்றதென்றார் வீழாச்சாதி நெறி என்றே ஓதுறாங்க பாதிதானும் போகலைங்க வாழச் சாதி பேதங்கள் சற்றியே வைக்கிறாங்க புலம் பெயர்ந்து வந்துட்டாக நலம் பார்த்து திரிகிறாங்க குலம் வேறு என்கிறாங்க குடீபோதை கொள்கிறாங்க வலம் வந்தே கலியாணம் சாதியாலே பேசுறாங்க கலம் நிறையச் சீதனமும் பலமாக வாங்குறாங்க வந்திருந்த இடத்தினிலே பிறந்து வந்த பிள்ளைகட்கு சிந்திக்காச் சாதியேல்லாம் உந்திக்கக் சொல்லுறாங்க பந்தியிலே சாதிப்பெயர் பத்திரமாய் ஊட்டுறாங்க முந்தி நின்று கழிவறையை இரவு பகல் கழுவுறாங்க கடையினிலே சிப்பந்தி நடையினிலே கால் நடையாய் உடையினிலே கேவலமாய் பார்தலே பரிதாபம் சடையினிலே பேன் வழியும் மூக்கிலே சளிமூட்டம் வாடையிலே அசிங்கம் தான் பெயர் மட்டும் பெரிய சாதி தான் தரகர் வேலை தரத்தாங்க சாதிவேற பார்க்கிறாங்க ஊர்பேர் எல்லாங் கேட்பாங்க படிக்காத மாப்பிள்ளைக்கு காரோடு பொம்பிளைங்க திமிராக வேண்டுவாங்க பேரேடு கேட்பானுகங்க வேறோடு விசாரிப்பாங்க கறுப்பினம் வெள்ளையினம் சாதியேதும் பார்க்காதுங்க நிறத்தை விட சாதி என்னன்பாங்க இணைத்தும் கூட நிற்பாங்க மறுத்து விட முடியாமல் அவன் பிள்ளை வாளர்ப்பாங்க குறு குறுத்து திரிவாங்க மெளனம் கொண்டு இருப்பாங்க பேதி குடித்தவராய் அலைகிறாங்க சாதி மான்கள் தானுங்க ஓதி இருந்த பிள்ளை மாற்றினதில் கல்யாணம் பண்ணிட்டாங்க சேதி சொன்னால் வெட்கம் என்று நாதியற்று உறைந்தாருங்க மோதி முட்டி மனைவியிடம் அடங்கி ஒடங்கி விட்டானுங்க ஐயையோ அநியாயம் என்றே உளறுகின்றார் பொய்யையோ என் பிள்ளை நடக்காது என்கின்றார் மெய்யாகத் தன்பிள்ளை கலப்பு கலியாணம் செய்ததையே ஏற்காது நிலவுக்கா ஓடப்போறானுங்க மான்பதையே மாறவில்லை மனித குலம் வளரவில்லை என்பதையே சொல்லிடலாம் தமிழன் மானம் சாதியில் தான் தன்வினையால் தவிக்கிறது இங்கு உள்ளோன் வளர்வதற்க்கு பன்மையில் சாதியில்லா பக்குவமே உணர்வானோ நம் தமிழன் [b]எழுதியவர்: "மணிக்கவி" சிவபாலு http://www.vannithendral.net/index.php?opt...id=121&Itemid=1 - kuruvikal - 02-03-2006 பாரினில் தமிழன் தான் ஓர் இனம்..! மனுக்குல உண்மைகள் மறந்தும் சிலர் பார்ப்பர்ணியம் உச்சரித்தே சாதிக்கத் துடிக்கிறார் இன்னும் தமிழருள் பிரிவினைகள்..! பெரியார் ஓதாமல் ஓதிவைத்தான் வேற்றுமைகள் சிறுமைகள் காட்டி மதத்தால் ஒதுக்கி பேசியது என்னவோ "வேண்டாம் பிரிவினை"..! உதாரணம் சொல்ல ஒரு அம்பேத்கார் யாரவர்..??! கேள்விகள் முளைக்க விடைகள் வரும் "ஒடுக்கப்பட்டவர்" இப்படித்தான் இன்னும் அடையாளம் காவுகிறார் தந்திரமாய்..! இன்னது இல்லையென்று அத்தனையும் உச்சரிச்சு மறைமுகமாய் அனைத்தும் காட்டி சாதிக்க நிற்கின்றார் சிலர்..! போடும் கோஷம் என்னவோ "வேண்டாம் ஒழிப்போம்"..! கேவலம்... வேஷங்களை கலைக்கா கோமாளிகள் தாமென்ற உண்மை உணரவில்லை அவரும்..! தமிழனவன் திராவிடன் தென்னகம் அவன் வாழ்நிலம் வஞ்சிக்க வந்த அந்நியம் கண்டு ஆரியம் திராவிடம் வகுந்து கொண்ட வீரம் தொலைத்து மருண்டதேனோ..?! பிரிவினைகள் பாகுபாடுகள் தந்ததென்று இன்னும் வரலாறு வரைவதேனோ..?! மறந்திட வேண்டியவை மறுபடி வரலாற்றில் மதிக்கப்படவும் வேண்டுமோ...?! பார் இன்னும் பார்ப்பர்ணியம் உச்சரிக்கும் கூட்டம் இருக்குது... பெரியார் வழியில் வந்த சிறுமைகள் அவை வாய் கிழிய உச்சரிப்பது இன்னும் என்னவோ வேற்றுமை தான்..! பேடிகள் இந்தக் குள்ளநரிகள் கையறுத்து அழிப்போம் மீளப்பதியும் தந்திரச் சான்றுகள்..! திராவிட உலகில் தமிழன் ஓர் மனித இனம் அதுவே உண்மை... சாதித்து நின்று கரம் கோர்ப்போம் ஓரணியில் மற்றதுகள் மறுப்போம்..! வடிவங்கள் மாறினும் புரட்சியாய் தோன்றிலும் பலரும் போதிப்பது என்னவோ ஏற்றமும் தாழ்வும்..! வேண்டாம் அது தமிழரும் மனிதராகி சமத்துவம் காணுவோம் நமக்குள்ளேயே...! வேண்டாத உச்சரிப்புகள் தவிர்ப்போம்... மறந்தவை மரிக்கட்டும்.. நிரந்தரமாய்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 02-03-2006 நிதர்சன் இணைப்புக்கு நன்றி. குருவிகள் உங்கள் கவிக்கும் நன்றி. - வர்ணன் - 02-04-2006 <b>மேற்கோள்: சாதிவெறி இன்னும் சத்தியமாய் தீரவில்லை எங்கள் தமிழ் போராட்டமும் அவ்வெறியை தீர்க்கவில்லை </b> இந்த வரிகளில் உடன்பாடு இல்லை எனக்கு- இதை மாற்ற கடுமையா நடவடிக்கைகள் எடுத்து இருக்கு-என்று நினைக்கிறேன் - . . . . எங்களின் உண்மையான போராட்டமும் தலைமையும்!! திருந்தவே மாட்டேன் என்று அடம்பிடிக்கும் ஒரு சிலர் செயற்பாடுகளை வைத்து -போராட்டத்தை குறை சொல்லி என்ன ஆகும்? :roll: :roll: நன்றி இணைப்புக்கு நிதர்ஷன்! 8) - வர்ணன் - 02-04-2006 குருவிகள் உங்கள் கவியும் அற்புதம்-ரசித்தேன் - நன்றி! 8) ஆனாலும் -ஒரு நெருடல் - ஏன் அடுத்தவர் இணைப்புக்கும்- கவிதைக்கும் - இடையில் - உங்கள் ஆக்கத்தையும் சொருகிறீங்க?- நல்லாவா இருக்கு? கருத்தும்- விமர்சனமும் மட்டும் சொல்வதே பொருத்தப்பாடானது என்பது- எனக்கு தோன்றும் எண்ணம்! 8) - kuruvikal - 02-04-2006 சம்பந்தப்பட்ட தலைப்புக்கும் ஆக்கத்துக்கும் பொருத்தமா இருந்திச்சா எனவே இங்கு வைத்துக் கொண்டோம்..! செருகலில்லை...என்றே நோக்கலாம்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ஜெயதேவன் - 02-04-2006 எங்கேயோ கேட்ட கவிவரியொன்று.... ... சாதிவெறி தற்காலிகமாக உறைநிலையிலாம்! ...... - தூயவன் - 02-04-2006 ஜெயதேவன் Wrote:எங்கேயோ கேட்ட கவிவரியொன்று.... இதை பத்திரிகையில் வரும் மணமக்கள் தேவைகளில் கண்டு கொள்ளலாம் - Nitharsan - 02-04-2006 வணக்கம், இங்கே இந்த கவிதையை போட்டது கவியின் அழகை இரசிப்பதற்கோ அதை விமர்சிக்கவோ அல்ல. அந்த கவிக்குள் அடங்கியிருக்கும் சாதீயம் என்ற ஒன்றைப்பற்றி கதைக்கவே. குருவிகளின் கருத்துப்படியும் பெரியார் பிரிவினையை வளாத்திருக்கலாம், அம்பேத்கார் சொல்லாமல் விட்டிருக்'கலாம் ஆனால் யார் இவர்கள்? ஈழத்திலே சாதியத்தை இவர்கள் வளர்த்தார்களா? இல்லை இவர்களது பேச்சை ஈழத்தவர்கள் கேட்கும் நிலையிருந்து இந்த சாதீயத்தை வழக்கில் கொண்டு வந்தார்களா? வர்னன் கவிதையிலே ஈழப்போராட்டத்தை யாரும் குறை கூறவில்லை. ஆனால் அந்த போராட்டம் வந்த பின் சாதீயம் அடியோடு அழிக்கப்பட்டதாகவே பலர் கருதினர் ஆனால் அது புலத்தில் கூட தொடர்கின்றது என்பதை காட்டவே அந்த வரிகள் அமைந்திருந்தன. கவிதை எப்படியோ..அது இருக்கட்டும்..ஆனால் புலத்திலும் தாயகத்திலும் சாதிவெறியில்லையா? ஏன் இந்த பத்திரிகைகள் புரட்சி புதமை என்று சொல்லி விட்டு மணமகன் மணமகள் தெரிவுப்பகுதியில் மட்டும் சின்ன தாய்....______________________________ இந்த சாதியிலிருந்து எதிர்பார்க்கபப்டுகின்றனர் என்று போடுகின்றனர்? சாதி வெறியை தூண்டுவது எமது சமூகமாக இருக்கின்றது. இந்த கவிதையை யாழில் போட்டேன் ஆனால். அரட்டை அடிப்பதும் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடவோருமே அதிகம் அவர்கள் அதிலே நேரத்தை செலவு செய்கின்றனர். இதை பற்றி அதாவது முக்கியமான எங்கள் சமூக பிரச்சினைகளில் ஒன்றைப்பற்றி இவர்கள் அக்கறைப்படவில்லை. அதன் காரணம் என்ன? இவர்களும் சாதீயத்தை ஆதரிக்கின்றனாரா? அல்லது சமூகம் எப்படி போனால் எனக்கென்ன என்று நினைக்கின்றார்களா? அல்லது இது பற்றி கருத்து வைத்து களைத்து விட்டார்களா? புரியவில்லை... ஆண் பெண் என்ற இரு பாலை தவிர தமிழர்களில் மட்டுமல்ல எந்த இனத்திலும் சாதிகள் இல்லை என்ற நிலையை உருவாக்க இங்கிருக்கும் இளைஞர்கள் ஏன் முன்வரமாட்டேன் என்கின்றனர்.? தாய் தந்தையரை போல இவர்களுக்கும் சாதி வெறி ஏறிவிட்டதா? தெரியவில்லை. - தூயவன் - 02-04-2006 இல்லை நிதர்சன். சாதியத்தைப் பற்றி விவாதிப்பதை விட அதை செயலிழக்கச் செய்வதே சாலச் சிறந்தது. சொல்லப்போனால் இன்று வரை புலிகள் சாதியத்தை விவாதித்ததில்லை. ஆனால் அவற்றை மழுங்கடிக்க முயற்சி செய்திருக்கின்றார்கள். ஏனென்றால் அது தான் எமக்குத் தேவையும் கூட. இந்தியாவில் சாதிகளைப் பற்றி கரு த்தோட்டம் கொண்டு செல்லப்பட்டமையால் தான் பல சாதிக்கட்சிகள் தோற்றம் பெற்றன. எனவே சாதிகள் குறித்தான விவாதமோ, அல்லது அது குறித்தான கருத்துக்களோ சாதிகள் பற்றிய கண்ணோட்டத்தை புதுப்பிற்கும். - iruvizhi - 02-04-2006 சாதி சதி சா தீ - RaMa - 02-05-2006 உங்கள் கோபம் புரிகின்றது நிதர்சன். சாதி என்பது எப்படி வந்தது என்றால் அவர் அவர் செய்த தொழில்களின் நிமிர்த்தமே வந்தது என்கிறார்கள். புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் என்ன தொழிலை வைத்து என்ன சாதி என்று எப்படி பிரிப்பது என்று தான் எனக்கு விளங்கவில்லை? இங்கு பிறந்து வளரும் சிறுவர்கள் கூட சிலசமயங்களில் சாதியை பற்றி கதைக்கும்போது சிரிக்க தான் தோன்றுகின்றது. பிள்ளைகளுக்கு எது தேவையோ அதை கற்றுக்கொடுக்க பெற்றோர்கள் முன் வருவதை பார்க்கிலும் ஒரு சதத்திற்கும் பிரயோசனப்படதா இந்த சாதியை பற்றி பிள்ளைகளுக்கு வகுப்பு எடுப்பது தான் நகைச்சுவையாக இருக்கின்றது. - வர்ணன் - 02-05-2006 RaMa Wrote:உங்கள் கோபம் புரிகின்றது நிதர்சன். சாதி என்பது எப்படி வந்தது என்றால் அவர் அவர் செய்த தொழில்களின் நிமிர்த்தமே வந்தது என்கிறார்கள். புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் என்ன தொழிலை வைத்து என்ன சாதி என்று எப்படி பிரிப்பது என்று தான் எனக்கு விளங்கவில்லை? அப்பிடி போடுங்க அரிவாளை - ரமா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நிதர்சன் இதையும் வாசியுங்க- 8) தவறு எங்கே இருக்கு என்று கண்டு கொள்வீர்கள்! - Unnavan - 02-23-2006 எங்கடை சனம் சாதி இல்லை எண்டால் தங்கடை சொந்தக்காறரை விட்டு தாங்கள் விலகி விடுவம் எண்டும் தங்கள் தங்கட சாதி பெரிசு சின்னன் எண்டும் ஒரு விதமான அடிப்படைவாதப் போக்கிலை தான் இருக்குதுகள்... இதை இனி வாற தலைமுறை தான் மாத்த வேணும்... ஆனால் புலம் பெயர்ந்து போயும் மாறல்லை எண்டு பாத்தா.... சிரிப்பாத் தான் இருக்கு.... அங்கை போய் எங்கடை மொழியை மறந்தாலும் சாதியை மறக்கல்லை....... வாழ்த்துக்கள்..... - Nitharsan - 02-24-2006 Quote:சாதியத்தைப் பற்றி விவாதிப்பதை விட அதை செயலிழக்கச் செய்வதே சாலச் சிறந்தது. சொல்லப்போனால் இன்று வரை புலிகள் சாதியத்தை விவாதித்ததில்லை. ஆனால் அவற்றை மழுங்கடிக்க முயற்சி செய்திருக்கின்றார்கள். தூயவன் மிக பிந்திய பதிலை தருவதையிட்டு மனம்வருந்துகின்றேன். சாதியத்தை பற்றி விவாதிப்பதில் பயனில்லை என்றே வைத்துக் கொள்ளுவோம். ஆனால் அதை அப்படியே விடுவதில் என்ன பயன்? நிறு பூத்த நெருப்பாய் தமிழர்களுக்குள் சாதிவெறி இன்னமும் இருக்கின்றது. புலிகள் அதைப்பற்றி விவாதிக்க வில்லை ஆனால் அதற்கெதிராக செய்ற்ப்படுகின்றனர். ஆனால் புலத்தில் யார் இதை செயற்ப்படுத்துவார்கள்? இந்தியாவில் சாதி பற்றி விவாதம் செய்ததால் கட்சிகள் உருவாகவில்லை. மாறாக சாதிக்கெதிராக பிரச்சாரம் செய்யும் போது அக்கட்சிகள் முளைத்தன. அன்று சாதியை எதிர்ந்து நின்றவர்கள் இன்று அவர்களுக்கு ஆதரவாக இருப்பதால் இன்னும் இனிமேல் ஒரு போதும் இந்தியாவில் சாதியை அழிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்தியர்களோடு ஒப்பிடுகையில் ஈழம் மிகவும் பரவாயில்லை. ஆனாலும் இன்னும் ஈழத்தில் பல மாற்றங்கள் வரவேண்டும். அது ஈழத்தில் என்பதை விட பல்லாயிரம் மயில்களுக்கப்பால் புகலிடம் தேடி இங்கு வந்திருக்கும் நாங்கள் சாதியை மட்டும் கையில் பிடித்து கொண்டு கலாச்சாரம், மொழி,பண்பாடு என்பவற்றை காற்றிலே பறக்க விட்டுவிட்டேம். இதைப்பற்றி தான் கதைக்கலாம் என்றேன். தொழில் நிமிர்த்தம் சாதி பார்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் தொழில்களுக்கும் சாதிக்கும் என்ன தொடர்பு? என்று புரியவில்லை. காலம் காலமாக இருந்து வரும் இந்த சாதி முறையை எமது தலைமுறை ஏன் இல்லாதொழிக்க முயலக்கூடாது என்பதே எனது ஆதங்கம்..... |