![]() |
|
இராணுவத்தையும் குழுக்களையும் வெளியேற்ற நடவடிக்கை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இராணுவத்தையும் குழுக்களையும் வெளியேற்ற நடவடிக்கை (/showthread.php?tid=1059) |
இராணுவத்தையும் குழுக்களையும் வெளியேற்ற நடவடிக்கை - DV THAMILAN - 02-03-2006 தமிழ் மக்கள் மீது நெருக்குவாரங்களை ஏற்படுத்துகிற சிறிலங்கா இராணுவத்தையும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களையும் எமது மண்ணிலிருந்து வெளியேற்ற எமது நடவடிக்கைகளைத் தொடங்குகிறோம் என்று யாழ். பொங்கியெழும் மக்கள் படை அறிவித்துள்ளது. பொங்கியெழும் மக்கள் படையின் அறிக்கை: தமிழ் மக்களது இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதை அடிநாதமாகக் கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதற்காகன பேச்சுவார்த்தைகள் சர்வதேச அனுசரணையுடன் ஜெனிவாவில் நடைபெற உள்ளதன் மூலம் படைத்தரப்பினர்களது நெருக்குவாரங்களை நிறுத்தும் என தமிழ்மக்கள் எதிர்பார்த்தனர். இந்த எதிர்ப்பார்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே சிறிலங்காப் படையினருக்கு எதிரான எமது தாக்குதல்களை நிறுத்தியிருந்தோம். சிங்களப் பேரினமானது எவ்வகையிலும் இதயசுத்தியுடன் பேச்சுவர்ர்த்தைக்கான சுமுகமான பின்புலனை உருவாக்குமா? அல்லது தமிழ்மக்கள் மீதான நெருக்குவாரங்களை அதிகரிக்கும் என்ற ஐயம் எழவே செய்தது என்றாலும், எமது நல்லெண்ண வெளிப்பாட்டிற்கு சிறிலங்கா படைத்தரப்போ அல்லது ஈ.பி.டி.பி உட்பட்ட துணை இராணுவக் குழுக்களோ எவ்வித நல்லெண்ணப் பிரதிபலிப்புக்களையும் மேற்கொள்ளவில்லை. சிங்கள பேரினவாத அரசியலாளர் இராணுவ நிலைப்பட்ட தங்கள் சிங்கள மேலாதிக்க வாதத்தில் இருந்து விடுபட்டு ஆக்கப+ர்வமான முற்போக்கான போர்நிறுத்தச் செயற்பாடுகளை எடுப்பதற்கு சிறிளவு கூட முயலவில்லை. மாறாக கால இழுத்தடிப்புக்கள் கபடத்தனமான சொற்சிலம்பாட்டம் கொண்ட நம்பகத் தன்மையற்ற அறிக்கைகளை அள்ளித்தெளித்துக்கொண்டு இராணுவ நெருக்குவாரங்களை மிக இறுக்கமாக அதிகரித்துவருகின்றன. உக்கிரமடைந்து வரும் நெருக்குவாரங்களால் தமிழ் மக்களது எதிர்ப்பாப்புக்கள் கானல் நீராகிவிட்டது. சுற்றிவளைப்புக்கள், தேடுதல்கள், அப்பாவிமக்கள், தொண்டர்சேவை நிறுவன உறுப்பினர்கள் கடத்தல்கள், காணாமல் போகுதல்கள், அப்பாவிகள் மீதான தாக்குதல்கள், பெண்களை அவமானப்படுத்துதல் என அச்சுறுத்தல்களும் வன்முறைகளும் தடையற்ற அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. மானிப்பாய், ஊரெழு படைமுகாம்களில் பெண்களது அவலக் கதறல்கள் இரவுகளில் கேட்கின்றன. கைது செய்யப்படுவோர் சித்திரைவதைக் கூடங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டு உள்ளமும் உடலும் தெறிபட வதைபடுகின்றனர். மனித உரிமைகள் சித்திரவதைக் கூட சுவர்களில் மோதப்பட்டு உதிரம் கக்கி பலியாகின்றது. மனித உரிமைகள் முற்றாக மறுக்கப்பட்டு அரசியல் அபிலாசைகள், வாழ்வுரிமைகள் காலில் மிதிபடும் பொழுது அமைதியும், நிம்மதியும் தூரத்தே விலகிப்போய்விடுகின்றன. இனியும், கைகட்டி மௌனித்து நாம் போவதில்லை தமிழர்களுக்கு முன்னால் இப்போது ஒரேயொரு தெரிவுதான உள்ளது. அது தற்காத்துக்கொள்ளுதல் எனும் மறுக்கமுடியாத மனித உரிமைகள்பாற்பட்ட தெரிவேயாகும். சிறிலங்காப் பேரினவாத்த்தின் முன்கூட்டிய நயவஞ்சகத் திட்டமிடலுடன், சிறிலங்காப் படைத்தரப்பினது பாதுகாப்புக் குடைக்குள் பதுங்கியிருந்து கோழைத்தனமான தமிழ்மக்கள் விரோத கொடுரங்களை இழைக்கும் ஈ.பி.டி.பி உட்பட்ட துணை இராணுவக் குழுக்களை எமது மண்ணிலிருந்து உடனடியாக அகற்றுதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம். மனிதத்தின்மீது கொண்டுள்ள அக்கறையின் பேரால், இலங்கைத்தீவில் சமாதானத்தை விதைத்துவிட ஆர்வமுடன் முயலும் சர்வதேச சமூகத்தின் எண்ணங்களைத் தூக்கியெறிந்தும் விடுதலைப் புலிகளின் பேச்சுக்கான சமிக்கைகளை அவகௌரவப்படுத்தி நிற்கும் சிறிலங்காப்படைகளும் அவர்களின் பாதுகாப்புடன் மனிதத்துக்கு எதிரான தமது நடவடிக்கை நிகழ்ச்சி நிரலாகக்கொண்டுள்ள ஈ.பி.டி.பி உட்பட்ட துணை இராணுவக்குழுக்களையும் எமது மண்ணில் இருந்து வெளியேற்றியே தீருவோம். நாளாந்தம் எமது மக்கள் கொல்லப்படுவதையும் பாதிக்கப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஆகவே நாம் தொடர்ந்தும் பொறுமைகாப்பது சாத்தியமற்றது. எனவே சர்வதேச சமூகத்திடமும் விடுதலைப் புலிகளிடமும் எம்மை மன்னிக்க வேண்டுகின்றோம். எமது அன்புக்குரிய யாழ் குடாநாட்டு உறவுகளே! தொடரும் இராணுவத்தினரதும், துணைக்குழுக்களுக்கும் எதிராக நாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கு ப+ரண பங்களிப்பு வழங்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம் என்று யாழ். பொங்கியெழும் படை எச்சரித்துள்ளது. |