Yarl Forum
மோர்க்குழம்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: மோர்க்குழம்பு (/showthread.php?tid=1047)



மோர்க்குழம்பு - starvijay - 02-04-2006

<b>தேவையான பொருட்கள்:</b>

புளித்த மோர்: 2 ஆழாக்கு

கடலைப் பருப்பு: 1 தேக்கரண்டி

துவரம்பருப்பு: 1 தேக்கரண்டி

தேங்காய்: அரை மூடி

காய்ந்த மிளகாய்: 5

பெருங்காயம்: சிறு துண்டு

கடுகு: அரை தேக்கரண்டி

உளுந்துப் பருப்பு: 1 தேக்கரண்டி

தனியா: 2 தேக்கரண்டி

வெந்தயம்: அரை தேக்கரண்டி

அரிசி மாவு: ஒரு தேக்கரண்டி

மஞ்சள் பொடி: கொஞ்சம்

உப்பு: தேவையான அளவு

<b>செய்முறை:</b>

மோரை எடுத்து அதில் 2 சிட்டிகை மஞ்சள் பொடியை சேர்க்கவும். அதில் அரிசி மாவு, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றைப் போட்டு கலக்கவும்.

வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகாய், உளுந்துப் பருப்பு, வெந்தயம், பெருங்காயம், தனியா, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுத்து அம்மியிலிட்டு அதனுடன் தேங்காய்த் துருவல், மிளகாய் சேர்த்து மைபோல அரைக்கவும்.

அரைத்ததை மோரில் போட்டு நன்கு கலக்கவும். இதை அடுப்பிலேற்றி நுரைக்கும் அளவுக்குக் கொதிக்க வைத்து இறக்கி விடவும். இதில் கடுகு, உளுந்துப் பருப்பைத் தாளித்துக் கொட்டிவிட்டால் மோர்க்குழம்பு ரெடி.


- Rasikai - 02-04-2006

தகவலுக்கு நன்றி ஸ்டார்விஜே

முந்தி தூயா போட்ட மோர்க்குழம்பும் இருக்கு பாருங்கோ

http://www.yarl.com/forum/viewtopic.php?t=5005&start=0


- RaMa - 02-05-2006

மோர்க்குழம்பு இணைப்பிற்கு நன்றிகள்.