Yarl Forum
பைனாப்பிள் ரசம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: பைனாப்பிள் ரசம் (/showthread.php?tid=1046)



பைனாப்பிள் ரசம் - starvijay - 02-04-2006

துவரம்பருப்பு 100 கிராம்
புளி 10 கிராம்
அன்னாசி 4 துண்டுகள்
உலர்ந்த மிளகாய் 6
தனியா 5 கிராம்
கொத்தமல்லி சிறிது
கறிவேப்பிலை சிறிது
கடுகு அரைத்தேக்கரண்டி
எண்ணெய் 10 கிராம்
உப்பு தேவையான அளவு

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் தனியா இரண்டையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்து அம்மியில் வைத்துப் பொடித்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் இருநூறு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். தண்ணீர் சூடானதும் பருப்பைப்போடுங்கள்.

பருப்பு நன்றாக வெந்ததும் புளி, உப்புப் பொடி, மிளகாய்ப்பொடியையும் போட்டுக் கலந்து விடுங்கள்.
எல்லாம் நன்றாக கொதித்ததும் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக்கிப் போடுங்கள்.

மேலும் நன்றாகக் கொதித்ததும் மேலும் இருநூறு மில்லி தண்ணீர் விட்டுச் சிறிது நேரம் அடுப்பிலேயே வைத்திருந்து இறக்குங்கள்.

கடுகைத் தாளித்துக் கொட்டுங்கள். கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் போட்டு உபயோகியுங்கள்.


- Rasikai - 02-04-2006

பைனாப்பிள் இரசம் இப்பதான் கேள்விப்படுறன். நன்றி செய்முறைக்கு


- RaMa - 02-05-2006

அன்னாசிப்பழ ரசம் இனிப்பாகத்தானே இருக்கும் :roll: :roll: ?