![]() |
|
மார்க்கன் குழுவினரே மாமனிதர் யோசப்பை சுட்டனர்: - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மார்க்கன் குழுவினரே மாமனிதர் யோசப்பை சுட்டனர்: (/showthread.php?tid=1032) |
மார்க்கன் குழுவினரே மாமனிதர் யோசப்பை சுட்டனர்: - iruvizhi - 02-04-2006 மார்க்கன் குழுவினரே மாமனிதர் யோசப்பை சுட்டனர்: தப்பி வந்த சிறுவன் கூறுகிறான் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்டுக்கொலை செய்தது சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் கும்பல்தான் என ஒட்டுப்படையிலிருந்து விடுதுலைப்புலிகளிடம் சரணடைந்த சிறுவன் தெரிவித்துள்ளான். கொக்கட்டிச்சோலை சோலையகத்தில் நேற்று விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த சிறுவனான செந்தில்நாதன் அருள்ராஜ் என்பவனே இந்தத் தகவலைத் தெரிவித்தான். ஆயுதக் கும்பலைச் சேர்ந்த மார்க்கன் தலைமையிலான ஆட்கள்தான் இந்தக் கொலையைச் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. தன்னைப் பிடித்து வைத்திருந்த காலத்தில் மார்க்கனின் இடத்தில் நிற்கிறவர்கள் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பியை சுட்டுப்போட்டார்கள் என ஒட்டுக்குழுவைச் அடிக்கடி பேசிக் கொள்வார்கள் என்றான் அருள்ராஜ். தகவல்: பதிவு புள்ளி கோம் www.pathivu.com |