![]() |
|
வாசித்ததில் பிடித்த பிறர் கவிதைகள். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வாசித்ததில் பிடித்த பிறர் கவிதைகள். (/showthread.php?tid=101) |
வாசித்ததில் பிடித்த பிறர் கவிதைகள். - kirubakaran - 04-23-2006 <b>மீட்டுத் தருமா???</b> இந்திய மண்ணின் மானத்தைக் காக்க கார்கிலுக்குப் புறப்பட்டான் காவிரியாற்றுத் தஞ்சை மண் வீரன் தடுத்தான் அவனது தம்பி இனமான இளவேள் அண்ணா! நீ புரியும் போர் மீட்டுத் தருமா நம் தமிழர் இழந்த தேவிகுளம், பீர்மேடு, வேங்கட மலை, கோலார் தங்கவயல் கச்ச தீவு போன்றவற்றை ஏன் நம்மின மக்களின் காவிரியாற்று நீரையாவது சிந்திக்கத் தொடங்கினான் கார்கில் வீரன். - இளங்கோ (பிரித்தானியா) <b>வாளை எடுக்கட்டும் கரங்கள்!</b> பாலுக்கு பாலகன் வேண்டி அழுதான் கல்லுக்கு பாலூற்றி தமிழன் தொழுதான் வேலுக்கு முருகன் எம் இனத்தின் தந்தை புல்லுக்கு தம்பியாய் செய்தான் நிந்தை தமிழன் நெற்றியில் நீறை அணிந்தான் அன்றே போரில் தேரை இழந்தான் பின்பு மெதுவாய் பேரையும் இழந்தான் இன்று மொத்தமாய் வேரையே இழந்தான் வீரிய தமிழனை வீழ்த்திய மந்திரங்கள் ஆரிய பார்ப்பான் செய்திட்ட தந்திரங்கள் கூப்பிய கைகள் கொண்டவர் மரங்கள் கூரிய வாளை எடுக்கட்டும் கரங்கள் -சபேசன் (14.03.06) <b>கோவில்</b> வண்ணப் பட்டாடை உடுத்திய வண்ணச் சிட்டுக்கள் வட்டமிடத்துடிக்கும் வரி வரியாய்க் காளையர்கள் நகைக் கடையே கொலுமடமாய் நங்கையர்கள் நானுறு பேர் நன்றாக நோட்டமிடும் நாலைந்து திருடர் கும்பல் கள்ளுக் குடித்தவர்போல் கலையாடும் காவடிகள் காண அழகுப் பெண்கள் வந்தால் காவடியில் வேகம் கூடும் அன்று பார்த்த திரைப் படத்தை அழகழகாய் சொல்லிடுவார் ஆண்கள் கொஞ்சம் கூடிவிட்டால் அரசியலும் சேர்ந்து விடும் கோவில் என்றால் பக்தி என்பர் - அங்கோ நாதியற்று நிற்கின்றார் கடவுள்! - இளங்கோ (பிரித்தானியா) <b>காகங்களே! மேகங்களே!...</b> காகங்கள் கரைந்தால் குயிலின் பாட்டு கேட்காது மேகங்கள் நிறைந்தால் நிலவின் அழகு தெரியாது ஆயினும் காகங்களே! மேகங்களே! குயிலின் சத்தம் குறைந்திருப்பதாலும் நிலவின் ஒளி மறைந்திருப்பதாலும் அவைகள் இல்லையென்று அர்த்தம் இல்லை இதோ, அவைகள் வெளிக்கிளம்பி விட்டன ஆகவே காகங்களே! மேகங்களே! கூவுகின்ற ஆவலையும் வண்ணமாய் மின்னுகின்ற எண்ணத்தையும் விட்டு கரைதலையும் கலைதலையும் மட்டும் செய்யுங்கள் -சபேசன் (10.01.06) <b>அகவை 51 இற்கு வாழ்த்து</b> வருமீழ விடிவிற்காய் திருவான வடிவொன்று பெருமானத் தமிழொன்று உருவான நாளின்று காத்தருள வேண்டுமென்று காத்திருந்த ஈழ மண்ணில் கார்த்திகை மாதந்தன்னில் மீட்பராய் ஒரு தலைவன் வந்துதித்த நாளின்று இன்று இத் திருநாளில் கொன்றழித்த பகையெல்லாம் வீழ்த்தி வென்ற ஐயனை வாழ்த்தி வணங்கிப் போற்றிடுவோம் -சபேசன் (26.11.05) |