![]() |
|
உருளைக்கிழங்கு மீன் குழம்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: உருளைக்கிழங்கு மீன் குழம்பு (/showthread.php?tid=1001) |
உருளைக்கிழங்கு மீன் குழம்பு - ashwana - 02-06-2006 உருளைக்கிழங்கு மீன் குழம்பு மீன் அரைக் கிலோ உருளைக்கிழங்கு அரைக் கிலோ வெங்காயம் 50 கிராம் காய்ந்தமிளகாய் 3 மஞ்சள்தூள் அரைத் தேக்கரண்டி சீரகம் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லிவிதை 2 தேக்கரண்டி தக்காளி 2 பச்சைமிளகாய் 2 கறிவேப்பிலை சிறிது புளி சிறிய அளவு எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி உப்பு 2 தேக்கரண்டி மீனைக் கழுவிச் சுத்தம் செய்து துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். அதன்மீது மஞ்சள்தூள், உப்பு கலவையை பூசி வைக்கவும். உருளைக்கிழங்கினை தோலுரித்து நான்காக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி தனியே அரைத்து வைக்கவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் இரண்டாக கீறிக் கொள்ளவும். காய்ந்தமிளகாய், மஞ்சள்தூள், சீரகம் மற்றும் கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் போட்டு நன்கு வதக்கவும். அதனுடன் தேங்காய் விழுதினையும், பச்சைமிளகாயையும் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கு, நறுக்கிய தக்காளி போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் வேகவிடவும். புளியை சிறிது நீரில் ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு வெந்ததும் மீன் துண்டங்களைப் போட்டு, புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும். கொதித்து குழம்பு பக்குவத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். கால அளவு 40 நிமிடங்கள் பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு நன்றி அன்புடன் அஷ்வ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- RaMa - 02-08-2006 உங்கள் செய்முறைக்கு நன்றிகள் அஸ்வனா. - அருவி - 02-08-2006 அட 40 நிமிடம் எடுக்குமா நன்றி தகவலிற்கு<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- விது - 02-08-2006 உருளைக்கிழங்குìÌ À¾¢Ä¡ Ò+º½¢ì¸¡Ôõ §À¡¼Ä¡õ |