![]() |
|
புரியுமா புதிர்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: புரியுமா புதிர்? (/showthread.php?tid=1000) Pages:
1
2
|
புரியுமா புதிர்? - வர்ணன் - 02-06-2006 சமீப சில நாட்களாக - அறிமுகம் பகுதியில் வந்து - ஏதோ பேசி போபவர்கள் - பற்றி - யாருக்கும்- ஏதும் தோணுகிறதா? எனக்கு என்னமோ ஒரு குழுவின் செயற்பாடு-! தேசியத்திற்கு எதிராய் - அது- ஒன்று கூடி முடிவெடுத்தபின் - ஒவ்வொன்றாய்- அறிமுகம் என்ற பேரில்- உள் நுழைவதாய் நினைக்கிறேன்-! இதற்கு யாழ்கள நிறுவனர்கள் - பொதுவான பண்பு -என்ற ரீதியில் அவர்களை கொஞ்சம் பேச விட்டபின் அகற்றலாம் -என்று ஏதும் - விதி கொண்டிருக்கலாம்! என் போன்றவர்களை பொறுத்தவரை -இது போன்றவர்களை முளையிலேயே- கிள்ளி எறிந்து விட வேண்டும் - என்ற யதார்த்தமான கோவமே - விஞ்சி நிக்கிறது -! நாங்கள் - அழிந்து கொண்டு இருக்கும் ஒரு இனம்- நாங்கள் நாங்களாய் இருக்கும் வரைதான் வெல்வோம்! ஆகவே இங்கே விட்டுக்கொடுப்புக்கும்- விஷ செடிகளின் அரும்புதலுக்கும் இடமாய் இருக்க கூடாது -எந்த சமரசமும் அவர்கள் கூட இருக்க முடியாது என்பதே - என்பதே என் எண்ணம்! 8) Re: புரியுமா புதிர்? - தூயவன் - 02-06-2006 ஆமோம் வர்ணன். சில மாதங்களாக பலபேர் பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள். இதை நிர்வாகத்துக்கும் சுட்டிக் காட்டியிருக்கின்றேன். இவ்வளவு கால யாழ்களத்தில் இவ்வளவு அதிகமான பதிவுகள் இடம் பெற்றிருக்குமோ தெரியாது. அதுவும் கடந்த டிசம்பரில் இருந்து தான் இத்தனை இணைப்புக்கள்!! நிர்வாகம் தமிழ்தேசியத்தை கூறுபோடவோ, அல்லது அவமதிக்கும் ஆட்களை தயவு தாட்சயமின்றி வெளியேற்றுமாறு வேண்டுகின்றேன். வேறு பெயரிகளில் வருவார்கள் என்ற ஜயுறவு வேண்டாம். எத்தனை பெயரில் வந்து எழுதினாலும் அத்தனை பேரையும் தடை செய்து விடலாம். - சுடர் - 02-06-2006 களைகளை வளரவிட்டு களைவதைவிட அவற்றை ஆரம்பத்திலே களைய வேண்டும். அவ்வாறு செய்யாது விட்டபின் பிறகு களைவதற்கு முன் அக்களைகள் பல தாம் அடையவேண்டியவற்றை அடைந்துவிடும். இதனை ஏன்தான் களநிர்வாகம் அறியாது இருக்கிறது என்பதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை. கடந்த சில மாதங்களாக களத்தில் வைக்கப்படும் கருத்துக்களை பார்த்தும் களநிர்வாகம் சரியான முடிவுகளை எடுக்க தவறும் நிலையில் இது மேலும் மேலும் தொடர வாய்ப்புக்கள் மிக அதிகமாகவே உள்ளன. - வினித் - 02-06-2006 சுடர் Wrote:களைகளை வளரவிட்டு களைவதைவிட அவற்றை ஆரம்பத்திலே களைய வேண்டும். அவ்வாறு செய்யாது விட்டபின் பிறகு களைவதற்கு முன் அக்களைகள் பல தாம் அடையவேண்டியவற்றை அடைந்துவிடும். இதனை ஏன்தான் களநிர்வாகம் அறியாது இருக்கிறது என்பதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை. கடந்த சில மாதங்களாக களத்தில் வைக்கப்படும் கருத்துக்களை பார்த்தும் களநிர்வாகம் சரியான முடிவுகளை எடுக்க தவறும் நிலையில் இது மேலும் மேலும் தொடர வாய்ப்புக்கள் மிக அதிகமாகவே உள்ளன. சிலநேரம் திருந்துவதுக்கு சந்தர்ப்பம் கொடுத்துள்ளாரோ என்னமே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- malu - 02-06-2006 னான் வட இந்தியாவில் படித்துகொன்டிருக்கிரென்.என்னுடைய விடுதி கனினியில் தமிழ் எழுத்தைப் பாவிக்க முடியாது அதனால் தான் நான் ஆஙிலததை உபயோகிக்கிரென் அன்புடன் மாலு - Selvamuthu - 02-06-2006 மாலு வணக்கம். நீங்கள் இவ்வளவும் தமிழில்தானே எழுதியிருக்கிறீர்கள். எப்படி? ஒரு தமிழன் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழை பிழையாக எழுதக்கூடாது. இங்கே நீங்கள் தெரிந்துகொண்டே தவறு செய்வதைப்போல் இருக்கின்றது. <span style='color:red'>னான்ன் அன்புடன் மாலு</span> - இளைஞன் - 02-06-2006 தமிழில் எழுத சிரமப்படுபவர்கள் தங்களுக்கான அறிமுகத் தலைப்பில் தமிழை ஓரளவு பிழையற எழுதிப்பழகிக் கொள்ளலாம். தமிழை தட்டச்சுவதில் எந்த சிக்கலும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டபின்ன ஏனைய பகுதிகளில் எழுதுவதற்கான ஆரம்பநிலை அங்கத்துவம் பெற்று தங்கள் கருத்துக்களை எழுதலாம். தட்டச்சு செய்வதற்கான உதவிகளை ஏனைய கள உறுப்பினர்கள் செய்வார்கள். அதேபோல இலக்கண பிழைகளைத் திருத்தி எழுதுவதற்கு செல்வமுத்து ஐயா போன்றவர்கள் உதவுவார்கள் என நம்புகிறேன். அது ஒருபுறமிருக்க பலர் வெறுமனே இணைந்துவிட்டு ஒரு கருத்தையும் எழுதாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு முன்னறிவிப்பும் கால அவகாசமும் கொடுத்துவிட்டு தேவையில்லாத பெயர்களை நீக்குவது நல்லது என்று எண்ணுகிறேன். நிர்வாகம் இதற்கும் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். நன்றி - MUGATHTHAR - 02-06-2006 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அது ஒருபுறமிருக்க பலர் வெறுமனே இணைந்துவிட்டு ஒரு கருத்தையும் எழுதாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு முன்னறிவிப்பும் கால அவகாசமும் கொடுத்துவிட்டு தேவையில்லாத பெயர்களை நீக்குவது நல்லது என்று எண்ணுகிறேன் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இது நல்லதொரு கருத்து ஆட்களின் எண்ணிக்கையில் ஒன்றுமில்லை இருப்பவர்கள் இதில் சரியான முறையில் பயன்படுத்தவேணும் இதுக்கொரு பழமொழி சொல்லுவார்கள் பத்து பிள்ளைகளை பேத்தை குட்டிகள் மாதிரி பெறுவதிலும் பார்க்க ஆரோக்கியமாக 2 இருந்தால் காணும் எண்டு (நான்தான் சொன்னது ) - Thala - 02-06-2006 <!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> அது ஒருபுறமிருக்க பலர் வெறுமனே இணைந்துவிட்டு ஒரு கருத்தையும் எழுதாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு முன்னறிவிப்பும் கால அவகாசமும் கொடுத்துவிட்டு தேவையில்லாத பெயர்களை நீக்குவது நல்லது என்று எண்ணுகிறேன் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இது நல்லதொரு கருத்து ஆட்களின் எண்ணிக்கையில் ஒன்றுமில்லை இருப்பவர்கள் இதில் சரியான முறையில் பயன்படுத்தவேணும் இதுக்கொரு பழமொழி சொல்லுவார்கள் பத்து பிள்ளைகளை பேத்தை குட்டிகள் மாதிரி பெறுவதிலும் பார்க்க ஆரோக்கியமாக 2 இருந்தால் காணும் எண்டு (நான்தான் சொன்னது )<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> ம்ம்ம் வரவேற்க்கப்பட வேண்டிய கருத்துக்கள்... நீண்ட நாட்களாக தங்களின் பெயரைபதிந்தும் உபயோகிக்காமல் இருப்பதில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா எண்று கேட்டு மடல் அனுப்பி விடலாம்... பதில் இல்லா விடத்து பெயர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்...! - Danklas - 02-06-2006 ஓய் இதெல்லாம் புரியாத புதிரா? :evil: :evil: :evil: களம் எண்டால் அப்படித்தான் இருக்கனுமப்பா... அப்பதானே சண்டைபிடிக்கலாம்? அதைவிட ஒரு களத்தில ஒரு சாரார் இருந்தால் கன உண்மைகள் வெளிவராதெல்லோ?? லுக்கி வந்தபடியால் எத்தனை உண்மைகளை கள உறுப்பினர்கள் சொன்னார்கள்? வாறவர்கள் வரட்டும், போதியளவு மட்டுறுத்தினர்கள் இருக்கிறார்கள், பல உண்மைகள் வெளிவரட்டும், எதையும் எதிர்கொள்ளக்கூடிய நிலையில்த்தான் கள உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்,, (சிலர் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது உளறுவார்கள் அதையெல்லாம் கணக்கில எடுக்க கூடாது)
- வலைஞன் - 02-06-2006 <b>தயவு செய்து எல்லா இடத்திலும் அரட்டையடித்து களத்தின் போக்கை மாற்றாதீர்கள்.</b> - ukraj - 02-06-2006 உங்களுக்கு உங்களில் நம்பிக்கையிருந்தால் மற்றவர்களை பார்த்து அச்சப்படத்தேவையில்லை. அவர்களும் அவர்களுடைய கருத்தை முன் வைக்க அனுமதித்து உங்கள் கருத்துக்களால் வாதாடுங்கள். - வர்ணன் - 02-06-2006 ukraj Wrote:<b>உங்களுக்கு உங்களில் நம்பிக்கையிருந்தால் </b> மற்றவர்களை பார்த்து அச்சப்படத்தேவையில்லை. அவர்களும் அவர்களுடைய கருத்தை முன் வைக்க அனுமதித்து உங்கள் கருத்துக்களால் வாதாடுங்கள். உங்களுக்கு - உங்களிலா? - ஹ்ம்ம்- அப்போ நீங்க யாரு? இங்கே அச்சப்பட்டு - யாரும் கருத்து சொல்லல நண்பா-! தமிழீழத்தவன் என்ற-அகம்பாவம்- அது! நாங்களாய் பெற்றுக்கொண்டதில்ல இது-! என்ன செய்ய- இருபதாயிரத்தை தொடப்போகும் மாவீரர்கள் இறப்பு எங்களுக்கு தந்துவிட்டு போன குணம் அது-! நீங்கள் சொல்ல வந்த -அவர்களோ- எவர்களோ எங்கேயும் கருத்து வைக்கலாம்-! அதற்க்கு பல தலைப்புக்கள் - இருக்கிறது- இங்கே-தாராளமாய் -தொடரலாம்-! தேசியத்துக்கும் - எங்கள் தேச தலைவனுக்கும் களங்கம் விழைவிக்காமல் ஏதும் கூறும் வரை-நாங்கள் குறுக்கிட மாட்டோம் -தொடரலாம்- ! யார் வேண்டாம் என்று சொன்னார்கள் ? 8)
- ukraj - 02-06-2006 நீங்கள் தான் முதலில் இந்த தலைப்பை உருவாக்கி உங்கள் அச்சத்தை வெளிக்காட்டியுள்ளீர்கள். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமெனின் மாற்றுக் கருத்துக் கொண்;டோரையும் உள்வாங்க வேண்டும். - வர்ணன் - 02-07-2006 <b> ukraj Wrote:நீங்கள் தான் முதலில் இந்த தலைப்பை உருவாக்கி உங்கள் அச்சத்தை வெளிக்காட்டியுள்ளீர்கள்.</b> <b>நண்பா- தேசியத்துக்கு முன்னால்- மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை-!</b> அதையும் நீங்கள் உள்வாங்க முயற்சி செய்யணும்-! தேசியத்திற்கு மாற்றுக்கருத்தாய் உங்களிடம் இருப்பது -என்ன? உங்களுக்கு சார்பாய் இருப்பது யார்-எவை? ஆனந்த சங்கரியா?-டக்ளஸ்ஸா?- கருணாவா-? இல்லை -சிறிலங்காவா-இந்தியாவா? ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டிருக்கும் - இனத்தின் சாவு வீட்டுக்குள் வந்து- என்னதான் மாற்று கருத்து சொல்ல நினைக்கிறீர்கள்? 8) - ukraj - 02-07-2006 ஏன் தேவையில்லாமல் பெயர்களையும் நாடுகளையும் குறிப்பிடுகிறீர்கள்? - வர்ணன் - 02-07-2006 ukraj Wrote:ஏன் தேவையில்லாமல் பெயர்களையும் நாடுகளையும் குறிப்பிடுகிறீர்கள்? அப்போ தேவையுடன் - நீங்கள் சொன்ன (மாற்று)கருத்துக்களுக்கு- - எது உங்களுக்கு துணை செய்கிறது- எவற்றை நான் உதாரணம் எடுக்கலாம்-! என்று அறிந்து கொள்ள -உதவி செய்யுங்கள்- தவிர்த்துவிடுகிறேன்! - ukraj - 02-07-2006 ஐயா வர்ணன் மாற்றுக் கருத்துக்களை சற்று புறம் தள்ளி வைத்துவிட்டு தமிழ் தேசிம் தொடர்பாக கதைப்போமா? - ukraj - 02-07-2006 நான் இந்த களத்தை வெகுநாட்களாக பார்த்து வருகின்றேன். இங்கு பெரும்பாலானவர்கள் பொழுது போக்கவே வருகின்றனர். அவர்கள் பொழுது போக்ககவே தமிழ் தேசியம் தொடர்பாக கருத்தாடுகின்றனர். தமிழ்த்தேசியம் தொடர்பாக வேலைத்திட்டங்களை செய்வதில்லை. (சும்மா ரீல் விடவேண்டாமட நாங்கள் வெளியில சொல்வதில்லை என்று). அண்மையில் கள உறவுகளால் பலபக்கங்களில் எழுதப்பட்ட தைபொங்கல் ஒன்றுகூடலுக்கு என்ன நடந்தது? http://www.yarl.com/forum/viewtopic.php?t=8138 NTT தொடர்பாக எழுதப்பட்ட வீர வசனங்கள் எத்தனை? http://www.yarl.com/forum/viewtopic.php?t=8167 எமது தேசம் தொடர்பாக எழுதியவர்கள் எத்தனைபேர்? http://www.yarl.com/forum/viewtopic.php?t=9354 பிரித்தானிய தகவலில் எழுதியவர்கள் எத்தனைபேர்? http://www.yarl.com/forum/viewtopic.php?t=...=3105&start=195 - ukraj - 02-07-2006 இன்று சர்வதேசம் பெரும்பாலான தமிழ் ஊடகங்களுக்கு <b>புலிசார்ஊடகம்</b> என்று பெயர் சூட்டியிருப்பதற்கான காரணத்தை யாரும் அறிய முற்பட்டிருக்கிறீர்களா? |