![]() |
|
வெலிகந்தையில் நேரடி மோதல் - இரு படையினர் படுகாயம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வெலிகந்தையில் நேரடி மோதல் - இரு படையினர் படுகாயம் (/showthread.php?tid=100) |
வெலிகந்தையில் நேரடி மோதல் - இரு படையினர் படுகாயம் - Subiththiran - 04-23-2006 <b>வெலிகந்தையில் நேரடி மோதல் - இரு படையினர் படுகாயம் </b> பொலநறுவை மாவட்டம் வெலிகந்தைப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களிற்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் இடையே இன்று காலை நேரடி மோதல் இடம்பெற்றுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 6.30 மணியளவில் படையினரின் சோதனை நிலையம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து படையினரும் பதில் தாக்குதல் நடத்தி யுள்ளனர். சுமார் இருபது நிமிடநேரம் இரு தரப்பினருக்கும் துப்பாக்கிகள் மூலம் நேரடி மோதலில் ஈடுபட்டனர். இதன்போது படைத்தரப்பில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து காலை 9.30 மணிவரை அப்பகுதியில் படையினர் பாரிய தேடுதலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. sankathi.com |