![]() |
|
போராளிகள் படைப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: போராளிகள் படைப்பு (/showthread.php?tid=8355) |
- sethu - 06-21-2003 ஊனுண்ணும் சுடலை முனி ஒதுக்கமான ஊர்ச்சுடலைக்கும் அப்பாலே எங்கேயோ உறங்கிக் கிடந்த முனி எழுந்துவிட்டது விரித்த தலை காற்றில் பறக்க அகலத்திறந்த வாய்லு}. உள்ளே உடைந்த எலும்புகள் நசிந்த சதைகள்லு} கழுத்தைப் பிடித்துத் தூக்கி வாயிலிட்டுச் சுவைக்க விரித்த கரத்துடன் வருகிறது பிணவாடை வீச ஊருள் வருகிறது உணவிற்காய். சிலர் உடுக்கடித்துப் பாடி பொங்கலிட வேண்டுமாம் முயல்கின்றனர் ஆயினுமது வருகிறது. சிலர் தடுத்தனர் தடுத்தவர் மீதேறியும் கடந்து வருகிறது. வேகம் மட்டும் குறைகிறது என்ன செய்யலாம்? ஊரெல்லாம் கூடி குழறி ஓடுகிறது. நான்லு}? ஓ! ஒருவழி என் மூளையிற் திறக்கிறது. எனது பேனாவுடல் முனியின் வாயுள் புகுந்துலு} தொண்டையைக்கிழித்து குடலைக் குத்திப்பிரித்துலு} கதை முடியும் நான்லு}.? அநேகமாய் மீளமாட்டேன் ஓடிப்போன ஊர் மீளும். - கை-சரவணன் - sethu - 06-21-2003 தாயவளை மீட்கவென்று கரிப்பு மணிகளின் விளை நிலத்தினுள் புதையுண்டு போன - எம் கண்ணின் மணிகளே வந்து விட்டோம் உங்கள் மீட்பர்கள் நாங்கள் காத்திருக்கிறோம் நாம் உம்மருகில் அம்மணியின் வசமுள்ள எம் பொன்மணிகளைச் சிறைமீட்க காத்திருக்கின்றோம் உம்மருகில் அன்றொருநாள் எம்முடன் இதே வீதியால் நீங்களும் நடந்தீர்கள் இன்று உங்கள் புதைகுழிகளின் அருகே மீண்டும் நடக்கிறோம் - சிங்களத்துப் பேய்களின் சிதைவுகளின் மேல் நின்று - எம் தாயவளைச் சிறை மீட்போமென்று. -உலகமங்கை - sethu - 06-21-2003 சோகம் மனத்தினுள் வைத்துக் கட்டிவிட்டு முகத்தினால் வெளிப்படுத்தும் மாயாஜாலம்! தோளை விட்டிறங்க மறுக்கும் சிறு குழந்தை உதடுகளில் மலரும் சிரிப்பு மலர்களைப் பறித்தெடுக்கும் இயற்கையின் கரம்! இயற்கை மனிதனோடு ஆடும் விளையாட்டு! வாழ்க்கைப் பயணத்தில் சிலர் வலிந்து போட்டுக்கொள்ளும் நித்திரைக் குளிகை! இன்பத்தின் ஒப்பற்ற அளவுகோல்! அப்பாவிகளுக்கு அடக்குமுறையாளர் அளித்த பரிசு! -த.நிலவன் - sethu - 06-21-2003 அவனின் நினைவுடன் நேற்றைய பொழுதுகளை ஒரு தரம் நீட்டுகிறேன் கூட நின்று கும்மாளமடித்து ஒன்றாகக் கூடி அன்றாடி மகிழ்ந்து பகைவீடு எரிக்கையிலே விதையாகிப் போன தோழனின் நினைவுகள் என் முன்னே விரிகின்றன. மனதில் பெரும் சோகம் இருப்பினும் நான் சோரவில்லை என் கையினைப் பார்க்கின்றேன் ஓலு}லு} இது வீரச்சாவடைந்த என் தோழனின் துப்பாக்கி அவனது நினைவோடும் அவன்லு}. விட்டுச் சென்ற துப்பாக்கியோடும் தாயக நினைவுகளோடும் என் பாதங்களைத் தூக்கி வைக்கிறேன் பகை வீட்டை நோக்கி - யோ.புரட்சி - sethu - 06-21-2003 வீரக் குழந்தைகள்; என் பேரன் சுண்டங்காய்ப் பயல் சுட்டித்தனம் வயது ஏழுதான். வார்த்தை ஆடலில் வயதை மீறிடும் வந்து மடியில் குந்தியிருந்து வயிற்றைத்தடவினான் வால்பேத்தை முல்லை விரித்தான். எழுந்து எங்கோ ஓடினான் திரும்பி வந்தான் அவன் கையில் அவனது துப்பாக்கி சுடத்தெரியுமா? மீண்டும் ஏளனப் பார்வை சுட்டான்; என் மெய் சிலிர்த்தது. இவர்கள் வீரக் குழந்தைகள் நாங்கள்? வெட்கத்தால் முகம் சிவக்க எழுந்தேன் என் கால்கள் நடந்தன. புதியதும் பழையதும் புரட்சிக்குத் தயார் விடுதலையின் தூரம் குறுகிவிட்டது என் மனம் உறுதி பெற்றது கால்கள் பயிற்சிக் களம் நோக்கி நகர்ந்தன. - முருகு பாரிமகன் - sethu - 06-21-2003 இன்னுமிரு நிமிடங்கள் என்னினமே உங்களுக்கு அதோ போகின்றாளே அவளைப் புரிகின்றதா? தன்னை உருக்கியிந்தத் தாயகத்துக்காய் தந்துவிட தயாராகிப் போகின்றாள். உங்களுக்காய் கசிந்துருகும் இதயத்தோடணைத்துக் குண்டுகட்டிப் போகின்றாள் தன்னுயிர்பிடுங்கித் தந்துவிடும் தற்துணிவு பெற்றே - அந்தத் தமிழ்மகள் போகின்றாள் - வெடிமுழங்க மேனியது பிய்த்துதறிப் பகையழித்து வென்றுவிடப் போகின்றாள் - என்னினமே! உங்களுக்காய் அவள் காற்றோடு கலப்பதற்கு இன்னுமிரு நிமிடங்கள் - -தர்மேந்தினி - sethu - 06-21-2003 அடியென அவனுக்குச் சாட்டை கொடுத்தவனும் சுடுவெனத் தோட்டா கொடுத்தவனும் தடையென எமக்குத்தானே விதிக்கின்றனர். என்ன கொடுமையடா இது! தாகத்துக்குத் தண்ணீர் கேட்டோம் அவன் தரவில்லை. பசித்த வயிற்றுக்கு ஒருபருக்கை சோறு கேட்டோம் அவன் தரவில்லை. சுருண்டுகிடக்க ஒருதுண்டு நிலம் கேட்டோம் அவன் தரவில்லை சுற்றம் சூழமகிழ்ந்திருக்க ஒரு நிலாக்காலம் கேட்டோம் அவன் தரவேயில்லை. தீர்ப்பெழுத வருவோரே இவையெல்லாம் தெரியுமா உமக்கு, தடைவிதிப்போரே அழுதவிழிகளுக்கும் அடித்த கரங்களுக்குமிடையில் எழுதமுடியுமா சமரசத்தீர்வு? முன்னரும் நீரெழுதிய தீர்ப்புகள் பல மூச்சிழந்து கிடக்கின்றன. இன்னுமா தீர்ப்பெழுதும் ஆசையிற் திரிகின்றீர்? எல்லைகளை விழுங்கி நாடுகளை விழுங்கிச் செரித்து வானத்தையும், கடல்களையும் விழுங்கி விதானத்துக் கோள்களையும் விழுங்கத் துடிக்கும் விழுங்கிகளுக்கு உயிர்ப்பின் புள்ளிமேலேன் இத்தனை கோபம்? நெஞ்சுக்குழி நிறையக் கனவு சுமந்து நெருப்புக் குளிக்கிறோம். எமக்கான விதியெழுதும் வலிமை எவருக்குமில்லை நாமே நமக்கான நீதிபதிகள - sethu - 06-21-2003 தடையெனும் விதியெழுதிப் போவோரே! எமக்கொரு விடைசொல்வீர்லு} 'கடைவிரித்தீர் கொள்வாரில்லை' எனவே கதவிழுத்துப் புூட்டுங்களென அடுத்தெமக்குக் கட்டளையா இடுவீர்? தடையெனும் விதியெழுதிப் போவோரே எமக்கொரு விடைசொல்வீர், யாரும் குனிந்துகிடந்து தீர்ப்பெழுதாதீர் இனியாயினும் நிமிர்ந்து பாருங்கள். முன்னரும் நீரெழுதிய தீர்ப்புகள் பல மூச்சிழந்து கிடக்கின்றன. இனியும் குனிந்து கொண்டு எழுதாதீர் கொஞ்சம் நிமிர்ந்தும் பாருங்கள். சாளரங்களைத் திறந்து எங்கள் சாக்குரலைக் கேளுங்கள். கதவுகளை அகலவிரித்து எங்கள் காற்றையும் சுவாசியுங்கள் பிணமெரிக்கும் வாடை அக்காற்றிலிருக்கும். உயிருரிக்கும் ஓலம் அக்குரலிலிருக்கும். கடல்களைக் கடந்து கண்டங்களைத் தாண்டி மலைகளையும், நதிகளையும் கடந்துவரும் எங்கள் காற்றுடனும், கதறல்களுடனும் கொஞ்சம் பேசுங்களேன். விழிதிறந்து எங்கள் திசைகளையும் பாருங்கள், தீயின் சுவாலையில் பச்சைமரங்கள்கூட இங்கே பற்றியெரிகின்றன. புூக்களின் தலையிலும் பொன்வண்டின் நாவிலும் ஆற்றிலும், அதன் கரைமருங்கிலும்கூட பற்றியெரிகிறது பாவியரிட்ட பாழ்நெருப்பு. திமிர் பிடித்த தீர்ப்புக்காரரே. தீர்ப்பெழுத உங்கள் சிம்மாசனத்தில் குந்த முன்னர் நீர்த்துப் போய்க் கிடக்கும் எங்கள் நிலத்தையும் கொஞ்சம் நிமிர்ந்து பாருங்கள். முற்றம் உழுது போகிறான் ஒருவன் அவன் காலடியின் கீழே சிக்குண்டு கிடக்கிறது எம் தேசத்தின் உயிர் சாட்டை எடுத்து விளாசுகிறான் எம் தேகமெலாம் தோலுரிந்து தொங்கிறது. ஏனடா எரிக்கிறாய் என்றோ ஏனடா அடிக்கிறாய் என்றோ அவனை எவனடா கேட்டீர்? - sethu - 07-23-2003 <img src='http://www.paadumeen.com/News/23.07.2003-T1.jpg' border='0' alt='user posted image'> Vannakkam - P.S.Seelan - 07-26-2003 சேது அவர்களே ஒரு உருப்படியான காரியம் செய்கின்றீர்கள். இந்தக் கவிதைகளை இங்கு தருவீத்து படிக்க முடியாத நிலை. தயவு செய்து தாங்கள் பிரசுரிக்கும் கவிதைகளை பிரதி பண்ண எனக்கு அனுமதி கொடுப்பீர்களா? மற்றவர்களுக்கும் கொடுத்துதவலாம். நன்றி வணக்கம் அன்புடன் சீலன் - sethu - 07-26-2003 உரியவர்களின் பெயருடன் பிரசுரிக்கமுடியும் எனது பெயர் அல்ல - sethu - 07-26-2003 <img src='http://news.tamilnet.com/img/publish/2003/07/pic260603_01.jpg' border='0' alt='user posted image'> - sethu - 07-26-2003 <img src='http://news.tamilnet.com/img/publish/2003/07/pic260703_02.jpg' border='0' alt='user posted image'> - sethu - 07-26-2003 <img src='http://news.tamilnet.com/img/publish/2003/07/pic260703_03.jpg' border='0' alt='user posted image'> - sethu - 07-26-2003 <img src='http://news.tamilnet.com/img/publish/2003/07/pic260703_04.jpg' border='0' alt='user posted image'> - sethu - 07-26-2003 <img src='http://news.tamilnet.com/img/publish/2003/07/pic260703_05.jpg' border='0' alt='user posted image'> - P.S.Seelan - 07-27-2003 நன்றி சேது. அன்புடன் சீலன் - S.Malaravan - 07-27-2003 வாழ்த்துக்கள் சேது உண்மையில் நல்லதொரு முயற்சி;. :twisted: :twisted: :twisted: - GMathivathanan - 07-27-2003 S.Malaravan Wrote:வாழ்த்துக்கள் சேது உண்மையில் நல்லதொரு முயற்சிஒருபெயரிலை.. நன்றி.. சொன்னால்ப்.. போதும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- S.Malaravan - 07-27-2003 ஒருவன் ஒருவன் தான் பல போ அல்லவே என்ன உம்மாளை கொண்டு போயிறராங்களாம் எதுக்கும் நீரும் கவனம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted: |