Yarl Forum
குடில் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: குடில் (/showthread.php?tid=8276)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13


- kuruvikal - 05-28-2004

யாழ் கள உறுப்பினர் சண்முகி அவர்களின் குடில் நல்ல விடயங்களைத் தாங்கி வரும் என்று கட்டியம் கூறும் வகையில் சில பதிவுகளைக் கொண்டிருக்கிறது...தொடருங்கள்...!

எமக்கெல்லாம் எழுத வேண்டும் என்று ஆசை இருந்தாலும் காலம் எப்போதும் இடம் கொடுப்பதில்லை...எனவே காலத்தை தம் வசப்படுத்தி தமது சுய ஆக்கங்களை வெளிக்கொணர முயற்சிக்கும் அனைவரையும் அவர்கள் தம் முயற்சியில் வெற்றிபெற வாழ்த்தி வரவேற்போம்...! அத்தோடு அவர்களை உற்சாகப்படுத்தியும் நிற்போம்...!

அத்தோடு தம்மால் இயன்றளவு வலைப்பூக்களை இங்கு அறிமுகப்படுத்தி வரும் ஈழவன் பிபிசி பரணி போன்ற அனைவரையும் பாராட்ட வேண்டியதும் நம் கடமை...அவர்கள் அதைத் தொடர்ந்து செய்வார்கள் என்றும் நம்புகின்றோம்....!


- shanmuhi - 05-28-2004

நன்றிகள்... ஈழவன், குருவிகள்.


- Mathan - 05-28-2004

குடில் பார்த்தேன் வாழ்த்துக்கள்


- shanmuhi - 05-28-2004

நன்றிகள்... BBc.


- ishwari - 05-29-2004

""உறவுகளே வெறுமனே போய்ப் பார்த்துவிட்டு வந்து களத்திலே விமர்சனத்தை வைப்பதை விடுத்து குடிலிலேயே உள்ள மறுமொழி பகுதியில் பாராட்டி விட்டு வாருங்கள்,
வளரும் எழுத்தாளர்களை ஊக்குவியுங்கள் ""


குடிலில் மறுமொழி பகுதியில் என்னால் கருத்துகளை எழுத முடியவில்லையே!! உதவி ?


- Eelavan - 05-29-2004

அதற்குத் தான் தனியாக விருந்தினர் பதிவேடு வைத்திருக்கிறாரே

சண்முகிக்கு:- நீங்கள் கதை கவிதைகளைப் பதிவு செய்யும் போது Allow Coments என்பதைத் தெரிவு செய்தால் ஒவ்வொரு பதிவுக்கும் மறுமொழிகளை பதிவு செய்யலாம்


- shanmuhi - 05-29-2004

தங்கள் ஆலோசனைக்கு நன்றிகள் ஈழவன்.


- Eelavan - 06-02-2004

மு.மயூரனின் "ம்"குடில் அருமையான கவிதைகளையும் தமிழைக் கணனி மயப்படுத்தல் பற்றிய கட்டுரைஅக்ளையும் தாங்கி வருகின்றது போய்ப்பாருங்கள்

http://mauran.blogspot.com/2004/06/blog-po...2492345267.html


- shanmuhi - 06-02-2004

http://mauran.blogspot.com/2004/06/blog-po...2492345267.html

எழுத்து வாசிக்கமுடியவில்லையே ஈழவன். காரணம் என்னவாக இருக்கும். ஏதும் தெரியுமா..?


- Mathan - 06-03-2004

சண்முகி, நீங்கள் Windows 98 உபயோகிக்கின்றீர்களா? அப்படி இருந்தால் தேனி எழுத்துருவை (Font) கணனியில் பதிவு (Install) செய்தால் படிக்கலாம் என்று நினைக்கின்றேன். முயன்று பாருங்கள்.

தேனி எழுத்துரு ... http://www.geocities.com/csd_one/fonts/TheneeUni.zip


- Eelavan - 06-03-2004

இப்போதுதான் இயங்கு எழுத்துருவுக்கு மாறிக்கொண்டிருக்கிறார் அதனால் சிலவேளை இணைப்புகளிலிருந்து போகும் போது குடில்கள் வாசிக்க முடியாமல் இருக்கும் அதனால் இணைப்பை பிரதி செய்து புதிய இணைய உலாவியில் போட்டுப் பாருங்கள்

அல்லது window ல் view>>Encoding>>Unicode(UTF-8)என்பதை தெரிவு செய்து பாருங்கள்


குடில் - இளைஞன் - 06-03-2004

வணக்கம் அனைவருக்கும்...
சுரதா.xom இற்கு இன்று சென்ற போது கே.ஸ்.ராஜா பற்றிய ஒரு குடிலுக்கான இணைப்புக்கிடைத்தது. அதை உங்களுக்கும் இங்கு பார்வைக்காய் இடுகிறேன்:
http://ksrajah.blogdrive.com/

அந்தக் குடிலுக்கு சென்றதும் இன்னொரு குடிலுக்கான இணைப்புக் கிடைத்தது. அது TMS பற்றியது. இதோ அதற்கான தொடுப்பு:
http://tmsoundararajan.blogdrive.com/

இவ்விரண்டு குடில்களையும் உருவாக்கியவர்: யாழ் சுதாகர்.

இதில ஒரு நகைச்சுவை ஒன்றைக் குறிப்பிடவேண்டும். TMS அவர்கள் பற்றிய குடிலில் உள்ள ஒரு வசனம்: "யாழ்சுதாகர் பதில்கள்" நூலை <b>திரு டி</b> எம் எஸ் அவர்கள் பெற்றுக்கொண்டபோது

திருடிப் பெற்றுக்கொள்வதா?- அதெப்படி என்றுவிட்டு மீண்டும் படித்த போது தான் விளங்கியது திரு. டிஎம்எஸ் என்று... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Eelavan - 06-04-2004

நன்றி இளைஞன் நான் பார்த்துவிட்டு களத்தில் போடுவோம் என்று நினைத்து வந்தால் நீங்களே போட்டுவிட்டீர்கள்


- Eelavan - 06-26-2004

அஜீவன் அண்ணாவின் குடில்
குறும்படங்கள் பற்றிய விளக்கங்கள் மட்டுமல்லாது அவை பற்றிய விவாதங்களுக்குப் பதில் சொல்கிறார்.பெண்ணுரிமை போன்ற தனது கருத்துகளையும் முன்வைக்கிறார் போய்ப்பாருங்கள்

http://ajeevan.blogspot.com/


- kuruvikal - 06-28-2004

தமிழினியின் அரும்பும் வலைப்பூ..இங்கே அழுத்திச் சென்று பாருங்கள்...!

தமிழினி உங்கள் வலைப்பூவில் இறுதிப் பதிவை எடிட் செய்துவிடுங்கள்....அவை யுனிக்கோட் எழுத்துருவில் இல்லை...எல்லாம் இடமும் பார்க்க முடியவில்லை....!

http://www.tamilini.blogspot.com/


- tamilini - 06-28-2004

ஓம் அது வைகோ பற்றியது..... குமுததில் இருந்து எடுத்தது மாற்று வதற்கு முயற்சித்தேன்... முடியவில்லை...... அது அவரடகளது எழுத்துரு என்டு நினைக்கிறேன்...


- shanmuhi - 06-28-2004

தமிழினியின் குடில் நன்றாக இருக்கின்றது.
தங்களைப்பற்றிய அறிமுகம் அருமை.

தொடர்ந்து சிறப்பாக அமைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.....


- tamilini - 06-28-2004

நன்றி.......


- Mathan - 06-29-2004

குடில் அறிமுகம் http://mullai.blogspot.com


- kuruvikal - 08-03-2004

யாழ் கள உறுப்பினர்... கவிதனின் குடில்... கவிதைப் பூக்கள் அலங்கரிக்க பிறந்திருக்கிறது....
சென்று பார்த்து பாராட்டி ஊக்கப்படுதுங்கள்....!

http://kavithan.yarl.net