![]() |
|
சுட்ட கவிதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சுட்ட கவிதை (/showthread.php?tid=7322) |
- tamilini - 08-13-2004 Quote:வெறுமையான வார்த்தைகள்:roll: :roll: - Mathan - 08-13-2004 கவசம் முகமூடி கிழித்து முகமது பார்த்தால் முகமே தேவலை என்று தோன்றுமோ இருப்பினும் எந்த வதனம் எதிர்வந்தாலும் முகத்திரை மெலிதாய் அசைவதேன்..? உடனே கிழித்து எறிந்திட கைகளும் பரபரப்பதேன்..? விடு. முகமூடியில்லா முகம் என்பது' குழந்தையின் வசமின்றி எங்குமில்லை எவரும் என்றும் அணிந்தே உள்ளனர் அவரவர்க்கு ஏற்ற கவசம் வெவ்வேறு நிறத்தில் கவசம் நீயும் நானும் விலக்கல்ல ஆனால் கவசம் கழற்றிக் களைப்பாற ஒரு உயிராவது உடன் வேண்டும் மூடியற்ற முகம் பார்த்தும் நேயமுற்றிடும் துணை வேண்டும் நன்றி : கவிஞர் சிவசுந்தரிபோஸ் - Mathan - 12-14-2004 காதல் கடிதம் அளவு மீறினால் அமுதமும் நஞ்சாம் கொஞ்சம் கொஞ்சமாய் எனைக் கொல்லும் அமுதே நான் தொடத் துடிக்கும் இடங்களைத் தொட்ட சுகம கேட்க அனுப்பிவை உன் நெற்றி தவழும் ஓர் ஒற்றை முடி உன் வாசம் கொண்டதிடம் என் வசம் இழக்க அனுப்பிவை உன் கூந்தல் உதிர்த்த ஒற்றைப் பூ எப்போதாவது விழும் பித்தானைப் பிணைக்க அனுப்பி வை உன் முந்தானை நூல் ஒரு சில என் புகைப்படம் உடுத்திய மெழுகுவர்த்தி இத்துடன் இணைப்பு பற்றவைப்பதும் பாதுகாப்பதும் உன் கையில் அடடா மறந்துவிட்டேன் ருசிக்க ஆசை உரைவாயை உன் எச்சிலால் ஒட்டு நன்றி - ரஜித் ஹூம் ஈமெயில் எங்கே உறைவாய் ? - வெண்ணிலா - 12-14-2004 BBC Wrote:கொஞ்சம் கொஞ்சமாய் சாவதென்று தீர்மானித்தால் காதலித்து பார் அணுவணுவாய் சந்தோஷமாகச் சாவாய். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 12-14-2004 vennila Wrote:BBC Wrote:கொஞ்சம் கொஞ்சமாய் அனுபவித்திருக்கின்றீர்கள் போல இருக்கின்றது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 12-14-2004 விவாகரத்து உணர்வுகள் உறவுகளை வெல்ல, உறவுகள் உணர்ச்சிகளைக் கொல்ல வாழ்க்கைப் பாதையெங்கும் வெறுப்புகளின் வேர்கள். பார்வைகள் அம்புகளாக, வார்த்தைகள் வம்புகளாக பத்துக்குப் பத்து படுக்கையறையில் பானிபட் யுத்தம். எல்லாமே நீ என்ற உதடுகள் இன்று எல்லாத்துக்குமே நீ என்றன. இல்லத்தில் எல்லாம் இரண்டாக உள்ளத்தில் விருப்பம் ஒன்றானது விவாகரத்து. இரு மன வெறுப்பினால் திருமணம் அறுந்தது. தெரியுமா? கல்யாணம், கணவன், மனைவியாய் வாழ... ஆணும் பெண்ணுமாய் அல்ல. ஒன்றுதான் புரியவில்லை. ஒத்துப்போகவில்லை என்றவர்கள், விவாகரத்துக்கு மட்டுமெப்படி ஒத்துப்போனார்கள்? Thax: ஜெகன் - KULAKADDAN - 12-14-2004 சுட்டாலும் நல்ல கவிதைங்கோ புாியவேண்டியவங்ளுக்கு புரியணுமே - வெண்ணிலா - 12-15-2004 BBC Wrote:vennila Wrote:BBC Wrote:கொஞ்சம் கொஞ்சமாய் அனுபவித்தால் தான் தெரியணுமா? :?: - Mathan - 12-15-2004 vennila Wrote:BBC Wrote:vennila Wrote:BBC Wrote:கொஞ்சம் கொஞ்சமாய் சில விடயங்களை கேட்டு, படித்து & பார்த்து புரிந்து கொள்வது கடினம் .... அனுபவித்து புரிந்து கொள்ளவேண்டியது. காதல் அதில் ஒன்று என்று நான் நினைத்தேன் .... அதனாலேயே அனுபவித்திருக்கின்றீர்களா என்று கேட்டேன். - வெண்ணிலா - 12-15-2004 BBC Wrote:vennila Wrote:BBC Wrote:vennila Wrote:BBC Wrote:கொஞ்சம் கொஞ்சமாய் அப்போ பலவிடயங்களை பார்த்து கேட்டு படித்து புரிந்து கொள்வது இலகு என நினைக்கிறீர்கள். அதேபோல தான் நானும் இந்தப் பலவிடயங்களுக்குள் காதலை உள்ளடக்குகிறேன். சிலரது காதல் வாழ்க்கைகளை கேட்டாலே புரிகிறது. அதன் வலி. எனக்கு வேண்டாம்பா காதல்வலி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 12-15-2004 Quote:புரிகிறது. அதன் வலி. எனக்கு வேண்டாம்பா காதல்வலி. நல்ல முடிவு சரியான நேரத்தில எடுத்திருக்கிறியள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 12-15-2004 tamilini Wrote:Quote:புரிகிறது. அதன் வலி. எனக்கு வேண்டாம்பா காதல்வலி. சரியான நேரத்தில :?: :roll: - வெண்ணிலா - 12-15-2004 tamilini Wrote:Quote:புரிகிறது. அதன் வலி. எனக்கு வேண்டாம்பா காதல்வலி. அக்கா.............. என்ன சொல்லுறீங்க. எதுங்கோ நல்ல நேரம். ராகு நேரமா? :roll: hock: :?:
- tamilini - 12-15-2004 Quote:சரியான நேரத்தில நான் சொன்னது சரியான வயதில.. பட்டு தெரிய முதல் பாத்து தெரிஞ்சீங்க.. என்று சரியா...?? - வெண்ணிலா - 12-15-2004 tamilini Wrote:Quote:சரியான நேரத்தில ஹா...ஹா...ஹா.... இது இது நல்ல பதில். நீங்கள் கூறியது உண்மை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 12-16-2004 போதையூட்டப்பட்ட மொட்டு. [ஆழியாள்- மதுபாஷினி. திருக்கோணமலையின் மூதூரைச்சேர்ந்தவர். தீவிர இலக்கியப்பரப்பில் கவனிக்கப்படும் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர்.] தற்போது என் வலைக்குறிப்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவாதத்திற்கு பொருத்தமாகப்பட்டதால் இந்தக் கவிதை உங்கள் பார்வைக்கு. உங்களது அண்டப்புரட்டல்கள் மூலம் யுகாந்திரமாய் நான் சிட்டிகை சிட்டிகையாய் போதையூட்டப்படுகிறேன் பல நூறு ஆண்டுகளாய் எனக்குத் தரப்பட்டதும், கிடைத்ததும் இந்த ஹெரோயின் உணர்வுதான் முதலில் ஒரு சிட்டிகை நீங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாய் அமோதித்தீர்கள்- நான் பதுமை; பேரழகுப் பதுமையென என் சர்வ முயல்தல்களையும் குறுக்கினீர்கள்! அடுத்தடுத்த சிட்டிகைகளில் "தெய்வம்" என நிலையுயர்த்தப்பட்டதால் மெளனமாய் ஊமையானேன். உங்கள் சுட்டுவிரல் இட்டபடியே எக்கணமும் நான் மணமேடையை நினைவிலிருத்தியபடி நிறைந்த வெட்டித்தங்க அணிகளோடு நகைக்கடையின் வெளிப்பாடாய் ஊர்ந்து, குனிந்து, குழைந்து சிவந்து மெளனமாய் ஊமையாய்...... அப்போதெல்லாம் மோனச் சொர்க்கத்திலல்லவா திளைத்திருந்தேன். சாத்தானின் வேகத்தோடு என்னை மேன்மைப்படுத்தியது புரியாது போதை வேலிக்குள் அடக்கி, என்னைத் தொலைத்துவிட்டேன் இக்கணத்தில் மூக்கும் தொண்டையும் வரள அங்கெங்கோ என் சிற்றிதயம் அவதியாய்த் துடித்து தளர்கிறது. அத்தனை காக்கைகளும் கொத்திச்சுவைக்கும் ரணவலி ஒவ்வோர் உயிரணுவிலும். இத்தனைக்குப்பின்னரும் இன்னோர் அரைச்சிட்டிகையை நான் உறிஞ்சத்தான் வேண்டுமா? இல்லை இல்லவே இல்லை இன்னமும் எனக்கென்ற அபிலாஷைகளைபிடித்துத்தொங்கியபடி-நான் என்னை, என் சுயத்தைப் பராமரிக்கும் தாதியாவேன் பின் ஏன் அக்னி மொட்டின் முகிழ்ப்பை முறங்கொண்டு மூடுகிறீர்? -ஆழியாள் 10.2.1993 (உரத்துப்பேச) நன்றி - மயூரன் & ஆழியாள் - Mathan - 12-23-2004 உந்தன் தேசத்தின் குரல் தேசம் படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையிலும் குரலிலும் <span style='color:blue'>உந்தன் தேசத்தின் குரல். தொலைதூரத்தில் அதோ செவியில்... விழாதா......? சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா அந்த நாட்களை.. நினை... அவை நீங்குமா உனை நிழல் போல் வராதா....? அயல் நாடுந்தன் வீடல்ல விடுதியடா தமிழா வானம் எங்கும் பறந்தாலும் பறவை என்றும் தன் கூட்டில் உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் என்றும் தாய்நாட்டில் சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அங்கு செல்வமரம் காய்த்தாலும் உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா..? சமீபத்தில் எந்த பாடலும் என்னை இவ்வளவு பாதித்ததில்லை.மீண்டும் மீண்டும் இறுவட்டுச் சுழன்றாலும் கூடவே மனமும் சுழல்கின்றது நிறுத்த முடியவில்லை.இசைத்தட்டு மனம் இரண்டையுமே..அனுபவித்துப் பாடியுள்ளார் இசைப்புயல்.ஊரான ஊரிழந்தேன் ஒற்றைப்பனைத் தோப்பிழந்தேன் ஞாபகங்கள் சுழன்றாடுகின்றன.தெருப்புழுதி நினைத்தாலே மணக்கின்றது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளேன். அன்புத் தாயின் மடியுன்னை அழைக்குதடா தமிழா ஒவ்வொரு புலம்பெயர் தமிழனின் காதுக்குள்ளும் ரீங்காரமிடப்போகும் பாடல் ஆங்கிலத்தில் படித்து தமிழில் பாட ......... Song : Undhan desathin Movie: Desam Music: AR Rahman Singers: AR Rahman Undhan desathin kural tholaithoorathil atho seviyil vilatha sontha veedu unnai vaa enru alaikirathu tamila antha naadkalai ninai avai neenkuma unai nilal pol varatha ayal naadu unthan veedalla viduthiyeda tamila vaanam engum paranthaalum paravai ennum than kootil ulagum engum valnthaalum tamilan ennum thaai naatil santharpangal valnthalum[?] angu selva maram kaithaalum[?] pull manakum kooval unthan seviyil vilatha Undhan desathin kural tholaithoorathil atho seviyil vilatha sontha veedu unnai vaa enru alaikirathu tamila gangai unai alaikirathu yamunai unai alaikirathu imayam unai alaikirathu pala samayum unnai alaikirathu kannamoochi aatam alaika chinna pattam poochi kootam alaika thennam thoppu thuravukal unnai alaika katty kaatha uravukal alaika nee thaan thinna nila soru naan alaika Undhan desathin kural tholaithoorathil atho seviyil vilatha sontha veedu unnai vaa enru alaikirathu tamila pal pola ulla vennilavu paarthal siru karai irukum malar pol ulla thai moliyil maaratha sila vali irukum kanneer thudaika vendum unthan kaikal athil serlika vendum unthan maikal intha desam uyarattum unnaleh makkal kootam varattum un pinnaleh anbu thaiyin madi unnai alaikuthey tamila Undhan desathin kural tholaithoorathil atho seviyil vilatha sontha veedu unnai vaa enru alaikirathu tamila</span> நன்றி - ஈழநாதன் (தமிழ்) & கஜன் (ஆங்கிலம்) - kavithan - 12-23-2004 www.kavithan.yarl.net பாடலை கேக்க - Mathan - 02-08-2005 எப்படி இருக்கணும் காதலன்? [ ஓவியா ] <img src='http://kavithan.yarl.net/kavithan_img/PARTHIBANKANAVU2.jpg' border='0' alt='user posted image'> என்ன..! "ஆனால் நீ..!" என அதிகாரம் ஒலிக்கிறது...! சா... ! இவள் பெண்தானே என்ற நினைப்பா..? ஆனால் நான் என்ன கூறினேன் சொல்லுங்கள்... சாதாரண பெண் எதை சொல்வாளோ அதை சொன்னேன். சாதுரியமாய் அதை எல்லாம் மறைத்துவிட்டீர்களே... "ஒருத்தியோடு ஒழுக்கமாய் ஒற்றுமையாய் ஓருயிரும் ஈருடலுமாய் வாழ நீங்கள் தயார் என்றால் ஒரு பெண் உங்களுக்காய் தயாராவாள் உங்கள் காதலி ஆவாள்" என்றேன். நன்றி - கவிதன் குடில் - Mathan - 02-08-2005 இப்படியிருக்கிறான் உனது காதலன் (நிலவன்) <img src='http://kavithan.yarl.net/kavithan_img/Sneha-14.jpg' border='0' alt='user posted image'> காதல் என்ற போர்வையில் பெண்கள் பின் அலைவதுதான் எனது பொழுதுபோக்கல்ல. பார்த்த விநாடியில் பத்திக்கொள்ள நம் காதல் பெற்றோல் காதல் அல்ல வந்ததும் தெரியாமல் போனதும் புரியாமல் இருக்க இது மின்னல்காதலுமல்ல பலநாட் பழகி ஒருவரையொருவர் புரிந்துகொண்ட நம்காதல் புனிதமான காதல் உண்மைக்காதல் கண்ணே மணியே முத்தே என்ற வார்த்தைகளில்தான் காதல் இருக்கிறதா? தங்கம் வைரம் வைடூரியம் என்ற பணம்கொடுத்து வாங்கும் பொருளில்தான் காதல் இருக்கின்றதா? ஆம் எனில் நம் காதலுக்கு இது தெரியாது. நம்காதல் பரஸ்பரமான புரிந்துகொண்ட காதல் திருமண வாசனை தீருமுன்பே மனைவியை விட்டுச்சென்ற கோவலன் போல நானில்லை அடுத்தவன் மனைவியை ஆசைப்பட்டு தூக்கிவர நான் இராவணணுமில்லை சென்ற இடமெங்கும் மங்கைகளைக் கண்டதும் இச்சைகொள்ளும் கிருஷ்ணனும் நானல்லவே என்னவளை விட்டு இன்னொருத்தியை ஆசைகொள்ளும் மிருகத்தனமான குணம் என்னிடமில்லை. காதலியை துடுப்பாக பாவித்து இன்னொருத்தியை படகில் அழைத்து செல்லும் கணனியுக ஆண்மகன் நானல்ல எனக்குப் பிடித்தவளாக அவளும் அவளுக்குப் பிடித்தவளாக நானும் என்றும் இருக்கின்றபோது அவள் எனக்கு செருப்பாக இருந்தாலென்ன நான் அவளுக்கு செருப்பாக இருந்தாலென்ன நாம் நாமாகவே தற்போது இருக்கின்றோம் என்றும் இப்படியே இருப்போம். இதில் நமக்கே சந்தேகம் இல்லை ஆனால் பலருக்கு................ காதலியெ நமக்கு மட்டும் தெரிந்த இந்தப் புனிதமான வார்த்தைகளை தோட்டத்திலும் ஒரேயொருமுறை மலரவிடுவாயா..............? ஓவியா..! உன் ஓரப்பார்வை என்னைத் தீண்டுமா? நெவர்.... சான்ஸ்லெஸ், நன்றி - கவிதன் குடில் |