![]() |
|
நிதர்சனம்.கொம் இன் பொறுப்பற்ற செய்தி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நிதர்சனம்.கொம் இன் பொறுப்பற்ற செய்தி (/showthread.php?tid=587) |
- narathar - 03-18-2006 மகன், நீர் உண்மைலேயே ஒரு மகான் தான், நான் எழுதியது எனக்குத் தெரிந்தவர்கள் ,போராட்டதிற்கான உதவிகளைச் செய்பவர்கள்,வேலை செய்யும் நிறுவனங்களை, மற்றது ஒரு நிறுவனமானது ஒரு நாட்டில் உருவானாலும் அவை இன்று பல்தேசிய நிறுவனங்களாக உருமாறி உள்ளன, குறிப்பாக பெரிய சந்தை உள்ள நாடுகளிலயே தமது முக்கியாமான நடவடிக்கைகள் நெறிப்படுத்த பலரை வேலைக்கு அமர்த்தி உள்ளனர் என்கின்ற அடிப்படை அறிவே இன்றி புலம்பிக் கொண்டிருகிறீர்.இங்கே நீர் துவக்கிய தலைப்பு கூலின் யாழ் துணை வேந்தர் நியமனம் பற்றியது. நாரதருக்கு என்ன தெரியாது என்பதோ அல்லது உமது வீரப் பிராதாபங்களை வெளிக்காட்டவோ அல்ல.ஆகவே தலைப்பை ஒட்டிக் கருத்தாடும்.எதுவித பதிற் கருத்துக்களோ ஆதாரங்களோ இன்றி , வெறும் தனி நபர் தாக்குதலையும்,உமது ஊகங்களின் அடிப்படயில் ஆன கற்பனைகளையுமே கருத்துக்குகள் என்று இதுவரை எழுதி உள்ளீர்.உமக்கு பதிலடி உமது பாணியிலயே கொடுக்கலாம், இதனால் மின்ச்சப் போவது தலைப்பு மூடப் படுவது மாத்திரமே.அத்தோடு எனக்கு வேறு முக்கிய வேலைகளும் உள்ளன.ஆகவே மட்டுறுதினர்கள் இனிக் இந்தத் தலைப்பும் மூடப் படக்கூடிய நிலமைகள் ஏற்படுத்தாமல் கண்காணிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். நான் பாடம் புகட்டப்படும் என்று கூறியது கூலுக்கு.உம்மைப் பற்றிக் கதைக்க நீர் யார்? நீர் ஒரு அனாமதேயம்.உம்மை யார் என்று கண்டுபிடிப்பதை விட எனக்கு வேறு முக்கியமான வேலைகள் இருக்கின்றன. அமெரிக்காவின் ஒரு கோடிக்குள் இருந்து கொண்டு பழய கற்பனைகளில் மிதந்து கொண்டு , பினாத்திக் கொண்டிருக்கும் ஒரு சுய தம்பட்டப்பிரியரைப் பற்றி ஆராச்சி செய்ய வேன்டிய தேவை எனக்கில்லை. உமது அறியாமை,அகங்காரம் என்பவற்றால் எல்லோராலும் நகைப்புக்கு உள்ளாவது தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறீர். உம்மைப் போன்ற ஒருவரை உருவாக்கிய யாழ்ப் பல்கலைக் கழகம் உண்மையிலயே வெட்கித் தலை குனிய வேண்டியதே. இங்கே களத்தில் நின்று போராடுபவர்கள் எதோ கல்வி அறிவு இல்லாதவர்கள் போலும், கல்வி மான்கள் தான் எமக்கு வழி காட்டவேண்டும் என்றும் சொல்லித் திரிவது இது ஒன்றும் எமது போராட்டத்திற்கு புதிதான விடயம் இல்லை.கூட்டனி அப்புக்காத்து மார் முதல், நிர்மலா நிதியானந்தன் என்கின்ற சுய விளம்பரப் பிரியர்கள் வரை இதயே சொல்லி வந்துள்ளனர்.எமது போராட்டம் ஆனது அதன் இலக்கின் மீதான அசயா நம்பிக்கயிலும், பல்லாயிரம் மாவீரர்களின் ஈகயியாலையுமே வெல்லப் பட்டது.படித்தவர்கள் என்று சொல்கின்றவர்களின் புலமையால் அல்ல.பல படித்தவர்கள்,புலமையானவர்கள் தன்னடக்கம் உள்ளவர்கள் உதவி இருக்கிறார்கள்.போராளிகள் படிகிறார்கள்,படித்துக் கொண்டிருகிறார்கள்.இங்கே கல்வி போராட்டத்தின் இலக்கை அடைவதற்கான ஊன்று கோலகவே நோக்கப் படுகிறது.அதை விடுத்து கல்வி மான்கள் என்று சுய தம்பட்டம் அடித்து தமது அருமை ,பெருமைகளிப் பறை சாற்றும் சுய நல பச்சோந்திகளின் தாளத்திற்கும், காட்டிக்கொடுப்புக்களுக்கும் எமது போரட்டம் அசைந்து கொடுக்காது. அடெல் பாலசிங்கம் எழுதிய புத்தகத்தில் நிர்மலா நித்யானந்தனினதும், நித்தியானந்தினதும் நோக்கங்கள் , நடைமுறைகள் எவ்வாறு இருந்தன என விலாவாரியாக எழுதப் பட்டுள்ளது. அதோடு முக்கியமாக கூலின் நியமனத்தை ஆதரிப்பவர் வரிசயில் உம்மோடு ,தமிழ் மக்களின் ஜன நாயகக் காவலன் ஐயா ஆனந்த சங்கரி அவர்களும் இணைந்து கொள்கிறார் என்கின்ற நல்ல செய்தி நேற்றய டெய்லி நிவுஸ் பதிரிகையில் வந்துள்ளது. மேலும் ஜேவிபி பற்றி கூல் எழுதியதைக் குறிப்பிட்டிருந்தீர்,உமக்கு கூல் ஏன் அவ்வாறு எழுதினார் என்பது விளங்கவில்லைப் போலும். கூல் எழுதிய ஆக்கங்கள் பல மதமாற்றம் என்பதை வன்மையாக ஆதரிப்பவை.அவரது கவலை மதமாற்றம் என்னும் மனித உரிமையை எதிர்க்கும் ஜேவிபி, மற்றும் கேல உறுமய போன்ற அமைப்புக்களுக்கு எதிராக கத்தோல்லிக்க மதகுருவானவர் வன்மயான எதிர்ப்பைக் காட்டாமல், மத வழிபாட்டுக்கான சுதந்திரம் பற்றிப் மட்டுமே பேசி உள்ளார் என்று கவலைப்படுகிறார்.கூல் என்பவர் தமிழ் தேசியத்திற்கு மட்டும் எதிரானவர் அல்ல அவர் ஒரு மத வெறியரும் கூடவே என்பதுவே இதனால் தெரிய வரும் செய்தி.மத மாற்றம் என்பது அடிப்படை உருமைகளில் ஒன்று என்பதன் மூலம், மதமாற்றம் செய்யும் நிறுவனங்களின் அடிப்படை உரிமை பற்றி இங்கே அவர் சொல்லி உள்ளார். இவ்வாறான நிறுவனக்களின் தயவும் பின்புலமும் இவரதும் இவரது சகோதரத்தின் மனித உரிமைகள் மற்றும் கல்வி சம்பந்தமான செயற்ப்பாட்டிற்கும் பக்க பலமாக இருந்தன,இன்றும் இருந்து வருகின்றன. - Aaruran - 03-18-2006 Quote: <span style='color:green'><b>\"எமது போராட்டம் ஆனது அதன் இலக்கின் மீதான அசையா நம்பிக்கையிலும், பல்லாயிரம் மாவீரர்களின் ஈகையியாலையுமே வெல்லப் பட்டது.படித்தவர்கள் என்று சொல்கின்றவர்களின் புலமையால் அல்ல.பல படித்தவர்கள்,புலமையானவர்கள் தன்னடக்கம் உள்ளவர்கள் உதவி இருக்கிறார்கள்.போராளிகள் படிக்கிறார்கள்,படித்துக் கொண்டிருகிறார்கள்.இங்கே கல்வி போராட்டத்தின் இலக்கை அடைவதற்கான ஊன்று கோலாகவே நோக்கப் படுகிறது.அதை விடுத்து கல்விமான்கள் என்று சுய தம்பட்டம் அடித்து தமது அருமை ,பெருமைகளைப் பறை சாற்றும் சுய நல பச்சோந்திகளின் தாளத்திற்கும், காட்டிக்கொடுப்புக்களுக்கும் எமது போரட்டம் அசைந்து கொடுக்காது\"</b>. <b>இத்தனை பக்கங்களிலும் நடத்தப்பட்ட வாத, விதண்டாவாதங்களை ஒரு பந்தியில் இனிமையாக, சுருக்கமாக கூறியமைக்கு நாரதரைப் பாராட்டாமல் இருக்க முடியாது</b>. - Thala - 03-18-2006 Aaruran Wrote:Quote: <span style='color:green'><b>\"எமது போராட்டம் ஆனது அதன் இலக்கின் மீதான அசையா நம்பிக்கையிலும், பல்லாயிரம் மாவீரர்களின் ஈகையியாலையுமே வெல்லப் பட்டது.படித்தவர்கள் என்று சொல்கின்றவர்களின் புலமையால் அல்ல.பல படித்தவர்கள்,புலமையானவர்கள் தன்னடக்கம் உள்ளவர்கள் உதவி இருக்கிறார்கள்.போராளிகள் படிக்கிறார்கள்,படித்துக் கொண்டிருகிறார்கள்.இங்கே கல்வி போராட்டத்தின் இலக்கை அடைவதற்கான ஊன்று கோலாகவே நோக்கப் படுகிறது.அதை விடுத்து கல்விமான்கள் என்று சுய தம்பட்டம் அடித்து தமது அருமை ,பெருமைகளைப் பறை சாற்றும் சுய நல பச்சோந்திகளின் தாளத்திற்கும், காட்டிக்கொடுப்புக்களுக்கும் எமது போரட்டம் அசைந்து கொடுக்காது\"</b>.<b>இத்தனை பக்கங்களிலும் நடத்தப்பட்ட வாத, விதண்டாவாதங்களை ஒரு பந்தியில் இனிமையாக, சுருக்கமாக கூறியமைக்கு நாரதரைப் பாராட்டாமல் இருக்க முடியாது</b>. உண்மை வெறும் கல்வி அறிவு எந்த நாட்டையும் வளர்க்கவும் இல்லை நாட்டை உயர்த்தவும் இல்லை... எவ்வலவு பெரிய புத்தகத்தை படித்தாலும் நீச்சல் குளத்தில் நீந்த முடியாது.... அதில் அனுபவம் இல்லாவிட்டால்... பட்டறிவு என்பது இருக்கவேண்டும்... - ThamilMahan - 03-18-2006 நாரதர். 1. சுய தம்பட்டம் அடித்தது நீரேயன்றி நானல்ல. உமது தம்பட்டத்துக்கு பதில் கூறும் முகமாகவே நான் அப்படிக்கூறவேண்டியதாயிற்று. 2. நீர் எனக்கும் பாடம் புகட்டப்போகிறேன் என்றுதான் சொல்லியிருந்தீர். பங்குனி 6ம் திகதி சொன்னதற்கான அதற்கான ஆதாரம் இதோ: narathar Wrote:கூல் ஐயாவுக்கும் ,உம் போன்ற அறிவிலிகளுக்கும் நல்ல பாடம் வெகு விரைவில் புகட்டப்படும். வாரும் வந்து பாடம் புகட்டும். எப்படியோ போங்க... யாழ் பல்கலைக்கு ஒரு பொறியியல் துறை வளாகம் ஏற்படுத்தப்பட அடுத்த படிக்கட்டு அமைக்கப்பட்டுவிட்டது என்று நினைத்திருந்தேன். அது இப்போது கைக்கெட்ட வாய்ப்பில்லை போலத் தெரிகிறது. (இந்தப் பொறியியல் பீடம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கிறதென்பதும், அதற்கான காணி ஏற்கெனவே வாங்கப்பட்டுள்ளதென்பதும் இங்கு கவனிக்கத்தக்கது). இதனால் நட்டம் கூலுக்கல்ல ஒட்டுமொத்தத் தமிழினத்துக்கே. - ThamilMahan - 03-18-2006 தினக்குரலில் வந்த பேராசிரியர் ஹூலின் மடல். இந்த இணைப்புக்குச் செல்லுங்கள். http://photos1.blogger.com/blogger/935/179...600/hoole_2.jpg - thamilan6 - 03-19-2006 பொறியியல் பீடத்தை ஆரம்பிப்பதற்கான அடித்தளம் ஏற்கனவே இடப்பட்டு உள்ளது. இதற்காக யாழ் பல்கலையில் இருந்து கொண்டே உழைத்தவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். எல்லாம் கனிந்து வரும் வேளையில் உவர் கூல் வந்து தான் அது நடக்க வேண்டும் என்பதில்;லை. - thamilan6 - 03-19-2006 உண்மையாகவே அவர் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தால், பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவில் உபதலைவராக இருக்கும் போது தனது செல்வாக்கை பயன்படுத்தி உபவேந்தர் மோகனதாசுக்கு பொறியியற் பீடத்தை ஆரம்பிக்க உதவியிருக்கலாமே? - தூயவன் - 03-19-2006 <b>துணைவேந்தர் பொறுப்பை ஏற்பாரா றட்ணஜீவன் கூல்?</b> யாழ். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பை கடந்த மார்ச் 15 ஆம் நாள் றட்ணஜீவன் கூல் ஏற்கவில்லை. ஆகையால் அவர் துணைவேந்தர் பொறுப்பை நிராகரிக்கக் கூடும் என்று யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் 15 ஆம் நாள் றட்ணஜீவன் கூல் பொறுப்பேற்காததால் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.மோகனதாஸ் தாற்காலிக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே யாழ். துணைவேந்தர் நியமனத்தில் தனக்கு எதுவித தொடர்பும் இல்லை என்று கல்வித்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது விடயத்தில் மகிந்த ராஜபக்சதான் இறுதி முடிவை மேற்கொண்டார் என்றும் அவர் கூறியுள்ளார். றட்ணஜீவன் கூலின் நியமனத்துக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் சமூகம் மற்றும் பொதுமக்கள் அமைப்புகள் தொடர்ந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தகவல்: புதினம் - ThamilMahan - 03-19-2006 Quote:பொறியியல் பீடத்தை ஆரம்பிப்பதற்கான அடித்தளம் ஏற்கனவே இடப்பட்டு உள்ளது. இதற்காக யாழ் பல்கலையில் இருந்து கொண்டே உழைத்தவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். எல்லாம் கனிந்து வரும் வேளையில் உவர் கூல் வந்து தான் அது நடக்க வேண்டும் என்பதில்லை. ஹி ஹி.... பொறியியல் பீடத்தை அமைப்பதற்கான காணி வாங்கி பலவருடங்கள் ஆகிவிட்டன. அந்தக்காணிக்கும் முன்னால் "யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடம்" என்று பெயர்ப்பலகை போட்டதைத் தவிர வேறு எதுவுமே ஆக்கபூர்வமாக சம்பந்தப்பட்டவர்களால் செய்யமுடியவில்லை. "எல்லாம் கனிந்து வரும் வேளை" என்று சொல்வதைப்பார்த்து சிரிக்காமல் என்ன செய்வது? Quote:உண்மையாகவே அவர் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தால், பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவில் உபதலைவராக இருக்கும் போது தனது செல்வாக்கை பயன்படுத்தி உபவேந்தர் மோகனதாசுக்கு பொறியியற் பீடத்தை ஆரம்பிக்க உதவியிருக்கலாமே? பொறியியல் பற்றி பெரிதும் பரிட்சயமில்லாத மோகனதாசால் திட்டமிட்டு எப்படி ஒரு சிறந்த பொறியியல் வளாகத்தைக்கட்ட முடியும். அப்படிக்கட்டினாலும் அதற்குரிய பாடநெறிகளை உருவாக்கவும் அங்கு சென்று சேவையாற்றவும் எத்தனைபேர் தயாராக இருக்கிறார்கள்? சற்று விளக்கமாகச் சொன்னால் எங்களுக்கும் புரிந்துகொள்ள உதவியாயிருக்கும். அதுமட்டுமல்ல அவர் அந்த நேரத்தில் எந்த பல்கலையில் இருந்தாரோ அங்கே தன்னால் முடிந்ததைச் செய்திருக்கிறார். அதாவது பேராதனையில் கணனிப் பிரிவு (computer department) உருவாக்கியவர் அவர்தான். இதை யாராவது மறுக்கமுடியுமா என பேராதனை பல்கலையை சேர்ந்தவர்களையே கேட்டுப்பாருங்கள். நாரதர் சொல்வதுபோல போராளிகள் பலர் படிக்கிறார்கள் என்பது உண்மை. நாரதர் அவர்களில் ஒருவராக கூட இருக்கலாம். ஆனால் அவர்களெல்லாரும் தமிழ் மக்களின் பணத்தில்தான் படிக்கிறார்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும். அவர்கள் எல்லாரும் அவர்கள் படித்ததை வைத்து தமிழ் மக்களுக்கு மட்டுமே சேவையாற்ற வேண்டியது அவர்களது கட்டாயம். ஆனால் வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு, கோப்பைகழுவி, pizza delivery செய்து, அந்நியனுக்கு இதர ஏவல் புரிந்து, உழைத்து தமது சொந்தப்பணத்தில் படித்து முன்னுக்கு வருபவர்கள் தமது நாட்டுக்கு சேவைசெய்யவேண்டிய கட்டாயமில்லை. என்றாலும் அவ்வாறு சேவை செய்பவர்களும் ஒரு சிலர் இருக்கிறார்கள் என்பதற்கு ஹூல் ஒரு உதாரணம் (இதைச்சொல்வதால் ஹூல் கோப்பைகழுவினார் அல்லது pizza delivery செய்தார் என்று நாரதர் assume பண்ணி கருத்துச்சொல்லுவார். வேண்டுமென்றால் இருந்துபாருங்கள்) - sathiri - 03-19-2006 அனைவரக்கும் வணக்கம் குறுக்கை புகந்ததற்கு மன்னிக்கவும் ஒன்று மட்டும்எனக்கு இங்கு பன்னிரண்டு பக்கத்தையும் படிச்சதிலை விழங்கிட்டுது ரட்ணஜீவன் ஹீலின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிற யாழ்பல்கலை கழக மாணவர்சமுகம் மற்றும் அங்குள்ள பொது அமைப்புகள் மற்றும் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமழ்செல்வன் மற்றும் வெளிநாடுகளில் புலம்பெயர்தமிழர் ஏன் ஒட்டு மொத்த தமிழ் சமுகம் இங்கை எதிர் கருத்து எழுதி கொண்டிருக்கின்ற நாரதர் நான் உட்பட எல்லாருமே சரியான முட்டாள்கள் எந்த அறிவும் கிடையாது. உலகை உய்விக்க வந்த ஒரு யேசு பிரான் ஒரு நபிகள் ஒரு புத்தர் போல எங்கள் யாழ் மக்களின் மூடதனத்தை போக்கி அறிவு கண்ணை திறக்க ஒரு மகான் இரட்ணஜீவன்னின் வருகையை எவ்வளவு கேணதனமாய் எதிர்க்கிறோம் என்று இங்கு உணர்வுள்ள ஒரேயொரு தமிழ் மகன் பக்கம் பக்கமாய் எழுதியும் எங்களிற்கு விழங்குதில்லை.எனவே மற்றைய அடிமுட்டாள்கள் எல்லாரும் அறிவு ஜீவி தமிழ் மகனின் கருத்தை வாசிச்து புரிந்து கொண்டு எதிர் கருத்து எழுதாமல் இருங்கோ இப்படிக்கு இழிச்சவாய் சாத்திரி - narathar - 03-19-2006 மகனின் லொள்ளுக்கு அளவே இல்லைப் போல, ஐயா நான் உங்கள் காசில படிச்ச போராளி அல்ல,போராளிகள் தமது உயிரைத் தியாகமாக் கொடுப்பவர்கள்.உம்மையும் என்னையும் போலா ஓடி வந்து எங்கட சுய நலங்களைப் பார்த்துக் கொண்டவர்கள் அல்ல.மக்களோடு மக்களாக நின்று அவர்களின் துன்பத்திலும்,துயரத்திலும் சேர்ந்து தோளோடு,தோள் நிற்பவர்கள்.அவர்கள் பட்ட துயரத்தில் நங்கள் ஒரு சதத்தைத் தானும் பட்டிருக்க மாட்டம்.மேலும் இங்கே மக்கள் வரிப் பணத்தில்,இலவசக் கல்வியில் படித்து விட்டு வெளி நாடு சென்று தமது சொந்தத் தேவைகளைப் பார்த்துக் கொண்டவர்கள் கிடயாது. கூலைப் போல உம்மைப் போல் என்னைப் போல் நாட்டுக்கு நாடு உழைக்கப் போய்,மத நிறுவனங்கள்,மற்றும் இன்னோரன்ன நிறுவனங்களின் தயவில் படித்து பட்டம் பெற்றவர்கள் அல்ல. நீர் எவ்வளவு கீழ்த் தரமானவர் என்பது இப்போது எல்லாருக்கும் நன்றாக விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன். இங்கே போரட்டம் என்பது தமிழ் மக்களைப்பாதுகாக்க,அவர்களின் அடிப்படை மனித உரிமையான வாழும் உரிமயைப் பாதுகாக்க நடத்தப் படுகிறது.புலிகளே தமிழ் மக்களின் கவசம்.அவர்கள் இல்லாமல் எமக்கு எந்தப் பாதுகாப்போ,விடுதலையோ கிடயாது.இந்த மனித உரிமைவாதிகள் என்ன செய்துள்ளார்கள்?இவர்களால் கொல்லப்பட்ட,சித்திரவதைக் குள்ளாக்கப்பட்ட, தமிழ் மக்களைப் பாதுகாக்க முடிந்ததா?செம்மணி முதல் ,பிந்தரன்வல வரை எத்தனை படுகொலைகல்?கூல் சொல்கிறார் சிறிலங்கா கோட்டுக்குப் போங்க,சிரிலன்க்கா போலிசுக்குப் போங்க எண்டு, இது எவ்வளவு முட்டாள் தனமானது என்று எமக்குத் தெரியாதா?இந்த மனித உரிமை வியாபாரிகளின் அறிக்கைகள் எதற்காகப் பயன் பட்டுள்ளது என்பது விரல் சூப்பும் சிறு தமிழ்க் குழந்தைக்கும் தெரியும்.இங்கே தமிழ் மக்களின் உணர்வுகள் அவர்களின் அரசியல் அபிலாசைகளில் இருந்து வெகு தொலைவில் இருப்பவர்கள் உம் போன்றவர்களும், உமது கூல் ஐயாவும்தான். நான் பாடம் புகட்டப்படும் என்று கூறியது கூலுக்கு,அதன் மூலம் நீரும் பாடம் படிப் பீர் என்பது தான் உம்மையும் சேர்த்து எழுதியது.உந்த கெயுமன் ரைட்ஸ் வொட்ச் காரர் மாதிரி நீர் அதற்கு எதோ கற்பனையெல்லாம் பண்ணி இருப்பது, நீர் ஒரு கற்பனையான உலகத்தில் தான் வாழ்கிறீர் என்பதே மிகத் தெளிவாகத் தெரிவது. மேலும் தமிழர்களின் உயர் கல்விக்கான அடித்தளங்கள் ஏற்கனவே கிளி நொச்சி அறிவியல் நகரில் தோற்றம் பெற்று வருகின்றன. சிறிலங்கா அரசில் நாம் எமது தேவைகளுக்குத் தங்கி நிற்க வேண்டிய காலம் மலயேறிப் போச்சு. நீர் இன்னும் அந்தக் காலத்தில் தான் நிண்டு கொண்டு இருக்கிறீர்.உமது கிணத்தை விட்டு வெளியால ஒருக்கா வன்னிப்பக்கம் வந்து பாரும் அப்பத் தான் உமக்கு சில உண்மைகள் விளங்கும். - narathar - 03-19-2006 தமிழர் தேசியம் என்பது தனிப்பட்ட பிரச்சினையல்ல! * விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் குரல். அது ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் மட்டுமல்ல, ஒடுக்கமுறையின் வலியிலிருந்தும் குரூரத்திலிருந்தும் விடுபட வேண்டுமென்ற ஆவேசத்துடன் ஒரு தேசம் தன்னைத் தானே வருத்தி பிரசவித்த விடுதலை அமைப்பு யதீந்திரா பலரும் தாங்கள் இருக்கும் இடங்களுக்கும் தாங்கள் சார்ந்திருக்கும் கருத்துநிலைகளுக்கும் ஏற்ப விடுதலைப்புலிகளைப் புரிந்து கொள்ள முயன்றிருக்கின்றனர். புரிந்து கொண்டதாகவும் எழுதியும் பேசியும் வந்திருக்கின்றனர். கடந்தகாலங்களில் நமது சூழலில் மாற்றுக் கருத்தாளர்களாகவும் நடுநிலைவாதிகளாகவும் (அரசியலில் நடுநிலை என்ற ஒன்றே கிடையாது என்பது வேறு விடயம். அது பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்). தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் பகிரதப் பிரயத்தனம் செய்துவந்தவர்களே விடுதலைப்புலிகளின் அரசியலை அதிகம் விளக்க முற்பட்டவர்களாவர். ஆனால், இவ்வாறானவர்களில் எவரும் விடுதலைப்புலிகள் அமைப்பை ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகப் பார்க்க முயன்றதாகச் சான்றில்லை. கடந்த பத்துவருடகால எனது தேடல் அனுபவத்தில் நான் எங்கும் அப்படியொரு பார்வையை தரிசித்ததாக நினைவில்லை. விடுதலைப்புலிகள் குறித்த விமர்சனங்களில் பண்டிதத்தனங்களும் தங்களை பெரும் புத்திஜீவிகளாகவும், வித்தியாசமானவர்களாகவும் காட்டிக் கொள்ள வேண்டுமென்ற அவசரமும் மேலோங்கியிருந்ததே தவிர, யதார்த்தம் குறித்த புரிதலோ அவதானமோ இருந்ததாகத் தெரியவில்லை. மாற்றுக் கருத்து என்றாலே விடுதலைப்புலிகளை எதிர்த்தல் அல்லது நிராகரித்தல் என்ற அர்த்தத்திலேயே பார்க்கப்பட்டது. இதன் காரணமாகத்தான் விடுதலைப்புலிகளும் மாற்றுக்கருத்தாளர்களை சந்தேகத்துடன் நோக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. ஆரோக்கியமானதொரு சமுதாய உருவாக்கத்திற்கு மாற்றுக் கருத்துக்கள், உரையாடல்கள் அவசியமானது என்பதில் நாம் அபிப்பிராய பேதம் கொள்ளவேண்டியதில்லை. ஆனால், அந்த மாற்றுக் கருத்து விடுதலையையே மறுதலிப்பதாகவும் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் இருந்து விடக் கூடாது. விடுதலைப்புலிகள் என்பவர்கள் யார் எனக் கேட்டால், அது ஒரு பலம்பொருந்திய விடுதலை இயக்கம், பலம்பொருந்திய இராணுவக் கட்டமைப்பு, அங்கிகரிக்கப்படாத அரசு. இப்படியெல்லாம் பதில் வரக் கூடும். என்னளவில் இவையெல்லாம் இரண்டாவது ,மூன்றாவது விடயங்கள். முதலில் விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என்பதுதான் நாம் உரத்துச் சொல்ல வேண்டிய விடயம். அது குறித்துத்தான் இக்கட்டுரையில் பேசலாம் என நினைக்கிறேன். நமது ஊடகச் சூழலுக்கு இது புதிதாகவும் இருக்கக் கூடும். நான் நீண்ட நாட்களுக்கு முன்னரே சிந்தித்து வைத்திருந்த தலைப்பிது. இப்பொழுதுதான் எழுதுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியிருக்கிறது. சமீபத்தில் ஈழத்தின் பிரபல கவிஞரும் புத்திஜீவியுமான ஒருவரின் இணையத்தள நேர்காணல் ஒன்றைப் பார்க்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அதில் அவர் பல நல்ல விடயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார். கடந்த காலத்தில் மாற்றுக்கருத்து என்ற பேரில் விடுதலைப்புலிகளை கர்ணகடூரமாக எதிர்த்துவந்த அவர், தமிழர் தேசத்தில் ஒரு அங்கீகரிக்கப்படாத அரசு இருந்து வருவதாகவும் ஆரம்பத்தில் அதனை எதிர்த்த பலரும் தற்போது அதனை ஏற்றுக் கொள்வதாகவும், ஜேர்மனிய அரசு, உருவாகப்போகும் தமிழீழ அரசுடன் அகதிகள் தொடர்பான ஒப்பந்தமொன்றைச் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மொத்தத்தில் அவரது கருத்துக்களில் பல மாற்றங்கள் தெரிந்தன. ஆனால், அதே நபர் நீலன் திருச்செல்வம் தொடர்பான கட்டுரையொன்றில் (1999)`விடுதலைப்புலிகள் எத்தகைய வரலாற்றுக் குருடர்கள் என்பதை வரலாறு எழுதத்தான் போகிறது என்று எழுதியதையும், தவிர்க்க முடியாமல் இந்த இடத்தில் நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது. (அவரது கண்டுபிடிப்பில்) வரலாற்றுக் குருடர்களான விடுதலைப்புலிகளால் எவ்வாறு இத்தகையதொரு பெரும் விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது? விடுதலைப்புலிகளால் எவ்வாறு பிராந்திய, ஐரோப்பிய ராஜதந்திர அரசியல் காய்நகர்த்தல்களுக்கு ஈடுகொடுத்தவாறு விடுதலை அரசியலை நகர்த்த முடிகிறது. வரலாற்றின் போக்கை சரியாக புரிந்து கொள்ள முடியாத அவரைப் போன்றவர்கள் மாற்றங்களை நோக்கி வருவது நமக்கு மகிழ்ச்சிதான். தமிழர் தேசியம் என்பது தனிப்பட்ட நமது பிரச்சனையல்ல. தனிப்பட்ட நமது வாழ்வியல் அனுபவங்களூடாக அதனைப் பரிசீலிக்க முற்படுவது தவறானதும் மிகமோசமான பிழையுமாகும் என்று கருதக் கூடியவர்களில் நானும் ஒருவன். விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஒரு ஒடுக்கபட்ட மக்களின் குரல். இன்று விடுதலைப் போராட்டம் என்பது ஒரு உலகளாவிய குரலாக இருக்கிறது. மார்க்ஸ் உலக வரலாற்றை வர்க்கங்களுக்கு இடையிலான இடையறாத போராட்டத்தின் வரலாறு என்றார். இன்றைய உலக அரசியல் ஒழுங்கில் மார்க்ஸின் மேற்படி கூற்றானது ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் இடையிலான இடையறாத போராட்டத்தின் வரலாறு என்ற அர்த்தம் பெறுகிறது. இன்றும் மார்க்சியம் பேசப்படுவதற்கும் விவாதிக்கப்படுவதற்கும் இந்த போராட்டத்திற்கான உள்ளடக்கம்தான் காரணம். எனவே ,ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் இருக்கும்வரை இவ்வுலகில் யுத்தச் சத்தம் ஓயப்போவதில்லை. உலகு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது விடுதலைக்காக போராடி வருகின்றனர். தியாகங்களுடனும் தன்னலமற்ற அர்ப்பணிப்புக்களுடனும் கழிகிறது அவர்களது வாழ்வு. ஒடுக்கும் அரசுகளும் ஏகாதிபத்திய சக்திகளும் மக்களின் இந்த நியாயமான போராட்டங்களை பயங்கரவாதமென்றும் தீவிரவாதமென்றும் கொச்சைப்படுத்தி, அழித்தொழிக்க முயன்ற போதும் மக்களின் அந்த தார்மீக விடுதலைக் குரல் ஓய்ந்துவிடவில்லை. அது ஒரு அழிவற்ற குரலாக முன்னரைக் காட்டிலும் பலமடைந்து வருவதையே நாம் பார்க்கிறோம். ஒவ்வொரு சமூகமும் தங்களது வாழ்நிலைமைகளுக்கும் புறச்சூழலுக்கும் ஏற்ப தமக்கான போராட்ட வழிமுறைகளைத் தீர்மானித்துக் கொள்கின்றது. இதற்கு சமீபத்தில் லத்தீன் அமெரிக்காவில் பலமடைந்துவரும் இடதுசாரி அரசியல் அலையே வலுவான சான்றாக இருக்கின்றது. பொலிவியாவில் வாக்கெடுப்பால் ஒரு புரட்சி நிகழ்ந்திருக்கிறது. அமெரிக்காவின் எல்லா நாசகார வேலைகளையும் முறியடித்தே மக்கள் இடதுசாரி அரசியலின் பக்கம் திரண்டு நிற்கின்றனர். 1973ஆம் ஆண்டு சிலியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மார்க்சியத் தலைவர் அலண்டே CIA யால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டார். இதன் மூலம் அமெரிக்கா தனது இடதுசாரி அரசின் மீதான வெறியைத் தீர்த்துக் கொண்டதுடன் லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரிகள் வலுவடைவதை முறியடித்துவிட்டதாகப் பெரும் பிரசாரங்களிலும் ஈடுபட்டது. அன்று அலண்டே படுகொலை செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இவ்வாறு கூறியிருந்தார். "குற்றங்களும் ஒடுக்குமுறைகளும் வரலாற்றை நிறுத்தி வைக்க முடியாது. அவர்கள் நம்மை நசுக்கிவிடக் கூடும் .ஆனால் ,நாளை என்பது மக்களுக்குச் சொந்தம்." இன்று அந்த வலிய குரல் உயிர்த்தெழுகிறது. உண்மையில் அது ஒரு உலகு தழுவிய குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஈழத்தில் அதன் பெயர் `விடுதலைப்புலிகள்', பாலஸ்தீனத்தில் அதன் பெயர் `ஹமாஸ்'. கொலம்பியாவில் அதன் பெயர் `பாக்' (FARC), நேபாளத்தில் அதன் பெயர் `மாவோசிஸ்ட்' ஆந்திராவில் அதன் பெயர் `மக்கள் யுத்தக் குழு'. இன்னும் எத்தனையோ குரல்கள். இங்கு பெயரில்தான் வித்தியாசமிருக்கிறதே தவிர, குரல் ஒன்றுதான். அது ஒடுக்கப்பட்ட மக்களின் குரல். துரதிஸ்டவசமா இந்த உண்மையை சிங்கள மக்கள் விளங்கிக் கொள்ள முடியாதளவிற்கு இனவாத ஊடகங்களின் செல்வாக்குக் குட்பட்டிருக்கின்றனர். சிங்கள மக்களை விடுவோம். குறைந்தது நாமாவது விளங்கிக் கொள்வோம். இன்று தமிழர் விடுதலைப்போராட்டம் அதன் உச்ச இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதேவேளை ,எதிரியும் அதிக விழிப்போடும் சதிகளோடும் தொழிற்படும் காலகட்டமும் இதுவாகத்தான் இருக்க முடியும். சிங்கள தேசம் தமிழர் தேசத்தின் போராட்ட வலுவைச் சிதைக்க எந்த வழிமுறைகளையும் பயன்படுத்தத் தயங்கப் போவதில்லை என்பதையே சமீபகால நிகழ்வுகள் கோடிகாட்டுகின்றன. எனவே, நமது நிலையில் இந்தக் காலத்தில் மாற்றுக் கருத்துக்கள் என்பதும் விமர்சனங்கள் என்பதும் வெறும் அர்த்தமற்ற சொற்களாகத்தான் இருக்க முடியும். கடந்த அறுபது வருடங்களிற்கும் மேலாக, தமிழர் தேசம் தனது விடுதலைக்காகப் போராடி வருகிறது. தமிழ் மக்களுக்கு ஒடுக்குமுறையையும் அழிவையும் தவிர, எதையும் வழங்கிவிடும் நிலையில் சிங்கள தேசம் இல்லையென்பது மீண்டும் மீண்டும் யதார்த்தமாக இருக்கிறது. http://www.thinakural.com/New%20web%20site...9/Article-5.htm - kurukaalapoovan - 03-19-2006 ThamilMahan Wrote:நாரதர் சொல்வதுபோல போராளிகள் பலர் படிக்கிறார்கள் என்பது உண்மை. நாரதர் அவர்களில் ஒருவராக கூட இருக்கலாம். <b>ஆனால் அவர்களெல்லாரும் தமிழ் மக்களின் பணத்தில்தான் படிக்கிறார்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும். அவர்கள் எல்லாரும் அவர்கள் படித்ததை வைத்து தமிழ் மக்களுக்கு மட்டுமே சேவையாற்ற வேண்டியது அவர்களது கட்டாயம். ஆனால் வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு, கோப்பைகழுவி, pizza delivery செய்து, அந்நியனுக்கு இதர ஏவல் புரிந்து, உழைத்து தமது சொந்தப்பணத்தில் படித்து முன்னுக்கு வருபவர்கள் தமது நாட்டுக்கு சேவைசெய்யவேண்டிய கட்டாயமில்லை. என்றாலும் அவ்வாறு சேவை செய்பவர்களும் ஒரு சிலர் இருக்கிறார்கள் என்பதற்கு ஹூல் ஒரு உதாரணம்</b> (இதைச்சொல்வதால் ஹூல் கோப்பைகழுவினார் அல்லது pizza delivery செய்தார் என்று நாரதர் assume பண்ணி கருத்துச்சொல்லுவார். வேண்டுமென்றால் இருந்துபாருங்கள்) தமிழ்மகன் உம்மடை புலம்பலுக்கு அளவே இல்லையா? சொந்தப்பணத்தில் அந்நியனுக்கு ஏவல் வேலை செய்து படித்தவர்கள் தாய்நாட்டிற்கு சேவை செய்வேண்டிய அவசியம் இல்லையா? அப்படி என்றால் 17000 மேற்பட்ட மாவீரர்களிடமும் கேக்கலாமே உங்கள் உயிரை கொடுத்து தாய்நாட்டுக்கு ஏன் சேவை செய்ய வேண்டும் என்று? ஊன முற்று இருக்கிற பல்லாயிரக்கணக்கான போராளிகளைக் கேக்கலாமே ஏன் அவர்கள் அங்கங்களை இழக்குமளவுக்கு சேவை செய்ய வேண்டிய கட்டாயம் என்ன? என்னோடு பாடசாலையில் படித்த நண்பர்கள் போராளிகளாக இருக்கிறார், அவர்கள் என்னைவிட கல்வியில் பலமடங்கு சிறப்பாக இருந்தவர்கள், அவர்களுடைய குடும்பத்திற்கு பொருளாதார பிரச்சனை இருக்கவில்லை வெளிநாடுகளிற்கு அனுப்பி படிப்பிப்பதற்கு. இவர்கள் எல்லாம் வெளிநாடுகளில் வந்து படித்து தமது சுயநலன்களை கவனம் எடுத்திருந்தால் அவர்கள் சிறந்த கல்விமான்களாக முதலீட்டார்களாக பொருளியல் வல்லுனர்களாக இருந்திருப்பார்கள். இந்த சந்தர்பங்களை எல்லாம் நளுவவிட்டு ஏன் தமது வாழ்கையை போராட்டத்திற்கு அர்பணிக்க வேண்டும்? உணர்வில்லாத ஒருவருக்கு தாய்நாட்டிற்கு சேவை செய்வது கட்டாயமா இல்லையா என்ற கேள்வி வரத்தான் செய்யும். அதுவும் பிறநாடுகளில் வாழ்கை அமைத்துக் கொண்டவர்களிற்கு உணர்வுகுறைந்த கேள்விகள் வருவது சுலபம். ஆனால் உண்மையான தமிழ் மகனிற்கு இப்படியான உணர்வு கெட்ட கேள்வி வராது. இங்கு மற்றவர்களை சுயதம்பட்டம் அடிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டாதையும். சொந்தக்காசிலை படிச்சவை தாய்நாட்டிற்கு சேவை செய்வது கட்டாயம் இல்லை இருந்தாலும் செய்யிறம் என்றதுக்கு ஈடாக ஒருவர் சுயம் தம்பட்டம் அடிக்கிறது வலு கடினம். நீர் போராட்டத்திற்கு கொஞ்சக் காசு குடுத்துட்டீர் அதுக்காக நீர் ஏதோ போராட்டத்தை குத்தகைக்கு எடுத்தவர்மாதிரி மக்களின் காசிலை கஷ்டப்படாமல் சொகுசாக வெளிநாட்டிலை போராளிகள் படிக்கிறார்கள் என்று புலம்புறீர். கூல் கோப்பை கழுவினாரோ இல்லை நீர் கூலிற்கு குண்டி கழுவினீரோ எண்டது எங்களுக்கு தேவையில்லை. உம்முடை தமிழ்மகன் என்ற முகமூடிக்கு அப்பால் உமது உண்மை முகத்தை தெரிந்து கெண்டோம் அதுவே போதும். - thamilan6 - 03-19-2006 மேற்கோள்: ஹி ஹி.... பொறியியல் பீடத்தை அமைப்பதற்கான காணி வாங்கி பலவருடங்கள் ஆகிவிட்டன. அந்தக்காணிக்கும் முன்னால் "யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடம்" என்று பெயர்ப்பலகை போட்டதைத் தவிர வேறு எதுவுமே ஆக்கபூர்வமாக சம்பந்தப்பட்டவர்களால் செய்யமுடியவில்லை. "எல்லாம் கனிந்து வரும் வேளை" என்று சொல்வதைப்பார்த்து சிரிக்காமல் என்ன செய்வது? தமிழ்மகன், உமக்கு அதுமட்டும் தான் தெரிந்திருக்கிறது. ஆனால் 2004ம் ஆண்டில் அதற்கான பல உட்கட்டுமானங்கள் பாடநெறிகள் என்பன பொறியியற்துறையில் சிறந்துவிளங்கும் கல்விமான்களின் அறிவு அனுபவ பகிரலோடு, இதற்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட செயற்குழுவினால் ஆக்கப்பட்டு பல்கலைக்கழக மானிங்கள் ஆனைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால் உம்முடைய கூலிடமே கேட்டுப்பாரும். இதை பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழு அனுமதிக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இவ்வளவு பேர் கருத்துக் கூறியும் நீர் இன்னும் "நான் பிடித்த முயலுக்கு மூன்று கொம்பு" என்று நிற்பவர். அதே போல் ஆர் என்ன சொன்னால் என்ன நான் தான் துனைவேந்தர் என்று இன்னும் தமிழர் சமூகத்தையே குழப்பி காட்டுறேன் என்று கங்கணம் கட்டி நிற்கும் உமது பேராசான்....நல்ல சோடியப்பா போங்க... மானம் உள்ளவர் என்றால், உண்மையாக தமிழர் நலனில் அக்கறை உள்ளவர் என்றால் இவ்வளவு எதிர்ப்பு வந்தவுடன் விலகியிருக்க வேண்டும்... - thamilan6 - 03-19-2006 மேற்கோள் பொறியியல் பற்றி பெரிதும் பரிட்சயமில்லாத மோகனதாசால் திட்டமிட்டு எப்படி ஒரு சிறந்த பொறியியல் வளாகத்தைக்கட்ட முடியும். அப்படிக்கட்டினாலும் அதற்குரிய பாடநெறிகளை உருவாக்கவும் அங்கு சென்று சேவையாற்றவும் எத்தனைபேர் தயாராக இருக்கிறார்கள்? சற்று விளக்கமாகச் சொன்னால் எங்களுக்கும் புரிந்துகொள்ள உதவியாயிருக்கும். துனைவேந்தர் தான் படம் கீறி கட்டடங்கள் கட்டவேண்டுமா? இல்லை அவர் தான் பாடநெறிகளை உருவாக்க வேண்டுமா? உமக்கு இவ்வளவு படித்தும் (நீர் ஏற்கனவே உம்மைப்பற்றி அடித்த தம்பட்டம் உண்மையெனும் பட்சத்தில்) இது கூட புரியவில்லை. அதுமட்டுமல்ல அவர் அந்த நேரத்தில் எந்த பல்கலையில் இருந்தாரோ அங்கே தன்னால் முடிந்ததைச் செய்திருக்கிறார். அதாவது பேராதனையில் கணனிப் பிரிவு உருவாக்கியவர் அவர்தான். இதை யாராவது மறுக்கமுடியுமா என பேராதனை பல்கலையை சேர்ந்தவர்களையே கேட்டுப்பாருங்கள். அப்படியானால், யாழ் பல்கலையில் புதுத்துறைகள் ஆரம்பிக்கப்படவில்லையா? நாரதர் சொல்வதுபோல போராளிகள் பலர் படிக்கிறார்கள் என்பது உண்மை. நாரதர் அவர்களில் ஒருவராக கூட இருக்கலாம். ஆனால் அவர்களெல்லாரும் தமிழ் மக்களின் பணத்தில்தான் படிக்கிறார்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும். அவர்கள் எல்லாரும் அவர்கள் படித்ததை வைத்து தமிழ் மக்களுக்கு மட்டுமே சேவையாற்ற வேண்டியது அவர்களது கட்டாயம். ஆனால் வெளிநாடுகளில் கஷ்டப்பட்டுஇ கோப்பைகழுவிஇ pணைணய னநடiஎநசல செய்துஇ அந்நியனுக்கு இதர ஏவல் புரிந்துஇ உழைத்து தமது சொந்தப்பணத்தில் படித்து முன்னுக்கு வருபவர்கள் தமது நாட்டுக்கு சேவைசெய்யவேண்டிய கட்டாயமில்லை. என்றாலும் அவ்வாறு சேவை செய்பவர்களும் ஒரு சிலர் இருக்கிறார்கள் என்பதற்கு ஹூல் ஒரு உதாரணம் (இதைச்சொல்வதால் ஹூல் கோப்பைகழுவினார் அல்லது pணைணய னநடiஎநசல செய்தார் என்று நாரதர் யளளரஅந பண்ணி கருத்துச்சொல்லுவார். வேண்டுமென்றால் இருந்துபாருங்கள்)ஜஃஙரழவநஸ உமக்கு எத்தனை இலட்சம் தந்தால் உமது உயிரை தருவீர்? எதை எதனுடன் ஒப்பிடுவது என்று தெரியாமல் பிதற்றாதீர். கூல் வந்து உம்மைப்போல் வேறு மாணவரை உருவாக்கக்கூடாது என்பதே தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு காரணம் என்பதை இப்போதாவது புரிந்துகொள்ளும். - thamilan6 - 03-19-2006 மேலுள்ள கருத்தில் சிரமத்திற்கு மன்னிக்கவேண்டும். எனது கருத்தை வேறு எழுத்தளவில் மாற்ற மறந்துவிட்டேன். ஆனால் தொடர்சியாக வாசிப்பவர்க்கு எது தமிழ்மகனின் கருத்து எது எனது பதில் என்று புரியுமென்று நம்புகிறேன். - Aaruran - 03-19-2006 <span style='font-size:21pt;line-height:100%'>பாலங்கள், வீதிகள் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழக வளாகம், மகளுக்கு ரீச்சர் வேலை எடுத்துத் தரக்கூடியவைக்கு ஈழத்தமிழர்கள் ஆதரவளித்ததும், சிங்களவரிடம் செல்வாக்குள்ளவரைத் தேர்ந்தெடுத்தால் தான் அவர் அவங்களிடம் கெஞ்சிக் கூத்தாடி ஊருக்கு ஏதாவது செய்வார் என்ற மனப்பான்மையிலிருந்தும் பெரும் பான்மையான ஈழத்தமிழர்கள் விலகியும், இன்னும் சில பேர் அப்படிக் கதைக்கிறதை நினைக்க,அழுவதா,சிரிப்பதா என்று தெரியவில்லை. இவ்வளவு உயிர் இழப்புகள், இத்தனை அழிவுகள் எல்லாவற்றுக்குப் பின்பும் அவர்கள் சொல்லும் குறிப்பிட்ட ஒரு நாயை* நாங்கள் ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் யாழ்ப்பாணத்துக்கொரு பொறியியல் துறை என்ற எலும்புத் துண்டை சிங்களவர் போடுவார்கள் என்று சிங்களவர்களின் காலை நக்கும் தமிழ் நாய்களுக்காக வக்காளத்து வாங்குவதற்கும், எம்மிடம் சிலர் இன்றும் இருப்பதைப் பார்க்க இத்தனை ஆயிரம் எங்களின் உடன் பிறப்புக்களின் உயிர்த் தியாகங்களெல்லாம் வெறும் விழலுக்கிறைத்த நீராகப் போய் விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.</span> (*மன்னிக்கவும், இதைவிட நல்ல உவமானம் எனக்குத் தோன்றவில்லை) - ThamilMahan - 03-20-2006 Quote:இங்கே போரட்டம் என்பது தமிழ் மக்களைப்பாதுகாக்க,அவர்களின் அடிப்படை மனித உரிமையான வாழும் உரிமயைப் பாதுகாக்க நடத்தப் படுகிறது.புலிகளே தமிழ் மக்களின் கவசம்.அவர்கள் இல்லாமல் எமக்கு எந்தப் பாதுகாப்போ,விடுதலையோ கிடயாது.இந்த மனித உரிமைவாதிகள் என்ன செய்துள்ளார்கள்?இவர்களால் கொல்லப்பட்ட,சித்திரவதைக் குள்ளாக்கப்பட்ட, தமிழ் மக்களைப் பாதுகாக்க முடிந்ததா?செம்மணி முதல் ,பிந்தரன்வல வரை எத்தனை படுகொலைகல்? நான் ஒருபோதும் இல்லையென்று சொல்லவில்லையே. மேற்குறித்த கருத்துதை நான் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதற்கும் "ஒற்றன்" மற்றும் "துரோகி" என்று என்று கூலுக்கு முத்திரை குத்துவதற்கும் இடையே பெரிய வேறுபாடு இருக்கிறது உமக்கு தெரியவில்லையா? கூல் வந்து தமிழ்மக்களுக்கு புலிகள் போன்ற ஒரு கவசமாக இருக்கவேணும் என்கிறீரா? அல்லது கூல்தான் செம்மணிக்குக் காரணம் என்கிறீரா.... சத்தியமா விளங்கேல்லை... மன்னிக்கவேணும் நீர் சொல்லும் கருத்துக்கள் பெரும்பாலானவற்றில் உண்மை இருக்கிறது. ஆனால் இந்தக்கருத்துக்கும் ஹூலை துரோகி, ஒற்றன் என்று அழைப்பதற்கும் இருக்கும் connection தான் எனக்கு இன்னும் பிடிபடவில்லை. நீர் பிரதிசெய்த யதீந்திரா கட்டுரை உம்போன்றவர்கள் என்போன்றவர்களை ஏன் சந்தேக கண்கொண்டு பார்க்கிறார்கள் என்பதை சரியாக எடுத்துக்காட்டுகிறது. ஆனால் இதுபோன்ற சந்தேகங்களை தகர்த்து, இதைவிட ஒருபடி மேலே செல்லவேண்டிய கட்டாயம் எமது இனத்துக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதைத்தான் நான் இங்கு கூற முற்படுகிறேன். முத்திரை குத்துவதை நிறுத்துங்கள் என்று சொன்னது இதைத்தான். இவன் ஒற்றன், இவன் துரோகி என்று எழுந்தமானமாக முடிவெடுக்காதீர்கள் என்பதே எனது வாதம். எமது தேசத்துக்கு பல்லாயிரம் மைல்களுக்கப்பால் என்போன்றவர்கள் இருந்தாலும் இங்கேயிருந்துகொண்டே என்போன்றவர்கள் என்ன செய்கிறோம் என்று முன்னரே தெரிந்திருந்தால் நீர் எனக்கு "துரோகி" பட்டம் கொடுத்திருக்க மாட்டீர் என்பது எனக்குத்தெரியும். நீர் எனக்குத் துரோகிப்பட்டம் கொடுத்ததால் நான் ஒன்றும் துரோகியாகிவிடப்போவதில்லை. ஆனாலும் ஒரு தேசப்பற்றாளனையே ஒருகுறுகிய காலத்தினுள் எவ்வளவு இலகுவாக துரோகியாக்கிவிட முடியும் என்பதை புரிந்துகொள்ள உதவியமைக்கு நன்றி. - narathar - 03-20-2006 மகான் உமக்கு எத்தனை முறை எழுதினாலும் விளங்கவில்லயா அல்லது எதோ காரணத்துக்காக விளங்க மறுக்கிறீரா என்று தெரியவில்லை.இருந்தும் மீண்டும் சிலவற்றை எழுத வேண்டி இருக்கிறது. உம்மை நான் எங்குமே துரோகி எனக் கூறியது கிடயாது,உமது கருத்துக்களே இங்கே தேசிய விடுதலைப் போரட்டத்திற்கு எதிரானவையாக இருக்கின்றன. இங்கே நீர் சில அரசியல் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல் இருகிறீர் என்பதயே நான் சொல்ல விழைகிறேன். கூல் என்பவர் தனி மனிதர் கிடயாது.அவருக்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்பது, இலங்கையில் இருப்பது தனி மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினை என்பதுவும் இதற்குத் தீர்வு அறிக்கைகள் மூலம், இருக்கும் சிரிலங்காவின் நீதி மன்றங்கள்,பொலிஸ் என்பவற்றைக் கொண்டு தீர்வுகாணப் படலாம் என்பதை வலியுறுத்துவது.இது தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக சிங்களவர்களால் ஒடுக்கப் படுகிறார்கள் என்பதையும் அதற்கு எதிராகவே விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள் என்பதையும் மறுதலிக்கிறது.ஆயுதப் போர் தேவயற்றது என்பதையும்,மாணவர்களின் அரசியற் போராட்டங்கள் தேவயற்றன என்பதையும் இது சொல்கிறது.இதனயே சிங்கள ஆட்ச்சியாளர் விரும்புகின்றனர்.அவர்கள் கூலை துணை வேந்தராக நியமித்ததன் மூலம் மாணவர்களின் போரட்டத்தைத் திசை திருப்பி அவர்கள் மத்தியில் எலும்புத் துண்டுகளை வீசி பிளவுகளை உண்டு பண்ணி ஒன்றாக நிக்கும் மாணவர்களின் அரசியற் போராட்டத்தை தோற்கடிக்க நினக்கின்றனர்.இதில் யாழ்ப் பல்கலைக் கழகத்திற்குள்ளயே இருக்கும் துறைகளுக்கிடயேயான அரசியலையும், மற்றும் கிருத்துவர் என்ற ரீதியில் கூலுக்கு இருக்கும் சில சக்திகளின் ஆதரவையும், அவர் ஒரு படித்தவர் ,பாண்டித்தியம் பெற்றவர் என்ற ரீதியில் அவருக்கு உம் போன்றவர் மத்தியில் இருக்கும் ஆதரவையும் பாவிக்க விரும்புகின்றனர். இதனைக் கூல் புரிந்து கொண்டு தன்னை இவர்கள் பாவிக்காமல் இருக்க விலகி விடுவதே நன்று.அதனை விடுத்து இவர் இந்தப் பதவையை ஏற்றுக் கொண்டு ,புலிகளின் அரசியற் தலமைக்கு சவால் விடுவது துரோகத்தனமாகவே நோக்கப் படும்.இதனயே நீர் புரிந்து கொள்ளத் தவறுகிறீர்.இதன் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. மேலும் நீர் யார் என்பதுவும். நீர் என்ன செய்தனீர் என்பதுவும் எனக்கு ஒரளவு தெரிந்த படியாலயே உமக்குப் பொறுமையாக ,உமக்கு விளங்கட்டும் என்று பதில் எழுதிக் கொண்டிருகிறேன்.ஆகவே இதை விளங்கிக் கொள்ளும்.அத்தோடு கண்ணியமாகக் கருத்தாடும், நீர் போராளிகள் பற்றிக் கூறியவை உமது அறியாமையால்,போராட்ட உணர்வுகளில் இருந்து நீர் அன்னியப்பட்டுள்ளதால் எழுந்த எண்ணங்கள் என்றே நான் கருதுகிறேன். நான் உம்மைத் தூரோகியாகக் கருதவில்லை.உமது அரசியல் அறியாமை மற்றும் தனி நபர் நிலை சார்ந்து போராட்டத்தை பார்ப்பத்தால் விழைந்தது என்பதை உமக்கு உணர்த்தவே யசீந்தராவின் கட்டுரையை இங்கே இணைத்தேன்.அதில் மாற்றுக் கருத்துக்கள் ,விமரிசன்னக்கள் பற்றி அவர் எழுதயதை திருப்பி வாசியும்.அப்போதாவது நான் சொல்வது உமக்கு விளங்கும். விடுதலைப் புலிகள் எடுத்த எந்த அரசியல் முடிவும் இதுவரை பிழைத்ததில்லை.சில விடயங்கள் இப்போது தெளிவாக இல்லாது இருக்கும்.ஆனால் ஈற்றில் அவை தெளிவாகும்.ஆகவே அவர்கள் எடுக்கும் முடிவுகளை இதனடிப்படையில் புரிந்து கொள்வோம். எதிரியின் ஒவ்வொரு சதியையும் அவர்கள் அடயாளம் கண்டு முறையடித்ததாலயே போராட்டம் இன்று வளர்ச்சி கண்டு தோற்கடிக்கப் படாமல் இருந்து வந்துள்ளது.இதனாலயே அவர்கள் தமிழரின் அரசியற் போராட்ட தலமைச் சக்திகளாக இரூந்து வருகின்றனர். தலமையின் எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறும் தன்மயே போராட்டம் தப்பிப்பிழைப்பதற்கான காரணியாக இருந்து வந்துள்ளது.இதில் அவர்களிற்கு இருக்கும் புலனாய்வு ஆற்றல் என்பது முக்கிய பங்கை வகிக்கிறது.இதில் சில விடயங்கள் வெளிப்படயாகக் கூற முடியாதவை,அவை பின்பே தெளிவாகும் என்பதே நான் உமக்குச் இப்போது சொல்லக்கூடியது. - narathar - 03-20-2006 விடுதலைப்புலிகள் குறித்த விமர்சனங்களில் பண்டிதத்தனங்களும் தங்களை பெரும் புத்திஜீவிகளாகவும், வித்தியாசமானவர்களாகவும் காட்டிக் கொள்ள வேண்டுமென்ற அவசரமும் மேலோங்கியிருந்ததே தவிர, யதார்த்தம் குறித்த புரிதலோ அவதானமோ இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், அந்த மாற்றுக் கருத்து விடுதலையையே மறுதலிப்பதாகவும் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் இருந்து விடக் கூடாது. (அவரது கண்டுபிடிப்பில்) வரலாற்றுக் குருடர்களான விடுதலைப்புலிகளால் எவ்வாறு இத்தகையதொரு பெரும் விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது? விடுதலைப்புலிகளால் எவ்வாறு பிராந்திய, ஐரோப்பிய ராஜதந்திர அரசியல் காய்நகர்த்தல்களுக்கு ஈடுகொடுத்தவாறு விடுதலை அரசியலை நகர்த்த முடிகிறது. வரலாற்றின் போக்கை சரியாக புரிந்து கொள்ள முடியாத அவரைப் போன்றவர்கள் மாற்றங்களை நோக்கி வருவது நமக்கு மகிழ்ச்சிதான். தமிழர் தேசியம் என்பது தனிப்பட்ட நமது பிரச்சனையல்ல. தனிப்பட்ட நமது வாழ்வியல் அனுபவங்களூடாக அதனைப் பரிசீலிக்க முற்படுவது தவறானதும் மிகமோசமான பிழையுமாகும் என்று கருதக் கூடியவர்களில் நானும் ஒருவன். விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஒரு ஒடுக்கபட்ட மக்களின் குரல். அது ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் மட்டுமல்ல, ஒடுக்குமுறையின் வலியிலிருந்தும் குரூரத்திலிருந்தும் விடுபடு வேண்டுமென்ற ஆவேசத்துடன், ஒரு தேசம் தன்னைத் தானே வருத்தி பிரசவித்த விடுதலை அமைப்பு. உண்மையில் ,இந்த விடுதலைப் போராட்டம் என்பது பல லட்சக் கணக்கான தமிழர்களின் கௌரவமான வாழ்வியல் இருப்போடு சம்பந்தப்பட்டது. தன்னலமற்ற பல்லாயிரக் கணக்கான மாவீரர்களின் கனவுகளோடு சம்பந்தப்பட்டது. நமது தனிப்பட்ட புத்திசாலித்தனப் பிரமைகளை சோதித்துப் பார்ப்பதற்கான சோதனைக்களமல்ல இது. சில வேளைகளில் யதார்த்தம் காலம் கடந்தே தெளிவாகக் கூடும். வரலாற்று ஓட்டத்தில் எல்லாமே சரிக்கும் பிழைக்கும் இடையில்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றன. வெறும் புனித கற்பிதங்களால் எதுவும் ஆகப்போவதில்லை. சிங்கள தேசம் தமிழர் தேசத்தின் போராட்ட வலுவைச் சிதைக்க எந்த வழிமுறைகளையும் பயன்படுத்தத் தயங்கப் போவதில்லை என்பதையே சமீபகால நிகழ்வுகள் கோடிகாட்டுகின்றன. எனவே, நமது நிலையில் இந்தக் காலத்தில் மாற்றுக் கருத்துக்கள் என்பதும் விமர்சனங்கள் என்பதும் வெறும் அர்த்தமற்ற சொற்களாகத்தான் இருக்க முடியும். கடந்த அறுபது வருடங்களிற்கும் மேலாக, தமிழர் தேசம் தனது விடுதலைக்காகப் போராடி வருகிறது. தமிழ் மக்களுக்கு ஒடுக்குமுறையையும் அழிவையும் தவிர, எதையும் வழங்கிவிடும் நிலையில் சிங்கள தேசம் இல்லையென்பது மீண்டும் மீண்டும் யதார்த்தமாக இருக்கிறது. இந்த வரலாற்றை சொல்லிச் சொல்லியே அது நமக்கு மனப்பாடமாகி விட்டது. எனவே, இந்தக் காலத்திற்கான நமது பணியென்பது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும். அது ஒடுக்கப்பட்ட மக்களின் குரலோடு குரலாகக் கலப்பதுதான். நீண்ட நாட்களாக சொல்ல வேண்டுமென்று எண்ணியிருந்த ஒரு விடயத்தைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. எனது பார்வை தமிழ்த் தேசியத்துள் வாழ விரும்புகின்ற ஒரு சாதாரன குடிமகனின் பார்வையே அன்றி, வேறு ஒன்றுமில்லை. இவ்வாறான பார்வைகளை புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் ஒரு வேலைதான் என்றும் சிலர் மதிப்படக் கூடும். நீதியின் பக்கம் நிற்பதும் உண்மையின் பக்கமாக நிற்பதும் வக்காலத்து வாங்குதல் என்ற அர்த்தம் பெறுமாக இருந்தால், அந்த வக்காலத்து வாங்கலை தொடர்ந்து செய்வதில் நாம் ஏன் பின்நிற்க வேண்டும். யதீந்திரா |