Yarl Forum
புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்????? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்????? (/showthread.php?tid=4285)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

- kuruvikal - 06-05-2005

உங்கட ஆணாதிக்கம் பெண்ணடிமை போன்ற அர்த்தமற்ற பதப்பிரயோகங்களையும் அவற்றுக்கான கண்மூடித்தன விளக்கங்களையும் நாங்கள் என்றுமே ஏற்கத் தயாரில்லை... மனிதன் என்ற வகையில் எல்லாருக்கும் எல்லா அடிப்படை உரிமைகளுக்கும் இருக்கு... அவரவர் பிரச்சனைகளைத் தீர்க்க வழிமுறைகள் இருக்கு...பெண் உரிமை மறுக்கப்பட்டால்..அந்த இடத்தில் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பதுதான் அர்த்தம்...இதை அம்னஸ்ரி இன்ரநஷனலும் தெளிவாகச் சொல்லி இருக்கிறது...அதேபோல் ஆண்களுக்கு அவர்களின் உரிமைகள் மறுக்கப்படினும் அதுதான் நிலை...! அந்த அடிப்படையில் பிரச்சனைகளுக்குத் தீர்வை புரிந்துணர்வின் பால் எட்டுங்கள்...சும்மா ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி மனிதப் பிரிவினைகளை வளர்க்காமல்...!

எனவே ஆணாதிக்கம் பெண்ணடிமை போன்ற மயக்கம் தரும் சொற்பிரயோகங்கள் எனியும் அவசியமில்லை...அதைப் பொழுது போக்கிற்காக நீங்கள் தாரளமாகப் பேசுங்கள்...அது உங்கள் பொழுதுபோக்கு விருப்பம்...ஆனால் ஒன்று அவை சமூகத்தில் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ணப் போறதில்லை...! Idea

- kirubans - 06-05-2005

யதார்த்தத்திற்கு வெளியில் இருந்து குருவி கீச்சிடுகின்றது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கீச்சிட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான், உலகம் (தமிழீழம் உட்பட) தன்பாட்டில் சரியானபாதையில் போகும். இவர்களுக்காக பின்நிற்காது.

மகளிர் விவகார அமைச்சுக்கள் சிறீலங்கா, இந்தியா, ஏன் பிரித்தானியாவில் கூட உள்ளன. அதுபோல் ஆண்கள் விவகார அமைச்சுக்கள் எந்த நாட்டிலாவது உள்ளனவா?
தமிழீழத்திலும் சரி, புலத்திலும் சரி தமிழ் பெண்கள் முன்னேறிக் கொண்டுவருகிறார்கள். இது போராட்டத்தால் விரைவாக்கப்பட்டு வருகின்றது. இதனை பொறுக்கமுடியாதவர்கள் புலம்பி எதையும் தடுக்கமுடியாது. நிலவைப் பார்த்து குரைக்கும் நாயைப் போன்றதுதான் இவர்களின் கீச்சிடலும்.

- kirubans - 06-05-2005

kuruvikal Wrote:எயிட்ஸ் தொற்றுக்கு அதிகம் காரணம் பெண்கள் தான்...குறிப்பாக நெறி தவறும் பெண்கள்... ஆண்கள் விபச்சாரம் செய்வதில்லை...பாலியலைத் தொழிலாக்கிப் பிழைப்பதில்லை....! விபச்சாரம் செய்யும் பெண்களே காவிகளாக இருந்து அறியாமையால் அவர்களை நாடும் ஆண்களுக்கு எயிட்சை அதிகம் பரப்பி வருகின்றனர்...! கணவன் இருக்க இன்னொருத்தனோடு கூடுபவளும் விபச்சாரிதான்...! Confusedhock: Idea

அப்படியானால் யாழ்ப்பாணத்தில் விபச்சாரம் கொடிகட்டிப் பறப்பதனால்தான் எயிட்ஸ் அதிகரித்துள்ளதாக சொல்ல வருகிறீர்கள். உங்கள் மடமைத்தனத்தை உங்களின் பேரறிவு என்று நீங்களே நினைப்பது ஒருவகையில் நல்லதுதான் பரமார்த்த குருவியே.

ஆண்கள்தான் ஆணுறைகூடப் பாவிக்காமல் (அது ஆணின் பெருமைக்கு இழுக்கல்லவா) பல பெண்களுடன் கூடி பெண்களுக்கு எயிட்ஸைப் பரப்ப்புகின்றனர். அதன்மூலம் பிற ஆண்களுக்கும் பரவச் செய்கின்றனர். பரப்புவோரும், பரவலூகு உள்ளாவோரும், கொஞ்சம் தங்கள் தாழ்வுச்சிக்கலைத் தவிர்த்து ஆணுறை பாவித்தால் பரவுவது குறைக்கப்படும். இதற்காக விபச்சாரத்தை நான் ஆதரிகின்றேன் என்று அர்த்தமல்ல. விபச்சாரத்தை உருவாக்குவதும், விபச்சாரிகளை வைத்து பிழைப்பு நடாத்தும் மாமாக்கள் ஆண்கள் என்பதையும் மறக்க வேண்டாம்.

- Jude - 06-05-2005

kuruvikal Wrote:வள்ளுவன் ஆகட்டும் சூத்திரமாகட்டும் கணவன் மனைவிக்கான பாலியல் ஒழுக்கம் பற்றியே சொல்கின்றன... கள்ளக் கலவி பற்றிச் சொல்லேல்ல.....! காமத்துப் பாலுக்கு வரமுதல் அறத்துப்பாலில் இல்லறம் என்றால் என்ன என்று சொல்லிவிட்டுத்தான் அப்புறம் காமத்துப்பாலில் வள்ளுவர் கணவன் மனைவி...தலைவன் தலைவிக்கு...காமத்துப்பால் போதிக்கிறார்கள்..! கணவன் இருக்க இன்னொருத்தனையோ அல்லது மனைவி இருக்க இன்னொருத்தியையோ கண்டு கூடச் சொல்லவில்லை...! சரியா..அந்த அடிப்படை ஒழுக்கத்தைத்தான் நாங்கள் இங்கே வலியுறுத்துகிறோமே..!

இல்லையே குருவிகளே... எங்கே இல்லறம் நீங்கள் சொல்கிறீர்கள்? நீங்கள் சொல்வது கலியாணம் செய்த மனைவி அங்கே துறவறம், கணவன் வெளிநாட்டில் துறவறம் பிறகு அது உங்கள் இல்லறம்!! வள்ளுவர் இதைக் கேட்டிருந்தால்

"கணவன் காணாத மனையாள் பாயும் வேலி - வேண்டாத
தாலி யோடு போகும்."

என்று அதற்கும் ஒரு குறள் இயற்றியிருப்பார்.
உங்கள் கருத்துப்படி கணவனும், மனைவியும் கண்காணாத தேசத்த்தில் இருந்து தியானம் செய்வது இல்லறம். சரி காமத்துப்பால்? அது எங்கே ? அதுவும் தியானத்தில் தானா? நான் சொல்கிறேன் குறைந்தது காமத்துப்பாலையாவது படமாக கணவனுக்கும் மனைவிக்கும் காட்டியாவது சுயஇன்பம் பெற்று வாழவிடுங்கள் ஐயா என்று? நியாயமான கோரிக்கையல்லவா?

- kuruvikal - 06-05-2005

kirubans Wrote:யதார்த்தத்திற்கு வெளியில் இருந்து குருவி கீச்சிடுகின்றது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கீச்சிட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான், உலகம் (தமிழீழம் உட்பட) தன்பாட்டில் சரியானபாதையில் போகும். இவர்களுக்காக பின்நிற்காது.

மகளிர் விவகார அமைச்சுக்கள் சிறீலங்கா, இந்தியா, ஏன் பிரித்தானியாவில் கூட உள்ளன. அதுபோல் ஆண்கள் விவகார அமைச்சுக்கள் எந்த நாட்டிலாவது உள்ளனவா?
தமிழீழத்திலும் சரி, புலத்திலும் சரி தமிழ் பெண்கள் முன்னேறிக் கொண்டுவருகிறார்கள். இது போராட்டத்தால் விரைவாக்கப்பட்டு வருகின்றது. இதனை பொறுக்கமுடியாதவர்கள் புலம்பி எதையும் தடுக்கமுடியாது. நிலவைப் பார்த்து குரைக்கும் நாயைப் போன்றதுதான் இவர்களின் கீச்சிடலும்.

இருப்பது மகளிர் விவகார அமைச்சுக்கள்... மகளிர் விடுதலை அமைச்சுக்கள் அல்ல...! மகளிருக்கான விசேட தேவைகள்..பிரச்சனைகளை ஆராய இருக்கின்றன அந்த அமைச்சுக்கள் என்று கூறப்படுகின்றன...! அதால என்ன விவகாரம் அறியப்படுகுது எண்டது இன்று வரைக்கும் யாரும் அறியல்ல.. அறிந்து தீர்வுகள் சொன்னதாவும் தெரியல்ல...! இது உலகில் இன்னும் பெண்கள் சார்ந்து சலுகை அடிப்படையிலான தீர்வுகள் தேட பக்கச்சார்புடன் முயலப்படுகின்றமையையே காட்டுகிறது....! இதேபோல வன விலங்குகள் அமைச்சும் இருக்கு....! கால்நடை விவசாய அபிவிருத்தி அமைச்சும் இருக்கு...ஒருவேளை அவங்க பெண்களை விலங்குகளுக்க அடக்கிட்டாங்களோ தெரியல்ல... எதுக்கும் இதையிட்டு மகிழ்ச்சி கொள்ளாம...இந்த அமைச்சை மனிதவள மேம்பாட்டுக்க சேர்த்தால் நல்லது..!

உலகில் ஆண்கள் விவகாரம் என்பது எப்பவும் புறக்கணிக்கப்படும் அம்சம் அதுதான் ஆண்கள் (தந்தைமார் உள்ளடங்கலாக) தங்கள் அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்று பிளேயருக்கு தூள் தூவினது..எது எப்படி இருப்பினும் ஆண்கள் தங்களுக்கு என்று தனியான அமைச்சை எப்பவும் எங்கவும் கோரப் போவதில்லை...அதை அவர்கள் மனித வளம் சார்ந்த அமைச்சுக்களுக்குள் வரையறைத்து தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு தேடிக் கொள்வர்...! பெண்கள் தனிய அமைச்சு வைச்சு ஆலோசிக்கட்டும்...தீர்வு எனும் போது மனிதன் சமூகம் என்ற நிலைக்கு வந்தால்தான் முடியும்...!

எங்கும் எல்லாம் சரியாத்தான் போய்க்கிட்டிருக்கு..கிருபன்ஸ்சு...அதுதான் லண்டனில 17 வயசுப் பெட்டையை ரேப் பண்ணிக் கொலை செய்து மறைக்கும் வரை இந்த அமைச்சுகள் என்ன பண்ணினவை....! இதுகள வெளியில சொல்லுறது மனித உரிமைகள் அமைப்புகள் தான்....பெண்கள் விவகார அமைச்சுக்கள் அல்ல....! ஈழத்தில் எத்தனை பெண்கள் இராணுவத்தால் கொன்றொழிக்கப்பட்டார்கள்...அதை மகளிர் விவகார அமைச்சா வெளிக்கொணர்ந்தது...மனித உரிமை அமைப்புக்கள் தான்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- kuruvikal - 06-05-2005

Jude Wrote:
kuruvikal Wrote:வள்ளுவன் ஆகட்டும் சூத்திரமாகட்டும் கணவன் மனைவிக்கான பாலியல் ஒழுக்கம் பற்றியே சொல்கின்றன... கள்ளக் கலவி பற்றிச் சொல்லேல்ல.....! காமத்துப் பாலுக்கு வரமுதல் அறத்துப்பாலில் இல்லறம் என்றால் என்ன என்று சொல்லிவிட்டுத்தான் அப்புறம் காமத்துப்பாலில் வள்ளுவர் கணவன் மனைவி...தலைவன் தலைவிக்கு...காமத்துப்பால் போதிக்கிறார்கள்..! கணவன் இருக்க இன்னொருத்தனையோ அல்லது மனைவி இருக்க இன்னொருத்தியையோ கண்டு கூடச் சொல்லவில்லை...! சரியா..அந்த அடிப்படை ஒழுக்கத்தைத்தான் நாங்கள் இங்கே வலியுறுத்துகிறோமே..!

இல்லையே குருவிகளே... எங்கே இல்லறம் நீங்கள் சொல்கிறீர்கள்? நீங்கள் சொல்வது கலியாணம் செய்த மனைவி அங்கே துறவறம், கணவன் வெளிநாட்டில் துறவறம் பிறகு அது உங்கள் இல்லறம்!! வள்ளுவர் இதைக் கேட்டிருந்தால்

"கணவன் காணாத மனையாள் பாயும் வேலி - வேண்டாத
தாலி யோடு போகும்."

என்று அதற்கும் ஒரு குறள் இயற்றியிருப்பார்.
உங்கள் கருத்துப்படி கணவனும், மனைவியும் கண்காணாத தேசத்த்தில் இருந்து தியானம் செய்வது இல்லறம். சரி காமத்துப்பால்? அது எங்கே ? அதுவும் தியானத்தில் தானா? நான் சொல்கிறேன் குறைந்தது காமத்துப்பாலையாவது படமாக கணவனுக்கும் மனைவிக்கும் காட்டியாவது சுயஇன்பம் பெற்று வாழவிடுங்கள் ஐயா என்று? நியாயமான கோரிக்கையல்லவா?

யூட் வள்ளுவன் காலத்திலும் மனைவியைப் பிரிந்து கணவன் தூர தேசம் போதல் இருந்திருக்கு...அதற்கு காமத்துப்பாலே உதாரணம்..முதலில காமத்துப்பாலை முழுசா வாசியுங்க ஒருக்கா...!

அப்புறம் ஏதோ சுய இன்பம் எண்டீங்க...அது சுய இன்பம்...அவரவருக்கு இயல்பா அதில ஈடுபாடிருந்தா அவையவை அதைத் தேடிக் கொள்வினம்....! அது இயற்கை...! அதுக்கு எதுவும் காட்ட வேணும் என்ற அவசியமில்லை... ஆழ்ந்த நித்திரையும் அதில் வரும் கனவும் போதும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- kuruvikal - 06-05-2005

kirubans Wrote:
kuruvikal Wrote:எயிட்ஸ் தொற்றுக்கு அதிகம் காரணம் பெண்கள் தான்...குறிப்பாக நெறி தவறும் பெண்கள்... ஆண்கள் விபச்சாரம் செய்வதில்லை...பாலியலைத் தொழிலாக்கிப் பிழைப்பதில்லை....! விபச்சாரம் செய்யும் பெண்களே காவிகளாக இருந்து அறியாமையால் அவர்களை நாடும் ஆண்களுக்கு எயிட்சை அதிகம் பரப்பி வருகின்றனர்...! கணவன் இருக்க இன்னொருத்தனோடு கூடுபவளும் விபச்சாரிதான்...! Confusedhock: Idea

அப்படியானால் யாழ்ப்பாணத்தில் விபச்சாரம் கொடிகட்டிப் பறப்பதனால்தான் எயிட்ஸ் அதிகரித்துள்ளதாக சொல்ல வருகிறீர்கள். உங்கள் மடமைத்தனத்தை உங்களின் பேரறிவு என்று நீங்களே நினைப்பது ஒருவகையில் நல்லதுதான் பரமார்த்த குருவியே.

ஆண்கள்தான் ஆணுறைகூடப் பாவிக்காமல் (அது ஆணின் பெருமைக்கு இழுக்கல்லவா) பல பெண்களுடன் கூடி பெண்களுக்கு எயிட்ஸைப் பரப்ப்புகின்றனர். அதன்மூலம் பிற ஆண்களுக்கும் பரவச் செய்கின்றனர். பரப்புவோரும், பரவலூகு உள்ளாவோரும், கொஞ்சம் தங்கள் தாழ்வுச்சிக்கலைத் தவிர்த்து ஆணுறை பாவித்தால் பரவுவது குறைக்கப்படும். இதற்காக விபச்சாரத்தை நான் ஆதரிகின்றேன் என்று அர்த்தமல்ல. விபச்சாரத்தை உருவாக்குவதும், விபச்சாரிகளை வைத்து பிழைப்பு நடாத்தும் மாமாக்கள் ஆண்கள் என்பதையும் மறக்க வேண்டாம்.

ஆண்களுக்கு மட்டுமா உறைகள் இருக்கு...பெண்களுக்கு இல்லையோ...எது மடமை எண்டதை ஆராய முதல் எதில யதார்த்தம் இருக்கு என்று ஆரோயுங்கோ...! இப்ப யாழ்ப்பாணத்தில விபச்சாரம் பல்கலைக்கழகம் வரை வந்ததுக்கு சாட்சிகள் தந்திருக்கு உதயன் பத்திரிகை...புலிகள் காலத்தில் அங்க விபச்சாரம் எண்டது அறியமுடியாத அம்சமாக இருந்தது...!

அதுபோக எயிட்ஸ் பரவலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று பெண்களும் விபச்சாரமும் என்பது உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பு....! இதை இல்லை என்று சொல்லும் முதல் மனிதர் உலகில் நீங்க ஒருவர்தான்...! இப்படியான உங்கள் மேதாவித்தனத்தை நம்பித்தான் தறிகெட்டுச் சீரழிய விளையும் பெண்களுக்கு ஆதரவளிக்க வந்தீர்கள் போலும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- stalin - 06-05-2005

SEX என்பது அற்புதமான கலை .யோகம் மூலம் அடைகிற பரவசமான நிலையை SEX மூலமும் அடையமுடியும்.ஆனால் எங்கட சமுதாயத்தி்ல் இனவிருத்தி மட்டுமே அதிகம் பேர் பாவிக்கப்படவேணுமென்று நினைக்கின்றனர். பிராய்ட் என்ற உளவியல் நிபுணரின் கூற்றுப்படி எல்லா உளபிறள்வுக்கு SEXUAL ரீதியான பிரச்சனையே என்று கூறுகிறார் பாலியல் ரீதியான ஒருவெறுமை நிலையினால் எங்கள் தேசத்தில் இருந்த பிரச்சனைகளை அறியவிரும்பின் எஸ் வி பொன்னுத்துரை டானியல் போன்றவர்கள் எழுதிய தீ சடஙகு போன்ற வற்றை பார்த்தால்தெரியும்---ஸ்ராலின்

Re: புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்????? - akalikai - 06-05-2005

MUGATHTHAR Wrote:[b] புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம் அடைந்திருக்கிறதா??????????

இன்று காலை தீபம் தொலைக்காட்சியில் மேலே குறிப்பிட்ட விடயம் தொடர்பான ஒரு உரையாடல் இடம்பெற்றது. அனேகா; இந்த நிகழ்ச்சியை பார்க்க வாய்ப்பு இருந்திருக்காது. இப்போ தீபம் சந்தாஅட்டை மூலமாகவே ஒளிபரப்பாவதாலும் வேலை காரணமாகவும் நேரம் கிடைத்திருக்காது. சரி நாங்களும் யாழ் களத்தில் இதைப்பற்றி ஒரு கருத்துகளை அலசுவம் என்ன?

புலம் பெயா; மக்கள் எத்தனையோ வகையில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் அதை மறுக்கவே முடியாது. முக்கியமாக பொருளாதாரத்தை குறிப்பிடலாம்

இதைவிட
1).தொழில் நுட்பஅறிவு (கணணி. இனையத்தளம் என)
2) பெண்கள் சுதந்திரம்
3) பிள்ளைகள் சுதந்திரம்
4) சமய.கலாச்சார.கலை அறிவு
5) பெண்ணும் ஆணுக்கு சமனாக வேலைக்கு போவதால் குடும்பத் தலைவனின் சுமைகள் கனுஷமான அளவு குறைந்திருக்கிறது

இப்படி நிறைய நன்மையான விடயங்கள் இருக்கிறது
இதை விட இவர்களுக்குத் தெரியாமலே ஒரு சில பாதிப்புக்கள் தாயகத்திலிருக்கும் எமது உறவுகளை சென்றடைகின்றன. நிகழ்ச்சியில் ஒரு நேயா; குறிப்பிட்டது போல வெளிநாட்டில் இருப்பவர்களின் சில உறவுகள் கல்வியில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை இதுக்குக் காரணம் படிப்புச் சரிவராவிட்டால் அண்ணனைப் பிடிச்சு எப்பிடியும் வெளிநாடு போகலாம் எண்ட நினைப்பு இருப்பதால் படிப்பில் ஆர்வம் குறைகிறது.பெற்றோரும் இதையே ஊக்கிவிக்கிறார்கள்

அடுத்தது நாம் அனுப்பும் பணம் அவர்களின் அத்தியாவசிய தேவையைவிட மேலதிகமாக இருப்பதால் வீண்செலவுகள் செய்வதற்கு வழி வகுக்கிறது அவர்கள் கஸ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலே போய்விடுகிறது ஆனபடியால் நாங்கள்தான் அவர்களை சோம்பேறிகள் ஆக்குகின்றோம்..உண்மைதானே?

இன்று ஊரில் வரதட்சனை இவ்வளவு தூரம் உயர்ந்தமைக்கு யார் காரணம் என நினைக்கிறீர்கள் 4அண்ணன்கள் வெளிநாட்டிலிருந்தால் அவர்களின் தங்கைக்கு வரதட்சனையாக கேட்காமலே அள்ளிக் கொடுத்து பெருமைப் பட்டுகொள்கிறார்கள் இது தமிழ் சமூகத்துக்கு நன்மையா??

சரி இதேபோல் நீங்களும் உங்கள் கருத்துகளை இங்கே வையுங்கள்

ஏதோ தலைப்பில் தொடங்கி எங்கேயோ போய் நிற்கும் இந்த விவாதம் ஒரு பொருத்தமான புதிய தலைப்புக்கு மாற்றப்பட்டு தொடர்தல் இன்னும் சிறப்பாக இருக்கும்.

- Mathan - 06-05-2005

tamilini Wrote:
Quote:இங்கே இந்த யாழ் களத்தில் நீங்களோ தமிழினியோ நித்திலாவோ அல்லது சாந்தியக்காவோ மற்றும் ஏனைய கள பெண் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்க முடியாது. அது மட்டுமல்ல...
என்ன நிதர்சன். 4 பெண்களை உதாரணம் காட்டினால் சரியா.?? எத்தனை ஆண்கள் உள்ள களத்தில் இத்தனை பெண்களின் எண்ணிக்கை ஏன் குறைவாக உள்ளது..??

அதை விட இங்க கருத்தெழுதிற பெண்கள் அனேகர் மாணவிகள். படிக்கும் போது சுதந்திரமாய் எழுதினம் நாளைக்கு நிலை என்னவோ தெரியாது... இன்னும் சமயல் கட்டுத்தான் தங்கட சொத்து என்று வாழுறவையும் இருக்கினம்?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: :mrgreen:

உண்மைதான். கருத்தெழுத படிக்கும் போது கிடைக்கும் சுதந்திரம் அவர்களிற்கு திருமணத்திற்கு பின்பு கிடைப்பது குறைவு. ஆண்களால் பாடசாலையில் வேலைத்தளத்தில் வீட்டில் என்று விரும்பிய இடத்தில் இருந்து விரும்பி நேரத்தில் களம் வர முடிகின்றது. ஆனால் பெண்களால் அப்படியல்ல.

- Mathan - 06-05-2005

Niththila Wrote:இங்கு வைக்கப்பட்ட குருவி அண்ணாவின் கருத்துகள் பல யதார்த்தமற்றவையாக இருக்குது.

அண்ணா கருத்தின் படி டேற்றிங் போகவா எல்லாப் பெண்கள் சுதந்திரம் கேக்கினம்

பெண்களுக்கு சட்ட ரீதியாக பாதகாப்பு இருக்கு (சட்டம் பற்றியும் அது எப்படி பெண்களை அடிமையாக கருதி வந்தது என்பது பற்றியும் அதன் தற்போதைய மாற்றங்கள் பற்றியும் இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசலாமா) சரி அது ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை அளிக்கிறதே தவிர பெண்களுக்கு மட்டும் சிறப்பு உரிமை எதனையும் அளிக்கேல்லை.

சட்டத்தால் வழங்கப்பட்ட பாதுகாப்பை பெறவே எமது பெண்கள் எத்னை இடர்ப்படுகின்றனர். உதாரணத்துக்கு கணவனால் கொடுமைப் படுத்தப்படும் ஒரு பெண் அவனிடம் இருந்து விடுதலை பெற முயற்சிக்கும் போது சமுகத்தில் எத்தனை பேச்சுகளுக்கு ஆளாக வேண்டியுள்ளது.

ஆனால் இதே சமுகம் அந்த பெண் அடக்குமுறைக்குள்ளாக்கப் பட்ட போது அது குடுமப பிரச்சனை என்று கூறி ஒதுங்கி விடும்

இதுவே ஒருஆண் சட்டத்தின் தணையுடன் மனைவியை பிரியும் போது அந்தபெண்ணைத்தான் சமுகம் இழிவாக பேசி ஒதுக்கி வைக்கிறது. இது பெண் அடக்குமுறையில்லையா :oops: :oops: :roll:

நிச்சயமாக இது அடக்குமுறைதான். சட்டம் தரும் உரிமைகளை கூட சமுதாய நிர்பந்தங்கள் பறிக்கின்றன,

- aswini2005 - 06-06-2005

stalin Wrote:SEX என்பது அற்புதமான கலை .யோகம் மூலம் அடைகிற பரவசமான நிலையை SEX மூலமும் அடையமுடியும்.ஆனால் எங்கட சமுதாயத்தி்ல் இனவிருத்தி மட்டுமே அதிகம் பேர் பாவிக்கப்படவேணுமென்று நினைக்கின்றனர். பிராய்ட் என்ற உளவியல் நிபுணரின் கூற்றுப்படி எல்லா உளபிறள்வுக்கு SEXUAL ரீதியான பிரச்சனையே என்று கூறுகிறார் பாலியல் ரீதியான ஒருவெறுமை நிலையினால் எங்கள் தேசத்தில் இருந்த பிரச்சனைகளை அறியவிரும்பின் எஸ் வி பொன்னுத்துரை டானியல் போன்றவர்கள் எழுதிய தீ சடஙகு போன்ற வற்றை பார்த்தால்தெரியும்---ஸ்ராலின்
உதை யாருக்குச் சொல்றீங்கள் ஸ்ராலின் ? உங்களுக்கும் விபச்சாரி பட்டம் தரப்போகினம் நிதர்சன் அன்ட் குருவிகள் குழாம். ஏனென்டால் பெண்ணின் பிரச்சனை பற்றி சொல்வோர்கள் சமூக நடைமுறைச் சிக்கலைச் சொல்வோர்கள் எல்லோருமே விபச்சாரிகளும் பலருடன் புணரத்துடிக்கும் நாய்களென இங்கு குருவி நிதர்சன் கூட்டணியின் ஏகமனதான தீர்வை.

இவர்களுக்கெல்லாம் வீட்டுக்கு ஏவல்செய்யவும் காவல் செய்யவும் தேவையின் போது தூண்டல்களின் வடிகாலாகவும் பெண் தேவை மற்றப்படி பெண்ணிடமுள்ளதெல்லாம் ää பெண்ணின் சொற்களெல்லாம் விபச்சாரம்தான்.
ஆ ஊ என்று கதறும் இந்தக் கூட்டணி மன்னர்கள் இருவரும் கேட்கப்பட்ட எந்தவொரு கேள்விக்கும் பதில் தராமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். குறைத்தனமான விளங்கலுடனும் ää புரிதலுடனும் சமூகத்தின் ஏகபிரதிநிதிகளாக இருவரும் ஓடிவந்து எல்லோருக்கும் வபச்சாரி பட்டம் தருகிறார்கள். இதுதான் இவர்களது சமூக கரிசனம் கவனம்.

(கணணிக்கு காச்சல் அதனால் கருத்து எழுத முடியவில்லை.
மீண்டும் வருவேன் நன்றி - அஸ்வினி சாத்தவீகன்)

- Jude - 06-06-2005

kuruvikal Wrote:அப்புறம் ஏதோ சுய இன்பம் எண்டீங்க...அது சுய இன்பம்...அவரவருக்கு இயல்பா அதில ஈடுபாடிருந்தா அவையவை அதைத் தேடிக் கொள்வினம்....! அது இயற்கை...! அதுக்கு எதுவும் காட்ட வேணும் என்ற அவசியமில்லை... ஆழ்ந்த நித்திரையும் அதில் வரும் கனவும் போதும்...!

குருவிகள்,

உணவு உண்ணுவதும் இயற்கை தான். நோய் வந்து குணமாவதும் இயற்கை தான்.
ஆனால் உணவு பற்றி ஆராயந்து, சத்துணவு, பல்வேறு வகையான உணவு தயாரிக்கும் முறைகள், பாண் போன்ற உணவு தயாரிக்க மா தயாரிக்கும் தொழிற்சாலைகள், அதற்கென்றே பொறியியல் துறை, இப்படியாக உணவு உண்ணுதல் என்ற இயற்கையான செயற்பாடு பற்றி விஞ்ஞானம் சிறப்பாக முன்னேறிய மனிதருக்கு வழிகாட்டி வந்திருக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழும் மனிதர்கள் நல்ல சத்துணவுண்டு, சுகதேகிகளாக வாழ, நாட்டில் சோறும் கறியும் பாணும் உண்டு குறை வளர்ச்சியடைந்து வாழும் மக்களை படங்களை ஒப்பிட்டே வித்தியாசம் காணலாம்.

மனிதர் போய் வருவது இயற்கையான செயற்பாடு. அதற்காக தானே இரண்டு கால்கள் இருக்கின்றன? தேவைப்படுபவர்கள் போய் வர வேண்டியது தானே என்பீர்கள். போக்குவரத்தை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தவர்கள் வாகனங்களையும், விமானங்களையும், கப்பல்களையும் கட்டி அதற்கென்றே பயில விஞ்ஞான துறைகளையும் உருவாக்கியுள்ளார்கள்.

இயற்கையாக வரும் நோய்கள் பற்றி ஆராயந்து அவற்றிலிருந்து தப்பி நீணடகாலம் வாழ மருத்துவம் என்ற துறை உருவாகி இருக்கிறது.
பாலியலுக்கும் அவ்வாறாக விஞ்ஞான, மருத்துவ, கல்வியியல் துறைகள் இருக்கின்றன குருவிகள்.

<img src='http://places.mongabay.com/india/kama_sutra_carvings.jpg' border='0' alt='user posted image'>
<b>இராஜஇராஜ சோழன் காலத்து கோவில் சிற்பம்.</b>

சுயஇன்பம் பற்றிய மூடநம்பிக்கைகளாலும் அறியாமையினாலும் பலர் இவற்றை பற்றி தவாறான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். எதுமே தெரியாமலும் இருக்கிறார்கள். குறிபபாக பெண்கள் மத்தில் இது பற்றிய அறிவுக்குறைவு அதிகம். ஆகவே பாலியல் கல்வி முக்கியமானது. குறிப்பாக பெண்களுக்கு முக்கியமானது. தாங்கள் சொன்ன தூக்கத்துடன் சம்பந்தப்பட்ட சுயஇன்பம், இது பற்றிய செயற்பாடுகளில் ஒரு சிறிய பிரிவு. அது பிரிவுத்துயரால் வாடுபவர்களுக்கு (காமத்துப்பால்) போதுமான தீர்வாகாது. எது எப்படி இருப்பினும் அறிவு மக்களுக்கு முக்கியம். அது பாலியல் சம்பந்தப்பட்ட ஒரே காரணத்துக்காக மறுக்கப்படுவது பிற்போக்கானது.

- kirubans - 06-06-2005

kuruvikal Wrote:ஆண்களுக்கு மட்டுமா உறைகள் இருக்கு...பெண்களுக்கு இல்லையோ...எது மடமை எண்டதை ஆராய முதல் எதில யதார்த்தம் இருக்கு என்று ஆரோயுங்கோ...! இப்ப யாழ்ப்பாணத்தில விபச்சாரம் பல்கலைக்கழகம் வரை வந்ததுக்கு சாட்சிகள் தந்திருக்கு உதயன் பத்திரிகை...புலிகள் காலத்தில் அங்க விபச்சாரம் எண்டது அறியமுடியாத அம்சமாக இருந்தது...!

அதுபோக எயிட்ஸ் பரவலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று பெண்களும் விபச்சாரமும் என்பது உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பு....! இதை இல்லை என்று சொல்லும் முதல் மனிதர் உலகில் நீங்க ஒருவர்தான்...! இப்படியான உங்கள் மேதாவித்தனத்தை நம்பித்தான் தறிகெட்டுச் சீரழிய விளையும் பெண்களுக்கு ஆதரவளிக்க வந்தீர்கள் போலும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

குருவி மீண்டும் நான் சொல்லாததை நான் சொன்னதாக எழுதியுள்ளீர். இந்த இழிந்த குணத்தை முதலில் கைவிடும். விபச்சாரம் எயிட்ஸ் பரவலுக்குக் காரணம் இல்லை என்று எங்கு எழுதியுள்ளேன்? தமிழ்கூட படிக்கத் தெரியாத அறிவிலியாக இருக்கவேண்டாம்.

http://www.unaids.org/NetTools/Misc/DocInf.../Q-A_III_en.pdf

இந்த ஐ.நா அறிக்கையில் 17 ஆம் பக்கத்தைப் படிக்கவும். ஆண்கள் ஆணுறை பாவிக்கவேண்டும் என்று பெண்களால் வற்புறுதமுடியாமைக்குக் காரணம் சொல்லப்பட்டிருக்கு. அத்துடன் பெண்ணுறைகளை பாவிக்கத் தூண்டும் முயற்சிகளைப் பற்றியும் சொல்லியிருக்கு. ஆணுறை பாவிக்க விருப்பமில்லா ஆண்கள் எப்படி பெண்ணுறையைப் பாவிக்க அனுமதிப்பார்கள்?

- kirubans - 06-06-2005

புலத்தில் வாழும் பெரும்பாலான தமிழர் பலர் சமூக, பொருளாராத, கல்வித் துறைகளில் முன்னேறியுள்ளனர். எனெனும் ஒரு சிறுபான்மையினர், தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்குப் பின் ஒரு கொட்டில் கட்டி ஆடு, மாடு வளர்க்கவேண்டும் என்றும் ஆசைப்படுகின்றனர். தொடர்மாடிகளில் இருக்கும் இத்தகையவர்களும் தனிவீடு வேண்டும் என்று ஆசைப்படுவதும் இதற்காகத்தான்.

இயங்கியல் தத்துவப்படி சமூகம், பண்பாடு, கலாச்சாரம் என்பன மாறிக்கொண்டு வருகின்றன. தாயகத்திற்குப் போகும் எவரும் இத்தகைய மாற்றங்களை அங்கும் அவதானிக்கலாம். 20 வருடங்களுக்கு முன்பு இருந்தமாதிரி தற்போது எதுவுமேயில்லை.
ஆனால் புலத்தில் 20 அல்லது 10 வருடங்களுக்கு முன்பு வந்தவர்கள், தாங்கள் வந்த காலத்தில் இருந்த சமூகம் இப்போதும் அங்கு உள்ளதாக குருட்டு நம்பிக்கை கொண்டு அத்தகைய சமூகத்தை இங்கு கட்டி எழுப்ப முற்படுகின்றனர்.

இத்தகையவர்களால் புலத்தில் வளரப்போகும் எமது வருங்காலச் சந்ததிகளுக்குப் பிரயோசனமாக எதுவுமே செய்யமுடியாது. இங்கு வளரும் குழந்தைகளுக்கு இவர்களைப் போன்றோர் காட்டுமிராண்டிகளாகத் தெரிவர் என்பதில் சந்தேகம் இல்லை. இவர்கள் ஊருக்குப்போனால் அங்கும் பெரிய ஏமாற்றமே கிடைக்கும். ஏனெனில் தாயகச் சமூகமும் மாறிவிட்டது.

ஆகவே இப்படியானவர்களால் இங்கும் நிம்மதியாக இருக்கமுடியாது. தாயகத்திலும் நிம்மதியாக இருக்கமுடியாது. தங்கள் வாழ்வில் நிம்மதியை இழந்த இவர்கள் எல்லோரையும் துற்றிக்கொண்டே தமது வாழ்வைக் கழிப்பர். காமாலைக் கண்கொண்டுதான் சகலவற்றையும் பார்ப்பர். இப்படியானவர்களையும் நாம் எமது சமூகத்தின் அங்கம் என்று ஏற்றுக் கொண்டு அவர்களின் உளவளத்தை விருத்தி செய்ய உசாத்துணையாக இருக்கவேண்டும்.

- kuruvikal - 06-06-2005

kirubans Wrote:
kuruvikal Wrote:ஆண்களுக்கு மட்டுமா உறைகள் இருக்கு...பெண்களுக்கு இல்லையோ...எது மடமை எண்டதை ஆராய முதல் எதில யதார்த்தம் இருக்கு என்று ஆரோயுங்கோ...! இப்ப யாழ்ப்பாணத்தில விபச்சாரம் பல்கலைக்கழகம் வரை வந்ததுக்கு சாட்சிகள் தந்திருக்கு உதயன் பத்திரிகை...புலிகள் காலத்தில் அங்க விபச்சாரம் எண்டது அறியமுடியாத அம்சமாக இருந்தது...!

அதுபோக எயிட்ஸ் பரவலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று பெண்களும் விபச்சாரமும் என்பது உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பு....! இதை இல்லை என்று சொல்லும் முதல் மனிதர் உலகில் நீங்க ஒருவர்தான்...! இப்படியான உங்கள் மேதாவித்தனத்தை நம்பித்தான் தறிகெட்டுச் சீரழிய விளையும் பெண்களுக்கு ஆதரவளிக்க வந்தீர்கள் போலும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

குருவி மீண்டும் நான் சொல்லாததை நான் சொன்னதாக எழுதியுள்ளீர். இந்த இழிந்த குணத்தை முதலில் கைவிடும். விபச்சாரம் எயிட்ஸ் பரவலுக்குக் காரணம் இல்லை என்று எங்கு எழுதியுள்ளேன்? தமிழ்கூட படிக்கத் தெரியாத அறிவிலியாக இருக்கவேண்டாம்.

http://www.unaids.org/NetTools/Misc/DocInf.../Q-A_III_en.pdf

இந்த ஐ.நா அறிக்கையில் 17 ஆம் பக்கத்தைப் படிக்கவும். ஆண்கள் ஆணுறை பாவிக்கவேண்டும் என்று பெண்களால் வற்புறுதமுடியாமைக்குக் காரணம் சொல்லப்பட்டிருக்கு. அத்துடன் பெண்ணுறைகளை பாவிக்கத் தூண்டும் முயற்சிகளைப் பற்றியும் சொல்லியிருக்கு. ஆணுறை பாவிக்க விருப்பமில்லா ஆண்கள் எப்படி பெண்ணுறையைப் பாவிக்க அனுமதிப்பார்கள்?

முதலில் என்ன எழுதப்பட்டிருக்கு என்று வாசிச்சிட்டு இழி குணம் உயர் குணம் பற்றிக் கதைக்கிறது நல்லம்..! சொல்லப்பட்டது பெண்களும் விபச்சாரமும் எயிட்ஸ் பரவும் காரணிகளில் ஒன்று என்று...! அதை மேதகு கிருபன்ஸ் சொல்லவில்லை இல்ல சொன்னார் என்று சாதிக்க எங்களுக்கு வேற வேலையில்லையா... நீங்க சொன்னா என்னா விட்டா என்ன உலகத்துக்குத் தெரிஞ்சதைச் சொல்லுறம் நாங்கள்...! மீண்டும் சொல்கிறோம் பெண்களும் விபச்சாரமும் என்ற பதம் எங்கும் மேதகு கிருபன்ஸால் பாவிக்கப்படவில்லை...!

ஆணுறையும் தேவையில்லை பெண்ணுறையும் தேவையில்லை...விபச்சாரிகளையும் விபச்சாரத்தையும் ஒழிச்சுக்கட்டினா...அதற்கு கடும் சட்ட அமுலாக்கங்களே அவசியம்...! இதை அமுலாக்கிய பெருமை தமிழீழத்தைச் சாரும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- stalin - 06-06-2005

aswini2005 Wrote:
stalin Wrote:SEX என்பது அற்புதமான கலை .யோகம் மூலம் அடைகிற பரவசமான நிலையை SEX மூலமும் அடையமுடியும்.ஆனால் எங்கட சமுதாயத்தி்ல் இனவிருத்தி மட்டுமே அதிகம் பேர் பாவிக்கப்படவேணுமென்று நினைக்கின்றனர். பிராய்ட் என்ற உளவியல் நிபுணரின் கூற்றுப்படி எல்லா உளபிறள்வுக்கு SEXUAL ரீதியான பிரச்சனையே என்று கூறுகிறார் பாலியல் ரீதியான ஒருவெறுமை நிலையினால் எங்கள் தேசத்தில் இருந்த பிரச்சனைகளை அறியவிரும்பின் எஸ் வி பொன்னுத்துரை டானியல் போன்றவர்கள் எழுதிய தீ சடஙகு போன்ற வற்றை பார்த்தால்தெரியும்---ஸ்ராலின்
உதை யாருக்குச் சொல்றீங்கள் ஸ்ராலின் ? உங்களுக்கும் விபச்சாரி பட்டம் தரப்போகினம் நிதர்சன் அன்ட் குருவிகள் குழாம். ஏனென்டால் பெண்ணின் பிரச்சனை பற்றி சொல்வோர்கள் சமூக நடைமுறைச் சிக்கலைச் சொல்வோர்கள் எல்லோருமே விபச்சாரிகளும் பலருடன் புணரத்துடிக்கும் நாய்களென இங்கு குருவி நிதர்சன் கூட்டணியின் ஏகமனதான தீர்வை.

இவர்களுக்கெல்லாம் வீட்டுக்கு ஏவல்செய்யவும் காவல் செய்யவும் தேவையின் போது தூண்டல்களின் வடிகாலாகவும் பெண் தேவை மற்றப்படி பெண்ணிடமுள்ளதெல்லாம் ää பெண்ணின் சொற்களெல்லாம் விபச்சாரம்தான்.
ஆ ஊ என்று கதறும் இந்தக் கூட்டணி மன்னர்கள் இருவரும் கேட்கப்பட்ட எந்தவொரு கேள்விக்கும் பதில் தராமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். குறைத்தனமான விளங்கலுடனும் ää புரிதலுடனும் சமூகத்தின் ஏகபிரதிநிதிகளாக இருவரும் ஓடிவந்து எல்லோருக்கும் வபச்சாரி பட்டம் தருகிறார்கள். இதுதான் இவர்களது சமூக கரிசனம் கவனம்.

(கணணிக்கு காச்சல் அதனால் கருத்து எழுத முடியவில்லை.
மீண்டும் வருவேன் நன்றி - அஸ்வினி சாத்தவீகன்)
சீர்திருத்தத்துக்கும் புரட்சிரமாக மாற்றத்தை உண்டு பண்ணவிரும்பவர்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடு இருக்கிறது. குருவிகள் இந்த மனித உரிமை மற்றும் சட்ட அமைப்புகளும் சமுதாயத்திலுள்ள புரையோடிய பிரச்சனைகளும் தீர்த்துவிடுமெனறு நம்புகிறார். பாலியலை அருவருக்கத்தன்மையாக கதைத்துக்கொண்டு மாமிசம் உண்ணும் பிராமணர் போலுள்ளவர்களை தெரியும் ஆகவே உந்த விபச்சாரி பட்டத்தை பற்றி பயப்படவில்லை MULTIPLE ORGASAM பத்தி WESTERn பெண்கள் தேடும் இன்றைய காலகட்டத்தில் EASTERN பெண்கள் ஒரு ORGASAM பெறுவதற்கு கூட ஆண்களுடன் மனம் திறந்து செயல்படமுடியாமல்இருக்கிறார்கள் என்பது துர்பார்க்கிய நிலமை----------------------------------------------------ஸ்ராலின்

- Jude - 06-06-2005

kirubans Wrote:புலத்தில் வாழும் பெரும்பாலான தமிழர் பலர் சமூக, பொருளாராத, கல்வித் துறைகளில் முன்னேறியுள்ளனர். எனெனும் ஒரு சிறுபான்மையினர், தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்குப் பின் ஒரு கொட்டில் கட்டி ஆடு, மாடு வளர்க்கவேண்டும் என்றும் ஆசைப்படுகின்றனர். தொடர்மாடிகளில் இருக்கும் இத்தகையவர்களும் தனிவீடு வேண்டும் என்று ஆசைப்படுவதும் இதற்காகத்தான்.

.

90களில் நான் யாழ்ப்பாணத்தை விட்டு முதல் முதலாக கண்டியில் வேலைக்கு போன போது, நான் போன இடத்தில் சந்தித்த தமிழர்கள் 10 முதல் 20 வருடங்களாக வடக்கு கிழக்கு போகாதவர்கள். சிலர் வடக்கு கிழக்கிலேயே கால் வைக்காதவர்கள். அவர்களது பேச்சு தமிழ் முதல் கொள்கைகள் பழக்கவழக்கங்கள் எனக்கு 70களை நினைவூட்டுமளவுக்கு பழமையாக இருந்தன. மிகவும் பிற்போக்கானவர்களாக காணப்பட்டார்கள். இது தான் தமது கலாச்சாரம் என உறுதியாக நம்பினார்கள்.

சில வருடங்களுக்கு முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குறுகிய காலத்துக்கு படிப்பிக்க என ஒரு பேராசிரியர் வந்திருந்தார். அவரது மாணவர்கள் சிலர் இந்திய பெற்றோருக்கு பிறந்தவர்கள். அவர்களது கொள்கைள், பழக்கவழக்கங்கள், கருத்க்கள் என்பன அவருக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தன. காரணம், அவை ஒரு தலைமுறைக்கு பின்தங்கியனவாக இருந்தன. உதாரணமாக அவர்கள் அனைவருமே பெற்றோர் தேர்ந்தெடுப்பவர்களையே திருமணம் செய்யப்போவதாக தெரிவித்திருந்தனர். சிறந்த சைவர்களாக சுலோகங்கள் போன்றவற்றை நன்கு மனனம் செய்திருந்தனர். இந்தியாவில் படித்த இளைஞர்கள் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் செய்வதை பிற்போக்காக கருதும் காலம் இது. அவர்கள் சமய சங்கதிகளில் பெருமளவு ஆர்வம் காட்டுவதில்லை. இவ்வாறாக வரலாற்றில் உறைந்து போன புலம் பெயர்ந்தவர்களை பற்றி பேராசிரியர் தனது அனுபவத்தை எழுதியிருந்தார். குருவிகள் தமிழ் மக்கள் மத்தியில் இப்படி வரலாற்றில் உறைந்து போனவர்கள் பற்றி ஒரு ஆய்வு செய்தால் பயனுள்ளதாக இருக்குமே?

- Jude - 06-06-2005

stalin Wrote:MULTIPLE ORGASAM பத்தி WESTERn பெண்கள் தேடும் இன்றைய காலகட்டத்தில் EASTERN பெண்கள் ஒரு ORGASAM பெறுவதற்கு கூட ஆண்களுடன் மனம் திறந்து செயல்படமுடியாமல்இருக்கிறார்கள் என்பது துர்பார்க்கிய நிலமை----------------------------------------------------ஸ்ராலின்

உண்மையில், இந்த பாலியல் உன்னத அனுபவத்தை ஒரு பெண் அனுபவிப்பதற்கு, கணவனுக்கும் மனைவிக்கும், எவ்வளவு உடற்கூற்றியல், உடற்செயற்பாட்டியல் அறிவு தேவை என்று குருவிகள் அறிந்தால் (நிச்சயமாக குருவிகளுக்கு இந்த அறிவு இல்லை என்பதற்கு அவரது கனவில் சுயஇன்பம் பற்றிய கருத்தே ஆதாரம்) ஆச்சயரியப்பட்டு போவார்.

- kuruvikal - 06-06-2005

stalin Wrote:
aswini2005 Wrote:
stalin Wrote:SEX என்பது அற்புதமான கலை .யோகம் மூலம் அடைகிற பரவசமான நிலையை SEX மூலமும் அடையமுடியும்.ஆனால் எங்கட சமுதாயத்தி்ல் இனவிருத்தி மட்டுமே அதிகம் பேர் பாவிக்கப்படவேணுமென்று நினைக்கின்றனர். பிராய்ட் என்ற உளவியல் நிபுணரின் கூற்றுப்படி எல்லா உளபிறள்வுக்கு SEXUAL ரீதியான பிரச்சனையே என்று கூறுகிறார் பாலியல் ரீதியான ஒருவெறுமை நிலையினால் எங்கள் தேசத்தில் இருந்த பிரச்சனைகளை அறியவிரும்பின் எஸ் வி பொன்னுத்துரை டானியல் போன்றவர்கள் எழுதிய தீ சடஙகு போன்ற வற்றை பார்த்தால்தெரியும்---ஸ்ராலின்
உதை யாருக்குச் சொல்றீங்கள் ஸ்ராலின் ? உங்களுக்கும் விபச்சாரி பட்டம் தரப்போகினம் நிதர்சன் அன்ட் குருவிகள் குழாம். ஏனென்டால் பெண்ணின் பிரச்சனை பற்றி சொல்வோர்கள் சமூக நடைமுறைச் சிக்கலைச் சொல்வோர்கள் எல்லோருமே விபச்சாரிகளும் பலருடன் புணரத்துடிக்கும் நாய்களென இங்கு குருவி நிதர்சன் கூட்டணியின் ஏகமனதான தீர்வை.

இவர்களுக்கெல்லாம் வீட்டுக்கு ஏவல்செய்யவும் காவல் செய்யவும் தேவையின் போது தூண்டல்களின் வடிகாலாகவும் பெண் தேவை மற்றப்படி பெண்ணிடமுள்ளதெல்லாம் ää பெண்ணின் சொற்களெல்லாம் விபச்சாரம்தான்.
ஆ ஊ என்று கதறும் இந்தக் கூட்டணி மன்னர்கள் இருவரும் கேட்கப்பட்ட எந்தவொரு கேள்விக்கும் பதில் தராமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். குறைத்தனமான விளங்கலுடனும் ää புரிதலுடனும் சமூகத்தின் ஏகபிரதிநிதிகளாக இருவரும் ஓடிவந்து எல்லோருக்கும் வபச்சாரி பட்டம் தருகிறார்கள். இதுதான் இவர்களது சமூக கரிசனம் கவனம்.

(கணணிக்கு காச்சல் அதனால் கருத்து எழுத முடியவில்லை.
மீண்டும் வருவேன் நன்றி - அஸ்வினி சாத்தவீகன்)
சீர்திருத்தத்துக்கும் புரட்சிரமாக மாற்றத்தை உண்டு பண்ண விரும்பவர்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடு இருக்கிறது. குருவிகள் இந்த மனித உரிமை மற்றும் சட்ட அமைப்புகளும் சமுதாயத்திலுள்ள புரையோடிய பிரச்சனைகளும் தீர்த்துவிடுமெனறு நம்புகிறார். பாலியலை அருவருக்கத்தன்மையாக கதைத்துக்கொண்டு மாமிசம் உண்ணும் பிராமணர் போலுள்ளவர்களை தெரியும் ஆகவே உந்த விபச்சாரி பட்டத்தை பற்றி பயப்படவில்லை MULTIPLE ORGASAM பத்தி WESTERn பெண்கள் தேடும் இன்றைய காலகட்டத்தில் EASTERN பெண்கள் ஒரு ORGASAM பெறுவதற்கு கூட ஆண்களுடன் மனம் திறந்து செயல்படமுடியாமல்இருக்கிறார்கள் என்பது துர்பார்க்கிய நிலமை----------------------------------------------------ஸ்ராலின்

உங்களுக்கு கொஞ்சம் என்றாலும் குருவிகளின் கருத்துக்கள் பகரும் வழிமுறையை விளங்க வேண்டும் என்ற ஆர்வமிருக்கிறது...அதற்கு முதலில் பாராட்டுக்கள்...!

தேவையற்ற...பிரயோசனமற்ற வெற்றி விடுதலை முழக்கங்களும் பெண்ணியக் கட்டுரைகளும் எதையும் சாதிக்கப் போவதில்லை...சாதிப்பது எல்லாம் உலகில் சட்ட வடிவுருப் பெற்ற அம்சங்களும்... உரிமைகளுமே...! அதை தாண்டுவோர் சட்ட விரோதிகள்...!

உங்கள் பெண்களுக்கு சிங்கிள் பாலியல் உச்சநிலை வேண்டுமா இல்லை மல்ரிபிள் பாலியல் உச்ச நிலை வேண்டுமா என்பதை வெறும் கட்டுரைகள் இல்ல பெண்ணிய விடுதலைக் கோசம் தீர்மானிக்க முடியாது...! இதுதான் பெண்ணியம் என்றால் அதைத் தெளிவாகச் சொல்லுறது... பெண்களின் பாலியல் வக்கிரத்தைத் தீர்க்க வழி தேடுதல் பெண்ணியம் என்று....! அதற்குள் ஆயிரம் மழுப்பல்கள் அவசியமில்லை...! பெண்ணியம் பேசும் பலரும் பலதார மணம் முடிப்பவர்களாக இருக்கிறார்கள்...அதற்கு விடுதலை சுதந்திரம் என்ற நாமமும் இட்டுக் கொள்கிறார்கள்..! உண்மையில் அது பாலியல் வக்கிர உணர்வைத் தீர்க்கத் தேடும் வழியாகவே பயன்படுத்தப்படுகிறது போல் தெரிகிறது,,,சமூக அடக்கு முறை என்ற பெயரில்...!

ஓகசம் என்பது உடல் உளம் சார்ந்து நிகழும் விடயங்கள்... சில பெண்களுக்கு மல்ரிபிள் ஓகசம் வர வாய்ப்பிருக்காது..இல்ல உளத்தளவில் விருப்பம் இருக்காது...அப்படியான பெண்ணிடம் மல்ரிபிள் ஓகசத்தை எப்படி எதிர்பார்ப்பது...! ஒரு ஆண் மல்ரிபிள் ஓகசத்தை பெண்ணிடத்தில் தூண்ட குறித்த பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையேயான உளப் புரிந்துணர்வு அவசியம்...அதைக் கணவன் மனைவி பேசித் தீர்க்கட்டும்...அதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் அவர்கள்...! மல்ரிபிள் ஓகசம் வேண்டும் என்பதற்காக கணவனை விட்டுக் கள்ளக் கலவிக்கா போகச் சொல்லுகிறீர்கள்...அல்லது டேற்றிங்கா போகச் சொல்லுகிறீர்களா...இல்ல லிவ்விங் ருகெதர் என்று ரெஸ்ட் பண்ணிப் பிடிக்கச் சொல்லுகிறீர்களா...???! அதுதான் பெண்கள் கேட்கும் சுதந்திரம் விடுதலையின் நோக்கமா...???!

இங்கு பலரினதும் கருத்து பாலியல் என்பதே வாழ்க்கை என்பது போல...அது தவறு...! அது குறித்த ஒரு காலத்துக்கான விடயம்...அதையும் கூட மனதால் நெறிப்படுத்தி...பலமான குடும்ப அமைப்பை உருவாக்கி வளமான சமூகத்தைத் தரலாம்...!

மேலே ஒருத்தர் சொன்னார் மேற்குலக சமீக இயக்கவியல் மாற்றத்துக்கு ஏற்ப தமிழர்கள் சமூக பொருளாதார கல்வி வளர்ச்சி பெற்றிருக்கிரார்களாம்... மேற்குலக சமூகவியலாளர்களின் கவலையே குடும்பம் என்ற பலமான அமைப்பு மேற்கில் நிலைக்க முடியாமை....என்பதாக இருக்கிறது...! மேற்குறிப்பிட்ட தமிழ் கல்விமான் மேற்குலகில் இதைத்தானா சமூகவியல் இயக்கத்தினூடு கற்றுக் கொண்டார்... பலமான ஒன்றைப் பலவீனமாக்குவது பற்றி...! இதுதான் பெண்ணியம் என்று விதைப்படுகிறது...! பலமான சமூக விழுமியங்கள் பலவீனமாக்கப்படுகின்றன...! இதன் தாக்கங்களை உணரும் போது நிச்சயம் உங்கள் சந்ததி தமிழர்களாக இருக்க முடியாது...! அதை சம்பந்தப்பட்டவர்கள் இப்பவே தெரிந்து கொள்ளட்டும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea