![]() |
|
தெரியாத பாதை தெளிவானபோது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53) +--- Thread: தெரியாத பாதை தெளிவானபோது (/showthread.php?tid=2150) |
- tamilini - 02-25-2006 வாழ்த்துக்கள் சாத்திரியாரே.. கடைசியில் மனங்களை கனக்க வைத்து முடித்திருக்கிறீர்கள். புதிய தொடரை எதிர்பார்த்தபடி. : - SUNDHAL - 02-25-2006 வாழ்த்துக்கள் அண்ணா....கதை அருமை.....அடுத்த கதைக்காக காத்த இருக்கின்றோhம்... - Thala - 02-26-2006 உருக்கமான முடிவு சாத்திரியார்... மிகவும் அருமையாக நகர்த்தி முடித்தீர்கள். சாதாரண கதைகளை விட பல வருடங்களுக்கு படம் எடுக்க கதைகள் எங்கட தேசத்தில் இருந்து எடுக்கலாம் எண்று ஒருவர் சொன்னார்.... அது உண்மைதான்..... இன்னும் தொடர்வீர்கள் எண்று நம்புகிறேன்....! - Aravinthan - 03-30-2006 இன்று தான் கதையினை முழுவதும் வாசித்து முடித்துவிட்டேன். அருமையான கதை. இக்கதையினை வாசிக்காத யாழ் கள உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டும். நீங்கள் முன்பு எழுதிய, நான் வாசிக்காத கதைகளையும் நேரம் கிடைக்கும் போது வாசிக்கப்போகிறேன். சாந்திக்கு வீர வணக்கம். - கந்தப்பு - 03-30-2006 சாத்திரிக்கு சிட்னியிலை ரசிகர் மன்றம் வைக்கலாம்போல கிடக்குது. சாத்திரி நீர் பல ரசிகர்களினை உருவாக்கிவிட்டீர். - sathiri - 03-30-2006 கந்தப்புதொடங்கி;டீரே ரசிகர்மன்றம் கொடி குடை கட்டவுட் எண்டு கடல் கடந்து போனாலும் உந்த சில பழக்ககங்கள் எங்கடையாக்களின்ரை பிறவி குணம் மாறுறது கொஞ்சம் கஸ்ரம்தான். நீர்தான் எனது ரசிகர்மன்ற தலைவர் சரி சரி நெத்தியிலை என்ரை பெயரை பச்சைகுத்தும் பிறகு எங்கள் தலைவர் சாத்திரி என்று சிட்னி விமான நிலையத்திற்கு முன்னாலை நிண்டு கத்தும் அம்புலன்ஸ் வாறசத்தம் கேக்கும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கந்தப்பு - 03-30-2006 நான் உட்பட தூயா,அரவிந்தன்,சுண்டல் எல்லோரும் உமது கதையினை விரும்பி ரசித்ததினால் அப்படி எழுதிவிட்டேன். வாழ்த்துக்கள் சாத்திரிக்கு - Niththila - 03-30-2006 நல்ல கதை சாத்ஸ் அங்கிள் முடிவு எதிர்பாராததாய் இருக்கிறது அடுத்த தொடர் எப்ப வரும் புலத்தில பலர் இப்படித்தான் இதில பெண்கள்மட்டுமல்ல ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் நான் ஒரு பெண் என்பதால இதை எழுதி ஏன் எல்லாப் பெண்களை பற்றியும் தப்பான அபிப்பிராயம் ஏற்படுத்துவான் என நினைச்சன் ஆனால் ஊரில இருந்து புலத்து பெண்களை திருமணம் செய்யும் ஆண்களும் கவனமாகத் தான் இருக்கவேணும் எனது சீனியர் எடுத்த பழைய வழக்கு ஒன்று (நான் வேலை செய்வது கிரீக் நாட்டவரது நிறுவனம் அதால பழைய வழக்குகள் வாசிக்கும்போது அபுர்வமாக ஒரு தமிழ் பெயர் எண்டவுடன் அதை வாசிக்க வேணும் எண்டு ஆர்வம் வருவது இயல்புதானே ) புலத்து தமிழ் பெண் ஒருவர் பெற்றோர் பேசிய இலங்கை பையனை (இலங்கையில அக்கவுன்டன்ட்) சிங்கப்புரில பதிவு திருமணம்செய்து லண்டன் கூப்பிட்டிருந்தவ இங்கு வந்தாப்பிறகு அவவுக்கு பையன பிடிக்கவில்லை அதுக்கு அவ சொல்லியிருந்த காரணம் (ஸ்டேட்மென்டில சொன்ன காரணம் he was not stylish enough & and he could not speak english properly) ஸ்டேட்மென்டில சொன்னதை அப்படியே போர்மில போட முடியாது என்பதால போர்மில போட்ட காரணம் Unreasonable Behaviour and the marriage broken down irretrievably :roll: :roll: :roll: - sathiri - 03-30-2006 பாராட்டிற்கு நன்றி லோயரம்மா நேரமுள்ளபோது கதை எழுதிறன் நீங்கள் சொன்ன அந்த பெண்ணின் கதை சுரக்கத்தை முடிந்தால் எனக்க தனி மடலிலை போட்டு விடுங்கோ அடுத்ததா அதையே கதையாக்கலாம் - கந்தப்பு - 03-30-2006 Niththila Wrote:நல்ல கதை சாத்ஸ் அங்கிள் முடிவு எதிர்பாராததாய் இருக்கிறது அடுத்த தொடர் எப்ப வரும் எனக்குத்தெரிந்த நண்பர் ஒருவருக்கு கனடாவில் சம்பந்தம் வந்தது. சிட்னியில் வசிக்கும் அந்த நண்பர், கல்யாணம் பேசியவர்களிடம் 'பொம்பிளப்பிள்ளை தமிழ் கதைக்குமோ' என்று நண்பர் கேட்டார். அதற்கு அவையள் சொன்னபதில் 'என்ன தம்பி, நீர் லண்டனிலை கனகாலம் இருந்து மேற்படிப்புகள் படித்தனீர். தமிழைப்பற்றிக் கேக்கிறீர்' என்று பதில் அளித்தினம். அதற்கு நண்பன் சொன்னார் ' தமிழ் தெரியாதபிள்ளையினைக் கட்டுகிறதும் ஒரு வெள்ளைக்காரியினைக் கட்டுவது ஒன்று தான்' என்றார். பின்ன அந்தப்பிள்ளையினைக் கட்டி விட்டு எதுக்கெடுத்தாலும் Excuse Me, Please கேக்கவேண்டும். அப்ப எங்கை பாசம் வரும். உங்களது அன்பினை வெளிப்படுத்த சொந்த மொழியினை விட வேறு மொழியில் எவ்வாறு சிறப்பாக விளங்கப்படுத்தலாம்?. அடிமைக்குணம் இன்னும் உவையளுக்கு விட்டுப்போக வில்லை. எங்கடசனம் உந்த தெழுங்கு கீர்த்தனை, சமயம், பரதனாட்டியம் போன்றவற்றுக்கு செலவளிக்கும் பணத்தில் 10ல் ஒருபகுதியினைக்கூட தமிழுக்கும் தமிழ் ஈழத்துக்கும் செலவிடுவதில்லை. - putthan - 04-07-2006 கந்தப்பு இது தங்களுக்கு நடந்த கதையோ அல்லது உங்கள் பேரனுக்கு நடந்த கதயோ???? - narathar - 04-07-2006 உதில கந்தப்பு எனக்குத் தெரிந்த சில டாகுத்தர் மார், சாய் பஜன் எண்டு பிள்ளயளையும் கூட்டிக் கொண்டு திரின்சிச்னம்.அதுகள் கிந்தியில பாட்டு ஆங்கிலத்தில எழுதிக் கொண்டு பாடிச்சுதுகள்.பிறகு வட இந்திய, பிஜி என்று வெவ்வேறு இனத்தவரை மணந்து ,இப்ப தமிழர் எண்ட அடயாளமே இல்லாம வாழுகினம்.மொழி என்பது இன அடயளாத்திற்கு எவ்வளவு அவசியமானது என்பதை இந்தப் படித்தவர்கள் உணரவில்லை.இப்போது பிள்ளை தன்ர பாட்டில போய்டுது என்று கவலைப் படுகிறார்கள். - கறுப்பி - 04-09-2006 சாத்திரியாரே ஐரோப்பாவைத்தான் அலசுறியள் என்டு பார்த்தால் கதைகளிலும் பிச்சு உதறல்தான். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் - வெண்ணிலா - 04-15-2006 "தெரியாத பாதை தெளிவான போது......" இன்றுதான் வசிக்க முடிந்தது. நல்லாக எழுதி இருக்கிறீங்க சாத்ரி அங்கிள். உண்மைச்சம்பவமா? இடையில் வாசித்து கொண்டுவரும்போது இப்படி முடிவு வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை, ம்ம் மேலும் இன்னொரு கதையுடன் சந்திப்பீர்கள் என நினைக்கிறேன். நன்றி - கந்தப்பு - 04-15-2006 சாத்திரி உண்மைச்சம்பவம் என்று தான் எழுதியிருந்தார். வெண்ணிலா நீங்கள் பார்க்கவில்லையா? - வெண்ணிலா - 04-15-2006 <!--QuoteBegin-கந்தப்பு+-->QUOTE(கந்தப்பு)<!--QuoteEBegin-->சாத்திரி உண்மைச்சம்பவம் என்று தான் எழுதியிருந்தார். வெண்ணிலா நீங்கள் பார்க்கவில்லையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> பார்த்தேன். :oops: இப்ப்படி இன்னும் எத்தனை ரவி புலத்தில் இருக்கிறார்களோ? :evil: - vasanthan - 04-15-2006 இப்பத் தான் படித்து முடித்தேன் அருமையாக இருக்கிறது சாத்திரியாரே. இக்கதையினை பத்திரிகையில் பிரசுரிக்கலாமே வெளிநாட்டு மாப்பிள்ளை என்றவுடன் கண்ணை மூடிக்கொண்டு போறவைக்கு ஒரு பாடமாயிருக்கும். - வெண்ணிலா - 04-15-2006 <!--QuoteBegin-vasanthan+-->QUOTE(vasanthan)<!--QuoteEBegin--> வெளிநாட்டு மாப்பிள்ளை என்றவுடன் கண்ணை மூடிக்கொண்டு போறவைக்கு ஒரு பாடமாயிருக்கும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏன் வெளிநாட்டில் இருக்கும் எல்லா மாப்பிளையும் இப்படியா இருக்கிறார்கள். ஏன் கண்ணை மூடிக்கொண்டு போகும் பெண்களென பட்டமும் சூட்டி பாடமும் புகட்டுறியள்? :evil: - vasanthan - 04-15-2006 நான் எல்லாரையும் குற்றம் சாட்ட வில்லையே! நல்லவரோ கெட்டவரோ முற்றுமுழுவதுமாக ஒருவரைப்பற்றி ஆராய்ந்தறிந்த பின்னரே செல்லவேண்டும். அனேகமாக பொண்ணுகள் தானே ஏற்றுமதியாகினம். அதெல்லாம் இருக்கட்டும் நீர் மட்டும் "இப்ப்படி இன்னும் எத்தனை ரவி புலத்தில் இருக்கிறார்களோ?" என்று சொல்லலாம் ஆனால் நான் இப்படிச் சொல்லக்கூடாதாக்கும்? :twisted: :evil: :!: :?:
- tamilini - 04-15-2006 அமைதி அமைதி சகோதரங்களே.. அடுத்த கதையை போடுங்க.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|