![]() |
|
போராளிகள் படைப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: போராளிகள் படைப்பு (/showthread.php?tid=8355) |
- sethu - 06-21-2003 அறியப்படாதவர் மீது ஒரு அஞ்சலிப் பாடல் -வி யாசன் என்றும் போலத்தான் அன்றும் விடிந்தது எந்த மாற்றமுமில்லாது வழியில் அகப்பட்டதனைத்தையும் தழுவியபடி நேற்றைய இரவைக்கீறி காற்று உயிர்ப்புற்றுலவியது. நம்பிக்கையே நாளாந்தமாகிய வாசல்களில் மெல்ல மெல்ல வெய்யில் பரவியது. அவிச்சலில்லாத அந்த ஆனந்தப்பொழுதில் வன்னியின் துயரத்துள்ளும் ஒரு சுகம்தெரிந்தது. பாதங்களில் வேகம்புூட்டாத பரவசத்துடன் விடுதலை மனிதர்கள் வெளியே வந்தனர். எந்தவானொலி என்ன சொல்லிற்றோ தெரியாது. முகிலுரசிய தலைகளில் முகங்கள் புூவனமாயின. மகிழ்ச்சியில் மாரடைப்பே வந்துவிடும் போல ஆனந்தத்தவிப்பில் பலர் அழுதேவிட்டனர். வாய்வந்த வார்த்தைகளும் கூட தொண்டையில் சிக்குண்டு திணறின எடுத்தது எடுத்தபடியும் போட்டது போட்டபடியும் புழுகமேறிய தமிழர் சைக்கிளேறி உலாப்போயினர். நெஞ்சுக்குள் சந்தோசம் நிறையும்போது புூரிப்பின் வேர்களில் யாருக்கும் புூப்புூக்கும். புூத்துச் சிலிர்த்துப்போனது எம்புூமி. காற்றின் திசைகளெல்லாம் கட்டுநாயக்காவே விரிந்தது. பன்னிரண்டு குண்டுக்குருவிகளின் குடலுருவிப்போனதாம். எவரோ எய்த அம்பு வீணான பொல்லாப்பேதும் வியாசனுக்கு வேண்டாமே எய்தவரை ஓ எனக்கொள்வோம் அது யாராகவும் இருந்துவிட்டுப்போகட்டும், அம்பெய்த அபிமன்யுூக்களைப் பற்றியே எல்லாவாய்களும் பேசின. அருச்சுனனின் புதல்வர்களே! உங்களுக்கெம் நன்றியென உரைத்தது காற்று. தன் சாபக் கவிதைகள் பலித்ததெனச் சந்தோஸித்தான் வியாசன். வானத்தாயும் வஞ்சிக்கவில்லை அன்று பாளம்பிளந்த எம்மண்மீது சில தூறல்கள் விழுந்தன. ஓம்: ஓமெனத் தேவருரைத்த வாழ்த்தொலி எல்லாச் செவிகளிலும் கேட்டது. வெற்றிப்பெருமிதத்தின் வீறாய்ப்பிலிருந்தாள் கொற்றப்பெருமாட்டி, உயிரற்ற யந்திரங்கள் மீது இத்தனை கோபமா? என்று 'அரசியற் சாதுரியர்' யாரும் ஆச்சரியப்படலாம், எள்ளி நகையாடியும் சிலர் எழுதலாம். கட்டுநாயக்காவில் கருகிப்போனவை வெட்டுக்கத்தியும் சின்னப் புட்டுப்பானையுமல்ல, எரிந்தது பகைவரின் பலம், அழிந்தது அவர்களின் ஆணவம், எங்கள் உயிருறிஞ்சிக் குடித்தவை இந்த ஊத்தைப் பேய்கள் தான். நவாலியிலும்; நாகர்கோவிலிலும் நரபலியெடுத்த ரத்தப்பிசாசுகளிவை. கிளாலியிலும்; சுதந்திரபுரத்திலும் எம் உறவுகளைத் தீயிட்ட எரிமாடன்கள் இவைதான், மந்துவிலிலும், மாத்தளனிலும் சின்னப்பிஞ்சுகளின் உயிர்தின்ற வன்மவல்லூறுகளிவை. இந்த மகிழ்ச்சி இருக்காதா எங்களுக்கு? குண்டுகொட்டிய போது கீழே நின்றவருக்கு கொடுத்த தண்டனையறிந்து கொள்ளை மகிழ்ச்சி குருதியும் சதையுமாகக் கூட்டியள்ளியவருக்குத்தான் இந்த அழிப்பின் பெறுமதி புரியும், பிஞ்சைப் பறிகொடுத்த பெருதுயரில் நெஞ்சிலும் தலையிலுமடித்து ஓலமிட்டாளே ஒருதாய் அவளைக்கேளுங்கள் கட்டுநாயக்காவுக்கு அவளின் கருவறை பதில்சொல்லும். குண்டுபிளந்த தாயின் மார்பருகே கிடந்து பச்சைப்புல்லொன்று பாலுக்கழுததே அந்தச் சந்திரவதனத்துத் தளிரைக் கேளுங்கள் முற்றாக எரியவில்லையா கட்டுநாயக்கா? என்று மூச்செரியும். ஊரிழந்த துயரில் உருகியபடி கிளாலிக்கரையில் வந்து கிடந்தோமே. விட்டானா பாவி விரட்டி விரட்டி உயிர்ப்புூக்களைக் கிள்ளியெறிந்துவிட்டு கட்டுநாயக்காவிற்தானே களைப்பாறினான் நெருப்பிட்டது யாரெனத் தெரியாதெனினும் தகும் செயலாற்றியவர்களுக்கு எம் தலைசாய்த்தோம். 'செட்டிக்குத்தானே தெரியும் வட்டியும் முதலும்' இந்திரபுரியை விற்றுத்தான் இவை இறக்குமதியாயின. இந்த வல்லூறுகள் வெறும் யந்திரங்களல்ல. எதிரி தவம்செய்து பெற்ற வரங்களிவை. எங்களைக் கொல்லவென வாங்கிய நாகாஸ்த்திரங்கள். உட்புக முடியாதெனும் நம்பிக்கையில் வித்தகர் வகுத்த பத்மவியுூகம் பிளந்து உள்ளே புகுந்தவர் யாரெனத் தெரியாதெனினும் அவர்கள் சென்ற திசைநோக்கிச் சிரம் சாய்த்தோம். விமானத்தளத்தின் அருகுள்ள விளையாட்டுத்திடலில் பழிதீர்க்கப் போனவரின் பாதணிகள் கிடந்தனவாம் செருப்புகளை எடுத்துவாருங்கள் சிம்மானசனத்தில் வைப்போம். சென்றவர்கள் உண்டெறிந்த மீதவுணவிருந்ததாம் எடுத்து வாருங்கள் ஒரு பருக்கையுண்டாலே போதும் எமக்கும் பலம் பெருகும். வண்டிலில் வந்தார்கள், வாய்க்காலால் வந்தார்கள் கடலால் வந்தார்கள் காற்றாகிக் குதித்தார்களென்று கூறுகின்றீர்களே வெற்றுப்பீரங்கிகளே உங்களுக்கு வெட்கமே கிடையாதா? கண்ணி வயல் கடந்து காவல் அரண் கடந்து, மின்சாரவேலி மீதேறி வந்தவர்களென்று கூறும்போதில் பெருமையில் நாங்கள் புல்லரித்துப் போகிறோம். சிரசேறும் செருக்கில் திணறுகிறோம். புத்தபெருமானே! சத்தியமாய் எங்களுக்குத் தெரியாது. வந்தவர்கள் தமிழரென்பதால் வாழ்த்துகிறோம். அவர்கள் கொன்றவையெல்லாம் முன்னரெம்மைக் கொன்றவையென்பதால் நாலுவரியெழுதி அவர்களுக்கு நன்றி சொல்கிறோம். கழிவு நீர் வாய்க்காலுக்குள்ளாலே நடந்தார்களாம் வாய்க்காலே! உமக்கெமது நன்றி! தென்னை மரத் தோப்புக்குள்ளே திரிந்தார்களாம் தென்னை மரங்களே! உங்களுக்கெம் நன்றி மின்சாரவெட்டுக்கு உத்தரவிட்ட ரத்வத்தையாரே! நன்றிக்குரியவர் நீருமானீர். கட்டுநாயக்காவின் தலையில் குட்டியவரே நீங்கள் யார்பெற்ற பிள்ளைகளோ நாமறியோம். உங்கள் பெயரும் அறியோம் உங்கள் ஊரும் தெரியோம் ஆயினுமுமக்கு ஆயிரம் தீபங்களேற்றினோம். நாயினும் கீழாய் நலிவுற்ற தமிழினத்தை உலகத்தின் உதடுகளால் உச்சரிக்க வைத்தவரே! எழுதும் எந்தவரியும் உங்களிடம் தோற்கும், நீங்ளெழுதிய வரிகள் மட்டுமே நிலைக்கும். பிரிந்தோம் மீண்டும் சந்திப - sethu - 06-21-2003 முயலுவோம் வாhPர்.... மானம் என்பதோர் சொல்லின் பொருளாய் தானமும் தழைத்திடும் தனிப்பெரும் ஈழமிது கானமிசைத்தே கலகலவென்றிருப்ப, ஈனமிழைத்ததே இழிகுலம் காண்மின்!! ஓங்கு கல்வியுழைப்பை யுடையீர் தேங்கு தன்மானத் திரவியம் பெற்றீர் பாங்கு பகரும் பல்கலை படைத்தீர் வாங்கு வளமெவை யாவுமே வெறுத்தீர் ஊனமின்று பெரிதிழைக்கின்றீர் மானமற்றுப் பொற்றமிழ்தனை மறந்து, ஞானம் நவில் நாட்டினை விட்டகன்றீர் மண்ணின் வாழ்வே வாழ்வென்போமே விண்ணதிர வெற்றிகள் கொள்வமே போனதற்கு வருந்துதல் வேண்டா, கோனவராயினிக் கோல்களோச்சிட விந்தைகள் விளைய, விடுதலை விரைய வேங்கைகளாகி முயலுவோம் வாhPர் போராளி ஒருவரின் கவிதை - sethu - 06-21-2003 கொடியபகை கொன்றொழிக்க எழுந்திடுவோம் வாடா ஊரினிலே பகையிருக்க உறங்குவதோ தமிழா? வீறுமும்புலிப் படையிணையத் தயங்குவதோ தமிழா அகதி என்றால் தமிழன் என்ற விதியழிப்போம் எழடா அண்ணன் படை இணைந்து எங்கள் ஊர்பிடிக்க வாடா கோயில் குளங்கட்டிக் குடியிருந்த ஊரில் கொடியபடை கொலுவிருக்கும் நிலை வரலாமோடா? சூரியக்கதிர் சுட்டெரிக்க நீ தூசா? பஞ்சா? சூரியனைச் சுட்டெரிக்கும் தீப்பிழம்பாய் எழடா வலிகாமம் இருந்துவரும் வாடையிளங் காற்றில் வானரங்கள் மேனியதன் முடைநாற்றம் வீசும் கோப்பாயில் துயிலுமில்லப் புூச்செடிகள் யாவும் கொடியவனின் காலணியால் மிதிபட்டு வாடும் பாயும் புலிக்கொடி பறந்திட்ட கோட்டையிலே பகைவனின் கொடியது பறந்தாடும் இந்த நிலை வந்தபோதும் நீளுமா உன் உறக்கம் நாளை கோவணமும் இழக்கின்ற கேவலத்தை நீக்க கொடியபகை கொன்றொழிக்க எழுந்திடுவோம் வாடா ஏழுகடல் ஆண்டுவந்த சோழமகன் நீயடா சோதனைகள் கண்டுமனம் சோம்பிப்போவ தேனடா? ஆயுதத்தை ஏந்திடடா இந்தநிலை மாறும் எங்கள் அண்ணன் புலிக்கொடி மீண்டும் யாழில் ஆடும். செ. இரும்பொறை - sethu - 06-21-2003 எழுந்து அடங்கி உருக்கொண்டு ஓயாது உழல்கிறது அலை கரை அதன் வரவிற்காய் காத்திருக்கின்றது. அம்பா ஒலிகள் காற்றினுள் புகுந்து ஒலிக்க மரங்கள் நீந்துகின்றன. குத்திப்பறந்து நிலையெடுத்து இரையை அடைய நீர்ப்பறவைகள் அலைகின்றன. சூரியக்கோளம் தொடுவானத்தை மேவி உயர உலா வரப்போவதாய் கதிர்களை அனுப்பி கட்டியம் கூறுகின்றது. வாழ்வியக்கம் ஆரம்பமானதாய் மனங்கள் நம்புகின்றன. சதிராடும் தென்னங்கீற்றுகளில் காகங்கள் சல்லாபிக்கின்றன. அலை மேவிய பொந்தினை நண்டுகள் புதுப்பிக்கின்றன. ஒளி வெள்ளத்தை வாரியிறைத்தபடி மேற்கு திசை முகத்துள் புதைந்து கொள்கிறான் கதிரவன். ஒரு நாட்பொழுது உச்சிப்புள்ளியை தொட்டு வீழ்ச்சியடைகிறது காலம் தன் கரத்துள் நிகழ் உலகை பொத்திக்கொள்கின்றது. அலைகள் திரளும் வானம் ஓவியம் காட்டும் மரங்கள் உயரும் எல்லையற்ற பரவையில் எல்லையிட்டபடி முளைக்கும் கரும்புள்ளிகள் பெரிது, பெரிதாகி உயிர்ப்பொட்டுகள் குதறிக் கொள்ளும் நீர்மையின் வர்ணம் மாறி செம்மையினைப் போர்த்திக்கொள்ளும். குந்தியிருந்து தலையிலடித்து உருகி வழியும் மொழிகள் வளியினை நிறைக்கும் அலை உரசும் ஒலியில் சோகம் உதிர்ந்து கொள்ளும் வழமைகள் மாறின உயர உயருதலும், விடிவெள்ளி காலிப்பின் வழியறிந்து ஒழுகுதலும் தொலைந்து போயின விழியுடன் உதரமும் வேகிக்கொண்டன. உறுமி உறுமியே இயற்கையின் வனப்புகள் இறந்து கொண்டேயிருந்தன பொழுதொன்றில் பிறந்த கரும்புள்ளியில் எழுந்த ஒளிர்வில் கடல் சிலிர்த்துக்கொண்டது. நீர்த்தாயின் மடி நிறைந்து கொண்டது. தாய்மையின் தாலாட்டில் வளர்ந்த ஆன்மாவை தத்தெடுத்துக்கொண்டது கடலின் மடி. காலவகராதியில் பக்கங்கள் அதிகமாயின கிட்ட வந்து வாய் பிளந்து உயிர்க்குருவியை உருவியெடுத்தோடிய காலங்கள் மறைந்து கொண்டன. ஆழியினுள் அவதாரங்கள் அலையினுள் தாவிக்கொண்டன. நீரைப்பிளந்து எதையோ குறிவைத்தன. முடிவுகள் வெளியாயின மரணம் நிரந்தர மரணத்துள் இரும்புருக்குகள் ஒடுங்கிக்கொண்டன. அச்சகத்துள் புதிதாக வரவுகள் பதிவாகின வரலாற்றை புதிதாக்கின. விடியலின் இனிமையை உணர்கின்ற உணர்வினுக்கு வழியொன்று தேடிட தாய் வயிறு திறந்து கொண்டது. மரபுகள் கடந்து முடியாதது என்றதை முடித்துக்கொள்ளும் புூவையர்கள் புூத்தனர். இருளை மறைத்து ஒளியினுள் ஒளியைத்தேடிக்கொள்ள விழிகள் இரண்டு வழியைப்பார்த்தன துலங்கிய வழியில் குவிந்தன அனைத்தும் விடுதலை வேகம் பெற்றதை உணராத புத்திகள் புத்துருப் பெற்றன. வாழ்தலிற்கான யாத்திரைகள் அதிகமாயின. முற்றுப்பெறாத எச்சங்கள் பலவாகின. உருள்கிறது காலம். யாத்திரையில் துவண்ட கால்கள் ஒளிவெள்ளத்தின் ஒளிர்வில் சிலிர்த்துக்கொண்டன. ஓட்டங்கள் தொடங்கின. முடிவற்ற ஓட்டத்தில் முரசங்கள் அறைந்தன. வாழ்தலிற்காய் தாம் வாழ்வதையறிந்த மனங்கள் மலர்ந்து கொண்டன. கரங்கள் வேகம் பெற்று விழிகளிற்கருகே உயர்ந்து கொள்கின்றன. வாழ்வியக்கம் உயிர் பெற்று அசைகிறது. - sethu - 06-21-2003 வருடத்தில் ஒரு நாளாகிய ஊர்வலமொன்று, வாசகங்கள் சில, வீதியில் கட்டிய பதாகைகளும்; சில பாடல்களும், போதுமா உனக்கு? புரட்டி விடுவாயா மலையை? நானே என்னை மறைத்தெழுதும் கவிதையில் உன்னிடமிருந்து தப்ப முடியுமோ? என்னையறியாமலே எனக்குள்ளேயும் எத்தனை மடிப்புக்களும் புூட்டுக்களும், நோயின் கூறுகள் ஆழத்தில் கிடக்கின்றது. பேச்சாயினும், எழுத்தாயினும் பாட்டாயினும், வார்த்தைகளெல்லாம் உண்மையானவை அல்ல. உனக்கானவையும் அல்ல. எப்படித் தொடங்குவாய் உழவாரத் திருப்பணி? பாசி படர்ந்துள்ள பாழ்கிணற்றில், தூர்வாரும் வேலையை எங்கிருந்து ஆரம்பிப்பது? உன் மீது படர்ந்தழுத்தும் சுமையை, சுமை தரும் வலியை, எந்தப் புயலும் வந்து எடுத்தெறியாது. நீயே புயலாகும் வரை, அப்பனுக்கு அடிமையாக ஆத்தாள் எனக்குச் சேவகியாக மனைவி மகளுக்கு ஆண்டையான மருமகன் இழையொன்றாயினும் அறுந்து போனதா இதுவரை? எல்லாமும் அப்படியேதான். நேற்றுப் போல் இன்று நேற்றுப் போல் நாளையுமா? வேண்டாம் எங்கிருந்தாவது தொடங்கு! காஞ்சூரை மரத்திற்கு கோடாலி போடு சாய்ந்து விழணும். எங்கிருந்து தொடங்குவாய் மகளே? நிச்சயமாக, ஆண்கள் மீதான ஆத்திரத்தில் ஆரம்பிக்காதே, தந்தை, அண்ணன், தம்பி, மகன், எப்படியென்று எதிரியாக முடியும்? ஒன்று செய்யலாம் அதுவே சாத்தியமானதும் கூட. ஆண்களை வனையும் சமூக நிலைகள் மீது கல்லெடுத்து வீசு! சுவாசிக்க காற்றை மட்டும் அனுப்பும் சாளரங்களையுடைத்து வெளியே வா! நானும் உன்னைப் போல் தசையும் குருதியும் கொண்ட உணர்வின் தொகுதியெனக் கூறு. முடியுமானால் உணரச்செய். புயலுடன் உன்னைப் பொருத்திக் கொள்! உடனே புள்ளியை இனம் கண்டு வீசத் தொடங்கு வெற்றி உனக்காகும் வரை!! புதவை - sethu - 06-21-2003 ஈ ழத்தமிழினமே! முதலில் அழுவதை நிறுத்து உனக்கானது ஒப்பாரியல்ல பாலைவனத்தில் பாலூறாவிடினும் பாதையிடையில் சோலை வருமென நம்பு. இழவு காத்தலை உன் அகராதியிலிருந்து எடுத்தெறி கண்ணீரை விரல்நுனியிலெடுத்துச் சுண்டிவிடு வாழ்விடிந்து போனதென வாசலிற் கட்டிய சோக தோரணங்களை அறுத்து விழுத்து. முகிலுரச நிமிர்ந்திருந்த தலை கவிழ்ந்து நிலம்பார்த்து உலவுவதை நிறுத்திவிடு என்ன நடந்ததெனத் துன்பப்புூ சூடியுள்ளாய் விண்ணிடிந்தபோதும் தாங்கும் வீரியனே! சின்னப் புண்ணின் வலிக்காகவா சிரிப்பிழந்து போனாய்? ஒரு சிறகுதிர்ந்து போனதுக்காக ராஜபறவைகள் சோககீதம் பாடுமா? கோட்டை மதில்களைக் குண்டூசியா துளையிடும்? எத்தனை துயர்வரினும் எதிர்கொள்ளப்பழகு உள்ளெரியும் கோபத்தீ கிளறி ஒரு பொறியெடுத்து வாசலை ஒளிசெய்வாய் புயலின் வலியனே! உன்னையெவனடா புூட்டியடைக்க முடியும்? பாவியரால் ஜீவிதம் கொஞ்சம் பழுதானதென்னவோ உண்மைதான் அதற்காகக் கேவியழுவதால் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. கோடையில் இலையுதிர்ந்து குற்றுயிராகும் மரங்கள் வைகாசி வந்ததும் புூப்படைந்து புன்னகைக்கவில்லையா? மரங்களிலிருந்து உன்மனதுக்கு வைரம் பாயட்டும். இந்த மண்ணின் முந்தை வழித்தோன்றல்கள் நாம் சிங்களத்தின் வருகைக்கு முன்னரே சிரசில் முடிதரித்த வம்சமெமது தாமிரபரனிக் கரையில் தளைத்திருந்த வேரே! கதம்பநதி தீரத்தில் காற்றளைந்த தேரே! எல்லாமும் இன்றிழந்து போனாயெனினும் மீண்டும் தொடங்கும் மிடுக்குளாய் நீ. புூண்டும்; புல்லுமல்ல நீ பொசுங்கிப் போவதற்கு வெளியே வா சிறுத்தையே! உன் மூச்சின் வீச்சில் முனையிருந்த வாழ்வு முளைக்கட்டும் அகதிக்குடியிருப்பும் நிவாரண வரிசையும் குண்டும் குழியுமான செம்புழுதித்தெருவும் இயல்பிலிருந்து உன்னை இல்லாமற் செய்யுமா? உலையேறா அடுப்புகளின் அவலக்குரலில் நீ வேரிழந்து விழுந்துவிடுவாயா? ஊர்போகும் ஏக்கத்தில் உருகி எலும்புருக்கி நோயென இடிந்து போவாயா? அட் பஞ்சபுூதங்களனைத்திலும் பலவானே! தமிழரெனும் சூரியக்குடும்பத்தின் தோன்றலே! கவலைக்கு முச்சை கட்டிக் காற்றிலேற்றடா நம்பிக்கை நூலில் விண்கூவட்டும் பட்டம். பேச்சுவார்த்தை மேசையிற் கசியும் சலுகை நீரில் நாக்கு நனைக்கலாமென நம்பாதே புூதகிகள் இப்படித்தான் பால் கொடுக்க வருவார்கள் ஒப்பனைக்குக் குடிப்பதுபோல் இருக்கலாமே தவிர அற்புதமான ஆகாரமென அருந்திவிடாதே. விமானமேறி வரும் வெள்ளை மரங்களின் நிழலில் சுகமான தூக்கம் வரமெனும் கனவில் மிதக்காதே. நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுக்கும் போதில் வென்றாலும், தோற்றாலும் உன் விதியழியமாட்டாது போராட்டமே உனக்கு வாழ்வெழுதி வழிகாட்டும் போராட்டமே உனக்கு இழந்தவையை மீட்டு முடிதரிக்கும் ஆனையிறவுக் கதவுகளின் அகலத்திறப்பு எமக்கு வாழ்வுவசமாகுமென்பதற்கான அடையாளம் கனவின் மீதியையாவது கவனமாகப் பொத்திவை அதிலிருந்து தான் உனக்கான அழகு துளிர்க்கப்போகிறது. பிரபாகரன் காலமெமக்குக் கைக்கணக்கில் வீசிய தலைவனல்ல இவனே காலத்தைப் படைப்பானெனச் சொல்லியனுப்பிய பிள்ளை தளராத உறுதிக்குச் சான்றென்றிருக்கட்டுமென இரண்டு நூற்றாண்டுகளுக்குமான நியமனம் இதுவெறும் புகழ்பாடும் விருத்தமல்ல காலக்குரலறிந்த வியாசனின் கணிப்பு. உலகத்தமிழினமே! உனக்கான வாழ்வின் வசந்தம் பிரபாகரனென்ற பெயரில்தான் உலவுகின்றது கண்டுகொண்டாயானால் காரியம் சித்திக்கும் தவறவிடுவாயானால் தத்தளிப்பாய் நீ வீட்டிற் சும்மா நீட்டிப்படுத்திருக்க விடுதலையுந்தன் கட்டிலருகே வந்து கண் திறக்கமாட்டாது போராடிப் பெறுவதற்குத்தான் விடுதலையென்ற பெயர். பாராளுமன்றில் தருவது பாதியுண்ட மீதிச்சோறு அதைவாங்கித் தின்னவா ஆசைப்படுகிறாய்? அட எச்சிலுண்ட வம்சமல்லடா எமது. எத்தனை உதரக்கொடிகளைப் புதைத்துவிட்டெழுந்தோம் வெறும் புல்முளைக்கவா விதைத்தோம்? வாழ்வின் அனைத்தையும் போருக்களித்து வதையுண்ட பின்னும் தாழ்வின் படுக்கையிலா தலைசாய்க்க விரும்புவாய்? திசையாவும் எம்வசமாகும் காலமிது புூமிப்பரப்பெங்குமிருந்து எமக்குப் புதுரத்தம் பாய்கிறது சோர்வுனக்கு ஆகாது இப்போது நிலவு தூறும் ஒளிமழையிறங்கி எம்புூமி சௌந்தர்யா புூசிக்கிடக்கிறது எழில் சிலிர்த்திருக்கிறது எம் வயல்கள் வாய்க்காலில் பொன்னுருகிப் பாய்கிறது இரவுப்பறவைகளின் சிறகசைப்பில் தாளம் பிசகாத சங்கீதம் வருகிறது கள்ளியும், நாகதாளியும், ஆமணக்குமென்றாயினும் இவை எம் காதற்கொடிகள் வீட்டுக்கோடியில் நிற்பது வெறும் வீரைமரமல்ல எம் வீரமரம் எங்கள் பரம்பரையின் மூச்சுப்பட்டுயர்ந்தது இந்த முதிரை மரம் இவற்றை இழந்திருக்க எப்படி ஒப்புவாய்? பகையிடம் கொடுத்தபின் எப்படிப் படுத்திருப்பாய்? போரில் உயிர்கொடுத்துப் போகலாமெனினும் விடுதலையின் வேரையிழத்தல் கூடாது மானமே மானுடத்தின் மகுடம் சிரம்தாழ்த்தா வாழ்வே எமக்கான சிம்மாசனம் பேச்சும் வார்த்தைகளும், ஒருபுறம் புன்னகைக்கட்டும் நீ போருக்கான புரவிகளுக்குக் கடிவாளம்புூட்டு தேரின் சக்கரங்களுக்கு எண்ணைபுூசு வேல் முனைகளைக் கூர்மையாக விளங்கச் செய் முரசு கொட்டுவோரே! வார்பிடித்துச் சுருதிசேருங்கள் பரணியொன்றெழுதப் புலவோரே தயாராகுங்கள். பீரங்கி வாய்கள் புூச்சூடுவதற்கல்லலு} யாரங்கே நிற்பது? இழுத்து வாருங்கள் பீரங்கிகளை மேசையிலிருந்து சமாதானம் வருமெனில் சந்தோஸம் யாரேனும் ஏமாற்ற நினைப்பார்களானால் அது யாராக இருந்தாலும் இங்கே பாடம் படித்துத் திரும்புவர் இந்தச் சத்தியத்தின் குரல் வெறும் சங்கீதமல்ல தமிழீழத்திற்கான தண்டோரா. -வியாசன் - sethu - 06-21-2003 இருள் திரை போh த்திங்கு நில மகள் மாசுப்பாதங்கள் பதிந்து நொந்து போயுள்ளாள். ஒரு கூட்டில் பொரி}}த்து கூடியிருந்த குஞ்சுகள் திக்கொன்றாய். விடியலின் அறிகுறி சேவலின் கூவலில் அல்ல கதிரவனின் இளஞ் சூட்டுக் கதிh களிலுமல்ல hPங்காரமிடும் சிட்டுக் குருவிகளின் சிறகடிப்பிலுமல்ல கனத்த இருளின் கருக்கலில் காலடிகள் சில கரைதேடி காவியங்கள ஆகும் இவை உண்மை விடியலுக்காக. - sethu - 06-21-2003 எம் நாட்டை விட்டு போகாவிட்டால் -------------------------------------------------------------------------------- ஆசை தீர அள்ளி மண் உண்ட அந்த முற்றம் ஓடி ஆடி விளையாடி புழுதி படிந்த எம் தெருக்கள் காலம் காலமாய் எம் பரம்பரையின் உடல்களைத் தாங்கி நிற்கும் மயானம் ஒவ வொரு நாள் மாலையிலும் ஆரவாரமாய் இருக்கும் விளையாட்டு மைதானம் எந்நேரமும் கலகலப்பாய் இருக்கும் எம் கடைத்தெருக்கள் சந்தைக் கட்டடம் எம் மனதை விட்டு நீங்காத பள்ளிக்கூடமும் பாடசாலை வாழ்வும் அரட்டை அடிக்கும் தெரு மதகும் வாசிகசாலையும் ரியுூட்டரியும் வியர்வையையும் ஊற்றி வளர்த்த வயல் வெளியும், தோட்டம் துரவும் அக்காவும், அம்மாவும் அடிக்கடி மெழுகி அழகு பார்க்கும் எங்கள் அழகான வீடு சுதந்திரமாய் நீச்சல் அடிக்கும் கிராமத்துக்குளம் இவ வளவுக்கும் மேலாய் அனாதையாகிவிட்ட வளர்ப்புப் பிராணிகள் இவை எல்லாவற்றையும் எப்படித்தான் எம்மால் பிரிந்திருக்க முடியும் ஓலு}லு} சிங்களமே - எம் நாட்டை விட்டு போகாவிட்டால் உன் உயிர் கூட்டைவிட்டு விரைவில் போகும்! போராளி கு. அறிவு - sethu - 06-21-2003 மண் -------------------------------------------------------------------------------- நான் எப்படிப் பாதுகாப்பைத் தேடுவது எனக்காக என்னில் அனைவரும் சுதந்திரமாக வாழவேண்டுமென்று உங்கள் உடல்களையும் இரத்தங்களையும் எனக்கு உரமாக்கும்போது - நான் எப்படி சுதந்திரத்தை தேடுவது நீங்கள் என்னில்பாதுகாப்பைத்தேடி உட்புகும் வேளையில் உங்களை மறைத்து வைக்கவென துடிக்கும் நான்எவ வாறு பாதுகாப்பைத் தேடுவது ஆனாலும் ஒவ வொரு அடிக்கும் பீரங்கிக்குண்டுகள், கிபீர்க் குண்டுகள் பைற்றர் செல்கள் என்னை நன்கு கொத்திக் கிளறுகின்றது ஆனாலும் எனக்காகப் போராடும் உங்களைவிட்டு நான் எப்படிப் பாதுகாப்பைத் தேடுவது உங்களின் செந்நீரில் வளரும் மரங்கள் புல்புூண்டுகளினால் எனக்கு போதியளவு குளிர்மையாக உள்ளது - என்றாலும் எரிகுண்டுகளால் கொடியவன் எரிக்கின்றான் - ஆனாலும் எவ வளவு கொடுமைகள் தான் நடந்தாலும் எனது பிள்ளைகள் உங்களைவிட்டு நான் எப்படிப் பாதுகாப்புத் தேடுவது ஆனாலும் மனிதாபிமானம் இல்லாத இரத்தங்களும் உடல்களும் என் மேனியில் படுவதால் எனக்கு அருவருப்பாக உள்ளது - இருந்தாலும் உங்களைப் பாதுகாக்க வேண்டிய நான் எவ வாறு பாதுகாப்பைத் தேடுவது. - மாவீரர் லெப்டினன்ட் கேணல் செல்வி (மாலதி படையணி) - sethu - 06-21-2003 எரியுண்டு போனது வல்லூறுகள் வாழ்வு சில நாட்களுக்கு முன்பும் அந்த வல்லூறுகள் எம் வானத்தை முற்றுகையிட்டன. கிறீச்சிட்ட அவற்றின் ஒலி அதிர்வில் பொத்தலாகிப் போயின செவிப்பறைகள் அக்கினித் துண்டங்கள் போன்ற அவற்றின் எச்சங்களால் எம் மேனிகள் பஸ்யமாகிப் போயின அடைகாத்த தாயின் அரவணைப்பில் முட்டைகள் வெடித்து தலைகாட்டிய பிஞ்சுக் குஞ்சுகளையும் அந்த வல்லூறுகளின் கோர அலகுகள் கொத்திப் புசித்திருந்தன. இதற்கு முன்பும் பலதடவைகள் இப்படியேதான் நிகழ்ந்து போயிற்று பின்பெல்லாம் அடிக்கடி நிகழலாயிற்று வல்லூறுகளின் குருதிவடியும் நகங்களின் கீறல்களைத் தாங்கிக்கொண்டு வாழவே முடியாது என்று குஞ்சுகள் கிளர்ந்தன. அக்கினியைச் சுமந்துசென்று வல்லூறுகளின்வாழ்விடங்களைப் பொசுக்கின. உடைந்துபோன எலும்புகளோடும் குருதி சொட்டச் சொட்ட எரியுண்ட இறக்கைகளால் தத்தித் தத்தியேஎஞ்சியவை தலைதெறிக்கப் பறந்துபோயின இம்முறை அவற்றின் ஒலி அதிர்வுகள், செவிப்பறைகளோடு சமரசம் செய்தனபோலும் ஏனோ,எமக்கு முணுமுணுப்பாகத்தான் தோன்றின இப்பொழுது எச்சங்கள் இடுவதற்குக்கூட அவற்றுக்கு திராணி இல்லை. இவ வளவு காலமும் அவற்றினால் கீறல்பட்டு கீறல்பட்டு துவண்டுபோன எம்மினத்தின் இதயங்களில் நிம்மதி நிறைந்து வழிய உதடுகள் புன்னகை உதிர்த்தன. மயிலை தர்மராஜா - sethu - 06-21-2003 புல் வேய்ந்த வீட்டோடு கல் வீடும் எரிந்ததுண்டு கல்லூரி சென்ற பிள்ளை கால்களின்றிப் போனதுண்டு இரட்சகரே என்றவரின் இல்லத்துள் சென்றவர்கள் எல்லோரும் ஒன்றாக இறையடிக்குப் போனதுண்டு காலை எழுந்தவுடன் கடப்படிக்கு வந்தவர்கள் குடலுருவி முற்றத்தில் குவிந்து கிடந்ததுண்டு வானம் இரைந்து வரப் பங்கருக்குள் படுக்கையிலே உலகத்துக் கோவிலெல்லாம் இல்லாத நேர்த்திவைத்தோம் பாழ்பட்டுப் போவார் பற்றி எரிவரென்றும் பறந்து வரும் வேளையிலே புகையாகிப் போவரென்றும் எரிந்து தான் போச்சு தங்கே எல்லாம் பரிநாசம் இருந்தாலும் கண்ணெதிரே எரிந்து விழக்காணவில்லை இனி வந்தால் எம் மண்ணில் வீழ்ந்தெரியச் செய்திடுவோம் குனிந்திடுமோ தலை நிமிர்த்தித் திரிந்திடுமோ பகையரசுலு.. மாவன்னா - sethu - 06-21-2003 புல் வேய்ந்த வீட்டோடு கல் வீடும் எரிந்ததுண்டு கல்லூரி சென்ற பிள்ளை கால்களின்றிப் போனதுண்டு இரட்சகரே என்றவரின் இல்லத்துள் சென்றவர்கள் எல்லோரும் ஒன்றாக இறையடிக்குப் போனதுண்டு காலை எழுந்தவுடன் கடப்படிக்கு வந்தவர்கள் குடலுருவி முற்றத்தில் குவிந்து கிடந்ததுண்டு வானம் இரைந்து வரப் பங்கருக்குள் படுக்கையிலே உலகத்துக் கோவிலெல்லாம் இல்லாத நேர்த்திவைத்தோம் பாழ்பட்டுப் போவார் பற்றி எரிவரென்றும் பறந்து வரும் வேளையிலே புகையாகிப் போவரென்றும் எரிந்து தான் போச்சு தங்கே எல்லாம் பரிநாசம் இருந்தாலும் கண்ணெதிரே எரிந்து விழக்காணவில்லை இனி வந்தால் எம் மண்ணில் வீழ்ந்தெரியச் செய்திடுவோம் குனிந்திடுமோ தலை நிமிர்த்தித் திரிந்திடுமோ பகையரசுலு.. மாவன்னா - sethu - 06-21-2003 தீ'கங்கு'கள் சூழ்ந்த நந்தவனம் கடல் நடுவே புடைத்தெழுந்து பரந்து விரிந்திருக்கிறது சின்னஞ்சிறு நந்தவனம். ஆதியிலே நந்தவனமெங்கும் ஆழ வேரோடி புூத்துக் குலுங்கி மணம் பரப்பின ஆதிச்செடிகள் காலச்சக்கரத்தின் ஆரையொன்றின் உடைப்பில் நந்தவனத்தில் விழுந்து முளைத்தன மலர்க்கொடிகளின் விஸ வித்துக்கள். கொடிகள் செடிகளில் படர்ந்தும் செடிகள் கொடிகளைத் தழுவியும் தளைத்துச் செழித்து புூத்திருந்தது நந்தவனம். மேற்றிசையிலிருந்து வல்லூறுகளும், கழுகுகளும், குள்ள நரிகளும் வந்து நந்தவனத்தில் சில காலம் தங்கிப் போயின. காலச் சுழற்சியில் பல்கிப் பெருகின. நச்சு மலர்க்கொடிகள் நந்த வனமெங்கும் ஆதிச்செடிகளை ஆக்கிரமித்து மேவிப் படர்ந்தன. எரிதழல் உமிழ்ந்து திமிறியெழுந்தன ஆதிச் செடிகள், புதிது புதிதாய் கிளைகளையும், தளிர்களையும் முட்களையும் பரப்பின. விழுதுகளைத் தரையெங்கும் விதைத்தன. அக்கினிக் குஞ்சுகளாய் காய்த்துத் தொங்கின ஆதிச்செடிகள். இப்போது கரையெங்கும் தீ'கங்கு'கள் சூழ்ந்தபடி நந்தவனம். திருநகர் ஜனனி ஜெயக்குமார் - sethu - 06-21-2003 காற்றினிக்கும் காலம் புழுங்கி மிக அவியும் காண்டாவனத்து வெயிற்பொழுதில் ஒரு மரமும் நிழல் விழுத்தியிருக்காத தெருத் தொலைவில் நாக்கு வறண்டும் கண்ணிருண்டு போகவுமாய் நடக்கும் ஒரு பிறவி எப்போதாவது ஒருதடவை வானத்தில் சூரியனை வழிமறிக்கும் முகிலுக்கு மட்டும் நின்று கண்துடைத்து நிமிரும்போது மறுபடியும் வெய்யில் கொழுத்த நடக்கும் ஒரு பிறவி ஒரு சயிக்கிள் தடிதானும் -பயணத்தில் இல்லை எனும் உணர்வோ கால் கருக நடக்கும் பொழுதுக்கோ துக்கித்துப் போகாமல் வருகின்றான் அவன்- விடுதலையை வேண்டி நடக்கும் ஒரு பிறவி தோளில் துப்பாக்கி சகிதம் துணிவோடு பயணிக்கும் ஈழத்துப் போராளிலு}. அவனுக்குத் தெரியும் - நாளை துளிர்க்கின்ற மரத்தின் அடியில் காற்றுவரும் ஒரு பொழுதில் நிழலுக்குள் இருந்துகொண்டு இனிமையாய் ஒரு பாடல் எடுத்து விடுவான் காற்றினிக்க. -முல்லைக்கமல்- - sethu - 06-21-2003 கருணைக் குருதி சுட்டதங்கமாய் எண்ணமெல்லாம் சோதிபெறும் போதிநெருப்பில் பொங்கிக் கொதித்ததுங்கள் பாலுள்ளம் கண்சிமிட்டித் துலங்கும் காலவழி பற்றுரிந்து நடந்தீர்கள் சூழவும் சுடர்பெருக. சக உயிரின் சிறுவலியும் தாளாது பொசுக்கென்று நீர்துளிர்க்கும் மிருதுமனங்களின் முள்ளணிந்த இதயம் முத்து முத்தாய் துளிர்க்கும் ஒவ வொரு துளிகுருதியிலும் புூப்புூவாய் கருணை புூக்கலாயிற்று. (கொய்து, மனஞ்சூடினோம்) புூக்களின் பரிவில் பொன்துகளின் புன்னகை மின்னலாயிற்று முகங்களில். கருணைக் குருதி மொத்தமும் தெறிக்க திசுக்கள் மரிக்கின்றன. திசுக்களே மரிக்கின்றன. உலவும் மனிதரில் உயிரின் சலனம் மனஞ்சூடிய புூக்களே! எஸ். உமாஜிப்ரான் - sethu - 06-21-2003 நினைவுகள் அற்ற வெளிக்குள் அமைதியாக உறங்கும் என் இல்லத்திற்கு வந்தான் உன் பள்ளித் தோழன். சென்ற கோடை காலத்தில் என் 'சென்றிக்கு' அடுத்த நிலையில் நின்றவன் இப்போதும் புகைமூட்டம் போல் எழும் பனி இரவுகளில் நித்திரை விழிக்கிறான் நிச்சயிக்கப்பட்ட எம் நிம்மதியான தாயகத்திற்காய் உன் அப்பாவைக் கொன்றவனை என்னக்காவின் பொட்டழித்த கயவனை கல்லறைக்கே அனுப்பக் கருவி ஏந்தினேன் நான். காலத்தின் பணியை கடுகளவும் பிசகாது கச்சிதமாய் முடித்தேன். என் களக்கதையை என்னருகில் நின்ற காவியச் செல்வங்களிடம் கேட்டுப்பார் அல்லது பக்கத்தில் கடைசி வரிசையில் துயிலும் கண்மணியின் களக்குறிப்பேட்டைத் தட்டிப்பார் குறிதவறாத என் வீரத்தை. ஈர் பத்தாண்டை எட்டிவிட்டாய்லு} இனி என்ன? மகனேலு} எப்போது வருவாய்? இங்குன்பணியை எல்லைப்பக்கம் பள்ளித் தோழனுடன் பக்குவமாய் முடித்து பாதைகளை எமதாக்க எப்போ வருவாய்? -அவிர்- - sethu - 06-21-2003 இன்னும் எனதுயிர் உடற்கூட்டில் தங்கியிருக்கிறது. என்னால், எனதுறவுகளால் நம்ப முடியாது, உண்மையாக வன்கொடுமைகளின் சாட்சியாய் அது இன்னும் என்னில் தங்கிவிட்டது. என் ஆன்மா உதிரம் வடிக்க உடற் தசைகள் செயலற்று வலிக்க ஓலமிடக்கூட முடியாத வாயுடன் பல மிருகங்களுக்கன்று விருந்தாயிருந்தேன். அதிக அழகியும் இல்லாத அவலட்சணமுமில்லாத தமிழிரத்தம் ஓடிய பெண் உயிர் என்பதால் வதைக்கப்பட்டேன், சிதைக்கப்பட்டேன். 'விதவை அரசியின்' பரிவாரங்கள் உமிழ ந்த வெறித்தனத்தில் புூமிக்கு மேலே நான் புண்பட்டுக் கிடக்கிறேன். 'பரிநிர்வாணப்' போதிமரப் பெருமானின் பக்தர்கள் உடல் நிர்வாணமாக்கிப் புரிந்த கொடும் வெறிக்குள் என்னைப் போன்ற பெண்கள் இன்னும் இரையாகிக் கொண்டே இருக்கிறார்கள். இருகரம் விடுத்து 'கிருஸ்ணா' என்றழைத்தபோது துகில் பெருகி வந்ததாம் பாஞ்சாலிக்கு இருகரமும் இரு கால்களும் செயலற்றுப்போக இருக்கும் எல்லா இறைவர்களையும் இறைஞ்சி இறைஞ்சிக் கதறிய ஈழத்துப் பாஞ்சாலிகளுக்கு ஈவிரக்கமற்ற வன்முறை மட்டுமே சொந்தமானது. உப்பு வெளியில் ஊதற்காற்றிடையே மட்டும் புதைகுழிகள் சுமந்த 'செம்மணி' இருப்பதாய் யார் சொன்னார்கள்? திறந்த வெளிச் சிறைக்குள் இருப்பின் முடிவை அறிய முடியா இருட்குகைக்குள் எம் இனத்துக்குக் காவலின்றிய இரவுகளின் எமது ஊரெல்லாம் கடை விரிக்கின்றன 'செம்மணிகள்' அங்கெல்லாம் வெளிக்கிளம்பி விழிபிதுங்கி ஊளையிட்டபடி வெறிக் கூத்திடுகின்றன சாவுத் தூதுவர்கள் தமிழருயிர்களை தமிழ்ப் பெண்கள் உடல்களை சுவைத்துப் புசித்து சாக்குழியிலிட்டுக் கூத்திடுகின்றனர். புலியென உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மட்டும் இவர்கள் நெருங்க முடியா நெருப்பலைகளாகி ஆர்ப்பரிக்க அவர்கள் நீதியின் படி புலியெனச் சந்தேகிக்கப்பட்டவர்களை வல்லுறவுக்குள்ளாக்கலாம். புதைகுழிக்குள்ளாக்கலாம் எதுவுமே புரியலாம். எழுதப்படாத யுத்த நீதிகளால் இலங்காதேவிகூட இம்சைப்படுவது எவர்க்குமே உலகிற் தெரியவில்லை. எனக்குக் காவலாய்ப் பிறரை நம்பியிருந்தது என் குற்றம் அதனால் பாதுகாக்கவோ இல்லை அழிக்கவோ முடியாத உயிருக்குச் சொந்தக் காரியாயிருந்தேன். அதனால் இன்னும் இங்கு உயிரோடிருக்கின்றேன் யாவராலும் உச்சரிக்கப்பட்டு சீழ்வடிந்து கிடக்கும் எனது பெயரின் ரணங்கள் ஆறட்டும் எனக்காய் நீதிகோரியும் எனது அவலத்துக்காய் எதிர்ப்பலைகள் எழுப்பியும்உரக்கக் கிளம்பிய குரல்களெல்லாம் ஓயட்டும். வெற்று நீதிக் கூடங்களால் எனக்கு வழங்க முடியாத தீர்ப்பை இனி நானே எழுதிக்கொள்கிறேன். அன்றென்னைக் காலில் மிதித்த காலம் ஓயும்வரை நெருப்புமிழ்ந்தபடி தவமியற்றுவேன். அதுவரை என்னிருப்புத் தொடரட்டும். - sethu - 06-21-2003 புூபாளம் இசைக்கின்ற புலர் காலைப் பொழுதோடு எங்கள் வாசலெங்கும் ஏராளம் புது முகங்கள் யாரங்கே! எம் வீதியெங்கணும் விழாக்கோலம் புூணட்டும் மஞ்சள் தெளித்து மாவிலை தூக்கி தென்னங் குருத்தெடுத்து (த்) 'தோரணம்' பின்னுக! ஒவ வோர் வீட்டினுள்ளும் ஊதுபத்தி மணக்கட்டும் பன்னீர் தெளித்து (ப்) பரவசப் படுத்துக! உரத்துப் பறைமுழங்கும் ஒப்பாரி நிறுத்தி (ப்) போன ஆண்டின் புலம்பல்கள் நீக்குக! இந்தப் புத்தாண்டின் இடர் களைந்தெடுக்க எங்கள் வாசலெங்கும் ஏராளம் புது முகங்கள் என்னென்ன தேவை? ஏதேது தேவையில்லை? விண்ணப்பங்கள் இனி வெளியிடப் படலாம் பீடிகை வேண்டாம். பிணக்குகள் வேண்டாம் 'பிரித்தோதும்' புத்திஜீவிகள் - இனி பிரித்து ஓத மாட்டார்கள் 'மகஜர்' கலாச்சாரம் மாற்றப் படும் மனுத்தாக்கல் செய்யின் ஏற்கப்படும். என்னென்ன தேவை? ஏதேது தேவையில்லை? சென்ற நூற்றாண்டின் செம்மணிகள் மறக்க வண்ணக் கனவுகள் வாடகைக்கு விடப்படும். பின்னர் வசதிகள் வரும் வாகனம் வரும். மின்சாரம். மினுக்குப் பெட்டி. ரெயில். ரெலிபோன். ஏசி. என்ன வாழ்க்கை வரலாம். வருமெண்டு மட்டும் வாக்குறுதி தர இயலாது (து) முன்னுக்குப். பின் முரணாய். முழங்கித் தள்ளுதல் அரசியலுக்கு. அழக}ல்லைப் பாருங்கோ' 'மானம் துறந்தேற்றி மாயைசெய் அரசி (ல்) மகிழ்வாங்கு மக்கள் வாழல் மகாயீனம்' தங்க முலாம் புூசி (த்) தரமென்ற பொய் முகங்கள். காலப் பெரு நதியில் கரைந்தே உள! த. இளந்தளிர் - sethu - 06-21-2003 நட்டாங்கண்டல் காடு காட்டுவாசம் நாசியுள் நிறைகையில் மனம் காட்டுக் கோழியாய்ப் பறக்கும் பாதையினிரு மருங்கிலும் ராங்கிகள் உழுத வயலாய் இறந்த காடு யாரும் நடாத மரங்கள் யாரும் நீர்விடாத புல்வெளிகள் யாருக்கும் திறைகொடாத காடு ஒரு காலம் கைலாயவன்னியனின் கம்பீரம் கண்டு கர்வமுற்றிருந்த காடு பிறகொருநாள் பண்டாரவன்னியனின் யானைகள் பிளிறும்போது புளகாங்கிதமுற்ற காடு இன்று யாரோ ஒரு சூனியக்காரியின் கண்பட்டுக் கருகியது போல சோகமாய் நின்றது. காலை 9.00 மணி வற்றிய பறங்கியாற்றின் பாறைத் தொடரின் மீதிருக்கிறேன் ஆற்றின் புராதன வளைவுகளிற்கப்பால் எங்கேயோதான் அந்த அரண்மனையிருக்கிறது பண்டாரவன்னியன் கட்டியது ஆறு துயிலும் இரவில் அரசர்கள் காலாற நடக்கும்போது சருகுகள் நொருங்குமரவம் கேட்பதாக வேவு வீரர்கள் கூறுகிறார்கள் பாதி புதைந்த அரண்மனையின் சிதிலங்களினடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பண்டாரவன்னியனின் வாளை எடுக்க யாரோ ஒரு வீரன் வருவானென்று ஆறும் காடும் காத்திருப்பதாக ஒரு வேட்டைப்பாடல் கூறுகிறது. ஒரு கோடையிரவில் சுடலைக்குருவி மரணத்தை முன்னறிவித்து பெருமூச்செறிந்த பிறகு ராங்கிகள் உறுமியபடி காட்டினுள் புகுந்தன காடு பயந்து வேட்டைத்தடங்களை மூடியது வேட்டைக்காரர் அகதிகளாயினர் குளங்கள் உடைப்பெடுத்து வீணே ஆற்றில் போய் வீழ ந்தன ஆறு சினந்து சிப்பியாற்றுக் கழிமுகத்தில் போய்க் குதித்தது. பிறகெலாம் பண்டாரவன்னியன் காலாற நடவாதேவிட்டான் பறவைகள் காடு மாறிப் போயின கைவிடப்பட்ட சேனைப் புலங்களில் கால்நடைகள் காடேறின இடிந்த அரண்மனை மேட்டில் வன்னியரின் வீரவாள் துருவேறிக்கிடந்தது வேவு வீரர்கள் மட்டும் துயிலுமாற்றின் மருதமர மறைவில் துயிலா துலவினர். பகல் 11.00 மணி யுத்த முன்னரங்காகிய காடு எரிந்த காவலரண்கள் வாய்பிளந்த ஏவு தளங்கள் நாயாற்றில் அவர்களே கட்டி அவர்களே தகர்த்த பெரிய இரும்புப் பாலம் ஏதோ ஒரு இடுகாட்டை நோக்கியெம்மை மயக்கி அழைத்துச் செல்வனபோன்ற விநியோக வழிகள் அச்சத்திலிருந்து முற்றாக விடுபடாத காடு நெட்டுயிர்த்தது. ராங்கிகள் போய்விட்டன மழைக்குளிரில் சிலிர்த்து நின்ற மரங்களில் மோதியபடி ராங்கிகள் ஓடித்தப்பின. திறைகொடா அரசனின் வாள் நிலவொளியில் திசைகளை வென்று ஜொலித்தது ஆறு கனவு காணத் தொடங்கியது காடு மகிழ்ந்து வேட்டைத் தடங்களைப் புதுப்பிக்கலானது. பகல் 12.00 மணி ராங்கிகள் புதைந்த காட்டின் வேர்கள் இடறும் வழி நெடுக காடுகளின் சூரியன் உருகி வழிகிறான் மடுமாதா மருதமர நிழலில் காட்டின் ஒளியாய் மிளிர்கிறாள். நிறைகொடாக் காட்டின் மூர்த்தமவள் ஆறு கண்ட கனவு அவள் நிழலற்ற வழிகளில் வரும் பயணிகளின் ஆறுதலுமவள். ராங்கிகள் அவளை உறுமிக்கடந்தன பீரங்கிகள் அவளது பிரகாரத்தில் வெடித்தன குருதி சிந்தி விழிகளில் தெறித்தது நரிகள் ஊளையிட்டு இரவுகளைப் பகைவரிடம் கையளித்தன அவள் அசையவில்லை ஒரு முதுமரம் போலே அமைதியாயிருந்தாள் வெற்றிக்கும் தோல்விக்கும் இலையுதிர் காலத்திற்கும் சாட்சியவள் முற்றுகைகள் தோறும் பிரகாசித்தாள் மூன்று நூற்றாண்டுகளாய் ஆறுகளின் தாகமாய் அகதிகளின் அழுகையாய் பெருமூச்சாய் காடுகளில் காணாமல் போன எல்லா வேட்டைக்காரரிற்கும் தாயாய் காடுகளை மீட்டு வரும் வீர வாளின் கூராய் காடுகளின் கேந்திரத்தே வீற்றிருக்கின்றாள் நீச்சலனமாக. பிற்குறிப்பு: வேட்டைப்பாடல் வேட்டைக்காரர் வருகிறார் புதிய வேட்டைப் பாடல்களோடு காட்டுவாசத்தில் கிறங்கி காட்டுப்புறாக்களின் கழுத்தசைவில் மன மழிய வேட்டைக்காரர் வருகிறார் புதிய வேட்டைப்பாடல்களோடு இனிக்குளங்கள் முறித்துப் பாயாது ராங்கிகள் நெரித்து நாயாறு தாகமாயிராது வேட்டைக்காரர் வருகிறார் புதிய வேட்டைப்பாடல்களோடு காடு மாறிய பறவைகளே வீடு திரும்புங்கள் அரசர்கள் ஆற்றங்கரையில் காலாற நடப்பாரினி அரண்மனை மேட்டில் யானைகள் பிளிறுமினி வேட்டைக்காரர் வருகிறார் புதிய வேட்டைப் பாடல்களோடு மடுமாதாவின் புூர்வீகம் மாந்தை. கோட்டைகள் கட்டிய ஒல்லாந்தர் மன்னாரில் கத்தோலிக்கர்களை வேட்டையாடிய நாளில் மாதா மாந்தையிலிருந்து மடுக்காட்டுக்கு தலைமறைவாக வந்தாள். தொடக்கமே தலைமறைவும் இடம்பெயர்வும் என்றானது. அன்றிலிருந்து அகதிகளுக்கும் புகலிடந்தேடிகளுக்கும் மாதா அபயமளிக்கலானாள். அவளமர்ந்த காட்டில் பிறகெவரையும் விசந்தீண்டவில்லை. வேறெங்காவது விசந்தீண்டினாலும் அவளது காலடி மண் மருந்தாயானது. மூன்றாவது ஈழப்போர் அவளை அநேகமாக அகதிகளின் மூர்த்தம் என்றாக்கியது. குறிப்பாக மடுவையும் அதன் காட்டுப்புறங்களையும் சுற்றிவளைத்த ரணகோஸ (யுத்த கோஸ) படை நடவடிக்கை அவளைத் தேர்தல்கால யுத்த வியுூகமொன்றில் சிக்கவைத்தது. சூதான சமாதானம் ராங்கிகள் பீரங்கிகள் சகிதம் அவளைச் சூழ்ந்து கொண்டது. ரணகோஸ அவளை அவளது சொந்தக் காட்டிலேயே கைதிபோலாக்கியது. பிறகு காடுகளை மீட்கக் கிராமங்கள் எழுந்தன. மடுவுக்குப் போகும் வழிகளை மறித்து நின்ற முட்கம்பியரண்களை மோதியுடைத்துக்கொண்டு கிராமங்கள் முன்னேறிய வேகங்கண்டு ராங்கிகள் வெருண்டு ஓடின. ராங்கிகள் பின்வாங்கிய இரவு மாதாவுக்கு வியாகுல இரவாய் முடிந்தது. பீரங்கிகள் அவளது காலடியில் வெடித்தன. வெடிமருந்து நெடிகிளம்பி அவளது மேனியெலாம் படிந்தது. வியுூகத்துட் சிக்கினாள் மாதா. புலம்பும் அகதிகளின் நடுவே தனித்திருந்தாள் ராமுழுதும். ஒல்லாந்தர் காலத்திற்குப் பின் அவள் அதிகம் உத்தரித்த காலமாக ரணகோஸ காலமும் அதன் பின் வந்த காலமும் அமைந்தன. ஆனால், அவள் முகம் வாடியதில்லை. விழிகளில் புதிரான பேரமைதியோடு பிறகும் பிறகுமவள் மரித்தோரின் மத்தியிலிருந்து எழுந்தாள். எல்லாக்காயங்களும் எல்லாப் பாடுகளும் எல்லாவியுூகங்களும் அவளது பெருமைகளை நிரூபிப்பதிற்தான் முடிந்தன. விசந்தீண்டாத காட்டின் மூலிகையாய் அவளது வீற்றிருப்பை விசப்பாம்புகளோ ராங்கிகளோ பீரங்கிகளோ எதுவும் அசைப்பதில்லை. காடுகளின் இதயத்தில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாய் அவளது பிரசன்னம் யாருக்கும் உறுத்தலாயிருந்ததில்லை. அவளை அகதியாக்கித் துரத்திய ஒல்லாந்தரிற்கும் அவளை சந்தேகித்த ஆங்கிலேயருக்கும் அவளை வியுூகத்துள் வீழ்த்திய சிங்களவருக்கும் யாருக்கும் அவள் உறுத்தலாயிருந்ததில்லை. - sethu - 06-21-2003 புூமிப்பந்தின் எங்கோவோர் ஓரத்தினிலுள்ள இம்மிப் பொட்டினுள் ஒழிந்திருக்கும் எந்தன் தாயகதேசத்தின் விடுதலைக்காய் நான் தினம் தினம் தவங்கிடக்கின்றேன் சோறு பிசைந்து வாயிலூட்டிவிடும் என் உயிரின் மூலாதாரத்தினுடைய உறவைப் பிரிந்து; உணவை மறந்து உயிரும் - உறுதியும் சுமந்து வாழுகின்றேன் நான் முகிழ்விட்ட பெண்மைக் கொடியிலேயே புூத்திட்ட என்னுயிர் பாசமலர்களின் நேசம் தன்னை அறுத்துக்கொண்டு வனவிலங்குகளுக்கும், விஸ ஜந்துக்களுக்கும் உரித்தான இயற்கை வீட்டினுள்ளே நானும் புது உறவாய் குடிபுகுந்திருக்கிறேன் கரடுமுரடான பாதைகளில் விழிகள் சிவக்க பொழுதுகள் மறந்து நடக்கின்றேன் இத்தனைக்கும் மேலாய் 'விடுதலை' 'சுதந்திரம்' என வாழ்க்கைக் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கும் எந்தன் இதயத்தினுள்ளும் ஒரு காதற்பறவை சிறகடிக்கின்றதுதான் ஆனாலும். இயற்கை தந்த ஜீவ வடிவங்களின் அன்புக்காணிக்கைகளை அகத்தில் சுமந்து நினைவலைகளை அசைபோட்டபடி பயணிக்கின்றேன் எந்தன் தாயகமேனியில் போர்த்தப்பட்டிருக்கும் அடக்குமுறை ஆடைகளை களைந்தெறிவதற்காய் ஆம் எந்தன் தாயகத்தின் கழுத்தினிலே சுதந்திரமாலையை ஒரு நாள் தலைவன் சூடுவான் அப்போ நான் உறவுகள் புடைசூழ நின்று தாயகத்தின் எழிற்கோலம் கண்டு மகிழ்ந்து சிரிப்பேன் இல்லையேல் தாயகம் மீது சூட்டப்பட்டிருக்கும் சுதந்திரமாலையில் தொடுக்கப்பட்ட ஒரு மலராய் இருப் |