Yarl Forum
பொன்மொழி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33)
+--- Thread: பொன்மொழி (/showthread.php?tid=8303)

Pages: 1 2 3 4 5 6 7 8 9


- tamilini - 07-28-2004

கிளாலி பெருங்கடல் நீந்துவார், நீந்தாதார் வன்னிக்கரையை போய்ச் சேரார்...!

எங்கோ கேட்டது....! கிளாலியில் பிரச்சனை நடந்து நிறைய பேர் உயிர் இழந்த போது யாரோ ஒருவர் இயற்றியது....!
பிழையிருந்தால் பொறுத்தருளுங்கள்...நண்பர்களே.....!


- kuruvikal - 07-28-2004

tamilini Wrote:கிளாலி பெருங்கடல் நீந்துவார், நீந்தாதார் வன்னிக்கரையை போய்ச் சேரார்...!

எங்கோ கேட்டது....! கிளாலியில் பிரச்சனை நடந்து நிறைய பேர் உயிர் இழந்த போது யாரோ ஒருவர் இயற்றியது....!
பிழையிருந்தால் பொறுத்தருளுங்கள்...நண்பர்களே.....!

இது பொன்மொழி என்பதிலும் பார்க்க கிண்டல்மொழி என்றால் சாலப் பொருந்துமோ என்னவோ....????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:


- tamilini - 07-28-2004

Quote:பிழையிருந்தால் பொறுத்தருளுங்கள்...நண்பர்களே.....!



- kuruvikal - 07-28-2004

tamilini Wrote:
Quote:பிழையிருந்தால் பொறுத்தருளுங்கள்...நண்பர்களே.....!

பிழை இருக்கென்று தெரிந்த படியால்தானே இப்படி எழுதினீங்க... பிறகென்ன பொறுத்தருளுறது... ஓ அடிச்சுப் போட்டு sorry யோ....! :twisted: :roll:


- kavithan - 07-29-2004

பொன்மொழி என்னுகிறீர்கள் நகைச்சுவை மாதிரி இருக்கு.





yarl Wrote:
BBC Wrote:நாலு பேருக்கு காசு கிடைத்தால் நாற்பத்து பேரோட கள்ளமட்டைய போடுறதுல தப்பில்ல. - லண்டன் பொன்மொழி ????


ம் ஒரே தமிழர்களாகவிருந்தாலும் நாட்டுக்குநாடு மொழி வித்தியாசப்படுகிறது.
ஜேர்மனியில் குத்துவது என்பார்கள் பாரிசில் தாட்பது என்பார்கள் லண்டனில் மட்டையா? மற்றைய இடங்களில் எப்படியோ?

இங்கு இழுக்கிறது என்பார்கள்....வேறும் இருக்கோ தெரியாது....கேட்டு சொல்கிறேன் பின்னர்


- kuruvikal - 07-29-2004

<b>ஒரு நல்ல இலட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்கு. நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய். நீ வாழ்ந்து மறைந்ததற்கு.. உன் பின்னால் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல்</b> - [b]சுவாமி விவேகானந்தர்...!


- Mayuran - 07-30-2004

தேரேறித் துன்பங்கள் தினம் வந்து சு10ழ்ந்தாலும் சோராத மனம் வேண்டும். வாழ்க்கை வேரோடு சாய்கின்ற விதியொன்று வந்தாலும் போராடும் குணம் வேண்டும்.

இது கவிஞர் முகில்வாணனின் வரிகள் ஏதோ இதழ் ஒன்றில் வாசித்த நினைவு.



- kuruvikal - 08-12-2004

<b>'உண்மையான பெருந்தன்மையின் சாரம் தன்னலத்தை விடுவதன்று, தன்னல எண்ணம் உள்ளே புகுந்ததும், ஒரு பெருஞ்செயலின் அழகு வாடிய மலரைப்போல் ஆகிவிடும்!"</b> -ஜே.ஏ.புரூட்

தந்தது தமிழ்நாதம்...!


- kuruvikal - 08-17-2004

<b>"மற்றவர்களுடன் நேசமாக உள்ள இடத்தில் தண்ணீர்கூட இனிப்பாக இருக்கும்!"</b> - சீனப் பழமொழி

தந்தது தமிழ்நாதம்..!


- kavithan - 09-01-2004

தவறாக பதியப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது


- tholar - 09-07-2004

ஆயிரம் மலர்கள் மலரட்டும்.அயிரம் கருத்துகள் முட்டி மோதட்டும். இது தலைவர் மா சே துங் இன் பொன்மொழி.


- shanmuhi - 09-18-2004

'நாம் ஒருவரையும் ஏமாற்றவும் இல்லை. துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது எமக்குத் துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டோம்!"
-தமிழீழ தேசியத் தலைவர்


- kavithan - 09-26-2004

<span style='font-size:30pt;line-height:100%'><b>தலைவரின் சிந்தனைகள் சில</b></span>

[color=darkblue][size=16]
<ul>நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன.

நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.

விடுதலைப் புலிகளின் மகளீர் படையணி, எமது இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை.

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.

மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.

விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம்.

பயிற்சி - தந்திரம் - துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம்.

சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை.

நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களாகவே மனிதகுல வரலாறு நகர்கின்றது.

கேணல் கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு.

இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது.

காலங்காலமாக எமது மக்கள் அனுபவித்த அவலங்கள், சாவும் அழிவுமாக அவர்கள் சந்தித்த அநர்த்தங்கள், இவையெல்லாம் பௌத்த தேசத்தின் காருண்யத்தைத் தொட்டதாகத் தெரியவில்லை.

மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.

விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி.

விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியற்ப் பாதை.

இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப - வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரச்சிகரமான படைப்புக்களை உருவாக்க வேண்டும்.

எமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை.

எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.

மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது.

சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய அன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை.

ஆயுதங்கள் மட்டும் முக்கியமல்ல, தந்திரங்களும் உபாயங்களும் முக்கியம்.

மலைபோல மக்கள் சக்தி எமக்கு பின்னால் இருக்கும் வரை, எந்தப் புதிய சவாலையும் நாம் சந்திக்கத் தயார்.

அறிவியல் ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும், எனது இனமும், எனது மக்களும் வளர வேண்டும்மென்று நான் அதிகம் விரும்பினேன்.

வரலாறு என்பது மனித விடுதலையை நோக்கி நகரும் ஒரு பேரியக்கம்.

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.

எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதனின்றும் மக்களை விடுவித்து எமது மக்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பiயும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்.

இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.

பலம் வாய்ந்த ஒரு எதிரியைப் படிப்படியாகப் பலவீனப்படுத்தி, அவனது மனோவுறுதியை உடைத்தெறிந்து, அவனது ஆயுத பலத்தை அழிப்பதற்குக் கொரில்லாப் போர்முறையே தலை சிறந்த யுத்த தந்திரோபாயமாகும்.

உழைப்பவனே பொருளுலைகைப் படைக்கின்றான். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றான்.

நாம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது.

சான்றோரைப் போற்றுவதும், கற்றோரைக் கௌரவிப்பதும் தமிழர்களாகிய எமது மரபு, எமது சீரிய பண்பாடு.

எமது சொந்தப் பலத்தில் நாம் வேரூன்றி நிலையாக நிற்பதால், மற்றவர்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து கொடாமல் தலை நிமிர்ந்து நிற்கமுடிகின்றது.

அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம்.

மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன், ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.

கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் - எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் - எதிரியின் படைபலத்தை மனப் பலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.

எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும்.

நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது.

இலங்கையின் வழக்கில் உள்ள அரசியல் அமைப்பு எப்போதுமே பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தையே சிறுபான்மையினர் மீது திணித்து வந்திருக்கிறது.

எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீ சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.

ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை.

சமாதானத்தை நான் ஆத்ம பூர்வமாக விரும்புகிறேன். எமது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, சுதந்திரமாக, கொளரவமாக வாழவேண்டும் என்பதே எமது ஆன்மீக இலட்சியம்.

தமிழீழ மண்ணில் ஆயுதப்புரட்சி இயக்கத்திற்கு அத்திவாரமிட்டவர்கள் நாம். தமிழனின் வீர மரபைச் சித்தரிக்கும் சின்னமாக உதித்த எமது இயக்கம், வீரவரலாறு படைக்கும் புரட்சிகர விடுதலைச் சக்தியாக விரிவடைந்து வளர்ந்திருக்கின்றது.

ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்.

எந்த ஒரு விடுதலை இயக்கமும் தனியாக நின்று, மக்களுக்குப் புறம்பாக நின்று, விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. அது நடைமுறைச் சாத்தியமான காரியமுமல்ல.

குட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி தன்மாத்துடன் வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.

தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுரை அர்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள், காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.

எதிரியால் ஆக்கிமிக்கபட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது.

தங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.

விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்.

விதிரிகளை விடத் துரோகிகளே ஆபத்தானவர்கள்.

இது கரும்புலிகள் சகாப்தம், இடியும் மின்னலுமாகப் புலிகள் போர்க் கோலம் பூண்டு விட்ட காலம்.

போரும் - கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.

உழைக்கும் மக்களின் உழைப்புச் சக்தியே ஒரு தேசத்தின் ஜீவாதார சக்தி.

நாங்கள் எமது இலட்சியத்திற்கு எம்மை ஒப்படைத்திருக்கின்றோம் என்பதன் அடையாளச் சின்னம்தான் சயனைட். இந்த சயனைட் எங்கள் கழுத்தில் தொங்கும்வரை உலகில் எந்தச் சக்திக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்.

தமிழீழ சுதந்திரப் போர் ஆசியாக் கண்டத்தில் முதன்மையான விடுதலைப் போராட்டமாக சர்வதேசப் புகழை அடைந்திருக்கின்றது.

தமிழ் மக்களின் விடுதலைக்கான ஒரு தேசிய மக்கள் படையாக நாங்கள் எங்கள் போரா முன்னெடுத்துச் செல்கிறோம்.

அறப்போரிலும் சரி, ஆயுதப் போரிலும் சரிடு எமது விடுதலைப் போர் உலக சாதனைகளைப் படைத்து வருகின்றது. மனித ஈகையின் சிகரத்தை எட்டிருக்கின்றது.

ஒரு விடுதலைப் போராளியானவன் தனது சுயத்தின் வரம்புகளுக்கு அப்பால் மேலோங்கி தன்னை முழுமையாகப் போராட்டத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும்.

போராட்டத்தின் யாதார்த்த நிலையை, புறநிலை உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறுவதுடன் மக்களிடையே தேசிய விழிப்புணர்வையும், விடுதலை உணர்வையும் ஊட்டி வளர்த்து மக்களின் கருத்துகளைக் கட்டி வளர்ப்பதில் மக்கள் தொடர்பு சாதனங்கள் அரிய சேவை ஆற்ற முடியும்.

நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே! செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்க வேண்டும்.

நாம் ஒரு இலட்சிய விதையை விதை;திருக்கிறோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தால் நீர் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.

<ul>


- tamilini - 09-27-2004

தான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னதமான தியாகத்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பபணிப்பைத்தான் திலீபன் செய்திருக்கிறான்!
-தமிழீழ தேசியத் தலைவர்

நன்றி தமிழ்நாதம்


- tamilini - 09-29-2004

எல்லோரும் நீதியை விரும்புகிறார்கள்,
ஆனால் அடுத்தவனின் விசயத்தில் மட்டும்...!
நன்றி குமுதம்.கொம்


- raahul - 09-29-2004

களத்தில் இப் பொன்மொழி கனபேருக்கு பொருந்தும்


- tamilini - 09-29-2004

உங்களுக்கும் பயன்பட்டிச்சோ...?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tholar - 09-30-2004

துப்பாக்கிக் குழாயில் இருந்துதான் அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்றார் சீனத் தலைவர் மா ஓ சேதுங்


- tamilini - 10-03-2004

சாதனை புரிந்த மனிதர்கள் அனைவரும் யாரிடமிருந்தும் உதவிகளைப் பெற்று முன்னேறவில்லை. அவர்கள் சந்தித்த தடைகள்தாம் பிடிவாதமாக வெற்றி பெற வேண்டும் என்ற கடின உறுதியைத் தந்து அவர்களை முன்னேற்றின!

-டபிள்யுூ மாத்யுூஸ்

from tamilnaatham.com


- kuruvikal - 10-18-2004

"<b>பேச வேண்டிய தேவை இல்லாத சமயத்தில் வாயை மூடிக்கொண்டிரு.
பேச வேண்டிய சரியான சந்தர்ப்பம் வந்தால் உன் கருத்தைச் சொல். நீ சொல்லும் கருத்தை ஆணித்தரமாகத் தீப்பொறி எழும்படிச் சொல்</b>" -பெஞ்சமின் ஃபிராங்க்ன்

தந்தது தமிழ்நாதம்....!