![]() |
|
விண்ணியல் விநோதங்கள்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: விண்ணியல் விநோதங்கள்... (/showthread.php?tid=7732) |
- kuruvikal - 11-22-2004 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40548000/jpg/_40548377_deltaswift_boeing_203.jpg' border='0' alt='user posted image'> செயற்கைக் கோளுடன் நாசாவின் டெல்டா (delta)உந்துவாகனம் விண்ணிற்குப் பாய்ந்து செல்லும் காட்சி....! அகிலப் பெரு வெடிப்புக்குப் (big bang) பின்னர் நிகழ்ந்த நட்சத்திர வெடிப்பென்றை மையமாக வைத்து கறுப்போட்டைகள் (black holes) மற்றும் தன்னழிவுக்குள்ளாகும் நட்சத்திரங்களின் வெடிப்பின் விளைவுகள் தொடர்பாகவும் ஆய்வுகளை நடத்த நாசா மற்றும் பிரித்தானிய இத்தாலிய பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் கூட்டிணைந்து ஒரு செயற்கைக் கோளை வடிவமைத்து விண்ணிற்குச் செலுத்தி உள்ளன...! இச்செயற்கைகோள் நட்சத்திர வெடிப்பின் போதும் தொடர்ந்தும் நிகழும் மாற்றங்களுக்கு (கறுப்போட்டைகள் உருவாக்கத்தின் வாயிலானதும்) ஏற்ப காழற்படும் காமா கதிர்களின் அடிப்படையில் ஆய்வுகளைச் செய்யும் என்று விஞ்ஞானத் தகவல்கள் கூறுகின்றன...! அகிலத்தின் தொலைவில் நிகழ்வது போன்ற நட்சத்திர வெடிப்பு எமது சூரியத் தொகுதிக்கருகில் நிகழ்ந்தால் வெடிப்பைத் தொடர்ந்து காழல்படும் அதிக சக்தி வாய்ந்த கொஸ்மிக் கதிர்கள் --- காமாக் கதிர்கள்-- பூமிக்குள் ஊடுருவின் பூமிவாழ் உயிரினங்களின் கதி அதோ கதிதான் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்...! <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40539000/jpg/_40539001_blackhole_bbc_203.jpg' border='0' alt='user posted image'> அகிலத்தில் அதி சக்தி சுருளை உண்டு பண்ணும் கறுப்போட்டை...! மேலதிக தகவலுக்கு இங்கு அழுத்துக images from bbc.com - kavithan - 11-23-2004 நன்றி குருவிகளே .. உங்கள் விஞ்ஞான விண்ணீயல் செய்திகள் மிகவும் பயனுள்ளதாக இருகின்றது. தொடர்ந்து வழங்குங்கள் - tamilini - 11-23-2004 நன்றிகள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 11-23-2004 உங்கள் ஆர்வத்தைக்..??! கண்டபின் தான் படிப்பதை எல்லாம் (ஒரு சிலவற்றைத்தான் யாழுக்காகவும் வலைப்பூவிற்காகவும் தமிழில் எழுதுவது) தமிழில் எழுதினால் என்ன என்று தோன்றுகிறது... பிரச்சனை இதுதான்... குருவிகளுக்கு கணணியில் நேரடியாக தமிழில் எழுதத் தெரியாது ஆங்கிலத்தில் எழுதித்தான் தமிழ் ஆக்குவது... அது நேரம் எடுக்கும் செயல்.... அதுதான் பிரச்சனையே....! எது எப்படியோ எம்மால் முடிந்ததை அறிவியலுக்காகவும் செய்வோம்....! கவிதனுக்கும் தமிழினிக்கும் குருவிகளை உற்சாகப்படுத்தியதற்காக நன்றிகள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 11-23-2004 Quote:குருவிகளுக்கு கணணியில் நேரடியாக தமிழில் எழுதத் தெரியாது ஆங்கிலத்தில் எழுதித்தான் தமிழ் ஆக்குவது... ஏன் குருவிகள் keyman keyboard பாமினியுடன் இணைத்து உபயோகப்படுத்தினால் எங்கையும் இலகுவாக தமிழில் தட்டலாமே..?? மேலதிக தகவல்கள் இங்கு இருக்கு உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன் www.jaffnalibrary.com/tools <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 11-23-2004 தகவலுக்கு நன்றி அதுவும் பாவிக்கின்றோம்... எங்கு தட்டினாலும் வேலை ஒன்றுதான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 11-23-2004 kuruvikal Wrote:தகவலுக்கு நன்றி அதுவும் பாவிக்கின்றோம்... எங்கு தட்டினாலும் வேலை ஒன்றுதான்...! <!--emo& ம்ம் தட்டி தான் ஆக்கணும்... இதில் புதிய செய்லிகள் இருக்கின்றது பாருங்கள் http://www.developer.thamizha.com/ekalappai/ நான் பாவிப்பது இரு தான் இலகுவானது. - kuruvikal - 11-23-2004 தகவலுக்கு நன்றி கவிதன்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 12-10-2004 <img src='http://kuruvikal.yarl.net/archives/dusty%20ring%20around%20a%20star.jpg' border='0' alt='user posted image'> அமெரிக்க விண்ணியல் தொலைநோக்கியான Spitzer Space Telescope பும் விண்ணில் சஞ்சரிக்கும் விண் தொலைநோக்கியான கபிளும் (Hubble Space Telescope) எமது சூரியனைப் போல கோள்களைக் கொண்ட சில நட்சத்திரங்களைச் சுற்றி தூசி வளையங்களை அவதானித்துள்ளதை நாசா (Nasa) அறிவித்துள்ளது...! இவ்வாறு தோன்றும் தூசி படலங்களே பின்னர் கோள்கள் தோன்ற வழிவகுக்கின்றன என்ற விண்ணியல் கருதுகோள்களை மெய்ப்பிப்பது போல் இவ்வவதானிப்புக்கள் உள்ளன என்றும் இத்தூசி வளையங்கள் முதுமையானது (பில்லியன் வருடங்கள் வயதுடைய) மட்டுமன்றி சில இளமையான (மில்லியன் வருடங்கள் வயதுடைய) நட்சத்திரங்களை சூழவும் அவதானிக்கப்பட்டுள்ளன....! மேலதிக தகவல் இங்கே... - kuruvikal - 01-14-2005 <img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/04/sci_nat_enl_1102074661/img/laun.jpg' border='0' alt='user posted image'> ரைரனில் Huygens கலம் தரையிறங்குவது போன்று வடிவமைக்கப்பட்ட படம்..! சனிக்கோளின் உபகோளான ரைரனைச் (Titan) சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும் கசினி (Cassini) எனும் செயற்கைக்கோள் அனுப்பிய Huygens எனும் சிறிய கலம் (Spacecraft) ரைரன் நோக்கிய கடந்த 20 நாட் பயணத்தின் பின்னர் தற்போது அதன் வாயு மண்டலத்தினூடு வெற்றிகரமாகப் பயணித்து ரைரனின் மேற்பரப்பை அடையும் நிலைக்கு எட்டியுள்ளது...! இது பரசூட்களின் உதவியுடன் ரைரனின் மேற்பரப்பில் இன்னும் சில மணி நேரங்களில் தரையிறங்க உள்ள நிலையிலும் உயிர்ப்புள்ள நிலையில் இருந்து தகவல் சமிக்கைகளை அனுப்பிக் கொண்டிருப்பதாக பூமியில் இதைக் காண்காணிக்கும் நிலையங்களில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்...! இந்த கலம் எடுக்கும் படங்கள் ஒலிப்பதிவு செய்யும் ஓசைகள் மற்றும் செய்யும் ஆய்வுகள் சனிக்கோள் மற்றும் ரைரன் பற்றிய பல அரிய தகவல்களையும் ரைரனின் மேற்பரப்பு திண்மமா திரவமா என்று அறியவும் உதவி செய்யும் அதேவேளை...அதன் இராசாயனக் கட்டமைப்புக்கள் தொடர்பான விபரங்களையும் தெளிவாக அறிய உதவும் என்றும் பூமி மற்றும் சூரியக் குடும்பம் பற்றிய அரிய தகவல்களைப் பெறவும் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்...! மேலதிக விபரம் இங்கு... http://kuruvikal.blogspot.com/ - tamilini - 01-14-2005 தகவலுக்கு நன்றிகள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 01-14-2005 நன்றி குருவிகளே - kuruvikal - 01-15-2005 <img src='http://img42.exs.cx/img42/3065/titansurface15zm.jpg' border='0' alt='user posted image'><img src='http://img42.exs.cx/img42/3905/titansurface20km.jpg' border='0' alt='user posted image'> ரைரனின் மேற்பரப்பில் காணப்படும் கறுப்புத் திரவ மற்றும் சாம்பல் வர்ண திண்மக் கரையும்...! திண்மக்கரையை அண்டிக் காணப்படும் பாறைத்திட்டுக்களும்..! சனிக்கோள் மற்றும் அதன் உப கோளான ரைரனை ஆராயச் சென்ற கசினி விண்கலம் அனுப்பிய Huygens எனும் சிறிய கலம் ரைரனின் வளிமண்டலத்தினூடு பயணித்த போது ரைரனின் மேற்பரப்பில் இருந்து 16.2, 8 கிலோமீற்றர்கள் (km) உயரத்தில் இருந்தும் அதன் தரை மேற்பரப்பில் இருந்தும் எடுத்த ரைரனின் மேற்பரப்புத் தோற்றங்கள் பற்றிய படங்கள் பூமிக்குக் கிடைத்துள்ளன...! இவை தவிர ரைரன் பற்றி கிட்டத்தட்ட சுமார் 300 படங்களை இக் கலம் எடுத்து அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது...! தற்போது பகுப்பாய்வு செய்யப்பட்ட Huygens space probe அனுப்பிய கறுப்பு வெள்ளைப் படங்களின் அடிப்படையில் கறுப்பு நிற திரவப்படையை அண்டிய திண்மக் கரையையும் அங்கு திரவ ஓடைகள் ஓடியதற்கான தோற்றத்தையும் அழுத்தமான பாறைத்திட்டுக்கள் திண்மப் பரப்பில் பரந்திருப்பதையும் விஞ்ஞானிகள் இதுவரை இனங்காட்டியுள்ளனர்...! இந்தப் படங்களும் இன்னும் உள்ள படங்களும் இதர தரவுகளும் மேலும் ஆய்வுக்கு உட்படும் போது ரைரன் பற்றிய மேலும் சுவாரசியத் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கிறார்கள் விண்ணியல் ஆர்வலர்கள்...! மேலதிக தகவல் இங்கு.. http://kuruvikal.blogspot.com/ - Mathan - 01-16-2005 தகவல்களுக்கு நன்றிகள், உங்களுக்கு எப்படி இந்த விண்ணியல் ஆர்வம் வந்தது? - kuruvikal - 01-16-2005 குருவிகளுக்கு வானம் தானே பொழுது போக்கிடம்..அதுதான் விண்ணியலோட கொஞ்சம் ஆர்வம்..அப்பப்ப அம்பிட்டத வாசிச்சு அறியுறதுதான்...! சின்னனில இருந்தே பொம்பர் கெலி என்று வானத்தை அண்ணாந்தே பார்த்துப் பார்த்துப் பழகிப் போச்சு...அதுவும் தான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 01-17-2005 kuruvikal Wrote:குருவிகளுக்கு வானம் தானே பொழுது போக்கிடம்..அதுதான் விண்ணியலோட கொஞ்சம் ஆர்வம்..அப்பப்ப அம்பிட்டத வாசிச்சு அறியுறதுதான்...! சின்னனில இருந்தே பொம்பர் கெலி என்று வானத்தை அண்ணாந்தே பார்த்துப் பார்த்துப் பழகிப் போச்சு...அதுவும் தான்...! <!--emo& <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 01-17-2005 kuruvikal Wrote:சின்னனில இருந்தே பொம்பர் கெலி என்று வானத்தை அண்ணாந்தே பார்த்துப் பார்த்துப் பழகிப் போச்சு...அதுவும் தான்...! <!--emo& <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்ப இலங்கை தமிழர் முக்காவாசி பேர் விண்ணியல் மன்னர்கள் என்று சொல்றீங்க? - kuruvikal - 01-17-2005 எங்கள் மக்கள் மன்னர்கள் விண்ணர்கள் தான் அதில் சந்தேகம் இல்லை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 01-22-2005 சனிக்கோளின் உபகோள் ரைரனுக்கான பயணம் [ விளக்கப்படமாக ] - KULAKADDAN - 01-29-2005 world holiday |