Yarl Forum
நடப்பு அரசியல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41

- Mathan - 03-21-2004

கருணா மீது மட்டு-அம்பாறை மாவட்ட மக்கள் அதிருப்தி

[size=14]தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலக்கப்பட்டுள்ள முன்னாள் தளபதி கருணா மீது மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்கள் படிப்படியாக அதிருப்தியடைந்து வருதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை மீது பல பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அதனை மக்கள் நம்புமாறு செய்வதற்கு முயன்று வந்த கருணாவும், அவரது ஆதரவாளர்களும் இப்போது மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை இழந்து வருவதையும் அறியமுடிகிறது.

தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளான வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகப் பிரதேசம், விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் ஆகிய கோரிக்கைகளுக்கு எதிராக கருணாவின் ஆதரவாளர்கள் வெளியிட்டு வந்த கருத்துக்கள் காரணமாக, கருணாவின் உண்மைத் தோற்றத்தை மட்டக்களப்பு வாழ் மக்கள் அறிந்து கொண்டுவிட்டதாகவும் மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தனது தவறுகளை மறைப்பதற்காக கருணா ஆதரவாளர்களால் கிளப்பிவிடப்பட்ட பிரதேச வாதமும் தற்போது மழுங்கிவிட்டதாகவும் அறியக் கிடைத்துள்ளது.தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக நடாத்தப்பட்ட எழுச்சிப் பேரணியை, திடிரென கருணா ஆதரவுப் பேரணியாகவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களான கரிகாலன், ரமேஷ், பொட்டம்மான் ஆகியோருக்கு எதிரான போராட்டமாகவும் மாற்றுவதற்கு கருணாவின் ஆதரவாளர்கள் முயற்சிகள் எடுத்தமையாலும், பேரணியில் கலந்துகொண்ட மக்கள் விசனம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

<b>அன்னை பூபதியின் நினைவாக ஒழுங்குசெய்யப்பட்ட இந்தப் பேரணியை, கருணா ஆதரவுப் பேரணியாக லண்டன் பி.பி.சி. உட்பட பல உள்ளுர், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது</b>

நன்றி - புதினம்

இது உண்மை தானா? அன்னை பூபதியின் பேரணியையா கருணாவுக்கு ஆதரவாக ரொம்பபேர் என்று செய்தி வெளியிட்டார்கள்? விஷய்ம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

- Mathan - 03-21-2004

இந்த செய்தியை ஏற்கனவே அன்பகம் போட்டிருந்ததை இப்பதான் பார்த்தேன் மன்னிக்கணும்.

- Mathan - 03-21-2004

கந்தர் நீங்க துணிஞ்ச் ஆளா இருக்கீங்க. உங்க கிட்ட சில கேள்வி கேக்கலமுன்னு நினைக்கிறேன். இந்த முறை தேர்தல்ல உங்க ஓட்டு யாருக்கு? புலிகளை நீங்க ஏகப்பிரதிநிதிகளா ஏத்துக்கிறீங்களா?

- Kanthar - 03-21-2004

BBC Wrote:கந்தர் நீங்க துணிஞ்ச் ஆளா இருக்கீங்க. உங்க கிட்ட சில கேள்வி கேக்கலமுன்னு நினைக்கிறேன். இந்த முறை தேர்தல்ல உங்க ஓட்டு யாருக்கு? புலிகளை நீங்க ஏகப்பிரதிநிதிகளா ஏத்துக்கிறீங்களா?

எழுவத்தி ஏழில எங்கட ஊர் சுவரில எல்லாம் வீடும் சயிக்கிளும் போய் சூரியன் நிண்டகாலம் அது.
அண்டைக்கு ஊரில ஓரமாய் சுவரில சிவப்பு மையால எழுதிக்கிடந்தது என்னதெரியுமோ?
''பத்து தடவை புள்ளடி போட்டோம் பாட்டாளி வாழ்வில் கண்டது என்ன''.....எண்டு.......
மெய்யா சொல்லுறன் இண்டைக்கு எண்டால் நான் தான் முன்னுக்கு நிப்பன் புள்ளடி போட......
ஜனநாயகமோ...... சன நாய் அகமோ..........இப்ப இதில எனக்கு கொஞ்ச நம்பிக்கை.
மத்தியிலையும் மாநிலத்திலையும் பாரதி சொன்னமாதிரி '' சரிநிகர் சமமாக வாழ்வம் இந்த நாட்டில்'' எண்டு யார் சொல்லீனம் ...அவங்களுக்குதான் என்றை வாக்கு........

- Mathan - 03-21-2004

Kanthar Wrote:

அது எல்லாம் சரி. இன்றைக்கு யாருக்கு வாக்கு போடுவீங்க?

- Kanthar - 03-21-2004

கனாவில இருந்து நான் கனாக்காணுறன் எண்டெல்லோ மற்றவை நினைக்கபோகினம்

- Mathan - 03-21-2004

Kanthar Wrote:கனாவில இருந்து நான் கனாக்காணுறன் எண்டெல்லோ மற்றவை நினைக்கபோகினம்

நீங்க இலங்கையில இருந்தா இந்த தேர்தல்ல யாருக்கு போடுவீங்க அதை சொல்லுங்க

- shanmuhi - 03-21-2004

கந்தரை ஒரு வழி பண்ணாமல் விட்மாட்டீர்கள் போல் இருக்கே...?

- Kanthar - 03-21-2004

BBC Wrote:
Kanthar Wrote:கனாவில இருந்து நான் கனாக்காணுறன் எண்டெல்லோ மற்றவை நினைக்கபோகினம்

நீங்க இலங்கையில இருந்தா இந்த தேர்தல்ல யாருக்கு போடுவீங்க அதை சொல்லுங்க

shanmuhi Wrote:கந்தரை ஒரு வழி பண்ணாமல் விட்மாட்டீர்கள் போல் இருக்கே...?

என்றை ஆச்சி கூட சொல்லமாட்டா தான் ஆருக்கு போட்டது எண்டு.....
நான் போடமுதல் எப்பிடி சொல்லுறது.........

- shanmuhi - 03-21-2004

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Mathan - 03-22-2004

Kanthar Wrote:
BBC Wrote:
Kanthar Wrote:கனாவில இருந்து நான் கனாக்காணுறன் எண்டெல்லோ மற்றவை நினைக்கபோகினம்

நீங்க இலங்கையில இருந்தா இந்த தேர்தல்ல யாருக்கு போடுவீங்க அதை சொல்லுங்க

shanmuhi Wrote:கந்தரை ஒரு வழி பண்ணாமல் விட்மாட்டீர்கள் போல் இருக்கே...?

என்றை ஆச்சி கூட சொல்லமாட்டா தான் ஆருக்கு போட்டது எண்டு.....
நான் போடமுதல் எப்பிடி சொல்லுறது.........

நீங்க மற்றவங்களுடைய கருத்துக்கு பதில் எழுதும்போது உங்களுகளுடைய சொந்த கருத்தின் அடிப்படியில தானே எழுதுவீங்க. சும்மா பதில் எழுத மாட்டீங்க தானே. அதனால தான் உங்க சொந்த கருத்தை தெரிஞ்சுக்கிறதுக்காக யாருக்கு வாக்கு போடுவீங்களுன்னு கேட்டேன். புலிகளை ஏகப்பிரதிநிதிகளா ஏத்துக்கிறீங்களா என்று கேட்டேன். விவாதிக்க தானே கருத்துகளம். கருத்தை சொல்ல மாட்டேன்னு சொன்னா எப்படி? இப்பவாவது சொல்லுங்க

- Mathan - 03-22-2004

கூட்டமைப்பு வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையே மோதல்

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே கடந்த சனியிரவு 11 மணியளவில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்திற்கருகில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தமிழ்க் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கிடையே விருப்பு வாக்கை சுவீகரிக்கும் பணி மும்முரமாக இடம்பெற்று வருகிறது. திகாமடுல்ல மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்

முதன்மை வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அ.சந்திரநேருவின், ஆதரவாளர்களுக்கும் இக்கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளரான க.பத்மநாதனின் ஆதரவாளர்களுக்குமிடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் இதனால் நால்வர் காயமடைந்தாகவும் இவர்கள் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Thanx: Virakesari

[size=20]இது தேவையா ???

- Mathan - 03-22-2004

<img src='http://www.thinakural.com/2004/March/22/moorthy.gif' border='0' alt='user posted image'>

நன்றி - தினக்குரல்

- Mathan - 03-22-2004

இதுவா தருணம்?

கருணா கருணா இதுவா தருணம்?
உலகமே நேற்று
இலங்கையை உற்றுப் பார்த்தது!
இழந்து இழந்து நொந்த
ஈழத் தமிழினத்தின்
இன்னல் தீரும் கீற்றொளி தெரிந்தது!

ஒன்றுபட்ட தமிழர்க்கு
உதவிகள் நிதியாய்
நீளும் என்ற நம்பிக்கை தெரிந்தது!

தமிழர் தாயகம், சுய நிர்ணயம்
தன்னாட்சிக் குரல் கேட்டு
தென்னிலங்கைச் சிங்களம்
திகைத்து விழித்தது!

யாருமே கோராத
தேர்தல் ஒன்று வந்து,
இலங்கை வரலாற்றின்
புதியதோர் பக்கத்தை
எழுத வேண்டிய
அவலம் நேர்ந்தது!

மாவீரராய் மாண்டு மறைந்த
ஆயிரம் ஆயிரம் வீரரின்
உயிர்த் தியாகத்தால்
நேர்ந்த விளைவிது!

இந்த வேளையில்,
இந்த வேளையில்
புலி ஏன் கருணா
புல்லைத் தின்றது?

எதிரியை வென்ற
உனது வீரம் -
இயக்கப் பணிகளில்
உனது அர்ப்பணம் -
யாரிதை மறுப்பார்?

பொங்கு தமிழில்
புலிகளே தமிழர்
என்ற பெருங்குரலால்
வானமே அதிர்ந்ததைக்
கண்டவர் நாங்கள்!

ஈழத் தமிழர், விடுதலைப் புலிகள்,
இணைந்த பலத்தால்
தீர்வு கிடைக்கும்
திருப்பம் நேரும் என்ற
எண்ணம் பிறந்த வேளையில்

பூ10கம்பமாய்ப் புறப்பட்டு
பிளவுபட்டு நிற்பதற்கு
இதுவா கருணா தருணம்?

தமிழர் கண்ணீர்
குருதியாய்க் கசிய
சோற்றுக் கவளம்
தொண்டைக் குழியில்
இறங்க மறுக்க
சாவீடாய்ப் போனது
தமிழர் இல்லம்!

தகுமா கருணா
இது தகுமா?
இதுவா தருணம்?
கண்டவன் எல்லாம்
காறித்துப்பி,
கைகொட்டிச் சிரிக்கும்
காலம் நேர்ந்தது

கொள்கையை மாற்றிக் கொள்
கருணா!
எங்கள் குழந்தைகள்
சுதந்திரக் காற்றைச்
சுவாசிக்க வேண்டாமா?

ம.சண்முகநாதன்

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (21.03.04)

- Kanthar - 03-22-2004

BBC Wrote:
Kanthar Wrote:
BBC Wrote:
Kanthar Wrote:கனாவில இருந்து நான் கனாக்காணுறன் எண்டெல்லோ மற்றவை நினைக்கபோகினம்

நீங்க இலங்கையில இருந்தா இந்த தேர்தல்ல யாருக்கு போடுவீங்க அதை சொல்லுங்க

shanmuhi Wrote:கந்தரை ஒரு வழி பண்ணாமல் விட்மாட்டீர்கள் போல் இருக்கே...?

என்றை ஆச்சி கூட சொல்லமாட்டா தான் ஆருக்கு போட்டது எண்டு.....
நான் போடமுதல் எப்பிடி சொல்லுறது.........

நீங்க மற்றவங்களுடைய கருத்துக்கு பதில் எழுதும்போது உங்களுகளுடைய சொந்த கருத்தின் அடிப்படியில தானே எழுதுவீங்க. சும்மா பதில் எழுத மாட்டீங்க தானே. அதனால தான் உங்க சொந்த கருத்தை தெரிஞ்சுக்கிறதுக்காக யாருக்கு வாக்கு போடுவீங்களுன்னு கேட்டேன். புலிகளை ஏகப்பிரதிநிதிகளா ஏத்துக்கிறீங்களா என்று கேட்டேன். விவாதிக்க தானே கருத்துகளம். கருத்தை சொல்ல மாட்டேன்னு சொன்னா எப்படி? இப்பவாவது சொல்லுங்க

ராசா பிபிசி
பகிடியை விடுவம். விசயத்துக்கு வாரன்
நீங்கள் கேட்ட கேள்வி நல்ல கேள்வி.............
உதுக்கு நான் பதில் சொல்ல......தம்பி மோகன் என்ர பல்லை புடுங்க....
விளக்கமாய் பதில் தர விருப்பந்தான்..........
பப்பிலிகில சொல்லி ''பரப்புரைகள் செய்ய இங்கு அனுமதிக்கப்படவில்லை'' எனும் பனிஸ்மற் வாங்க வேணுமா?..........

இந்த பரப்புரை பதில் வேறு ஒருத்தருக்கு தான் இராவணனால் சொல்லப்பட்டது. அப்ப நீங்களும் அவரும் ஒண்ணா? :wink:

நீங்க யாருக்கு வாக்களிப்பீங்க மற்றும் என்னுடைய கேள்விக்க்கு பதில் சொன்னா அது தணிக்கை செய்யப்படும் அப்பிடின்னு நான் நினைக்கலை. நீங்க என்னமோ நழுவுறமாதிரி தான் எனக்கு தெரியுது. அப்பிடி உங்க கருத்து எல்லாத்துக்கும் பனிஸ்மெண்ட் கிடைக்கும் என்று நினைச்சா நீங்க கருத்தே எழுதப் போறதில்லையா?

- Mathan - 03-22-2004

சரி அதே கேள்வியை நம்ம ஈழவனையும் தாத்தாவையும் கேப்பம். அவங்களாவது பதில் சொல்றாங்களான்னு பார்ப்போம்.

- Mathan - 03-22-2004

<img src='http://www.indiavarta.com/gallery/TODAYSEDITIONPICTURES23MAR2004/23panel1.jpg' border='0' alt='user posted image'>

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாண தீபகற்பத்தில், தமிழர் தேசிய கூட்டணி அளித்த துண்டுப்பிரசுரத்தை ஆர்வத்துடன் பார்க்கும் சிறுமி.

நன்றி - தினமணி

- Mathan - 03-22-2004

BBC Wrote:<img src='http://www.indiavarta.com/gallery/TODAYSEDITIONPICTURES23MAR2004/23panel1.jpg' border='0' alt='user posted image'>

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாண தீபகற்பத்தில், தமிழர் தேசிய கூட்டணி அளித்த துண்டுப்பிரசுரத்தை ஆர்வத்துடன் பார்க்கும் சிறுமி.

நன்றி - தினமணி

வீட்டை காணேல்ல படத்துல ....... வேற எதுக்கோ புள்ளடி போட்டு இருக்கு ?

- Kanthar - 03-22-2004

BBC Wrote:இந்த பரப்புரை பதில் வேறு ஒருத்தருக்கு தான் இராவணனால் சொல்லப்பட்டது. அப்ப நீங்களும் அவரும் ஒண்ணா?

நீங்க யாருக்கு வாக்களிப்பீங்க மற்றும் என்னுடைய கேள்விக்க்கு பதில் சொன்னா அது தணிக்கை செய்யப்படும் அப்பிடின்னு நான் நினைக்கலை. நீங்க என்னமோ நழுவுறமாதிரி தான் எனக்கு தெரியுது. அப்பிடி உங்க கருத்து எல்லாத்துக்கும் பனிஸ்மெண்ட் கிடைக்கும் என்று நினைச்சா நீங்க கருத்தே எழுதப் போறதில்லையா?

மேனை பிபிசி
களத்தில கன றாலாமிமார் இருக்கினம்
அவை மற்றவைக்கு குடுக்கிற குடுவையை பாத்த பிறகுதான் இதை சொல்லுறன்.
என்னை என்ன மூளைக்கும் வாய்க்கும் சம்பந்தமில்லாம் கதைறன் எண்டு நினைக்கிறியள் போலகிடக்கு.

நேற்றே எழுதினான் என்ரை வோட் யாருக்கெண்டு?
தம்பி நீங்கள் வடிவா வாசிக்க வேணும்......