Yarl Forum
சுட்ட கவிதை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: சுட்ட கவிதை (/showthread.php?tid=7322)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


- Mathan - 06-29-2004

முத்தம்

<img src='http://www.dexwine.com/images/kiss.jpg' border='0' alt='user posted image'>

அன்பு தேசத்தில் ஒட்டப்பட்ட
அழகான முத்திரை

ஆழ்ந்த அன்பைக் கூறும்
அழகான சொல்

காதல் தேசத்தின்
இறுக்கமான கை குலுக்கல்

அன்பையும் காதலையும் பிழிந்தெடுத்த
இனிய மது

ஆயிரமாயிரம் தரம் எழுதியோ
சொல்லியோ
புரிய வைக்க முடியாத அன்பை
ஒரே தரத்தில் உணர வைக்கும்
உன்னத பரிபாஷை.

நன்றி - சந்திரவதனா


- kuruvikal - 06-29-2004

இன்னும் ஒன்று
STDயும் பரப்பும்
அற்புத வழிகளில் ஒன்று...!


- tamilini - 06-29-2004

Quote:STDயும் பரப்பும்
அற்புத வழிகளில் ஒன்று...!
:roll: :roll: Confusedhock:


- kuruvikal - 06-29-2004

நீங்க ஏன் முழிக்கிறீங்க.... அது STD உள்ளவங்கள் பிரச்சனையாச்சே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 06-29-2004

இந்த STD குறித்த மேலதிக விபரங்களை தாருங்களேன்.


- tamilini - 06-29-2004

ழுழித்தால் விளங்கவில்லை என்டு தன் அர்த்தம்.....


- kuruvikal - 06-29-2004

சில பாலியல் நோய்க்கான (STD) கிருமிகள்.. பாலியல் நோய்த் தொற்றுள்ளவரில் இருந்து நோய்த் தொற்றற்றவர்.... வாய்க்கு வாய் முத்தம் கொடுக்கும் போது தொற்றும் தன்மை கொண்டவை.... இரத்தக் கசிவு கலந்தால் HIVயும் இதன் மூலம் தொற்றும் வாய்ப்பும் உண்டு....!

இப்படி கவிதைகள் எழுதும் போது எச்சரிகைகளையும் கூட அனுப்புவது செய்திகள் விரைந்து பொதுமக்களை சென்றடைய உதவலாம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:


- kavithan - 06-29-2004

நல்லது குருவியண்ணை நான் எச்சரிக்கை யாகவே இருக்கிறன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- tamilini - 06-29-2004

அட நான் என்ன இது புதிச ஓரு STD என்டு நினைச்சன்.....


- Mathan - 06-29-2004

கண்ணீர் மலர்கள்

பாலைவனம் தானே என்று
பலர் நினைத்தாலும்
பாதம்பதித்த எமது மண்
எமக்குச் சோலைவனம்தான்

அறியாமையின் அழுக்குப்பிடியில்
வறுமையின் வக்கிரத்தனத்தில்
மிதவாதத்தின் சூட்சுமத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்
அங்கே சாகப் பிறந்தவர்கள்

பேரினவாதத்தின் பித்தலாட்டமும்
அரசியில்வாதியின் அசிங்கத்தனமும்
தலைவிரித்தாடுவதால்
அடிப்படை மனித உரிமைகள்
மறுக்கப்பட்டு மறக்கப்பட்டு
செத்துக் கொண்டிருக்கின்றது

அடக்கு முறையாளர்களால்
தடம்பதித்த அட்டூழியத்தை
தட்டிக்கேட்கும் தமிழனுக்கு
தானமாகக் கிடைப்பதெல்லாம்
மரணம் என்ற கொடூரம்தான்

அமைதியென்ற பெயரால்
அரங்கேறும் கொடுமையினால்
மனையிழந்தோர் எத்தனைபேர்
மகவிழந்தோர் எத்தனைபேர்
வெட்டிக்கொன்றார்கள் சுட்டுச்சென்றார்கள்
ஆளைக் கூட்டிப்போய் தட்டிப்போட்டார்கள்

இரவும் பகலும் இலவசமாய்
இலங்கையில் கிடைப்பது
இந்த மரணம் ஒன்றுதான்

வாழவேண்டும் என்ற ஆசை
வருவதும் பாவமா
கண்ணுக்குள் தெரியும்
கனவுகளைக் கூட கருத்தரிக்க விடாமல்
கலைத்துவிடும் கரிச்சவண்டே
சிறகடித்துச் சிரிக்கும்
சின்னச் சின்ன ஆசைகளில்
பறக்கத்துடிக்கும் இதயங்களின்
பாவத்தின் சிறகுகளை
அறுக்க நினைப்பது என்ன நியாயம்;

துப்பாக்கிக் குண்டுக்குப் பயந்து
தொலைதூரம் ஓடிவந்து
பத்தைக்குள் பதுங்கையிலே
படுத்திருந்த பாம்பு தீண்டி
பரலோகம் செல்லும்
பரிதாபப் பிறவிகளின்
மரணங்கள் சுமந்த கல்லறைகள் மீது
கண்ணீர் மலர்கள் முத்தமிடுகின்றன
கண்ணீர் மலர்கள்


நன்றி - சௌந்தரி சிவானந்தன்


- tamilini - 06-29-2004

Quote:இரவும் பகலும் இலவசமாய்
இலங்கையில் கிடைப்பது
இந்த மரணம் ஒன்றுதான்
என்ன இனிமையான வரிகள்........


- Mathan - 07-18-2004

தீயினில் ஒளிர்ந்த தீபங்களே!

<img src='http://www.tamilcinema.com/cinenews/images/thee01.jpg' border='0' alt='user posted image'>

கனவு கண்டோம் நாம்
கண் மூடி வாய் பிளந்து
கனவு கண்டோம் நாம்!
நீங்கள் வளர்ந்து
நாடாள்வதாயும்,
உங்கள் காலத்தில்
இந்தியா ஒளிர்வதாயும்.

சின்ன சின்ன வித்துகளாய்
முளைப்பாரி போட்டோம்.
முளைக்க முன்னே
செல்லரித்துப் போனதென்று
சொன்ன சேதி
பொய்யாகாதோவெனக்
கனவு கண்டோம்.

கூரைக் கட்டடத்தில்
குத்து விளக்கிருக்க
வானைத் தொடும்
அடுக்குமாடிக் கட்டடத்துக்கும்,
வானூடு போகும்
செய்மதிகளுக்கும்
கனவு கண்டோம்.

மரணத்தின்
வாசற்படிகளில்
உங்களை இருத்திவிட்டு,
மனித குல மேம்பாட்டிற்காய்
ஆலைகள் அமைக்கவும்
சாலைகள் போடவும்
கனவு கண்டோம்.

உங்களை எரித்த தீ
எங்கள் ஏழ்மையையும்,
செல்லரித்துப்போன
அரசியலையும்,
செல்லாக்காசான
தலைவர்களையும்
எரித்திடாதோவெனக்
கனவு கண்டோம்.

ஒவ்வொரு நிகழ்வின் பின்னும்
அனுதாபக் கண்ணீரையும்
ஆறுதல் வார்த்தைகளையும்
எவர் மீதாவது பழிபோடும்
அறிக்கைகளையும்
சமர்ப்பித்துவிட்டு
இத்தோடு தீரும் அவலமென்று
கனவு மட்டுமே கண்டோம்.

Thanx: ஈழநாதன்


- Mathan - 07-18-2004

கவிதையுடன் இணைத்துள்ள புகைப்படம் மனதை வருத்துவதாக இருந்தாலும் அது இந்த விபத்தின் கடூரத்தை காட்டுவதால் அதனை இணைத்துள்ளேன். பார்க்க சங்கடமாக இருந்தால் மன்னிக்கவும்.


- Mathan - 07-18-2004

இந்த சம்பவம் குறித்து மேலதிக புகைப்படங்கள் பார்க்க விரும்பினால் ....

http://news.bbc.co.uk/1/hi/in_pictures/3900631.stm


- tamilini - 07-18-2004

மனதை உருக்க வைத்த சம்பவத்தை கவி முலம் வடித்தவருக்கும் அதனை அணைத்த BBC கும் வாழ்த்துக்கள்......


- Mathan - 08-12-2004

மீண்டும் பாடுமா மீன்?

அமைதியாக
அலையடித்துக் கொண்டிருந்த
சிறுகுளத்தில்
ஓர் காலம்
மீன்கள் பாடினவாம்.

மட்டு நகர் வாவியழகும்,
மாமாங்கக் கோவிலழகும்,
கொட்டோ கொட்டெனக்
கொட்டிக்கிடக்கும்
நெல்வயல்களின்
நிறை மணியழகும்.

கொக்கட்டி மரங்களின்
கொப்பரில் தூங்கும்
தேன் வதைகள் அழகும்,
வெட்டி எடுக்கையில்
குத்தி விட்டுப்போகும்
தேனீக்களின் பேரழகும்.

மட்டுநகர் வாவியின்
மீன்கள் பாடினவாம்.
மீன் பாடும் தேனாடென்று
புலவர்கள் பாடினராம்!

தமிழையும் வீரத்தையும்
தாலாட்டில் கலந்தூட்டி
பிள்ளைகளை வளர்த்த
பெற்றோரைப் பாடினவாம்.

சுற்றமும் நட்பும்
சூழ வாழ்ந்திருந்து
நெற்றி வியர்வைகளை
நெல்மணியாக்கிய
மக்களைப் பாடினவாம்.

பௌர்ணமி நாட்களில்
பகலவன் தாழ்ந்த பின்னர்
கடலரசன் பாட்டுக்கு
வாவி மகள் ஆடினாளாம்.

யாரின் சாபமோ
யார் செய்த பாவமோ
ஊரே ஒரு பொழுதில்
ஓய்ந்து போனதே!

சோறுடன் தமிழுணர்வை
பிசைந்தூட்டி வளர்த்தவர்கள்
கசிந்த விழியோரம்
காய்ந்து கிடக்கிறதே!

விதைக்காலமே காத்திருக்கும்
விளைநிலங்கள்,
துப்பாக்கிச் சன்னத்தால்
துளையுண்ட தேன் கூடுகள்,

இரையாத கடல்,
ஆடாத வாவி,
சோகப் பெருமூச்சில்
நெட்டுயிருக்கும்
மக்கள்

அவர்களுடன் நானும்
கேட்கும் ஒரே கேள்வி!

மீண்டும் பாடுமா
மீன்?

Thanx: ஈழநாதன்


- vasisutha - 08-12-2004

<span style='font-size:23pt;line-height:100%'>நட்பிற்கு முகமில்லை



எப்போதும் கண்கள்

பார்த்துப் பேசும்

பழக்கம் எனக்கு.

முகம் பாராமல்

நட்பொன்று வளரலாம்

என்பதே தொலைபேசியில்

நீ அறிமுகமானபோதுதான்

தெரிய வந்தது.

உன் குரல் வசீகரமும்

சரளமான பேச்சும்

உனக்கோர் முகத்தை

என் மனதில் வரைந்தது.

நீயும் எனக்கோர்

முகம் வரைந்திருப்பாய்.

நம் நட்பு வளர்வதில்

உடன்பாடுதான் என்றாலும்,

சந்திப்பு நிகழ்வதில்

உடன்பாடில்லை.

உனக்கான என் முகமும்

எனக்கான உன் முகமும்

அழிந்து போவதில்

எனக்கு விருப்பமில்லை</span>

<b>அனுஷிராம்</b> (ramesh.r@team.indiainfo.com)

THATSTAMIL.COM


- vasisutha - 08-12-2004

புதிய திசை அனுஷிராம்

ஊரார் சொல்லும் வடக்கு
தெற்காக காட்சி தருகிறது எனக்கு.
எல்லாருக்கும் ஓர் திசை
என்பது கட்டாயமல்லவே?

என்ன செய்வது...!
எதையெல்லாம் நீங்கள்
கிழக்கு என்கிறீர்களோ
அதெல்லாம் எனக்கு
மேற்காகத் தெரிகிறது.

நான் சூர்யோதயம் தேடும்
திசையில் உங்கள் உலகம்
அஸ்தமனம் காண்கிறது.
திசைமாறு தோற்றப்பிழை
ஏற்படுவது என் தவறல்ல.

உங்கள் திசைகள் அனைத்தையும்
மறுக்கும் திமிர் எனக்கில்லை.
எனக்கென ஒரு திசை அமைவதும்
நான் விரும்பி நேர்வதில்லை.

பெரும்பாலும் அந்த கட்டாயத்திற்கு
என்னை ஆளாக்குவது நீங்கள்தான்.
உங்களது திசையில் இருக்கும்
கற்களும், முட்களும்தான்
எனது திசையை மாற்றின.

உமது பழைய திசையின் குறைகளே
எமது புதிய திசையின் காரணிகள்.
நீவிர் இதை உணர்வீராயின்
உமது திசைகளும் மாறும்.

THATSTAMIL


- vasisutha - 08-12-2004

Quote:விதைக்காலமே காத்திருக்கும்
விளைநிலங்கள்,
துப்பாக்கிச் சன்னத்தால்
துளையுண்ட தேன் கூடுகள்,

அருமையான கவிதை.


- kuruvikal - 08-12-2004

vasisutha Wrote:
Quote:விதைக்காலமே காத்திருக்கும்
விளைநிலங்கள்,
துப்பாக்கிச் சன்னத்தால்
துளையுண்ட தேன் கூடுகள்,

அருமையான கவிதை.

வெறுமையான வார்த்தைகள்
ஒருவேளை சோத்துக்கும் ஆகாது....! :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->