![]() |
|
தூறல்......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தூறல்......... (/showthread.php?tid=3485) |
- Mathan - 11-02-2005 நழுவ முயற்சிக்கலை பூனைகுட்டி. என்னுடைய கருத்தை சொல்லவும் செய்கின்றேன், சில இடங்களில் கருத்து எழுதிய பின்பு வரும் எதிர்வினைகளுக்கு தொடர்ந்து எழுத நேரம் கிடைப்பதில்லை, அப்படியே விட்டு விடுகின்றேன். இன்று சில பார்க்காத விடுபட்ட தலைப்புக்களை ஒன்றொன்றாக பார்த்து கொண்டிருந்தேன். அப்படி இருந்தும் பாதி நேரம் இன்னுமொரு காதல் தலைப்பை படிப்பதில் போய்விட்டது. - ப்ரியசகி - 11-03-2005 எல்லோருக்கும் நன்றி...ரொம்ப நன்றி... ம்ம் ப்ரியன்..என்ன லீவுக்காக..மழைக்க நனையுறீங்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ம்ம்..நான் அதுக்காக..இல்லை..ஏதோ ஆசை..பட்..எனக்கு இப்போ காய்ச்சல் வர்றேல்ல..ஒரு தும்மல் கூட இல்லை..பழகிட்டுதோ என்னவோ...பட்..அம்மாக்கிட்ட தப்புறது தான் கஷ்டமாக இருக்கு :roll: :? - ப்ரியசகி - 11-03-2005 பூனைக்குட்டி நன்றி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Quote:ப்ரியசகியின் குட்டி கவிதைகள் நல்லா இருக்கு. ஏன் அண்மைகாலகமே குட்டி கவிதைகள்? முன்பு போல பெரிதும் சின்னதுமாக எழுதலாமே? ஓம் மதன்..நீங்கள் எனக்குச்சொல்லப்போய் குட்டிக்கிட்ட மாட்டிட்டீங்கள் போல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . ம்ம்..என்ன பெரிதாக எழுதப்போனால்..அந்த சொற்கள்..வசனப்பிழைகள் வந்திடுமோ என்று...ஒரு பயம் தான். எப்பவும் பெரிதாக எழுதப்போகும் பொழுது..சொற்களை அழகாக தேடி எடுப்பது ரொம்ப கஷ்டம். கவிகள் பலது எழுதியவருக்கு அது சுலபம். பட் நமக்கு அப்படி இல்லையே...அதுதான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Mathan - 11-03-2005 உண்மையில் பெரிய கவிதைகளை விட சிறிய கவிதைகள் தான் கஷ்டம் என்று நான் நினைத்தேன், ஏன் என்றால் சொல்லவருவதை ஒரு சில வரிகளுக்குள் அதன் தாக்கம் குறையாதபடி சொல்லவேண்டுமல்லவா? - ப்ரியசகி - 11-27-2005 <img src='http://img345.imageshack.us/img345/4241/oo10gt.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img519.imageshack.us/img519/7951/deepam8kk.gif' border='0' alt='user posted image'><img src='http://img519.imageshack.us/img519/7951/deepam8kk.gif' border='0' alt='user posted image'><img src='http://img519.imageshack.us/img519/7951/deepam8kk.gif' border='0' alt='user posted image'><img src='http://img519.imageshack.us/img519/7951/deepam8kk.gif' border='0' alt='user posted image'> அந்தி வான் கொள்ளும் நிறம் போல் அழகிய வண்ண உடல் கொண்டேன்... மலர் கூட்டங்களுக்குள் மங்கை நானும் சேர்வேன்.... சத்தமின்றி பிறப்பேன்... நித்தம் அழகாய் மலர்வேன்... ஒரு நாளோடு வாழாமல் சில நாட்கள் வாழும் வரமும் கொண்டேன்!! என்னை ஒதுக்கும் இந்த மானிடர்களுக்குள் என்ன கொண்டு என்ன....... காகிதப்பூ என்று கரையில் ஒதுக்கி விட்டனரே... ஒரு நாள் வாழும் என் தோழிகள் ஒரு முறை ஏனும் செல்வர் பூஜைக்கு சிலர்... மங்கையர் கூந்தல் தேர் ஏறி சுற்றுவர்... என்னை ஏனோ ஒதுக்கினரே......... கவிஞர் என்னவோ வரைவர் கவிகளாய் அர்த்தங்கள் நூறு சொல்லி... எவரும் அறிந்ததிருப்பாரா....? என் மனதில் இருக்கும் ஆசையை....? என் மனது... மெல்ல தீண்டும் தென்றலில் உணர்ந்தது..அவர்கள் மென்மையை... என்னில் பட்டு தெறிக்கும் மழை துளிகளில் கண்டது..அவர்களின் வேகத்தை.... சுட்டு எரிக்கும் கதிர்களில் பார்த்தது..அவர்கள் உறுதியை... இத்தனை தெரிந்தும்... என் ஆசை கொண்டது சோகம்.... என் ஆசை எல்லாம்... கல்யாண வீட்டில் மாலையாக அல்ல.. கடைசி ஊர்வலத்தில் வளையமாக அல்ல.. கன்னியர் கூந்தலில் வாசனையாக அல்ல... இன்று கார்த்திகை 27...... இன்றாவது...என்னை... தண்ணீர் தாகத்துக்காய் வாழைத் தண்டினை பிழிந்து குடித்து விட்டு தாயக தாகத்துக்காய் உயிரை கொடுத்து விட்டு வேர்களாய் துயில்பவரை... சென்று என் கண்ணீரினால் தாலாட்ட வேண்டும் என்பதே... "எங்கே செல்கிறீர்கள்.... என்னையும் அழைத்து செல்லுங்கள்..." காத்திருக்கின்றேன்... இங்கே செல்லும் எவராவது என்னையும் கூட்டி செல்வார்களா என்று... ஏக்கத்தோடு........ <img src='http://img483.imageshack.us/img483/9018/poo3ug.jpg' border='0' alt='user posted image'> <b>இது வீரா எழுதிய "ஏக்கங்களுடன்...."என்ற கவியை சார்ந்து எழுதியது</b>. |