Yarl Forum
ஜனாதிபதி தேர்தல் 2005 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஜனாதிபதி தேர்தல் 2005 (/showthread.php?tid=2828)

Pages: 1 2 3 4 5 6 7 8


மகிந்தர் வென்றார். சிங்களமக்களின் மனநிலை வெளிப்பாடு! - thiru - 11-18-2005

<span style='font-size:30pt;line-height:100%'>மகிந்தர் வென்றார். சிங்களமக்களின் மனநிலை வெளிப்பாடு!</span>

வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுவிட்டன. இன்னும் சிறிதுநேரத்தில் உத்தியோக பூர்வ
முடிவுகள் வெளியாகவுள்ளன.

அனைத்துத் தேர்தல் தொகுதிகளும் (182) எண்ணி முடிக்கப்பட்ட நிலையில்
பின்வருமாறு நிலைவரம் உள்ளது.

<b>மகிந்தர்: 4 880 950 (50.33%) </b>

<b>ரணில்: 4 694 623 (48.4%)</b>

தமிழரின் வாக்குகளே சனாதிபதியைத் தீர்மானித்தன என்பது ஆணித்தரமாக நிரூபணமா
கும் வகையில் 186327 வாக்குகளால் மட்டுமே ரணில் பின்தங்கியிருக்கிறார்.

தமிழ் மக்கள் சமாதானத்தை யாசிக்கும் அதேவேளை சிங்கள மக்கள் எதனை விரும்புகிறார்கள் என்பதையே இந்த முடிவுகள் எடுத்தியம்புகின்றன.

வாக்களிப்பிலிருந்து தமிழ்மக்கள் ஒதுங்கிக்கொண்டதன் மூலம் சர்வதேசத்திற்கு சிங்கள மக்களின் உண்மையான உள்ளக்கிடக்கை தெரியவந்துள்ளது.

இனி சர்வதேச சமூகம் என்ன முடிவை எடுக்கும்?
தரவு: நன்றி: http://www.srilankanelections.com/index.htm


- ThamilMahan - 11-18-2005

தேர்தல் முடிவு சந்தேகத்துக்குரியதே. சனாதிபதியாக வருபவர் அறுதிப் பெரும்பான்மை அதாவது 51% இருக்க வேண்டும் என்பதாகதான் இருக்கவேண்டும். ஆனால் மகிந்த 50.33% மட்டுமே பெற்றிருக்கிறார். தேர்தல் ஆணையாளர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சபாஷ் சரியான போட்டி (யார் தமிழ் மக்களை ஓரங்கட்டுவது என்பதில்)


- sooriyamuhi - 11-18-2005

சிங்கள மக்கள் எதை நினைத்து வாக்களித்தார்களோ தெரியவில்லை?
முடிவைப்பார்க்கும்போது சிங்களத்திலும் கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் போரை விரும்பவில்லைப்போல் தெரிகிறது? அல்லது அவர்கள் ரணிலின் மற்றைய வாக்குறுதிகளுக்காக வாக்களித்தார்களா?

ஆனால் ஒன்று மட்டும் உண்மை.......
<b>மகிந்தவின் வெற்றியும் ரணிலின் தோல்வியும் தமிழ் மக்களால்தான</b>


மிகப் பெறுமதியான ஒரே ஒரு வாக்கு! - Vaanampaadi - 11-18-2005

மிகப் பெறுமதியான ஒரே ஒரு வாக்கு!
நேற்றுநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர் தலில் மிகப்பெறுமதியான வாக்கு ஒன்று செலுத்தப்பட்டுள்ளது. இந்த வாக்குக்காக 42 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
யாழ். தேர்தல் மாவட்டத்தைச் சேர்ந்த விடு தலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச மக் கள் வாக்களிப்பதற்கென முகமாலையில் இரா ணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதற் கான மொத்தச் செலவு 42 லட்சம் ரூபா என யாழ். செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
முகமாலை இராணுவச் சோதனை நிலையப் பகுதியில் சுமார் 1,500 அடி பிரதேசத்தில் இந் தக் கொத்தணி வாக்களிப்பு நிலையம் அமைக் கப்பட்டது. இதற்கு மட்டும் ரூபா 12 லட்சம் செலவிடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து வாக்குச் சாவடிக்குச் செல்வதற்காக செயலகத் தால் அமர்த்தப்பட்ட வாகனங்களுக்கான செலவு மட்டும் 30 லட்சம் ரூபா எனத் தெரிவிக்கப் பட்டது.
இது தவிர சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் அங்கு கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர் களுக்கான உணவு, குடிதண்ணீர் என்பவற் றுக்கான செலவு மேலதிகமானது. கொழும்பில் இருந்து இந்த வாக்களிப்பு நிலையத்துக் கென விசேடமாக அனுப்பப்பட்ட ஊழியர் களின் வான் வழியான போக்குவரத்துச் செல வும் மேலதிகமாக இருக்கின்றது.
91 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிப்பதற் காக இவ்வளவு செலவுகளுடன் பிரமாண்ட மான ஏற்பாடுகளுடன் இந்தக் கொத்தணி வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது. ஆனால், ஒருவர் மட்டுமே நேற்று இங்கு வாக்களித் தார். கிளிநொச்சியில் இருந்து வந்து அவர் தனது வாக்கைச் செலுத்தினார். ரணிலுக்கே தான் வாக்களித்தார் என்று அவர் தெரிவித் தார்.

Uthayan


- வியாசன் - 11-18-2005

ThamilMahan Wrote:தேர்தல் முடிவு சந்தேகத்துக்குரியதே. சனாதிபதியாக வருபவர் அறுதிப் பெரும்பான்மை அதாவது 51% இருக்க வேண்டும் என்பதாகதான் இருக்கவேண்டும். ஆனால் மகிந்த 50.33% மட்டுமே பெற்றிருக்கிறார். தேர்தல் ஆணையாளர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சபாஷ் சரியான போட்டி (யார் தமிழ் மக்களை ஓரங்கட்டுவது என்பதில்)

இதுதான் சிறுபான்மையினருக்கு இருக்கிற ஒரேயொரு பாதுகாப்பு


- மேகநாதன் - 11-18-2005

எதிர்பார்த்த மாதிரி மகிந்தவின் வருகை/பழைய பாத்திரத்தில் புதிய நடிகர் அக அமைந்தாலும், இலங்கைத் தீவு தொடர்பான "சூழல்களும்",சிறிலங்கா மற்றும் பன்னாட்டு "அக்கறை(?)யாளர்களும்" "திரிசங்கு நிலைகளை" தரிசிக்கப் போகிறார்கள் எனலாம்.
மாறாக,தமிழர் தாயகம் தனது "பாய்ச்சல்"களை,சாத்தியமான
சகல தளங்கள்/பரிமானங்களூடு முன்னெடுக்க "காலம் எதிர்பார்த்த காலம்" காத்திருக்கிறது.சனநாயக/இராசதந்திர அரங்குகளில் புலம் பெயர்ந்த தமிழர் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் இனி/இன்னும் ஏராளம்.....தமிழர் எனும் ஓரணியில் தேரிழுப்போம்


- மேகநாதன் - 11-18-2005

தலைப்பிட்டவருக்கு வாழ்துக்கள்:அருமையான அரசியல்/உளவியல் சார் தலைப்பு.
திரு,நீங்கள் தானா "ரஷ்ஷியாவிலிருந்து வைத்திய கலாநிதி திருமகள்" என்று தாயகம் சார் பயனுடைய விடயங்கள் பல்வேரு இணையத் தளங்களில் தருவதும்?"சேர்த்து வைத்த" நன்றிகளும் வாழ்துக்களும்....நற்பணி தொடர்க....


மனதைக் குடைந்து கொண்டிருப்பவர்களுக்கு:தேர்தல் முடிவுகள் - வினித் - 11-18-2005

மகிந்தவா? ரணிலா? மனதைக் குடைந்து கொண்டிருப்பவர்களுக்கு தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவிடும்.
<img src='http://img485.imageshack.us/img485/2847/car9ix.jpg' border='0' alt='user posted image'>
யாரோ இருவரில் ஒருவர் ஜனாதிபதி மாளிகைக்குக் குடித்தனம் போகப் போகிறார். தேர்தல் இந்த வருடமல்ல அடுத்த வருடம் தான் என ஆளும் தரப்பு; கூறி மழுப்பியபோது ஐக்கிய தேசியக் கட்சி விட்டுவிடவில்லை. மக்கள் சக்தி என்ற மிகப் பிரமாண்டமான தொடர் பேரணியை நடத்தி தமது கட்சிக்கான ஆதரவையும் தேர்தலின் அவசியத்தையும் வெளிப்படுத்தியது.
அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை நினைத்துப் பார்க்க முன்னரே நினைவூட்டி பிரசாரத்தையும் தயார்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சி என்பது இங்கு கவனிக்க வேண்டியது. எனினும், தேர்தல் இவ்வருடமா அல்லது அடுத்தவருடமா? என்பதைத் தீர்மானிக்கின்ற பொறுப்பு சிறிலங்காவின் உயர் நீ திமன்றத்திடம் சென்றதன் பின்னர் உயர்நீதிமன்ற தீர்ப்பு ஐக்கிய தேசியக்கட்சிக்குச் சாதகமாய் இருந்தது.

உடனடியாக ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதி வேட்பாளர் என்பது வெளிவரவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமது வேட்பாளரை நிறுத்துவதில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு இறுதியில் மகிந்த ராஜபக்ஷதான் வேட்பாளர் என்பது தீர்மானிக்கப்பட்டது.



இக்கால கட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி தெளிவாகத் தெரிந்தது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. வடக்குக் கிழக்கு தமிழ் மக்களது வாக்குகள் ரணில் விக்கிரம சிங்காவுக்குக் கிடைக்கும் என நம்பியிருந்ததுதான்.

இதனை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்த்தது போல் மகிந்த அணியும் நம்பினர். இதனையடுத்து தென்னிலங்கை மக்களின் வாக்குகளைக் குறிவைத்து மகிந்த தரப்பு தீவிர பிரசாரக்களத்தில் இறங்கினார். இனவாதக் கட்சிகளான ஜே. வி.பி, ஹெல உறுமய உட்பட 24 கட்சிகளின் ஆதரவு மகிந்தவை வெற்றியின் விளிம்பிற்குக் கொண்டு சென்றது.

இத்தகைய நிலையில் யார் வெற்றி பெறுவார் என்பதைத் தேர்தல் வரை கணிப்பிட முடியாத நிலையில் தான் நேற்றுத் தேர்தல் நடைபெற்றது. இன்று வெளியாகும் முடிவுகளில் இருந்து தெரிவாகும் ஜனாதிபதி அடுத்து என்ன நகர்வினை மேற்கொள்வார் என்பது தான் இப்போது அறிய வேண்டிய விடயம். மகிந்த வந்தால் போர், ரணில் வந்தால் சமாதானம் என்ற கருத்துத் தோற்றம் பெற்றுள்ளது.

இது உண்மையில் நிகழப்போவதல்ல. இருவருடைய தேர்தல் விஞ்ஞாபனங்கள், எண்ணங்கள், குறிக்கோள் எல்லாம் ஒன்றுபட்டு நிற்பதால் யார் வந்தாலும் சமாதானத்தை இவர்கள் கொண்டு வரப்போவதில்லை.

அப்படியாயின் சண்டை வருமா? என்ற கேள்வி எழுகின்றது. மகிந்தவைப் பொறுத்தவரை போர்நிறுத்த உடன்படிக்கையில் மீளாய்வு செய்யவிரும்புகிறார். இதனை ஒருபோதும் தமிழீழ விடுதலைப்புலிகள் விரும்பமாட்டார்கள். அதேநேரம் அனுசரணைப் பணியினை மேற்கொண்டு வரும் நோர்வேயை ஓரங்கட்டிவிட்டு இந்தியாவை உள்ளிழுப்பதற்கான திட்ட யோசனையையும் மகிந்த ராஜபக்ஷ கொண்டிருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத இயக்கமாகத் தடைசெய்திருக்கும் இந்தியா சிறிலங்காப் படைத்தரப்பிற்கு இராணுவ ரீதியான உதவிகளை மேற்கொண்டு வரும் நிலையில் நடுநிலைமைத் தன்மை கொண்ட நாடாக இந்தியாவைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு தயாராகவில்லை.

ஏற்கனவே ஈழப்பிரச்சிரனையில் தலையிட்டு மூக்குடைபட்டு போன இந்தியா இன்னும் ஒருமுறை தலையை நுழைக்கும் என்பதற்கான சாத்தியமுமில்லை. அதேவேளை நோர்வேயின் சமாதானப் பணியினை எந்தவொரு நாடும் விமர்சிக்கவில்லை. ஐரோப்பிய நாடுகள் கூட நோர்வேயின் பணிகளுக்கு ஆதரவு வழங்கி வருகின்றன. அத்துடன் அமெரிக்காவுடன் சினேகபூர்வ உறவு கொண்ட நோர்வேயை ஓரங்கட்டி ஈழப்பிரச்சினையில் நேரடியான தலையீடு செய்வதை இந்தியா எந்தளவிற்கு கையாளும் என்பது கேள்விக்குறி?



இது மட்டுமன்றி தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் உணர்வலைகள் கணிசமான அளவு உள்ள நிலையில் சிங்கள தரப்பிற்கு சார்பான போக்கினை இந்தியா மேற்கொள்ளுமானால் அது தமிழகத்தில் ஈழத்தமிழ் ஆதரவு அரசியல் கட்சிகளுடனான உறவில் விரிசல் நிலையை ஏற்படுத்தும்.

எனினும் இந்தியா மறைமுகமாக சிங்கள தரப்பிற்கு உதவிகளை வழங்க முன்வரும் என்பது உறுதி!

மறுபுறம் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய நாடுகள் தற்காலிக பயணத்தடையை விதித்துள்ள போதும் சமாதானம் ஏற்படவேண்டும் என்பதில் ஆர்வமாகவுள்ளன.

ஒற்றையாட்சி முறையில் தமிழ் மக்களது பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்பது ஐரோப்பிய நாடுகள் கூட உணர்ந்த உண்மை. அத்துடன் தற்போதுள்ள போர் நிறுத்தம் பலப்படுத்தப்பட வேண்டும். அது தொடர்ந்து கடைப்பிடிக்கப்படவேண்டும் என்பதிலும் ஐரோப்பிய நாடுகள் ஆர்வமாயுள்ளன.

இத்தகைய சூழலில் நோர்வே, ஐரோப்பிய நாடுகளின் எண்ணங்களை புறந்தள்ளி விட்டு இந்தியாவுடன் கைகோர்த்துக் கொண்டு ஒற்றையாட்சி தீர்வை முன்வைப்பது என்பது மகிந்தவுக்கு இலகுவான காரியமல்ல. அவ்வாறு முன் வைக்கப்படும் போது மீண்டும் போர் மூழ்வது என்பது தவிர்க்கமுடியாத தொன்றாகிவிடும்.

இத்தகைய நிலையில் சிங்கள அரசு சர்வதேச சமூகத்திடம் போரை நியாயப்படுத்த முடியாத சூழல் ஏற்படும்.

இன்னுமொரு பிரதான விடயம் சமாதானச் சூழலை தோற்றுவிப்பதானால் முதலில் ஒட்டுப்படையினரின் ஆயுதங்கள் களையப்படவேண்டும். இது போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இவ்விடயத்தில் சந்திரிகா அரசு மெத்தனப்போக்கை கடைப்பிடித்து வந்தது.

இனிவரும் ஜனாதிபதி இவ்விடயத்தில் இறுக்கமான போக்கினை கடைப்பிடிக்க வேண்டும். ஆயுதங்கள் களையப்பட்டு ஒட்டுப்படைகள் தமிழர் தாயகத்தை விட்டு வெளியேற்றப்பட வேண்டும். கண்காணிப்பு குழுவினர் கூட ஒட்டுப்படைகளுக்கு சிறிலங்காப் படையினர் ஆதரவு வழங்கி வருவதை உறுதிப்படுத்தியுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட போதும் சர்வதேச சமூகமும் சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு புதிய தலைவருக்கு அழுத்தம் கொடுக்கலாம். இதனை இனவாதக் கூட்டில் வெற்றியடைந்த தலைவராக இருந்தால் இதுவும் தர்ம சங்கடத்தை ஏற்க வாய்ப்புள்ளது.

இது மகிந்தவாக இருந்தால் போரைத் தொடங்கவும் முடியாது சமாதானத்திற்கு நகரவும் முடியாது. இனவாதத்தில் கட்டுண்டு உழலுகின்ற சூழலை நிச்சயம் தோற்றுவிக்கும்.

ரணில் ஜனாதிபதியானால் பேச்சுவார்த்தை என்று காலத்தை நீடித்துச் செல்வதை தமிழ் மக்களோ தமிழீழ விடுதலைப்புலிகளோ விரும்பப் போவதில்லை. அமெரிக்கா உள்ளிட்ட உலக வல்லரசுகளின் உதவியுடன் சிங்களப் படைகளை நவீன மயப்படுத்தும் அதேவேளை சர்வதேச வலைப் பின்னலினால் விடுதலைப்புலிகளை சிக்க வைப்பதற்கான ராஜதந்திர முயற்சியையே ரணில் தரப்பு மேற்கொண்டு வருகின்றது.

ரணில் வெற்றி பெற்றால் மேற்கூறப்பட்டதையே மேற்கொள்வார். இவ்விருவரது அணுகுமுறைகளையும் ஆழ நோக்குகையில் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கான இதய சுத்தியுடனான நெகிழ்வுப்போக்கு கொண்ட கொள்கைகள் இல்லை.

எனவே தமிழ் மக்கள் இந்தத் தேர்தலை புறக்கணிக்காது ரணிலுக்கு அமோக ஆதரவை வழங்கியிருந்தாலும் கூட ரணில் சமாதானத்தை ஏற்படுத்தப் போகிறவர் அல்ல. இந்த நிலையில் போர் எப்போது மூளும் என்ற கேள்வி எழுகின்றது.

புதிதாக வரும் ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு எவ்வாறான அணுகுமுறைகளை கையாளப்போகின்றார் என்பதில் தான் தேசியத்தலைவரின் மாவீரர்நாள்உரை அமையப் போகின்றது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மாவீரர்தினஉரை விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திவிடும்.

அதேநேரம் சமாதான சூழலைப் புறந்தள்ளும் சிங்கள அரசுகள் மீது தமிழினம் தமது விடுதலைப் போராட்டத்தை முன்நகர்த்த முயற்சிக்குமானால் சர்வதேசசமூகம் அதனை நியாயப்படுத்த வேண்டிய நிலையையே தோன்றும்.

இவற்றை நன்கு அவதானிக்குமிடத்து ஜனாதிபதி தேர்தலும் அதில் வெற்றி பெறும் ஜனாதிபதியின் போக்குக்கள் சர்வதேச சமூகத்தை அதிருப்திக்கு உள்ளாக்குமாகவிருந்தால் நிச்சயம் அது தமிழ் மக்களுக்கு ராஜதந்திர ரீதியில் சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என்பது உறுதி!

இந்நிலையில் விடுதலைப் புலிகள் கடந்த மூன்றரை வருடத்திற்கு மேலாக போர் நிறுத்த உடன்படிக்கைக்கு அமைவாக கடைப்பிடித்த அமைதி தற்போது ஆபத்திலுள்ள போர்நிறுத்த உடன்பாடு என்பவற்றை கவனத்திற் கொண்டு சமாதான நகர்வினை அரசும் புதிய ஜனாதிபதியும் உத்வேகத்துடன் மேற்கொள்ள வேண்டும். மாறாக சிங்கள தரப்பு மீண்டும் ஒரு நிஜயுத்தத்தை திணிப்பார் களானால் அதனை எதிர்கொள்கின்ற வலிமை பன்மடங்காக தமிழர் தாயகம் பெற்றிருக்கின்றது.

அது நிச்சயம் தமிழீழ இலட்சியத்தை நனவாக்கி விடும். மாறாக சிங்கள தரப்பு சர்வதேச சமூகத்திடம் போரைத் திணிக்கப் போவதற்கான நியாயத்தை எந்தவடிவத்திலும் உணர்த்த முடியாது என்பது உண்மை!

http://www.battieezhanatham.com/weeklymatt...1/peravena.html


- thiru - 11-18-2005

sooriyamuhi Wrote:சிங்கள மக்கள் எதை நினைத்து வாக்களித்தார்களோ தெரியவில்லை?
முடிவைப்பார்க்கும்போது சிங்களத்திலும் கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் போரை விரும்பவில்லைப்போல் தெரிகிறது? அல்லது அவர்கள் ரணிலின் மற்றைய வாக்குறுதிகளுக்காக வாக்களித்தார்களா?........................

பிரதான கட்சிகளுக்கு வழக்கமாகவே கணிசமானளவு நிலையான வாக்கு வங்கி- அதாவது ஆதரவாளர்கள்- உண்டு.

அத்தகையவர்களது வாக்குகளுடன் இலங்கைத் தீவின் சிறுபான்மை இன மக்களது பெருவாரியான வாக்குகளும் கலந்துதான் ரணிலின் இந்த மொத்த வாக்கு எண்ணிக்கை அமைந்திருக்கிறது.

எனவே இந்த சிறுபான்மை மக்களது -சமாதானத்துக்காக அளிக்கப்பட்ட வாக்குகள்- கழிக்கப்பட்டு எஞ்சும் மிகுதிதான் பெரும்பான்மை மக்களது வாக்குகளாகக் கணிக்கப்படவேண்டும்.

ஆனால் அதிலும் நிலையான வாக்கு வங்கியை (இவர்களுக்கு சண்டையா சமாதானமா என்பது ஒரு பொருட்டல்ல. எது நடந்தாலும் யானைக்குப் புள்ளடியிடுவதே பிறவிப் பெருங்கடன் என்று வாழ்பவர்கள் இவர்கள்) கழித்துப் பார்த்தால் எஞ்சும் பெரும்பான்மை இன மக்களே சமாதானத்துக்காக ரணிலுக்கு வாக்களித்தனர் என்று சொல்லலாம்.

அது அப்படியிருக்க, இப்பொழுது இலங்கைத் தீவிலிருந்து கிடைக்கும் தகவல்களின்படி தமிழர் தாயகப் பகுதிகளில் மீள் வாக்களிப்பு நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையாளரிடம் ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்கவுள்ளதாகத் தெரியவருகிறது.

இனிச் சிலகாலத்திற்கு கடும் அரசியல் ராஜதந்திர நகர்வுகளை நாங்கள் எதிர்பார்க்கலாம் என்பது மட்டும் உறுதி.

<b>அன்புடன் திரு</b>


- thiru - 11-18-2005

மேகநாதன் Wrote:".......
திரு,நீங்கள் தானா "ரஷ்ஷியாவிலிருந்து வைத்திய கலாநிதி திருமகள்" என்று தாயகம் சார் பயனுடைய விடயங்கள் பல்வேரு இணையத் தளங்களில் தருவதும்...

ஆம் .ஏதோ எனது தாயகத்திற்கு என்னால் செய்யக்கூடிய கடமையைச் செய்கிறேன். அம்மட்டே. தங்களது வாழ்த்துகள் தங்களது பெருந்தன்மையையே சுட்டிநிற்கின்றன. நன்றி

<b>பணிவுடன் திரு</b>


- Mathan - 11-18-2005

thiru Wrote:இப்பொழுது இலங்கைத் தீவிலிருந்து கிடைக்கும் தகவல்களின்படி தமிழர் தாயகப் பகுதிகளில் மீள் வாக்களிப்பு நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையாளரிடம் ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்கவுள்ளதாகத் தெரியவருகிறது.


தமிழர் தாயகப்பகுதிகளில் குறிப்பாக இராணுவ கட்டுப்பாட்டு யாழ்பாணத்தில் வாக்குபதிவு மிககுறைந்த அளவில் நடந்ததை காரணம் காட்டி அங்கு மீளவும் தேர்தலை நடத்த ரணில் கோரியிருந்தார். அந்த கோரிக்கையை தேர்தல் ஆணையாளர் நிராகரித்து மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளராக அறிவித்துள்ளார்.


சிறிலங்கா அரச தலைவராக மகிந்த ராஜபக்ச - adsharan - 11-18-2005

சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் சுதந்திரக் கட்சி வேட்பாளரும் சிறிலங்காவின் பிரதமருமான மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார்.


தாம் வெற்றி பெற்றது தொடர்பாக மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்து:

எமக்கு வெற்றி தேடித்தந்த அனைவருக்கும் நன்றி. தேர்தல் திணைக்களம் உத்தியோகபூர்வமான அறிவிக்கையை விடுத்த பின்பு சிறிலங்கா மக்களுக்கு உரையாற்ற உள்ளேன். எனது பிறந்தநாளில் எமக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை விட 1 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் கூடுதாலாக மகிந்த ராஜபக்ச பெற்றுள்ளார்.

முற்பகல் 11.17 மணி நிலவரப்படி மகிந்த ராஜபக்ச 48,80,950 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க 46,94,632 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

அனுராதரபுரம், கொழும்பு மாவட்டத்தின் சில தொகுதிகள், அம்பாறை, கம்பஹா மாவட்டத்தின் பெரும்பான்மை தொகுதிகள், காலி, அம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, மொனறாலை, புத்தளம், பொலனறுவை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை மகிந்த ராஜபக்ச கைப்பற்றியுள்ளார்.

பதுளை, மட்டக்களப்பு, கொழும்புவின் சில தொகுதிகள், திகாமடுல்ல, கம்பஹாவில் 2 தொகுதிகள், கண்டி, நுவரெலியா, திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களை ரணில் கைப்பற்றியுள்ளார்.

சிறிலங்க அரச தலைவர் தேர்தலை தமிழர் தாயகம் ஒட்டுமொத்தமாகவே புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

http://www.eelampage.com/?cn=21809


- kurukaalapoovan - 11-18-2005

சாதாரண முஸ்லீம் மக்களை வைத்து சந்தர்பவாத சாக்கடை அரசியல் நடத்திய முஸ்லீம் கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு பேரிடியாகி இருக்கும். தமிழரையும் சாதாரண முஸ்லீம் உறவுகளிற்கும் இடையில் மீண்டும் பிளவுகளை ஏற்படுத்த அதிகரித்த சதிகளை எதிர்பார்க்கலாம்.


- மேகநாதன் - 11-18-2005

குறுக்காலபோவான் உங்கட எதிர்பார்ப்பு சரியாகுது போல....18ந் திகதி அதிகாலை அக்கரைப்பற்று பள்ளிவாசல் தொழுகையின் போது கயமைக்காரர் "கைவரிசை"...இஸ்லாமிய சகோதரர் அறுவர் பலியாம்..."வன்னிப் புலிகள்" தான் என்று தமிழ் தேசிய எதிர்புக்காரரின் "ஊதுகுழல்கள்" கபடத் தனங்களை "முன்னறிவிப்பு" செய்துள்ளனவாம்...."என்றும் விழிப்புணர்ச்சியோடு இருப்பதுதான் விடுதலைக்குக் கொடுக்கும் விலை" என்பது என்றும் இல்லாது (இனி) அதிகம் தேவைப்படுகிறது....


- ThamilMahan - 11-18-2005

thiru Wrote:
மேகநாதன் Wrote:".......
திரு,நீங்கள் தானா "ரஷ்ஷியாவிலிருந்து வைத்திய கலாநிதி திருமகள்" என்று தாயகம் சார் பயனுடைய விடயங்கள் பல்வேரு இணையத் தளங்களில் தருவதும்...

ஆம் .ஏதோ எனது தாயகத்திற்கு என்னால் செய்யக்கூடிய கடமையைச் செய்கிறேன். அம்மட்டே. தங்களது வாழ்த்துகள் தங்களது பெருந்தன்மையையே சுட்டிநிற்கின்றன. நன்றி

<b>பணிவுடன் திரு</b>

«¦ÁÃ¢ì¸ Å¡ú ¾Á¢úÁì¸û º¡÷À¡¸×õ ¯í¸ÙìÌ ¿ýÈ¢¸û

(þÅ÷ ±ýÉ «¦ÁÃ¢ì¸ ¾Á¢úÁì¸Ç¢ý ²¸ôÀ¢Ã¾¢¿¢¾¢Â¡ ±ýÚ ¿¢¨ÉòÐÅ¢¼¡¾£÷¸û. ¿¡ý «È¢ó¾Å¨Ã ¡ú ¸Çò¨¾ ¾Ã¢º¢ô§À¡Ã¢ø ±ý¨Éò ¾Å¢Ã §ÅÚ ´ÕÅÕõ þí§¸ ź¢ôÀÅ÷¸Ç¡¸ò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä)


- Mathan - 11-19-2005

ஓய்வெடுக்க அனுமதி கோரும் தேர்தல் ஆணையர்

இலங்கை தேர்தல் ஆணையர் தயானந்த தன்னை பணியிலிருந்து ஓய்வு பெற்று செல்ல அனுமதிக்குமாறு புதிய ஜனாதிபதி ராஜபக்ஷவை கேட்டு கொண்டுள்ளர். தயானந்த ஓய்வெடுக்கும் வயதை நான்கு வருடங்களுக்கு முன்பே அடைந்த போதிலும் அவர் ஓய்வெடுப்பதற்கு முன்னைய ஜனாதிபதி சந்திரிகா அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராஜபக்ஷ தேர்தல் ஆணையர் விருப்பும் பட்சத்தில் அவர் வீடு செல்ல அனுமதிக்க தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

Colombo Page ஆங்கில செய்தியில் இருந்து http://www.colombopage.com/archive/Novembe...18122726JV.html