![]() |
|
தெரியாத பாதை தெளிவானபோது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53) +--- Thread: தெரியாத பாதை தெளிவானபோது (/showthread.php?tid=2150) |
- tamilini - 02-21-2006 கதையில் தீடீர் திருப்பம்.. அருமையாக இருக்கிறது சாத்திரியாரே கடைசிப்பாகத்தையும் எதிர்பார்த்தபடி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 02-22-2006 சாத்திரி கதையை குடும்பத்துக்கை கொண்டு போய் கடைசிலை அப்பிடியே மடக்கிய தேசியத்துக்கை கொண்டு வந்து மாதிரி கிடக்குது .................. ஆனா சென்டிமெண்டுகள் நிறைய இருக்கிறது - சந்தியா - 02-22-2006 ம்ம் கதை நன்றாக பாச உணர்வுகளுடன் கூடி பிண்ணிப் பிணைந்திருகிறது அடுத்த பாகத்தை எதிர்பார்க்கின்றோம் - shanmuhi - 02-22-2006 10 ÅÐ Àì¸òÐìÌ Åó¾¡Â¢üÚ. ¿¡ý¾¡ý þýÛõ Å¡º¢ì¸Å¢ø¨Ä. §¿Ãõ ÅÕõ§À¡Ð Å¡º¢ô§Àý. §ÁÖõ ¦¾¡¼÷óÐ ±Ø¾ Å¡úòÐì¸û... - Rasikai - 02-22-2006 தெரியாத பாதை தெளிவான போது மிக அருமையாக சாத்திரிக்கே உரிய பாணியில் கதை நகர்த்திச் செல்வது நன்றாக உள்ளது. வீட்டுக்குள் இருந்து நாட்டுக்கு வந்தாச்சு இந்த திருப்பம் நன்றாகவுள்ளது. முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் கதையின் இரசிகை - jsrbavaan - 02-22-2006 முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.... சாத்திரி அவர்களே... - Snegethy - 02-22-2006 ஆகா சாத்திரி கதை திருப்பம் நல்லாயிருக்கு.முடிவை விரைவாக எழுதுங்கோ. - ப்ரியசகி - 02-22-2006 சாத்திரி அண்ணா..கதையை அருமையாக கொண்டு சென்றிருக்கிறீர்கள்..இன்னும் ஒரு பாகம்..அத்ன் முடிவை நானும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.. - அருவி - 02-22-2006 சாத்திரி கதையை சிறப்பாகக் கொண்டு நகர்த்தியுள்ளீர்கள். அடுத்த இறுதிப்பகுதியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். - RaMa - 02-22-2006 கதையை உங்கள் எழுத்தினுடாக அழகாக தந்தீர்கள். இறுதி கட்டமும் வந்தாச்சு. இப்போ அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அறிய ஆவலாய் இருக்கின்றோம். - அனிதா - 02-22-2006 ஆகா கதை முடியப்போகுதா? அடடா நான் நினைத்தன் சாந்தி திரும்பி பிரான்ஸ்க்கு வருவா எண்டு ....சரி பரவாய் இல்லை ... அடுத்த முடிவு பகுதியை நானும் எதிர்பாத்துக்கொண்டிருக்கன்....தொடருங்கள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sathiri - 02-23-2006 நான்கு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இந்த நான்கு ஆண்டுகளில் சிவாவின் தாய் தந்தையரும் பிரான்சிற்கு வந்து சிவாவிற்கும் திருமணமாகி விட்டது. சிவாவும் முன்பு சிறியுடன் இருந்த வீட்டிற்கு அருகிலேயோ ஒரு வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தான். இந்த நான்கு ஆண்டில் இரண்டு மூன்று வாழ்த்து மட்டைகள் மட்டும் தனது முகவரியில்லாது சாந்தி சிவாவிற்கு அனுப்பியிருந்தாள். அதுவும் இப்போ கிட்டத்தட்ட ஒரு பத்து மாதங்களிற்கு மேலாக சிவாவிற்கு அவளது தொடர்புகள் ஏதுமற்றுபோய் விட்ட நிலையில் சிறி ஒருநாள் சிவாவிற்கு தொலை பேசியில் அழைத்தான். கலோ சிவா உனக்கொரு கடிதம் ஊரிலையிருந்து வந்திருக்கு கொண்டு வாறன் என்று சொல்லவும் சிவாவிற்கு மனதில் ஒரு மகிழ்ச்சி துள்ளல் எனக்கு ஊரிலையிருந்தெண்டால் சாந்தியாத்தான் இருக்கும். என்றுநினைத்தவாறு ஓம் கெதியா கொண்டுவா சாந்தியின்ரை கடிதமாதான் இருக்கும் என்று கூறவும் மறு முனையில் சிறி. இல்லையடா இது விலாசம் எழுதியிருக்கிறதை பாத்தால் சாந்தியின்ரை கையெளுத்து மாதிரி தெரியேல்லை எதுக்கும் கொண்டு வாறன் பார் என்றபடி தொலை பேசி இணைப்பை துண்டித்தான். சிவாவிற்கு ஒன்றுமே புரியவில்லை சாந்தியை தவிர எனக்கு வேறுயாரும் ஊரிலிருந்து கடிதம் போடுற அளவுக்கு வேண்டியவர்கள் இல்லையே எண்று யோசித்து கொண்டிருக்கும் போதே சிறி அங்கு வந்துவிட்டான். சிவா அவசரமாக அவனது கையிலிருந்த கடிதத்தை வாங்கி பிரிக்கவும் அந்த கடிதத்திலிருந்து ஒரு படம் கீழேவிழுந்தது அதை சிவா எடுத்து பார்த்தான். அந்த படத்தில் சாந்தி இராணுவ சீருடையில் ஒரு இயந்திர துப்பாக்கியை தோளில் சுமந்தபடி சிரித்து கொண்டு நின்றாள். படத்தை வைத்து விட்ட கடிதத்தை பக்கத்தில் நின்ற மனைவிக்கும் சிறிக்கும் கேட்கும்படியாய் உரத்து படிக்க தொடங்கினான். அன்புடன் தம்பி சிவாவிற்கு சாந்தியின் தந்தை தம்பையா எழுதிக்கொள்வது தம்பி சாந்தி இங்கு வந்து உங்களைப்பற்றி நிறையவே சொன்னார் ஏதோ ஒரு தேசத்தில் யாரையுமே தெரியாத இடத்தில் நீங்கள் செய்த உதவிகள் கடவுளே நேரே வந்து செய்ததற்கு சமமாகும்.எங்களிற்கும் சாந்திக்கு உங்களைப்போல ஒரு கணவர் கிடைத்திருந்தால் அவளது வாழ்க்கையே வேறு மாதிரி போயிருக்கலாம் . ஆனால் என்ன செய்வது எல்லாம் விதி. நாங்கள் ஏற்கனவே அவளது வாழ்க்கை முடிவுகளை நாங்களே எடுத்து எல்லாமே தவறாகி போனதால் பின்னர் அவளது முடிவுகளை அவளே எடுக்கட்டும் நாங்கள் எதுவும் சொல்வதில்லையென்கிற முடிவை எடுத்தேன்.அவளும் போராட்டத்தில் தன்னை இணைத்து போராளியாகி போய் விட்டாள். இடையிடையே எப்போதாவது என்னை பார்க்க வருவாள். அப்படித்தான் போனமாதம் என்னிடம் வந்த போது உங்கள் விலாசத்தையும் மற்றும் இதனுடன் இணைத்திருக்கும் தனது படத்தையும் என்னிடம் தந்து தான் சில பணிகளையயேற்று யுத்தகளம் செல்வதாகவும் சிலவேளை தான் உயிருடன் திரும்பி வராது போனால் உங்களிற்கு இந்த படத்தையும் அனுப்பி தனது மரணசெய்தியும் அறிவிக்கசொல்லி சென்றுவிட்டாள். அவள் போன சில நாட்களிலேயே ஒயாத அலை இரண்டு சமரில் இறந்து விட்டதாக அவளது மரணசெய்தி எனக்கு வந்தது. எங்களிற்கு இங்கு மரணங்களும் இழப்புக்களும் ஒன்றும் புதிய விடயங்கள் அல்ல ஆனாலும் எனது மகள்தானே அவள் உடலை கூட எனக்கு பார்க்க கிடைக்கவில்லை. நான் இடம் மாறி கொண்டடேயிருந்ததால் அவர்களால் என்னை தேடிப்பிடித்து செய்தி சொல்ல முடியவில்லை இறுதியில் தகவல் கிடைத்ததும் அவளுடல்விதைக்கப்பட்ட முல்லைத்தீவு புது குடியிருப்பு மாவீரர் துயிலுமில்லத்தில் போய் புரண்டு அழுது விட்டு வந்தேன். அவள் உங்களிற்கு அனுப்பசொல்லி தந்த அவளது படத்தை உங்களிற்கு அனுப்பியிருக்கிறேன் இப்பே எங்களிடம் மிஞ்சி நிப்பது அவளது ஞாபகங்கள் மட்டும்தான் அவளது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக இப்படிக்கு தம்பையா கடிதத்தை படித்து முடித்துவிட்டு சிவா மனைவியையும் சிறியையும் மாறி மாறி பார்த்தான் மூவரிடையேயும் ஒருவிதமொனம். சிறி செருமியவாறு சரியடா போராட்டம் என்டால் இழப்புகள் இருக்கதான் செய்யும் அது எங்களுக்கு அல்லது எங்களுக்கு தெரிஞ்ச ஆக்கள் எண்டு வரேக்கை தான் எங்களுக்கு அந்த பாதிப்பு தெரியிது. சாந்தியை மாதிரி எத்தனையாயிரம்பேர். எண்டைக்காவது இதுக்கு ஒரு முடிவு வரும்தானே அதுவரை ஏதோ எங்களாலை முடிஞ்சதை செய்வம். சரியடா சிவா இந்த படத்திலை எனக்கும் ஒரு கொப்பியொண்ட எடுத்து தா எனக்கு வேலைக்கு நேரமாச்சு போட்டு வாறன் என்று சிறி அங்கிருந்து போய்விட சாந்தியின் படத்தையே உற்று பார்த்தபடி சிவா இருந்தான். சாந்தி அவனுக்கு எழுதிய கடிதத்தின் கடைசி வரிகள் அவனிற்கு ஞாபகத்தில்அடுத்தடுத்து வந்து கொண்டேயிருந்தது. உங்கள் வரவை எதிர்பார்த்து உயிருடனோ அல்லது இந்த தேசத்திற்காய் உயிர்விட்ட ஆயிரமாயிரம் மாவீரர்களின் கல்லறைகளினுடே ஒரு கல்லறையாகவோ காத்திருப்பேன் முடிந்துவிட்டது மேலதிகமாக சில குறிப்பக்கள் சமாதான காலத்தில் சிவா தனது மனைவி பிள்ளையுடன் முல்லைதீவிலுள்ள மாவீரர் துயிலுமில்லத்திற்கு போய் சாந்தியின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தான்.அவளது முன்னாள் கணவன் ரவி தண்டனை முடிவடைந்து வெளியில்வந்து மீண்டும் போதைக்கு அடிமையாகி பாரீசின் நிலத்தடி ரயில் நிலையங்களில் படுத்துறங்கி வழியால் போவோர் வருவோரிடம் பணம் கேட்டு (பிச்சையெடுத்து) கொண்டு இருந்ததாக அறிந்தேன் அதுவும் இப்போ பலகாலமாக அவனைப்பற்றிய தகவல்களும் இல்லை. இக்கதையில் வருகின்ற சிவாவும் சிறியும் எனது ஊர் நண்பர்கள் அவர்களிடம் போய் வரும்பொழுது சாந்தியை நானும் சில தடைவைகள் சந்தித்து கதைக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தது அவருக்கு எனது வீர வணக்கங்கள் தெரிவித்து கொண்டு இக்தையை முடிக்கிறேன் உறவுகளே இனி உங்கள் விமர்சனங்களை வையுங்கள் அடுத்த கதையில் சந்திப்போம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- iniyaval - 02-23-2006 இன்றுதான் உங்கள் தொடர் கதையை வாசித்து முடித்தேன். கதையை அலட்டல் இல்லாமல் அருமையாக நகர்த்தி சென்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் மேலும் தொடர்ந்து எழுதுக. - sri - 02-24-2006 வாழ்த்துக்கள் மேலும் தொடர்ந்து எழுதுக. - Danklas - 02-24-2006 சாட்றீ,, மனதை உருவிக்கிவிட்டது,, சாந்திமாதிரி எத்தனையோ தமிழ் பெண்கள் புலத்திலே சொல்லனா துன்பங்களை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள், 2வருடங்களுக்குமுன்னர் ஒரு செய்தி அறிந்தேன், ஒரு பெண், அழகான, படித்த பெண், வெளிநாட்டில் மாப்பிளை எண்டவுடன் பெற்றோர்கள் போட்டோவை பார்த்துவிட்டு கலியாணத்தை செய்துகுடுத்துவிட்டார்கள், புலத்தில் நன்றாக வாழலாம் எண்ட நினைப்பில் வந்தவருக்கு தான் அனுபவிக்கபோகிற கஸ்ரங்களை முங்கூட்டியே அறியக்கூடிய சக்தி இருக்கவில்லை, கலியாணம் முடிந்து சில மாதங்கள் ஓடின, இந்த நேரத்தில் அந்த ஆண் மகனை பற்றி கூறவேண்டும், சாதரண உயரம், கறுப்பு உருவம், படிப்பறிவும் (???), முக்கியமான சிறப்பு அம்சம் "சந்தேகம்",,, கலியாணத்துக்கு முன்னர் இப்படி ஒரு குண அம்சத்தை போட்டோவில் பார்த்த மணமகளின் பெறோருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை, சில மாதங்களின் பின் தன்னுடைய மனைவி மேல் சந்தேகம், ஆட்கள் நிற்கும்பொழுது ஆட்களை பாரமல் திட்டுவிழும், தாய்க்கு (தனது) முன்னாலேயெ பெண்ணின் கண்ணத்தில் பல கைவிரல்கள் பதியும், இந்த பிரச்சினை ஆரம்பமாவதற்கு முக்கிய காரணம் சீதனம், அதாவது ஊரில் இருக்கும் வீடு, துறவுகளை எழுதிவைக்கச்சொல்லி தொல்லை, இயலாத கட்டத்தில் எனி உண்ணோடு வாழ்வதில் எனக்கு இஸ்ரமில்லை எண்டு பெண் முடிவெடுத்தாளோ? அல்லது சீதனம் தாரத உண்ணோடு எனி என்னால் வாழ்முடியாது எண்டு அந்த சந்தேகபிராணி முடிவெடுத்ததோ தெரியாது, அந்த பெண் ஊருக்கு போய் சேர்ந்துவிட்டார், (டைவர்ஸ் எடுத்துக்கொண்டு).,, இத்தனைக்கும் பெண்ணுக்கு வயசு 26,27,, அந்த சந்தேகப்பிராணி ஒரு தோட்டத்தில் வேலை பார்ப்பதாக அறியமுடிகிறது,,,, :oops: - sankeeth - 02-24-2006 கதை மிகவும் நன்றாயிருக்கு. அது சரி சிவாவின் மனைவிக்கு சிவா சாந்தியை காதலித்தது தெரியுமா? அல்லது சும்மா உதவி செய்தது என்று தெரியுமா?ஏனெனில் அவ பிறகு கேள்விப்பட்டு பிரச்சனையாகி இன்னொரு குடும்பம் பிரியக்கூடாதல்லவா? சிவாவின் நல்ல மனைவி கிடைத்துள்ளாரா? ரவியின் நிலையிலிருந்து தன்வினை தன்னைச் சுடும் என்று தெரிகிறது. சாந்தி வரும்போது எத்தனை கனவுகளுடன் வந்திருப்பார் பாவம். இவரின் நிலைதான் என் மனதை காயப்படுத்துகிறது. - Snegethy - 02-24-2006 சாத்திரி அண்ணா கதையை நன்றே முடித்திருக்கிறீர்கள்.சாந்திக்கு எனது வீரவணக்கம்.அடுத்த கதையை தொடங்குங்கோ. - sathiri - 02-24-2006 சிவா தனது விடயங்கள் எதையும் தனது மனைவியிடம் மறைக்கவில்லை அதனால் அவர்களது குடும்பத்தில் எந்த குளப்பமும் இல்லை - Rasikai - 02-24-2006 சாத்திரி கதை மனதை உருக்கிவிட்டது.வாழ்த்துக்கள் மேலும் தொடர்ந்து எழுதுங்கோ. - RaMa - 02-25-2006 மாவீரார் சாந்திக்கு எனது வீரவணக்கங்கள் உண்மை சம்பவம் ஒன்றை கதையாக எழுதி கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள் சாத்திரி. நன்றிகள். |