![]() |
|
Breaking News - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: Breaking News (/showthread.php?tid=7412) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
|
- Mathan - 04-05-2004 எந்த அணியும் பெரும்பான்மை பெறவில்லை சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க பலதரப்பினருடனும் பேரம் பேசுகின்றது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதுவித முயற்சியிலும் இறங்கவில்லை. மக்கள் தீர்ப்புக்கு மதிப்பு அளிப்பதாகக் கூறுகிறார் ஐ.தே.க.செயலாளர் ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கூட்டமைப்பு தனக்கு அறுதிப் பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்காவிட்டாலும் ஆட்சி அமைப்பதற்குப் பெரும் முயற்சி செய்து வருகிறது. ஆட்சி அமைப்பதற்குப் பல தரப்பினருட னும் சுதந்திரக் கூட்டமைப்பு பேரம்பேசி வருகிறது. அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அமைப்பதில் ஆர்வம் காட்டாமலும் அதுதொடர்பான எந்த முயற்சியிலும் ஈடுபடாமலும் நிலைமையை அவதானித்து வருகிறார். தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு ஐக்கிய தேசிய முன்னணி தலைவணங்குகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் செனரத் ஹப்புகொட்டுவ தெரிவித்தார். ஆட்சி அமைக்கக்கூடிய அறுதிப் பெரும்பான்மை இரண்டில் எந்த ஒரு கட்சிக்கும் கிடைக்கவில்லை. சுதந்திரக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணியைவிட மிகக்கூடு தலான ஆசனங்களுடன் முன்னணி யில் நிற்கிறது. ஆக, ஐக்கிய தேசிய முன்னணியை விடச் சுதந்திரக் கூட்ட மைப்புக்கே மக்கள் கூடுதலான ஆத ரவு வழங்கியிருக்கிறார்கள். ஐக்கிய தேசிய முன்னணியை நிராகரித்து விட்டார்கள் என்றே கூறலாம். போர்நிறுத்தம், சமாதானம், அமைதி, நாட்டின் அபிவிருத்தி, பொரு ளாதார வளர்ச்சி இவற்றிக்கு இரண்டு கட்சிகளும் மக்களிடம் ஆணை கேட் டுத்தான் தேர்தலில் போட்டியிட்டன. அந்த ஆணையை மக்கள் தனக்கு வழங்காததால் ஐக்கிய தேசிய முன் னணி, ஆட்சி அமைப்பதில் அலட்டிக் கொள்ளவில்லை. எனினும், கட்சியின் இரண்டாவது மட்டத் தலைவர்கள் நேற்று முன்னி ரவு வரை ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புக் குறித்து மும்முரமாக ஆராய்ந்து வந்தனர். சுதந்திரக் கூட்டணி தனக்கு மக் களின் ஆணைகிடைக்காவிட்டாலும் கூடுதல் ஆதரவு கிடைத்ததை வைத் துக்கொண்டு ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஜாதிக ஹெல உறுமய, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகி யவற்றின் ஆதரவைப்பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட மைப்பு முயற்சித்து வருகின்றது. எவருடனும் கூட்டுச்சேருவதில்லை என்றும் நேற்றுமுற்பகல் வரை சொல் லிக்கொண்டு இருந்த ஹெல உறுமய இப்போது சுதந்திரக் கூட்டமைப்பு தன்னை அணுகியதும் தனது நிலை iமையை மாற்றிக்கொண்டு ஆதரவு அளிப்பதற்குச் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அவற்றுள் மிக முக் கியமாகக் குறிப்பிடத்தக்கவை வரு மாறு:- <span style='color:#ff002d'>1) பிரச்சனைத் தீர்வுக்கு விடு தலைப் புலிகளுடன் மட்டுமின்றி எல்லா அரசியல் கட்சிகளுடனும் அரசு பேசவேண்டும். 2) சம~;டி ஆட்சி முறையைக் கொண்டுவரக் கூடாது. ஒற்றையாட் சியே தொடர்ந்து இருக்கவேண்டும். 3) விடுதலைப் புலிகள் கோரு கின்றபடி அவர்களுக்கு இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை வழங்கக் கூடாது. இந்தக் கோரிக்கைகள் சுதந் திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக் கும் ஜே.வி.பியினரைத் திருப்திப்படுத் தலாம். ஆனால், ஜனாதிபதியின் சுதந் திரக்கட்சிக்கு இந்தக்கோரிக்கைகள் முற்றுமுழுதாக உடன்பாடானவை அல்ல. இந்தக் கோரிக்கைகளின் அடிப் படையில் ஹெல உறுமயவையும் இணைத்துக்கொண்டு அரசை அமைத் தால் விடுதலைப் புலிகள் இந்த அர சுடன் பேசச் சம்மதிப்பார்களா? இந் தச் சிக்கலை எப்படித்தீர்ப்பது என்ப தில் சுதந்திரக் கூட்டமைப்பினர் தலையை உடைத்துக்கொண்டு ;இருக் கின்றனர். சில விட்டுக்கொடுப்புகளுடன் எப் படியும் ஹெல உறுமயவை இணைத் துக்கொண்டு அரசை அமைப்பதற்குப் பேரம் பேசப்பட்டு வருகிறது. இ.தொ.காவுடனும் சுதந்திரக் கூட் டமைப்பு பேசி வருகிறது. ஐ.தே. கவின் பட்டியலில் ஐந்து இ.தொ.க வினர் எம்பிக்களாகத் தெரிவு செய் யப்பட்டுள்ளனர். இ.தொ.க - ஐ.தே.க ஒப்பந்தப்படி ஐ.தே.க அரசு அமைக் காவிட்டால் இ.தொ.கவின் எம்பிக்கள் கட்சி மாறி அரசு அமைக்கும் தரப் போடு இணையமுடியும் என்று கூறப் படுகிறது. ஆகவே, ஐ.தே.க. ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபடாவிட்டால் இ.தொ.காவின் எம்.பிகள் ஐவரும் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசில் சேரு வதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. இ.தொ.காவின் எதிர்கால நட வடிக்கைகள் குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என் றும், இன்று காலை அது குறித்துத் தீர்மானிக்கப்படும் என்றும் இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் நேற்று இரவு உதயனுக்குத் தெரிவித் தார். இதேபோல, முஸ்லிம் காங்கிரஸை யும் அரவணைக்க சுதந்திரக்கூட்ட மைப்பு தீர்மானித்துள்ளதாகக் கூறப் படுகிறது. ஐ.தே.க.அரசமைப்பதற்கு போதிய எம்.பிக்களின் ஆதரவைத் திரட்ட முடியாமல் அந்த முயற்சியைக் கைவிட்டால் முஸ்லிம் காங்கிரஸ{ம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப் பின் அரசுக்கு ஆதரவு வழங்கக்கூடும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், சில கொள்கை அடிப்படையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தினால் மட்டுமே அவ்வாறு ஆட்சியமைக்க முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் இணங்குவார் எனத் தெரிவிக்கப்படுகிறது</span> நன்றி - உதயன் - Mathan - 04-05-2004 பிரதமர் நியமனத்திலும் இழுபறி நிலைமை! ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங் கவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்தாலும் அதன் பிரதமர் யார் என்பதில் இழு பறி இருப்பதாகக் கூறப்படுகிறது. கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள ஜே.வி.பி.யும் அந்தப் பத வியில் கண்வைத்து, அதை கோரு வதாகக் கூறப்படுகின்றது. ஜாதிக ஹெல உறுமய, இந்தக் கூட்டமைப்பின் ஆட்சிக்கு ஆதரவு வழங்குவதாயின் அந்த அரசிற்கு மஹிந்த ராஜபக்~ பிரதமராக வர வேண்டும் என நிபந்தனை விதிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. அனுரா பண்டாரநாயக்க, லÑ; மன் கதிர்காமர் ஆகியோரின் பெயர் களும் பிரதமர் பதவிக்கு அடிபடுகின் றன. ஒருவருக்கு அந்தப் பதவியைக் கொடுத்தால் மற்றவர் அதிருப்தி அடை யும் நிலையும் உள்ளது. இதனால், தமது தரப்பில் பிரதமர் பதவிக்கு ஒருவரைத் தோந்தெடுக்க முடியா மல் ஜனாதிபதி குமாரதுங்க திண் டாடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. நன்றி - உதயன் - Mathan - 04-05-2004 வன்னிக்கு ஐ.தே.க. குழு?; முன்னாள் அமைச்சரும் ஐ.தே. க. பிரமுகருமான டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன தலைமையிலான குழு ஒன்று கொழும்பிலிருந்து வடக்கே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதற்கு ஆயத்தமாகிவருவதாக நேற்று கொழும்பு அரசியல் வட்டா ரங்களில் தெரிவிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் களோடு பேச்சு நடத்துவதற்காகவே இவர்கள் வடக்கே புறப்பட இருந்த னர் என்று ஒரு தகவல் தெரிவித்தது. நன்றி - உதயன் - Mathan - 04-05-2004 வடக்கு - கிழக்கில் முஸ்லிம் தெரிவு இம்முறை ஏழாகக் குறைந்துள்ளது இம்முறை பொதுத்தேர்தலில் வடக்கு - கிழக்கு மாகாணங்களிலி ருந்து ஏழு முஸ்லிம்களே நாடாளு மன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டி ருக்கின்றனர். அவர்களில் நால்வர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் வெற்றியீட்டியுள்ளனர். ஐக்கிய தேசி யக் கட்சியிலிருந்து ஒருவரும், ஐக் கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பி லிருந்து இருவரும் வெற்றியீட்டியிருக் கின்றனர். திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அதி கூடிய விருப்பு வாக்குகளை(68,576) பெற்று வெற்றியீட்டியிருக்கிறார். அங்கு மு.காவின் இரண்டாவது ஆச னத்திற்கு நிந்தவூரைச் சேர்ந்த பைஸால் ஹாசிம் (விருப்பு வாக்கு கள் 20,724) தெரிவுசெய்யப்பட்டிருக் கிறார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட மைப்பில் போட்டியிட்ட ஷநுஆ| தலைவி பேரியல் அ~;ரப்(விருப்பு வாக்குகள் 52,220) வெற்றியீட்டியுள்ளார். அக்கூட் டணியில் தெரிவுசெய்யப்பட்ட இரண் டாவது வேட்பாளர் சிங்களவர். வசந்த என்ற இந்த ஜே.வி.பி. உறுப்பினர் (45,975) வாக்குகளைப் பெற்றுள்ளார். அக்கூட்டணியில் போட்டியிட்ட ஏ. எல்.எம். அதாவுல்லா மூன்றாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்குக் கிடைத்துள்ள விருப்பு வாக்குகள் (39,745). ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலி ருந்து கடைசி நேரத்தில் பிரிந்துசென்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட மைப்பில் போட்டியிட்ட முன்னாள் எம்.பி. எச்.எம்.எம்.ஹாPஸ் தோல்வி யடைந்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட் பாளர் அமீரலி சிஹாப்தீன் வெற்றி யீட்டியிருக்கிறார். முதன்மை வேட்பா ளராகப் போட்டியிட்ட மு.கா. தவிசாள ரும், முன்னாள் பிரதி அமைச்சருமான ப~Pர் சேகுதாவூத், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி முதன்மை வேட் பாளரும், முன்னாள் பிரதி அமைச் சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். திருகோணமலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் பிரதி அமைச் சர் நஜீப் ஏ.மஜீத் வெற்றியீட்டியுள் ளார். முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம்வகித்த இவர், இத் தேர்தலின்போது முஸ்லிம் காங்கிர ஸில் இணைந்துகொண்டவர் என் பது குறிப்பிடத்தக்கது. திருகோமலை மாவட்டத்தில் முஸ் லிம் காங்கிரஸில் போட்டியிட்ட முன்னாள் எம்.பிக்களான எம்.ஏ.எம். மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக், திடீர் தௌபீக் ஆகியோர் தோல்வியடைந் தனர். வன்னி மாவட்டத்தில் ஐ.தே.க. ஓர் ஆசனத்தைப் பெற்றிருக்கின்றது. அங்கு முஸ்லிம் காங்கிரஸ{ம் ஐ. தே.கவின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டது. மு.கா.சார்பில் போட்டி யிட்ட முன்னாள் எம்.பியான ரி~hத் பதியுதீன் வெற்றிபெற்றிருக்கிறார். முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளருமான நு}ர் தீன் மசூர் போதிய விருப்பு வாக்கு கள் பெறாமல் வெற்றி வாய்ப்பை இழந்தார். கடந்த நாடாளுமன்றத்தில் வடக்கு - கிழக்கைச் சேர்ந்த 10 முஸ்லிம்கள் தெரிவுசெய்யப்பட்ட எம்.பிக்களாகவும், ஐந்து முஸ்லிம்கள் தேசியப்பட்டியல் எம்.பிக்களாகவும் பதவி வகித்தனர். இம்முறை மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் மூன்று முஸ்லிம் ஆச னங்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி ஆகிய மாவட்டங்களில் தலா ஓர் ஆச னம் குறைந்திருக்கிறது. அதேவேளை, வடக்கு-கிழக்கில் முன்னர் எம்.பிக்களாகப் பதவி வகித்த எட்டு முஸ்லிம்கள் இம்முறை தோல்வி யடைந்திருக்கின்றனர். இவர்களில் மூவர் முன்னாள் பிரதி அமைச்சர்க ளாவர். முஸ்லிம் காங்கிரஸ் மூலம் மட் டக்களப்பு மாவட்டத்தில் வெற்றியீட் டிய சுங்க அதிகாரி அமீரலி சிஹாப்தீன், திகாமடுல்ல மாவட்டத்தில் வெற்றி யீட்டிய பைஸால் காசிம் ஆகியோர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான புதுமுகங்களாவர். நன்றி - உதயன் - Mathan - 04-05-2004 மனோ கணேசன், மகேஸ்வரன் கொழும்பில் தெரிவாகியுள்ளனர்; கொழும்பு மாவட்டத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நான்கு சிறுபான்மையினர் தெரிவுசெய் யப்பட்டுள்ளனர். இருவர் தமிழர்கள். இருவர் முஸ்லிம்கள். முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன், மனோ கணேசன் ஆகி யோருடன் முன்னாள் அமைச்சர்க ளான எம்.எச்.முஹம்மது, மஹ்ரூப் ஆகியோரே வெற்றியீட்டிய நால்வரு மாவர். சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பௌசி, ஹனிபா இ~hக் ஆகிய இரு முஸ்லிம் வேட்பாளர்க ளில் ஒருவர் தெரிவாகும் வாய்ப்பு உள்ளது. கொழும்பு மாவட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 3,24,425 வாக் குகளைப் பெற்றார், மிலிந்த மொற கொட 99,145, ரவி கருணாநாயக்க 69,995, எம்.எச்.முஹம்மது 62,951, பந்துல குணவர்த்தன 58,460, மகேஸ் வரன் 57,984, மஹ்ரூப் 55,919, மனோ கணேசன் 51,608, காமினி லொக் குகே 43,810 வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளனர். நன்றி - உதயன் - Mathan - 04-05-2004 Sri Lanka result 'bad for peace' <b>Sri Lanka's chances of making peace with Tamil rebels could suffer because the new government lacks a majority, the outgoing prime minister has warned.</b> The rebels have said they will resume fighting unless given the right to self-rule in the areas they dominate. President Chandrika Kumaratunga's coalition won last week's elections, but failed to secure a majority. She called the vote after a split with Prime Minister Ranil Wickramasinghe over his handling of peace talks. Mr Wickramasinghe said the new government's likely reliance on coalition partners could stop it from acting decisively. "It is not a question of what business is transacted, it is the ability to transact it," he said. <b>Worrying </b> In the new parliament, President Kumaratunga's United People's Freedom Alliance will be eight seats short of a majority. The smaller parties that may join it in a coalition may well oppose granting key concessions, such as sweeping autonomy, to the Tamil Tiger rebels, correspondents say. The BBC's Frances Harrison in Colombo says the rebels have always clung on to the option of a return to war if their demands are not met in the two-year-old peace process. Last Friday's parliamentary elections have also granted the rebels a certain political muscle after their proxy party won the third-largest number of seats in the new parliament, our correspondent says. She adds that it is worrying the rebels have raised the threat of fresh fighting even before the shape of the new government has been decided. நன்றி - www.bbc.co.uk - Mathan - 04-05-2004 Gandhi assassination suspect caught in Sri Lanka Colombo, Apr 4 (IANS) : A Tamil Tiger guerrilla reportedly linked to former Indian prime minister Rajiv Gandhi's assassination has been caught by a breakaway faction of the rebel group in Sri Lanka's east, a newspaper reported Sunday. The Sunday Leader identified the suspect by his pseudonym Neelan and said he was a key member of the intelligence wing of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), which was outlawed in India following the 1991 assassination of Gandhi. The paper said the breakaway faction led by former LTTE regional commander V. Muraleedharan alias Colonel Karuna caught Neelan during a sweep for LTTE operatives in the eastern district of Batticaloa following a wave of killings blamed on the mainstream Tamil Tigers led by Velupillai Prabhakaran. "This man (Neelan) is suspected of being involved in the Rajiv Gandhi killing and is a close associate of (LTTE intelligence chief) Pottu Amman," the Sunday Leader said in a full-page story. "This is apparently a prize catch for Karuna and a useful chip to bargain with in the future," it said, without clarifying with who the renegade commander, who split ranks with Prabhakaran last month, would bargain over Neelan. Both Prabhakaran and Pottu Amman are wanted in India for the Rajiv Gandhi assassination. Gandhi was killed by a woman LTTE suicide bomber at an election rally near Chennai while on a comeback trail in the 1991 elections. Thanx: Kerala News - yarl - 04-05-2004 அம்மானை நல்லாத்தான் மந்திரிச்சு விட்டிருக்கிறாங்கள் - Mathan - 04-05-2004 BBC Wrote:Gandhi assassination suspect caught in Sri Lanka புலிகளின் புலனாய்வு பிரிவின் முக்கிய உறுப்பினர் ஒருவரை கருணா தரப்பு கைது செய்துள்ளது. இவர் ராஜீவ் காந்தி கொலையுடன் சம்மந்தப்பட்டவர் என்று இந்த செய்தி மேலும் கூறுகின்றது - vallai - 04-05-2004 அவருக்கு அடிக்கிற அடியிலை பெடி தான் தான் கொலை பண்ணினது எண்டு கூடச் சொல்லலாம் - Mathan - 04-05-2004 அது ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் என்பதால் அதை அடித்து நிருபிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கின்றேன், - vallai - 04-05-2004 பொட்டர் சொல்லித்தான் செய்தது எண்டதுக்கு ஆதாரம் இல்லை அதுக்கு பொடியை பயன்படுத்தலாம் அங்கை அடிபட்டவங்களே சேர்ந்திட்டாங்கள் இஞ்சை பிடிச்சு என்ன செய்யப் போகினம் - AJeevan - 04-05-2004 புத்தம் புதிய கொப்பி என்று பழைய படங்களை மறு பிரதியெடுத்து அந்தக் காலங்களில் தியெட்டர்களில் வெளியிட்டது போன்றுள்ளது இப்படியான கூத்துகள். - Mathan - 04-05-2004 <img src='http://www.thinakkural.com/2004/April/05/t2.jpg' border='0' alt='user posted image'> நன்றி - தினக்குரல் - Mathan - 04-05-2004 <img src='http://www.thinakkural.com/2004/April/05/moorthy.gif' border='0' alt='user posted image'> நன்றி - தினக்குரல் - Mathan - 04-05-2004 வடக்கு தேர்தலை இரத்தாக்க நீதிமன்றத்தை நாடப்போவதாக கூறுகிறார் டக்ளஸ் வடக்கில் இடம்பெற்ற தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதால் அத் தேர்தலை ரத்துச் செய்து மீள் தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தை அனுகப் போவதாக ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். தேர்தல் ஆணையாளர் கட்சிப் பிரதிநிதிகளுடன் நிகழ்த்திய கலந்துரையாடலை அடுத்து ஊடகவியலாளரிடம் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார். வடக்கில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதால் தேர்தலை மீளநடத்துமாறு தேர்தல் ஆணையாளரிடம் நாம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதற்கான அதிகாரம் தம்மிடம் இல்லை என்று ஆணையாளர் கூறினாரென்றும் தேவானந்தா குறிப்பிட்டார். நன்றி - தினக்குரல் - Mathan - 04-05-2004 சுதந்திர முன்னணி தேசிய எம்.பி.யாக சங்கரி? யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேச்சையாகப் போட்டிýயிட்டு தோல்வியைத் தழுவிய தமிழர் விடுதலைக் கூýட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டிýயல் மூýலம் பாராளுமன்றம் செல்ல வாய்ப்பளிக்கப்படலாமென கொழும்பு இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. கொழும்பிலுள்ள இராஜதந்திரியொருவர் இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைத்துவத்துடன் தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. மூýத்த தமிழ் அரசியல்வாதி என்ற அடிýப்படையில் ஆனந்தசங்கரிக்கு தேசியப் பட்டிýயல் மூýலம் பாராளுமன்றம் செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டால் பல நன்மைகள் ஏற்படுமென மேற்படிý கொழும்பிலுள்ள இராஜதந்திரி எடுத்துக் கூýறியிருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழர் விடுதலைக் கூýட்டணித் தலைவர் ஆனந்தசங்கரியுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'கேட்கவே நகைப்பாக" இருக்கிறது என்று நிராகரித்தார். நன்றி - தினக்குரல் - Mathan - 04-05-2004 வட, கிழக்கு தேர்தலை இரத்தாக்க வலியுறுத்துகிறது ஜாதிக ஹெல உறுமய வட, கிழக்கில் இடம் பெற்றது தேர்தல் அல்ல. பிரபாகரன், கருணாவின் பயங்கரவாதமே இடம்பெற்றுள்ளது. எனவே, தேர்தல்கள் ஆணையாளர் இதனை இரத்துச் செய்து மீண்டுமொரு தேர்தலை அங்கு நடத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஓமல்பே சோபித தேரர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் அங்கு கூறியதாவது: ஜனநாயக சூழ் நிலையில் வட, கிழக்கில் தேர்தல்கள் இடம் பெறவில்லை. முழுக்க முழுக்க பயங்கரவாதமே அங்கு இடம் பெற்றது. எனவே, தேர்தல்கள் ஆணையாளர் இதனை இரத்துச் செய்து சர்வதேச மத்தியஸ்தத்துடன் தேர்தலை மீண்டும் அங்கு நடத்த வேண்டும். இப் பிரதேசங்களில் பாடசாலை மாணவர்கள் வாக்களித்துள்ளனர். இது தொடர்பான ஆதாரங்கள் இருக்கின்றன. பகிரங்கமாக திருட்டு வாக்கு அளித்துள்ளனர். ஐ.தே.கட்சி நாட்டில் சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. வெறுமனே ஒரு மாயையைத்தான் கொண்டு சென்றது. இதனை மக்கள் இன்று நிராகரித்துள்ளதோடு புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற ஐ.தே.கட்சியின் நிலைப்பாட்டையும் அவர்களை தேர்தலில் தோல்வியடையச் செய்ததன் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இன்று ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா தமது வாக்கை அளிப்பதற்காக சிங்கள இராணுவத்தின் பாதுகாப்புடனேயே செல்ல வேண்டியுள்ளது. அந்தளவிற்கு தமிழர்களின் விரோதிகளாக தமிழர்களே மாறி விட்டனர். ஜனாதிபதியும், ரணிலும் புலிகளுடன் பேச வேண்டுமென்கிறார்கள். எதற்காக பேச வேண்டும் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். இது போன்றதொரு சூழ்நிலையில் ஹெல உறுமய பாராளுமன்றத்தில் எதிர் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்து தோல்வியடையச் செய்யும். ஹெல உறுமயவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப ஏதும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமானால் ஆதரிப்போம். ஆனால், எதற்காக பேசுகிறார்கள் என்பது தெளிவு படுத்தப்பட வேண்டுமென்றும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். நன்றி - தினக்குரல் - Mathan - 04-05-2004 BBC Wrote:BBC Wrote:Gandhi assassination suspect caught in Sri Lanka vallai Wrote:அவருக்கு அடிக்கிற அடியிலை பெடி தான் தான் கொலை பண்ணினது எண்டு கூடச் சொல்லலாம் BBC Wrote:அது ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் என்பதால் அதை அடித்து நிருபிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கின்றேன், vallai Wrote:பொட்டர் சொல்லித்தான் செய்தது எண்டதுக்கு ஆதாரம் இல்லை அதுக்கு பொடியை பயன்படுத்தலாம் அந்த புலனாய்வு பிரிவு உறுப்பினர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட சாத்தியம் இருக்கின்றதா? - Eelavan - 04-05-2004 BBC Wrote:வட, கிழக்கு தேர்தலை இரத்தாக்க வலியுறுத்துகிறது ஜாதிக ஹெல உறுமய இவர்களால் தர்மராஜ்யத்தை உருவாக்க முடியுமா என்பதுதான் கேள்வி இவ்வளவு நாளும் அரசியலில் தலையிட்டு வந்தார்கள் இன்று அவர்களே வந்துவிட்டார்கள் தர்மராஜ்ஜிய ஸ்தாபிப்பு என்ற பெயரில் இரத்தக்களரி காணாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது அசோகச்சக்கரவர்த்தியே கலிங்கப் போரில் வெறுப்புற்று அன்பு அகிம்சை சகிப்புத்தன்மை போதித்த பௌத்த மதத்தை தழுவினார் என வரலாறு கூறுகின்றது அவரால் ஸ்தாபிக்க முடிந்ததுதான் தர்மராஜ்ஜியம் இன்று இவர்கள் வேண்டி நிற்பது ? புத்தரின் பெயரால் (in the name of budhdha)என்ற திரைப்படம் தான் ஞாபகம் வருகிறது |