![]() |
|
பெண்களும் சமூகமும்.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பெண்களும் சமூகமும்.... (/showthread.php?tid=8385) |
- Mullai - 07-05-2003 அவள் பறந்து போனாளே..... http://www.thatstamil.com/news/2003/07/05/...5/marriage.html - GMathivathanan - 07-05-2003 [quote=Mullai]அவள் பறந்து போனாளே.....எங்கிருந்தாலும்.. வாழ்க.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mullai - 07-05-2003 அடடா......... மதி, நீங்களா அந்த மாப்பிள்ளை? மனைவியமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் - Paranee - 07-05-2003 கொடுத்துவைத்த மாப்பிள்ளை - kuruvikal - 07-05-2003 மணமேடை வரும் வரை வாய்க்குள் முட்டையா இருந்தது அந்த காதல் என்றும் கலியாணம் என்று இரட்டை வேடம் போட்ட பெண்ணிற்கு. கலியாணம் என்ற போர்வையில் ஒரு இளையனின் வாழ்வோடு விளையாட நினைத்த பிசா சொன்று கலன்று கொண்டது அவ் இளைஞனின் நல்ல உள்ளத்துக்கு கிடைத்த பரிசே! அது மட்டுமன்றி தனது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காது உடனடியான திடமான முடிவெடுத்து மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்திப் பார்த்த அவ்விளைஞனின் தியாகத்தை பாராட்டுவோமாக! இளைஞர்களே இது உங்களுக்கொரு பாடமாகும்! பெண் வேடத்தில பல பிசாசுகள் அலைவது என்னவோ கலிகாலத்தில் அதிகரித்துத்தான் வருகிறது. அவதானம் இளைஞர்களே! தியாகத்து தயாராகும் இளைஞர்களே போலிகளை கண்டு அவதானமாக இருக்கவும்! உங்கள் தியாகங்கள் வீணாடிக்கபப்டுவதையும் உங்கள் வாழ்க்கை சீரழிவதையும் ஒரு போதும் அனுமதிக்காதீர்கள். - kuruvikal - 07-05-2003 திருத்தங்கள்.... இளைஞனின்.. பிசாசொன்று.. தியாகத்துக்கு தயாராகும்.. வீணடிக்கபடுவதையும்... தவறுக்கு வருந்துகிறோம்! - Alai - 07-06-2003 பெண் என்பதால் தன் எண்ணத்தையே சொல்ல முடியாது எத்தனை கவலைகளைச் சுமந்திருப்பாளோ..? கடைசி நேரத்திலாவது சமுதாய வேலி உடைத்து சுய விருப்பத்தை மதித்து மனங் கவர்ந்த காதலனைக் கைப்பிடித்தாளே..! அவள் வாழட்டும். - kuruvikal - 07-06-2003 சீதனம் சுவர் உடைக்கும் போது வீரப்பெண் சமுதாய வழிகாட்டி அவளே வாய்க்குள் முட்டை வைத்து ஆடவனை ஏமாற்றும் போது பெண் என்றால் பேதை வாயடைக்கப்பட்ட பாவம்! எத்தனை போர்வைக்கள் ஒவ்வொன்றும் பச்சோந்தி வேடத்திற்கு! செய்யும் தவறு மறைத்து போலி வாழ்க்கை வாழ்வதற்கு! நாம் தாம் கொடுத்துவிட்டோம் சமுதாயச் சமத்துவம்! இனியும் ஏன் உங்களுக்குப் போர்வைகள், பெண் என்ற இரக்கம் தரும் கேவல வாழ்க்கை எனியும் தேவையா?! ஆடவனே பெண் உண்மையாக வாழவந்தால் வாழ் வாயடைத்து பொய்மையின் வடிவமானால் போடு அவளைச் சாக்கடையில்! - kuruvikal - 07-06-2003 திருத்தம்.. சீதனம்- சீதனச் போர்வைக்கள்- போர்வைகள் பிழைகளுக்கு வருந்துகின்றோம்...கள செப்பனிடலாளர்கள் மேலே கருத்தில் இங்கு சுட்டிக்காட்டப்பட்ட பிழையைத்திருத்தி இக் கருத்தையும் அகற்றி விட்டால் களத்தில் தேவையற்ற திருத்தங்கள் வருவதை தவிர்த்துக் கொள்ளலாம் அல்லவா! - Alai - 07-06-2003 kuruvikal Wrote:சீதனம் சுவர் உடைக்கும் போது வீரப்பெண் குருவி நான் சொல்ல வந்ததை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லைப் போல் தெரிகிறது. பெண் என்ற ஒரே காரணத்தால் அவளும் ஒரு மானிடப் பிறவியாக இருந்த போதும் அவளுக்கு எத்தனையோ தடைகள், கட்டுப்பாடுகள்.. அச்சம், மடம், நாணம்.............. என்பது போன்ற பல வேலிகள்.... இவைகளைத் தாண்டும் தைரியம் எல்லாப் பெண்களுக்கும் வந்து விடவில்லை. 21ம் நு]ற்றாண்டுதான் இப்போ. ஆனாலும் எத்தனையோ பேற்றோர்கள் இன்னும் 15ம் நு}ற்றாண்டிலோ அல்லது இன்னும் பிந்தியோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படியான பெற்றோரிடமோ இதை ஆதரிக்கும் சமூகத்திடமோ எல்லாப் பெண்களும் துணிந்து தமது மனக்கிடக்கைகளையோ ஆசைகளையோ சொல்லி விட மாட்டார்கள். அப்படியான ஒரு நிலையில்தான் அந்தப் பெண்ணும் தன் காதலை வெளிச் சொல்லப் பயந்திருப்பாள். கடைசி நேரத்திலாவது தனது காதலனை ஏமாற்றாது விட்டாளே.. . கடைசி நேரத்திலாவது ஒருவனை மனதில் சுமந்து கொண்டு இன்னொருவனுக்கு தன்னைக் கொடுத்து அவனையும் ஏமாற்றி தன்னையும் ஏமாற்றும் பாவச் செயலைச் செய்யாமல் விட்டாளே! இன்று அந்த மணமகனின் நிலை பரிதாபம்தான். அந்தத் திருமணம் நடந்திருந்தால் மணமகனின் நிலை இன்னும் பரிதாபமல்லவா..? - kuruvikal - 07-06-2003 உங்கள் வாதம் பெண் எப்பொழுதும் நியாயமான சிந்தனை உள்ளவள் என்பதை சாதிபதற்காக அமைவது போல் உள்ளது! திருமண மண்டபத்திலிருந்து காதலன் உடன் ஓடக் கூடிய பெண் திருமணப்பேச்சு எடுபட்டதுமே அதைச் செய்திருக்கலாமே...அப்படிச் செய்திருந்தால் ஒரு இளைஞனிடம் தோன்றிய மன உளைச்சலை தவிர்த்திருக்கலாமே...அந்தவகையில் நோக்கும் போது அப்பெண் வேண்டுமென்றே ஒரு ஆடவனை அவமானப்படுத்தும் உள் நோக்கத்துடன் செயற்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுவதில் நியாயம் இருக்கத்ததான் செய்கிறது. ஏனெனில் பெண் விழிப்புணர்வு என்று கூறி ஆண்களுக்கு எதிரான சிந்தனைகளே பெண்கள் மத்தியில் பெண்ணிலைவாதிகள் என்ற சுய பிரகடனவாதிகளால் செய்யப்படுகிறது அப்படியான பரப்புரைகள் இப்படியான செயல்களுக்கு தூண்டுதலாக அமைவதில் ஏதும் வியப்பிருக்க வாய்ப்பில்லை! இப்படியான 'புரட்சிகர பெண்ணாக' அவள் இருக்கும் பட்சத்தில் அவள் வாழ்க்கை அவள் காதலன் எனக் கூறிச் செல்லும் ஆடவனுடன் நிம்மதியாக இருக்கும் என்பது என்ன நிச்சயம். ஏன் அக்காதலன் அவளின் ஏமாற்றுவலையில் சிக்கிய இரண்டாவது ஆடவனாக இருக்கக் கூடாது! இப்படிப் பலபெண்களை பிரசவிப்பது தான் சமுதாய தொலை நோக்கற்ற பிரச்சாரங்களின் விளைவுகளாக அமைகின்றன! அச்சம் மடம் நாணம் என்பன ஒன்றும் மனிதரைக் கோழைகளாக்கும் இயல்புகள் அல்ல. அவை எல்லா மனிதனிடமும் ஓர் குறிப்பிட்ட அளவில் இருந்தால் தான் அவன் மனிதன் அன்றில் அவனுக்கும் ரோபோவிற்கும் என்ன வேறுபாடு! பெண்கள் விழிப்புணர்வு என்பது சமுதாய நலன் நோக்கிய ஒன்றே தவிர மனித நாகரிகத்துக்கான சவால் அல்ல! அப்படி பெண்கள் மனித நாகரிகத்துக்கு சவால் விடத்தக்க வகையில் மனித நாகரிகத்தை சிதைக்கும் வகையில் வளர்க்கப்படுதல் கட்டாயம் தடுக்கப்பட வேண்டும். தேவை எனில் கடும் சட்டங்களும் பிரயோகிக்கப்படுதலும் அவசியமாகலாம்! - Mullai - 07-06-2003 அலை....... இதையும் போய் பாருங்கள் ....................ஏலம் விடப்பட்ட சமாசாரம் நம்மை உறுத்த அந்தப் பெண் சாமியாரை ஏலம் எடுத்த முருகன்சாமியை சந்தித்தோம். பக்கத்திலேயே அந்த பெண்துறவி ஜெயா இருக்க ரொம்ப காஷசூவலாக ஆரம்பித்தார் முருகன்சாமி. <img src='http://www.vikatan.com/jv/2003/jul/09072003/p7a.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.vikatan.com/jv/2003/jul/09072003/p7.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.vikatan.com/jv/2003/jul/09072003/p7b.jpg' border='0' alt='user posted image'> ''அது ஒண்ணுமில்லை சாமி. இந்த ஜெயா சாமிய கூட இருந்த ராஜாராம் சாமி கொடுமைப் படுத்தினான். அதுபத்தி என்கிட்ட சொல்லி அழுதுச்சு இந்த சாமி (ஜெயா). எங்கூட வந்துட சொன்னேன். ஆனா ஜெயா சாமியை விட்டுக்கொடுக்க அவன் மறுத்துட்டான். 'நான் ஜெயாவை ஏலம் விடுறேன். முடிஞ்சா ஏலத்துல எடுத் துக்கோ‘னு சொல்லிட்டான். அதான் ஏலத்துல எடுத்தேன்'' என சொல்லிக் கொண்டே தான் குடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை ஒரு சுண்டு சுண்டிவிட்டு மூக்கிலும் வாயிலும் புகையை விட்டார். ஜெயாவிடம் பேசினோம். ''அவன் (ராஜாராம்) பெரிய கஞ்சா குடிக்கி (கஞ்சா குடிப்பவர்). என்னைய போய் கஞ்சா வாங்கியாரச் சொல்வான். அதைக் குடிச்சிட்டு தொல்லை பண்ணுவான்..'' என்றவர் ''சாமியாரா வந்துட்டாலும்கூட பொம்பளைங்களுக்கு பாதுகாப்பு இல்லீங்க சாமீ...'' என சொல்லிவிட்டு மரத்தடி நிழலில் சாய்ந்தார். இப்படி ஒரு சாமியார் டூ இன்னொரு சாமியாருக்கு ஏலம் விடப்பட்ட ஜெயா போலவேஇ பல சாமியார்களுக்கு நிரந்தர அடிமைகளாக பெண் சிஷ்யகோடிகள் உண்டு. எங்காவது ஊர் ஊராகப் போய் ஒரு நிழலான இடத்தைப் பிடித்து இந்த சாமியார்கள் ஹாயாக படுத்துவிட அடிமைகளாக இருக்கும் பெண்கள் அவர்களுக்கு கைகால் அமுக்கிவிடுவது அவர்களுக்கு வேண்டிய பீடி சிகரெட் கஞ்சா தூள் வாங்கிவருவது என்று ஓடியாடிக் கொண்டிருப்பார்களாம். சொற்ப காசுக்கு தன்னை விலைக்கு வாங்கி அடிமையாக்கி வைத்திருக்கும் சாமியார் சார்பாக ஊருக்குள் திருவோட்டுடன் போய் 'பிச்சை‘ வாங்கிவந்து உபசரிப்பதும் இந்த பெண் அடிமைகளின் வேலையாம். அரபு கதைகளில் வருவது போன்ற இந்த அடிமை ஏலத்தை பற்றி வேறு சில சாமியார்களிடமும் பேசினோம். 'சிவாய நமஹ..‘ என முணுமுணுத்துக்கொண்டிருந்த பாண்டிசாமி ''இந்த உலகத்துல கெழவியா இருந்தாலும் துறவியா இருந்தாலும் பொம்பளைங்களுக்கு ஆம்பளை துணை வேணுமில்ல. அதான் இந்த பொம்பளை சாதுக்களை ஏலம் விடுறது விக்குறது நடக்குது.. இங்கே மட்டுமல்ல எங்கெல்லாம் குருபூஜை நடத்தி சாதுக்களை கூப்பிடறாங்களோ அங்கெல்லாம் ஏலம் நடக்குது.. குருபூஜைங்கிறது சாதுக்கள் மாநாடு மாதிரி.. பல பகுதிகள்ல இருந்தும் சாதுக்கள் வந்து சேர்வாங்க‘‘ என்றார். இந்த ஏல விவகாரத்தை சாமியார்களில் சிலரே அருவருப்பாக பார்ப்பதையும் நம் விசாரணையில் உணர முடிந்தது. ராமசாமி என்ற சாமியார் ''இப்படி செய்யறதால எங்க திருக்கூட்டத்துக்கு பெருத்த அவமானமா போகுது. வீடுகள்ல ஒதுக்குப்படற பெண்கள்தான் இப்படி திருக்கூட்டத்தில வந்து சேர்றாங்க. போதாக்குறைக்கு மனநிலை சரியில்லாத பொம்பளைங்களும் எங்க கூட்டத்தில சேர்ந்துக்கிறாங்க'' என சொல்லி ''அதோ அங்கிருக்காரே வீருநல்லு சாமி.. அவரைப் பார்த்து பேசுங்க. நிறையச் சொல்வார்'‘ என கை காட்டினார். ஆனால் வலப்புறம் ஒரு பாட்டி இடப்புறம் ஒரு நடுவயதுப் பெண் என்று பந்தோபஸ்தாக நின்று கொண்டிருந்த வீரு நல்லுசாமி சொன்னதே வேறு.. ''நான் பேரையூர் பக்கம் கூவலப்புரத்தில் குரு பூஜைக்கு போனப்ப கேரளா சாமி பார்வதிய (பாட்டி) முன்னூறு ரூபாய்க்கு ஏலத்தில எடுத்தேன். அப்புறம் மதுரை பக்கம் அழகர்கோவில்ல இந்த அன்னக்கொடியை சேத்துக்கிட்டேன். இவ பம்பாய்க்காரி. ரெண்டு பொம்பளைங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சம்தான் தமிழ் தெரியும்'' என சொல்லிக்கொண்டே தான் குடித்த பீடியை பார்வதியிடம் கொடுக்க பார்வதி ஒரு தம் கட்டிவிட்டு அதை அன்னக்கொடியிடம் கொடுக்க.. அவர் உதடு சுடும் அளவுக்கு பீடியை நகத்தில் பிடித்து குடித்து முடித்தார். ''இந்த ஏலங்கள் ஒரு பொழுது போக்கா?‘‘ என்று எதிரில் வந்த முனியசாமி சாமியாரிடம் கேட்டோம்... ''சிவ... சிவ...'' என சொல்லிவிட்டு ''இங்க இங்கிருக்கிற சில சாமிகள்கிட்ட பணம் இருக்காது. இங்க குருபூஜை முடிஞ்சு வேற ஊருக்கு போக பஸ்ஸசூக்கு காசு பணம் இல்லாம திண்டாடுவாங்க. அதனால தங்களோட உடமைகளை ஏலம் விடுறாங்க. இத தவிர்க்கணும்னா குருபூஜை நடத்துறவங்க எங்களுக்கு பணம் கொடுத்து உதவணும்..‘‘ என்றார். சரி குருபூஜை நடத்தி சாமியார்களை வரவைக்கும் எம்.சுப்லாபுரம் ஊர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? ''சாமியார்களில் எவரேனும் நாங்க எதிர்பார்த்து காத்திருக்கிற சற்குரு சுவாமிகளாக வந்துவிட மாட்டார்களா என்ற நப்பாசையில்தான் நாங்க இந்த பஞ்சகாலத்திலும் குருபூஜை நடத்துறோம். இதுல கலந்துக்கிற சில போலி சாமியார்களை பற்றி நாங்கள் என்ன சொல்ல?!'' எனச் சுருக்கமாக சொன்னார்கள். கட்டுரை படம்: இரா. முத்துநாகு கட்டுரையை முழுவதுமாக வாசிக்கhttp://www.juniorvikatan.com/ நன்றி - ஜுனியர் விகடன் - kuruvikal - 07-06-2003 அது சரி ஏன் இந்த குப்பைத் தொட்டியை கிளறி பெண்களை நாறடிக்கிறீர்கள்....பாவம் அவர்களுக்கு குடிக்க கூழும் இருக்க இடமும் கொடுத்திருந்தால் அதுகள் ஏன் ஏலம் போற அளவுக்கு போகுதுகள்...இதே இந்திய மண்ணில் 'பெண்ணியம்' என்றும் பெண் விடுதலை என்றும் மேடைகள் போட செலவு செய்யும் பணத்தை இப்படியான ஏழைப் பெண்களுக்கு செலவு செய்தால் அவர்கள் தாங்களே தங்களை பாதுகாத்து மானம் மரியாதையுடன் வாழ வழி கிடைத்திருக்குமே! அது செய்ய திராணி இல்லை கேவலங்களை பெண்களின் படத்தைப் போட்டு பப்பிளிசிற்றி தேடுவது எந்த நோக்கத்தில் சாமியார் என்ற வேடதாரிகளுக்கும் அவர்களை நம்பியே வாழும் பெண்களுக்கும் விளம்பரத்துக்கா! இவர்களின் கதையைப்பார்த்து இன்னும் பல நூறு ஏழைப் பெண்கள் இதே வழியில் செல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்! இதுதானா பெண் விழிப்புணர்த்து கைங்கரியம்...ஒரு பிரச்சனையை சொல்வது கெட்டித்தனமல்ல பிரச்சனைக்கான தீர்வின் வழிவகைகளையும் முன் வைப்பதே நாலு பேர் திருந்த அல்லது பிரச்சனையை தவிர்க்க வழி செய்யும்! - kuruvikal - 07-06-2003 அது சரி ஏன் இந்த குப்பைத் தொட்டியை கிளறி பெண்களை நாறடிக்கிறீர்கள்....பாவம் அவர்களுக்கு குடிக்க கூழும் இருக்க இடமும் கொடுத்திருந்தால் அதுகள் ஏன் ஏலம் போற அளவுக்கு போகுதுகள்...இதே இந்திய மண்ணில் 'பெண்ணியம்' என்றும் பெண் விடுதலை என்றும் மேடைகள் போட செலவு செய்யும் பணத்தை இப்படியான ஏழைப் பெண்களுக்கு செலவு செய்தால் அவர்கள் தாங்களே தங்களை பாதுகாத்து மானம் மரியாதையுடன் வாழ வழி கிடைத்திருக்குமே! அது செய்ய திராணி இல்லை கேவலங்களை பெண்களின் படத்தைப் போட்டு பப்பிளிசிற்றி தேடுவது எந்த நோக்கத்தில் சாமியார் என்ற வேடதாரிகளுக்கும் அவர்களை நம்பியே வாழும் பெண்களுக்கும் விளம்பரத்துக்கா! இவர்களின் கதையைப்பார்த்து இன்னும் பல நூறு ஏழைப் பெண்கள் இதே வழியில் செல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்! இதுதானா பெண் விழிப்புணர்த்து கைங்கரியம்...ஒரு பிரச்சனையை சொல்வது கெட்டித்தனமல்ல பிரச்சனைக்கான தீர்வின் வழிவகைகளையும் முன் வைப்பதே நாலு பேர் திருந்த அல்லது பிரச்சனையை தவிர்க்க வழி செய்யும்! - Alai - 07-06-2003 kuruvikal Wrote:உங்கள் வாதம் பெண் எப்பொழுதும் நியாயமான சிந்தனை உள்ளவள் என்பதை சாதிபதற்காக அமைவது போல் உள்ளது! குருவி நீங்கள் நினைப்பது போல் நான் கருத்துக் கொள்ளவில்லை. தவறுகள் எல்லோரிடமும் உண்டு. அங்கு ஆண் பெண் என்ற பேதம் பார்க்கத் தேவையில்லை. சிந்தனைகளின் விரிவோ இன்னும் பயங்கரமானது. யாரும் எப்போதும் நல்லதையே சிந்திப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. நானோ... அல்லது நீங்களோ கூட கணப்பொழுதில் மனம் பேதலித்து எதையாவது தவறாகச் சிந்திக்கலாம். அது மனித இயல்பு. ஆனால் எமக்கென்று மனக்கட்டுப்பாடு, சரி பிழை பகுத்தாயும் தன்மை........ போன்ற சுய வரையறைகள் எமக்குள்ளே இருக்கும் போது நாமே எமது சிந்தனையின் தவறை உணர்ந்து நாமாகவே திருந்திக் கொள்வோம். சில சமயங்களில் எமது சிந்தனை செயலாகும் போது அதன் தவறை நாம் உணராத பட்சத்தில் அதை இன்னொருவர் சுட்டிக் காட்டும் போது திருந்திக் கொள்வோம். இந்த நிலையில் ஒருவர் தவறும் போது தவறி விட்டார் என்பதை நாம் சுட்டும் அதே நேரத்தில் அந்தத் தவறு எதனால் நேர்ந்தது என்பதைத்தான் நாம் மிக மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் தவறு மீண்டும் ஏற்படாத வண்ணம் எதையாவது செய்ய முடியும். இந்தப் பெண்ணின் விடயத்தில் அவள் தனது காதலைச் சொல்லப் பயந்திருக்கிறாள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அதற்கான முதற் காரணி - காதலை எமது சமூகம் தீண்டத்தகாத ஒன்றாய்ப் பார்ப்பதேயாகும். அடுத்த காரணி - அவளது காதல் விவகாரம் அவளது அப்பாவுக்கோ அல்லது அண்ணனுக்கோ அல்லது அம்மாவுக்கோ தெரியவரும் பட்சத்தில் வீட்டில் ஒரு பிரளயம் ஏற்படும் நிலைமை இருந்திருக்கலாம். இப்படியான பல சிக்கல்களையோ எதிர்ப்புக்களையோ எதிர் நோக்கும் தைரியம் அந்தப் பெண்ணிடம் இல்லாதிருந்திருக்கலாம். (இந்தத் தைரியமின்மைக்கான காரணம் - இங்கு யோசிக்கப் படவேண்டிய விடயம்) அந்த இக்கட்டான நிலையிலும் அவளது காதல் வலியதாக இருந்ததால் அவள் கடைசி நேரத்தில் தனது காதலனிடம் ஓடினாள். இது ஒன்றும் இன்றைய 21ம் நூற்றாண்டுப் புரட்சி இல்லை. காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு வரும் பட்சத்தில் காலம் காலமாக நடக்கும் ஒன்றுதான். இத்தனையும் இல்லாமல்----------- அவள் தனது பெற்றோரிடம் தனது காதலைச் சொல்லியும் அவர்கள் அதை ஏற்க மறுத்து கல்யாண ஏற்பாட்டைச் செய்திருக்கலாம். வேறு வழியின்றி அவள் தனது வழியில் ஓடியிருக்கலாம். இங்கு பாதிக்கப்பட்டவர் அந்த மணமகன் என்பதை மறுப்பதற்கு இல்லை. அவள் அவரையே திருமணம் செய்திருந்தால் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று சொல்வதற்கும் இல்லை. - Alai - 07-06-2003 kuruvikal Wrote:இப்படியான 'புரட்சிகர பெண்ணாக' அவள் இருக்கும் பட்சத்தில் அவள் வாழ்க்கை அவள் காதலன் எனக் கூறிச் செல்லும் ஆடவனுடன் நிம்மதியாக இருக்கும் என்பது என்ன நிச்சயம். இது புரட்சி அல்ல. காதலின் வலிமை. அப்படிப் புரட்சி எனக் கொண்டாலும் கூட அதனால் காதலனுடனான வாழ்க்கை நிம்மதியை இழக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. kuruvikal Wrote:அச்சம் மடம் நாணம் என்பன ஒன்றும் மனிதரைக் கோழைகளாக்கும் இயல்புகள் அல்ல. அவை எல்லா மனிதனிடமும் ஓர் குறிப்பிட்ட அளவில் இருந்தால் தான் அவன் மனிதன் ! ஆனால் இந்த. அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு இருக்க வேண்டுமென யாரும் வலியுறுத்தவில்லையே. எனக்குத் தெரிந்த வரையில் இவை நான்கும்[/color] - kuruvikal - 07-06-2003 முதலாவது பதில் குதர்க்கத்தற்கு தரப்பட்டுள்ளதால் அதற்கு விடை எழுதிப்பயனில்லை! பெண்கள் தங்கள் தவறை ஒத்துக் கொண்டதாக வரலாறு இல்லை...தொடருங்கள்...! அச்சம் மடம் நாணம் பயிர்ப்புப் பற்றி நள வெண்பாவிலும் மற்றும் இலக்கியங்களிலும் பெண்களுக்கே முதன்மைபடுத்தி விபரிக்கப்பட்டது ஏனெனில் பெண்களிடம் இயல்பிலே இக்குணங்கள் ஆதிக்கம் செய்வதே காரணமாகவிருக்கலாம். அதற்காக அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆண்களுக்கு இல்லை என்றில்லை.-அதே நளவெண்பாவில் புகழேந்திப் புலவர் நளனின் குணங்களுடன் தமயந்தியின் குணங்களை ஒப்பிடும் போது இவற்றைக் கையாண்டுள்ளார். ஆனால் உளவியல் கல்வி மற்றும் உடற்றொழிலியல் கல்வி கற்பதன் மூலம் இவற்றினை அனைவரிலும் காணலாம் காட்டலாம்! அதற்கு சான்றுகளும் விளக்கங்களும் உண்டு. என்ன ஆண்கள் இயல்பாக இக்குணங்களை வெளிப்படுத்துவது குறைவு அதற்காக இல்லை என்பது தவறு! இக்குணங்களின் வெளிப்பாட்டில் உடல் இரசாயணமும் முக்கிய பங்களிப்பதால் பெண்கள் இவற்றைத்தவிர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்றால் மீசை வளார்க்குமளவிற்கு தம்து உடற் கூற்றையும் மாற்றி அமைக்க வேண்டும்! பின் ஏன் பெண் என்ற பதம் பாவனையில் அதையும் எடுத்து ஒரு புரட்சி செய்ய வேண்டியதுதானே! :twisted: :roll: :twisted: - Alai - 07-08-2003 kuruvikal Wrote:முதலாவது பதில் குதர்க்கத்தற்கு தரப்பட்டுள்ளதால் அதற்கு விடை எழுதிப்பயனில்லை! பெண்கள் தங்கள் தவறை ஒத்துக் கொண்டதாக வரலாறு இல்லை...தொடருங்கள்...! அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பன யாரிடம் இருக்கிறதென்பதல்ல இப்போது பிரச்சனை. பெண்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப் படுகிறதே! அதுதான் பிரச்சனை. பெண் என்ற பதம் பாவனையில் இருப்பதற்காக பெண் அடங்க வேண்டுமென்றோ, அச்சப்பட வேண்டுமென்றோ அவசியமெதுவுமில்லை. மீசை இருக்கிறது என்பதற்காக ஆண்கள் பெண்களை அடக்க வேண்டும் என்றில்லை. - Alai - 07-08-2003 kuruvikal Wrote:முதலாவது பதில் குதர்க்கத்தற்கு தரப்பட்டுள்ளதால் அதற்கு விடை எழுதிப்பயனில்லை! விடை எழுத முடியவில்லை என்று சொல்லுங்கள். - kuruvikal - 07-09-2003 பதில் எழுதத் தெரியாமல் குதர்க்கம் என்று சொல்லவில்லை...ஏன் இன்று ஒருவனைக் காதலித்தவள் நாளை இன்னொருவனைக் காதலிக்கவும் முதலாமவனை துரத்திவிடவும் மாட்டாள்..மற்றவரின் மன உளைச்சல் உணராதவள் எப்படித்தான் வாழமாட்டால்.....உதாரணங்கள் பல கண் முன்னே நடக்க எங்களுக்கு வேதம் ஓதிப்பயனில்லை! அசாத்திய உடல் வலிமைக்கு துணிவுக்கு ஓமோன்களின் பங்களிப்பும் அவசியம் பெண்களிடம் சில ஓமோன்கள் அறவே இல்லை அப்போ எப்படி ஆணுக்கு சமனாக குணங்களை வளர்க்கப் போகிறீர்களோ.....பெண்ணிற்கு உள்ளதைத்தான் விபரித்தார்களே தவிர இல்லாத ஒன்றை வரவழைக்கவல்ல....இயல்பான குணங்கள் ஒன்றும் மன வலிமையை கெடாது...ஆனால் நீங்கள் அப்படி ஒரு மாயை ஊட்டுவதுதான் பெண்கள் குழப்பமடையக் காரணம்...கொஞ்சம் அறிவியல் பூர்வமாகவும் சிந்தியுங்கள் அல்லது இப்படியே எழுதிக் கொண்டு இருக்க வேண்டியதுதான் சமூகம் தன்பாட்டில் போய்க் கொண்டிருக்கும்...எழுத்துக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லை என்றால் அவ்வெழுத்துக்கள் தான் ஏன்.....? நாட்டை ஆண்ட பெண்மணிகள் எல்லாம் என்ன அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு வேண்டாம் என்று உதறி வந்தவர்களோ....அவர்களிடமும் அவை இருந்தனதான் ஆண்களிடம் உள்ள இயல்பான குணங்கள் போல...இருக்க வேண்டிய இடத்தில் அததது இருந்தால் தான் தேவையானதைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றியடையலாம்...இல்லை 'நான் ஆம்பிளை மாதிரி அரைகுறையாத்தான் திரிவன் அதையாரு கேக்கிறது எண்டு திரிந்தால் 'ஆண்களுக்கு ஒன்றும் நட்டமில்லை நட்டம் யாருக்கென்பது அநுபவப்படப் புரியும்! அநுபவப்பட்டபின் வருத்தப்பட்டு பயனில்லை என்பதனாலேயே இப்பவே அவதானமாக நடக்க கோருகின்றனர்! உள்ளதையே ஒழுங்காக பிரயோகிக்கத் தெரியவில்லை இல்லாத ஒன்றுக்காய் அலைவது வீண்..! கேட்டால் கேளுங்கள் கேக்காட்டி அப்படியே போய்க் கொண்டிருங்கள் வாழ்வு முடியும் மட்டும் போய்க் கொண்டே இருப்பீர்கள்! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: நன்றி வணக்கம்! |