![]() |
|
பார்வையாளர் எண்ணிக்கை 1000 ற்கு மேல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பார்வையாளர் எண்ணிக்கை 1000 ற்கு மேல் (/showthread.php?tid=7436) |
- Kanthar - 04-04-2004 குருவி உதை அவையள் தீர்மானிக்க நீங்கள் விடத்தேவை இல்லை.................... ஐபி அட்ரசை அவையளுக்கு தெரியாமல் பண்ண பல வழிகள் இருக்கு................. - sOliyAn - 04-04-2004 விளக்கத்துக்கு நன்றி. ஆக, 5 நிமிடத்தில் 200 தடவை முறுக்கி உள்ளேன் என்கிறீர்கள். அப்படியாயின் எனது ஆக்கங்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கில் பார்வையாளரைக் கொண்டிருக்கவேண்டும். எனினும் அந்த புள்ளிவிபரங்களையும் தந்தால் பிரயோசனமாக இருக்கும். ஏனெனில் கணனி அறிவுள்ளவர்கள் அது உண்மையா என உறுதிப்படுத்திக்கொள்ளலாம். அதுவரையில் நான் எனது ஆக்கங்களை யாழின் முகப்பிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கிறேன். மன்னிக்கணும் மோகன்! இதுதான் எனக்கு தெரிந்த வழி. - kuruvikal - 04-05-2004 எங்கட privacy பற்றிச் சொல்ல எங்களுக்குத் தனிப்பட்ட உரிமை இருக்கிறது...அதில் மற்றவர்களின் கருத்துக்கு இடமில்லை....இவ்வளவும் நடந்திருக்கும் போது நாளை மற்றவர்களுக்கு எதுவும் நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம்....! hock: எங்கள் தனி உரிமையின் (privacy) பேரில் கருத்துரைக்க எங்களுக்கு உரிமை உண்டு...அது எந்தப் பொதுத் தளத்திலும் ஒரு கருத்தாளனுக்கோ அல்லது பாவனையாளனுக்கோ அல்லது உரிமையாளனுக்கோ இருக்கும் அடிப்படை அம்சமாகும்....! :!: இது இக்களத்தில் ஒரு கருத்தாளனுக்கு உள்ள அடிப்படை உரிமை தொடர்பாக எழுந்த வேண்டுகோளே அன்றி...யாரினதும் தனிப்பட்ட கருத்துப்பரிமாற்றங்களால் நாம் பாதிக்கப்பட்டோம் என்பதால் வந்ததல்ல....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 04-05-2004 Kanthar Wrote:குருவி உதை அவையள் தீர்மானிக்க நீங்கள் விடத்தேவை இல்லை.................... நீங்கள் கள்ளர் என்பதற்காக எல்லோரும் கள்ளரோ...இல்லையே...எங்கள் privacy பற்றிக் கவலைப்பட எங்களுக்கு உரிமை இருக்கு அதில் யாரும் தலையிட மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்பதை privacy உள்ளவர்கள் சொல்லாமலே புரிந்து கொள்வர்...உங்களுக்கெல்லாம் அது இருந்தா ஏன் சொந்த மண்ணையே காட்டிக் கொடுக்கிறியள்.....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 04-05-2004 [quote]kuruvikal[/color] [b]<span style='font-size:30pt;line-height:100%'>உங்கடை கருத்துக்குக்கு கொடிபிடிக்காட்டால் தனி மனித சுதந்திரம் வாபஸ்வாங்கப்பட்டு துரோகிப்பட்டம் கொடுக்கப்படும்.. எல்லாவித அவதூறுகளையும் ஏற்கவேண்டிவரும் என்ற எச்சரிக்கை போட மறந்திட்டீங்கள் போலை..?</span> - vallai - 04-05-2004 மதி முதல்ல எனக்குச் சந்தேகம் உமக்கு மட்டும் எப்பிடி இவ்வளவு வோர்ணிங் வந்ததெண்டு இப்ப தானே தெரியுது அதையும் ஆரோ முறுக்கி விட்டிருக்கினம் பிறவளமாய்ச் சுத்தினா குறைஞ்சிடும் பிறகு ஆசைப்பாட்டிலை முறுக்கு முறுக்கு எண்டு முறுக்கி மைனசிலை வைச்சிடாதையும் எப்பிடியும் திருப்பி முறுக்குவாங்கள் உந்த சிவப்புச் சிவப்பா எழுதுறதுகளை விடுங்கோ ஜே.வி.பிக்காரங்கள் மதிரிக் கிடக்கு - Mathivathanan - 04-05-2004 vallai Wrote:மதி முதல்ல எனக்குச் சந்தேகம் உமக்கு மட்டும் எப்பிடி இவ்வளவு வோர்ணிங் வந்ததெண்டு இப்ப தானே தெரியுது அதையும் ஆரோ முறுக்கி விட்டிருக்கினம்எச்சரிக்கை.. வல்லையிடம் ஒருத்தரும் கார் வேண்டவேண்டாம்.. கட்டாயம் மைலேஜ் சுத்திருப்பார்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vallai - 04-05-2004 நாங்களெல்லாம் எங்கையப்பா கார் வேண்டுறது ஒருக்கா சுகமில்லாமல் இருக்க கார் பிடிச்சு பெரியாசுப்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போனவை அவ்வளவுதான் உதெல்லாம் மாசக்கடைசியிலை எலக்ரிசிற்றிக்காரன்ரை மீற்றர் ஏறாமல் சுத்திப் பழகினது உங்கடை நாட்டிலை இப்பிடி முறுக்கேலாது எல்லாம் கொம்பியூட்டர் - yarlmohan - 04-05-2004 சில விளக்கங்கள். -ஒரு இணையத்தளத்திற்கு வருபவர்கள் செய்யும் செயற்பாடுகள் (பார்க்கும் பக்கங்கள், படங்கள் போன்ற) அனைத்தும் பதிவில் எடுக்கப்படுகின்றன. அவ்வாறே யாழ் இணையத்திற்கு வருபவர்கள் அனைவரின் செயற்பாடுகளும் பதியப்படுகின்றது (இது ஒரு பிரத்தியேக செயற்பாடல்ல.வழமையான சேர்வர் செயல்பாடின் ஒருஅங்கமே). இந்த Log file என்னைத் தவிர இங்கு யாரும் பார்க்க முடியாது. யாழ் இணையத்தில் முதல்பக்கத்தில் ஆக்கங்களை இணைக்க ஒரு சிறு script ம் databaseம் பாவிக்கப்படுகின்றது. முதிலில் குறிப்பிட்ட log file தவிர இங்கு இந்த databaseஇலும் சில விபரங்கள் சேகரிக்கப்படுகின்றது. அதில் குறிப்பிட்ட ஒரு ஆக்கத்திற்கு புள்ளி (rate) எவ்வெவ் IPயில் இருந்து வழங்கப்பட்டது என்ற விபரங்கள் சேகரிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட ஆக்கத்திற்கு மீண்டும் அதே IPயில் இருந்து புள்ளி வழங்குவதைத் தடுக்கவே இவ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விபரங்களும் என்னைத் தவிர வேறு யாரும் பார்வையிட முடியாது. கருத்துக்களத்தில் நான் (மோகன்), வலைஞன், யாழ் ஆகியோர் கருத்துக்களத்தில் வருபவர்களுடைய IPயினைப் பார்க்கமுடியும். ஏனைய மட்டுறுத்தினர்கள் எவரும் IP யினைப் பார்வையிட முடியாது. சில மட்டுறுத்தினர்களுக்கு ஏனைய மட்டுறுத்தினர் யார் என்ற விபரம் தெரியாது. இதிலும் ரகசியம் பேணப்படவேண்டும் என விரும்பிப் பேணப்படுகின்றது. அங்கத்தவர்கள் யாருடைய விபரமும் ஏனைய அங்கத்துவர்கள் கேட்டால் கொடுக்கப்படுவதில்லை. சிலர் மின்னஞ்சல் முகவரி கேட்டு குறிப்பிட்டவர்களின் அனுமதியைப்பெற்றுத்தான் மின்னஞ்சல் முகவரி கொடுத்துள்ளேன். இவ்வாறு அனைவரது தரவுகளின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படுகின்றது. இங்கு கண்ணன் குறிப்பிட்டதற்கும் யாழ் இணையத்திற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. (அதாவது கண்ணன் யாழ் இணையத்தின், log file எதனையும் பார்க்கவில்லை). அவ்வாறு ஒரு சம்பவம் நடைபெற்றதா என நான் ஆராய்ந்து பார்க்கவும் இல்லை, பார்ப்பதும் இல்லை. ஆதலால் இதன் உண்மைத்தன்மை பற்றி என்னால் எதுவும் கூறமுடியாது. அப்படி ஒரு சம்பவம் நடைபெற்று இருந்தால்கூட குறிப்பிட்ட ஒருவர்தான் இதனைச் செய்தார் என உறுதியாகச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வதென்றால் அதற்கான சட்ட நடவடிக்கைகள் மூலம்தான் உறுதிப்படுத்தலாம். கண்ணன் குறிப்பிட்டது போன்று 5 நிமிடத்தில் பார்த்தவர்கள் எண்ணிக்கை 200அல் அதிகரித்தது என்றால் அதை என்னால் உறுதிப்படுத்த முடியாது. (யாழ் இணையத்தில் வரும் கட்டுரை, கதை, கவிதை போன்ற ஆக்கங்களை எத்தனைபேர் பார்வையிட்டார்கள், Most viewed Articles, Best Rated Articles போன்ற விபரங்கள் இடையில்தான் இணைக்கப்பட்டது. அப்படி இணைக்கும்போது "ஐயாயிரம் மார்க் அம்மா" என்னும் சிறுகதையே முன்னணியில் இருந்தது) சோழியான் தனது கதைகளை யாழ் இணையத்தில் இருந்து நீக்கியது வருந்தத்தக்கது. மீண்டும் இணைப்பதும் இணைக்காததும் சோழியானின் விருப்பம். - sOliyAn - 04-05-2004 ஒரு எழுத்தாளனுகஇகு அவனது ஆக்கம் பரவலாவதுதான் பெரிய மகிழ்ச்சி. அந்த வகையில் யாழ் இணையம்மூலம் பல தொடர்புகளை.. அதன்மூலம் பல அனுபவங்களை அறிவை பெற்றிருக்கிறேன். ஆனால்.. யாழ் மொடரேற்றர் ஒருவரே '5 நிமிடத்தில் 200 தரம் பிறேமனிலிருந்து முறுக்கப்பட்டுள்ளது என உறுதியாகச் சொல்லும்போது.. எனது இடத்தில் யார் இருந்தாலும் அவர் மனநிலை எதுவாக இருக்கும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். இனிமேல் அந்த ஆக்கங்களுக்கு பர்ர்வையாளர்களின் எண்ணிக்கை கூடினால்.. அது எனது கைங்கரியம் என்ற எண்ணம்தானே எழும்.. அதனால்தான் அவற்றை நீக்கினேன்.. ஏனெனில் அதை வாசிக்கவேண்டியவர்கள் வாசித்திருப்பார்கள்.. இனி நான்தான் வாசிப்போர் எண்ணிக்கையை முறுக்கவேண்டும் என்ற 'தோற்றம்' இருக்கும்பொழுது அவை தொடர்ந்து இருப்பதால் பிரயோசனமில்லை எனக் கருதுகிறேன். எனினும், யாழ் களத்துடன் இணைந்தே உள்ளேன். உங்கள் விளக்கத்துக்கு நன்றி மோகன்! - AJeevan - 04-05-2004 சோழியன் தொடர்ந்து எல்லோராலும் எழுதப்பட்ட கருத்துகளை கண்ணுற்ற போது வேதனையாக இருக்கிறது. பல்வேறு தரத்திலுமுள்ள நல்ல திறமைசாலிகள் யாழ் களத்துக்குள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. சோழியன், உங்கள் ஆக்கங்களை மட்டுமல்ல , உங்கள் லொல்லு தனமான குறும்புகளையும் வாசிப்பவர்களில் நானும் ஓருவன். நாங்கள் நண்பர்களாக தொலைபேசியில் பேசினாலும் கருத்துக் களத்தில் மோதியிருக்கிறோம். நண்பர்கள் என்பதற்காக நாம் எல்லாவற்றையும் சரியென்று சொல்வதானால் கருத்துக்களமொன்று தேவையில்லை. <span style='color:green'>சோழியனிடம் எனது தனிப்பட்ட வேண்டுகோள் பழைய சில கருத்து மோதல்களை மறந்து மீண்டும் உங்கள் ஆக்கங்களை யாழில் இடம் பெற வையுங்கள் என்பதே. அன்புடன் உங்கள் நண்பன், அஜீவன்</span> ![]() <span style='font-size:22pt;line-height:100%'>கண்ணனின் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.</span> AJeevan - Eelavan - 04-05-2004 மற்றைய துறைகளுடன் ஒப்பிடும் பொழுது எழுத்துத் துறையில் இருப்பவர்களிடையேயே அதிகமான பிணக்குகள் எழுகின்றன விமர்சனம்,இலக்கியத் திருட்டு,உரிமை கோரல் புகழ், புலமைக் காய்ச்சல் போன்ற பல்வேறு பிணக்குகள் எழுத்தாளர்களிடயே ஏற்படுவது வழமை தரமான விமர்சனங்களால் எழுத்தாளன் புடம் போடப்படும் அதேவேளை தரங்கெட்டதனமான விமர்சனங்கள் அவனைப் படுகுழியில் தள்ளும்.வாசகர் மத்தியிலும் ஒரு தப்பபிப்பிராயத்தை உருவாக்கிவிடும் புகழ் பெற்ற பலர் மீது பலவிதமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன சிலர் அவர் மீதான பொறாமையால் அப்படிச் செய்கின்றனர் சிலர் அப்படிச் சொல்லியாவது புகழ் பெற்றுவிட நினைக்கின்றனர் இவற்றை சீர்தூக்கிப் பார்த்து தரங்கெட்டவற்றை விலக்கியும் தரமானவற்றை ஏற்றும் தன்னைச் சீர் செய்து கொள்வது ஒரு எழுத்தாளனின் கடமை. அதேவேளை எழுதுவதற்குத் தளம் அமைத்துக் கொடுத்தவர்கள் இப்படியான குற்றச்சாட்டுகள் எழுத்தாளன் மீது சுமத்தப்படும் போது உண்மை நிலையை அறிவதற்குத் துணை நிற்கவேண்டும் அந்த வகையில் மோகன் அண்ணா தனது பக்கத்து விளக்கத்தைக் கொடுத்துள்ளார் சோழியன் அண்ணா தனது கதைகளை தளத்திலிருந்து அகற்றியதற்கு வருத்தமும் தெரிவித்திருக்கிறார் வரவேற்கத்தக்கது ஆயினும் இது பற்றித் தெரிந்தவர்களை விட இப்படியொரு சம்பவம் நடந்ததாக பறைசாற்றி நிற்கும் இந்தத் தலைப்பு களத்தில் இருக்கும் வரைக்கும் வாசகர் பலருக்கும் அக்குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமோ என்ற சலனத்தை உருவாக்கிவிடும் எனவே இத்தலைப்பை முதலில் களத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. அன்பின் சோழியன் அண்ணாவுக்கு முதலில் எனது கருத்தை உங்களுக்குத் தனிப்பட அனுப்பலாம் என்றுதான் நினைத்தேன் ஆயினும் புன்பட்ட நெஞ்சுக்கு மருந்தாக இருப்பதைவிட காயம் பெருத்து சீழாகமல் தடுக்கும் என இதனை எழுதுகின்றேன் தளத்தில் உள்ள கதைகளை அகற்றிவிட்டீர்கள் மனம் ஆறியிருக்கும் ஆனால் குற்றமுள்ள நெஞ்சு குகுறுக்கும் என்ற பேச்சை உங்களால் தடுக்கமுடியுமா? எனக்குப் புரிகிறது உங்கள் வேதனை ஆயினும் இவ்விடத்தில் நீங்கள் செய்திருக்கவேண்டியது தொடர்ந்தும் நல்ல எழுத்தாளன் என்ற நிலையைப் பேணிக்கொள்வதாகும் இதனை ஒரு முகஸ்துதிக்காக சொல்லவில்லை உண்மையை மற்றவர்களும் அறியவேண்டும் என்பதற்காக சொல்கின்றேன் தளத்தில் உங்களின் ஐஸ்கிறீம் சிலையே நீதானோ என்ற கதை வெளிவந்தபோது நான் களத்தில் உறுப்பினன் அல்லன் ஆனாலும் ஒரு வாசகன் அவ்வேளையில் தொடர்ந்து யாழ்தளத்தைப் பார்க்கும் வழக்கம் உள்ளவனாதலால் எனது நண்பர்கள் ஒவ்வொரு முறையும் கதையின் அடுத்த அங்கம் வெளிவந்துவிட்டதா என என்னைக் கேட்பார்கள் படித்துவிட்டு கதையின் போக்கை விமர்சிப்பார்கள் அதில் பலர் ஒழுங்காகக் கதைகள் வாசிப்பவர்கள் அல்லர் ஆயினும் உங்களின் கதை சொல்லும் பாங்கு அவர்களைக் கவர்ந்திருக்கின்றது உங்களின் நாரதர் விஜயம் வெளிவர ஆரம்பித்ததிலிருந்து அனைவரும் ஆவலாக அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறோம் அப்பிடியாக பலதரப்பட்ட வாசகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் விதமாக கதைகளை எழுத சிலரால் தான் முடியும் வாசிக்கும் வாசகர்கள் எவரும் முட்டாள்கள் இல்லை இது என்ன திரைப்பட வரிசைப்படுத்தலா அதிக எண்ணிக்கையான புள்ளிகள் உள்ள கதையை மட்டும் பார்ப்பதற்கு உண்மையான வாசகன் தேடிப்பார்ப்பான் அவனுக்கு சோடனைகள் தேவையில்லை இதனை புரிந்துகொண்டால் வரிசைப்படுத்தலும் தேவையில்லை அதையிட்டுப் பொருமலும் தேவையில்லை ஆயிரம் புள்ளிகளாலும் பரிசுகளாலும் வழங்கமுடியாத மனத்திருப்தியை ஒரு உண்மையான வாசகனின் விமர்சனம் வழங்கும் அந்த வாசகனுக்காக உங்கள் எழுத்துப் பணியைத் தொடருங்கள் இது கள உறுப்பினராக அன்றி உங்கள் கதைகளின் வாசகனாக நான் விடுக்கும் வேண்டுகோள் - AJeevan - 04-05-2004 Eelavan Wrote:புள்ளிகளாலும் பரிசுகளாலும் வழங்கமுடியாத மனத்திருப்தியை ஒரு உண்மையான வாசகனின் விமர்சனம் வழங்கும் அந்த வாசகனுக்காக உங்கள் எழுத்துப் பணியைத் தொடருங்கள் இது கள உறுப்பினராக அன்றி உங்கள் கதைகளின் வாசகனாக நான் விடுக்கும் வேண்டுகோள் இந்த பகுதி ஒன்றே போதும் சோழியனின் மறு அவதாரத்துக்கு......................... AJeevan - Mathivathanan - 04-05-2004 இப்ப நடக்கிற பிரச்சனையிலை சரி பிழை எனக்கு தெரியேல்லை.. சோழி நல்ல எழுத்தாளன் எண்டதை நான் மறுக்கேல்லை.. ஆனால் முந்தி முந்தியும் இது நடந்தது.. ஒருவர் ஒன்றை எழுதிவிட்டு மறு அவதாரம் எடுத்துவந்து தன்னைத்தானே புகழ்ந்துரைத்தது.. அதேபோல கருத்துக்களத்தில் எத்தனைமுறை இப்படி நடந்திருக்கிறது.. நடந்துகொண்டிருக்கிறது.. இனிமேலும் நடக்காமலிருக்கப்போவதில்லை.. ஒருவர் பல அவதாரங்கள் எடுத்து பக்கபலம் சேர்ப்பதை எத்தனையோமுறை சுட்டிக்காட்டியுள்ளேன்.. என்னைப்பொறுத்தவரை இதை நிறுத்த பில் கேறஸ் ஆலும் முடியாது.. நம்ம தமிழர் எவரையும் சுத்தக்கூடியவர்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சோழி.. ராசா.. முருகா.. லொள்ளுப்பண்ணுறதை விட்டிட்டு திரும்பப்போட்பா..
- vanathi - 04-05-2004 Mathivathanan Wrote:சோழி.. ராசா.. முருகா.. லொள்ளுப்பண்ணுறதை விட்டிட்டு திரும்பப்போட்பா.. திரும்பப்போட்பா.. - Mathivathanan - 04-05-2004 vanathi Wrote:[quote=Mathivathanan] திரும்பப்போடப்பிள்ளை.. நன்றி அதுசரி.. யாழ் இணையத்திலை இப்ப முறுக்கிக்கொண்டிருக்கிறது யாரப்பா..? இருந்தாப்போலை சிலோவாப்போச்சு..? - Paranee - 04-05-2004 ம் மோகன் அண்ணா கூறியது முற்றிலும் உண்மையானது இன்றுதான் இளங்கோ கண்ணன் என்பது எனக்கும் தெரிந்தது. களத்தில் மற்றைய கருத்தாளர்களிற்கு மற்றைய உறுப்பினர்களிற்கு உள்ள கடப்பாடுகள்தான் எமக்கும் இருக்கின்றது. எமக்கு என்று வழங்கப்பட்ட பகுதிகள் தவிர மற்றைய பகுதிகளையோ மற்றைய விடயங்களையோ பார்க்கமுடியாது திருத்தங்கள் செய்யமுடியாது. இத்தனை காலமாக இந்த களத்தில் எழுதியும் முறுக்கிவிடும் சமாச்சாரம் நளாயினி அக்காவின் விளக்கத்தின்பின்தான் எனக்கே வெளிச்சமாகியது. சரி அதைவிடுவம் சோழியன் அண்ணா தனது ஆக்கங்களை இங்கிருந்து அகற்றியது மனவருத்தத்தை தருகின்றது. அதேவேளை அவரின் மன வலியையும் உணரக்கூடியதாக இருக்கின்றது. விளையாட்டு சிலவேளைகளில் வினையாக முடிகின்றது. எப்பொழுதுமே வார்த்தைகள் பொன்னாவை தீ போன்றவை ஒரு தடவை நாம் வெளியேற்றிக்கொண்டால் அதன் தாக்கம் இறுதிவரை இருந்துகொண்டிருக்கும. கனன்றுகொண்டிருக்கும் சிலருடைய சிலேடைப்பேச்சுக்கள் தனிப்பட்ட விரோத மனப்பாங்கு எல்லாம்தான் நல்ல எழுத்தாளர்களை களத்திலிருந்து து}க்கிவீசி உள்ளது. சோழியன் அண்ணா தனது ஆக்கங்களை இணைப்பது இணைக்காமல் இருப்பது அவரது மனநிலைiயைப்பொறுத்தது. அவரது கதைகள் எனக்கு மிகமிக விருப்பமானவை. நான் எங்கிருந்தாய் மண்ணில் பிறக்கையிலே கவிதை எழுத தொடங்கும்போதே சொன்னேன் அவரது ஜஸ்கிறீம் சிலையே தொடர்தான் எனக்கு அத்திவாரமே தந்தது என அப்படியாக அந்த கதை அமைந்திருந்தது. அத்தகைய எழுத்தாளன் மனதை சில வார்த்தைகள் சுட்டு வடு ஏற்படுத்தியமைக்கா கள உறுப்பினர் என்ற முறையில் அவர்கள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்Nறுன். எனக்காக என்னைப்போன்ற வாசகர்களிற்காக உங்கள் ஆக்கங்களை இந்த தளத்தில் இணைத்துக்கொள்ளுங்கள். யாழ் இணையம் எமக்கெல்லாம் தாய்த்தளம். இங்குள்ளோர் எல்லோரும் சகோதரர்கள். அவர்களின் விளையாட்டுக்கள் வீண்பேச்சுக்களை நாம் ஆழமாக எடுத்துநோக்கின் எம்மை நாமே கீழ போட்டு மிதிப்பது போலாகிவிடும். உங்கள் ஆக்கங்களை எதிர்பார்தது யாரோ செய்த தவறிற்காய் களத்தின் உறவினன் என்றவகையில் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன். களம்கண்ட முதிய எழுத்தாளர் நீங்கள் உங்கள் ஆக்கங்கள் எங்கள் ஊக்கம் நன்றி வணக்கம' ந.பரணீதரன் - sOliyAn - 04-05-2004 நன்றி அன்புள்ளங்களே! ஒரு எழுத்தாளனுக்கு என்ன வேண்டுமோ அதை பெருமனதுவந்து தந்திருக்கிறீர்கள்! நோய்க்கு சில மாத்திரைகள் விழுங்கிய உணர்வுடன்.. மீண்டும் தொடருவோம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 04-05-2004 மோகன் Wrote:சில விளக்கங்கள். மோகன் அண்ணா எம்மால் எழுப்பப்பட்ட களத்தில் கருத்தாளர்களின் தனி உரிமை( தனிப்பட்ட இரகசியங்கள்...Privacy) பற்றியும் தங்கள் பதில் விளக்கம் அளித்துள்ளது....தங்கள் பதில் எமக்கு மட்டுமன்றி அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும் உண்மை நிலையைச் சொல்வதாக அமையட்டும்....! நாமும் களப் பொறுப்பாளர்களை நம்பி நடப்போமாக...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கண்ணன் - 04-05-2004 நன்றி சோழியான் எல்லோரும் கேட்டதங்கிணங்க உங்கள் முடிவை பரிசீலனை செய்ததற்கு நன்றி தெரிந்தோ தெரியாமலோ நான் செய்த தவறுக்காக வருந்துகிறேன். |