Yarl Forum
சுட்ட கவிதை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: சுட்ட கவிதை (/showthread.php?tid=7322)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


- Eelavan - 06-01-2004

இல்லை பொற்கிழி என்றால் பணமுடிப்பு முன்னைய காலத்தில் பொற்காசுகளை முடிப்பாகக் கட்டி வழங்கியதால் பொற்கிழி என்றார்கள்

மோகன் அண்ணா நாங்கள் வாக்குக் கொடுத்துவிட்டோம் தவறுவது அழகல்ல ஐந்து சதம் பத்துச்சதமா இருந்தாலும் பரவாயில்லை பொற்கிழி கொடுத்துவிடுங்கோ


- Mathan - 06-01-2004

அடம்! - புதுக் கவிதை

"அம்மா...
'ஜெய்ப்பூர்'
செயற்கைக்கால்
வாங்கித் தந்தால் தான்,
பள்ளிக்குப் போவேன்"!
ஒற்றைக் காலில்...
அடம்பிடிக்கும்,
பள்ளிச்சிறுவன்!!

நன்றி - ஈழநாதன்


- Mathan - 06-03-2004

மனநோயாளி


நீதான்
உலகமென்ற நினைப்பில்
இத்தனை வருடங்கள்!
எனது
அசைவுகள் எல்லாமே
உன்னோடு மனம் கோர்த்து
உன்னையே மையப் படுத்தி.....!

உனது கை கோர்ப்பு
நட்புடனா!
அல்லது நடிப்புடனா!
எனக்குத் தெரியவில்லை.

திடீரென நீயென்
கைகளை உதறி விட்டு
விசுக் விசுக்கென
உன் கை வீசி
நடக்கத் தொடங்கியதும்.....
மனவெளிகளின்
தனிமை தாங்காது
புடைத்த மூளைநரம்புகளின்
வலியோடு....... நான்

அவை
வெடித்துச் சிதறி....
- மனநோயாளி - என்ற முத்திரை
என் மேல் குத்தப் படுமுன்
ஒரு வார்த்தை சொல்லிவிடு
நட்புடனா...?
நடிப்புடனா...?


சந்திரவதனா-யேர்மனி
24.3.2002

(கணவனால் கைவிடப்பட்ட நண்பிக்காக)


- Chandravathanaa - 06-03-2004

[b]நன்றி BBC


- Mathan - 06-04-2004

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; மின்னோரு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆதலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

- கணியன் பூங்குன்றனார்

எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் சொந்தம்
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்
பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.


நன்றி - பி.கே.சிவகுமார்


- Eelavan - 06-04-2004

அடப்பாவிகளா இது கலைஞர் கருணாநிதியின் "சங்கத்தமிழ்" இலிருந்து சுட்டது


- Mathan - 06-04-2004

எனக்கு தெரியாது சாமி. பி.கே.சிவகுமார் தான் போட்டிருந்தார்,


- Mathan - 06-04-2004

ஈன்ற பொழுதில்.....



மகனே...!
அன்றொருநாள்
எனக்கு,
உனையீன்ற பொழுதிலும்
பெரிதும் வலித்தது!

ஊரு விட்டு
ஊரு வந்து,
தங்கியிருந்த ஓர் நாளில்,
என் கண்முன்னே
உன்னுடலம்,
கண்டும் காணாமலும் நான்.!

சந்தை செல்லும் வழியில்
சுட்டுப் போட்டிருந்தார்கள்.
உடம்பெங்கும் துளைபட,
திறந்த விழி வெறிக்க,
பெற்றவென் வயிறு வலிக்க,

இரவுச் சுற்றிவளைப்போடு
அதுவாகிப்போன!
நீ கிடந்தாய்.

உன்னுடலில் மொய்த்திருந்த
இலையான்களிலும் பார்க்க
உன்னை மொய்த்திருந்த
இராணுவம் அதிகம்!!

"யார் பெத்த பிள்ளையோ"
இரக்கப்படவெனவே
பிறந்திருக்கும் சிலர்
உச்சுக் கொட்டினார்கள்.

எனக்குத் தெரியும்!
உனக்கும் தெரியும்!!
நீ...
நான் பெத்த பிள்ளை.

ஐயிரண்டு திங்கள்
அங்கமெல்லாம் நொந்து,
நான் சுமந்து பெத்த
பிள்ளை!

கர்ணன் பெத்த குந்தி போல
குந்தியிருந்து,
குமுறியழ
எனக்கும் ஆசைதான்.

உனக்காக
அழும் அழுகை
உன்னோடை தங்கச்சிக்கு
எமனாக மாறிவிடும்!

நீ என் மகனென்று
தெரியவரும்
இப்பொழுதில்,
என் வீடு...
சுத்திவளைக்கப்படும்.

கட்டிய துணியுடன்,
இராணுவமுகாமுக்கு
இழுபடுவாள்
உன் தங்கை!

வாய் வரைக்கும்
வந்துவிட்ட
ஒப்பார,¢
தொண்டைக்குழியோடு
காணமற் போனது.

ஐயோ என் மகனே..!
பெற்ற மகனையே,
பேரு சொல்லி
அழமுடியாப்
பாவியாப் போனேனே!.

உன்னை
ஈன்ற பொழுதிலும்....
பெரிதும் வலிக்கிறதே!

நன்றி - ஈழநாதன் http://kavithai.yarl.net/archives/001024.html#more


- Mathan - 06-04-2004

<i>உனக்கேன் இந்த மாதிரி
ஆசையெல்லாம்...

என் வளையலை உடைப்பது,
கொலுசுத் திருகாணியைக்
கழற்றி விடுவது
கூந்தலில் இருக்கும் பூவைப்பறித்து உன்
கன்னத்தில் உரசிக்கொள்வது
காதில் தொங்கும் ஜிமிக்கியை
ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பது

ஆனால் ஒன்று
சின்ன வயதிலிருந்து
இந்தத் தோடு
வளையல்,பூ,கொலுசு
இதெல்லாம் எதற்காக
அணிந்து கொள்ளவேண்டுமென்று
யோசித்து யோசித்து
விடை தெரியாத கேள்விக்கு
உன்னால்தான்
விடை கிடைத்த மாதிரியிருக்கிறதெனக்கு

சின்ன வயதில் சில நேரங்களில்
வெட்கப்பட்டிருக்கிறேன் ஆனால்
அப்போது
வெட்கப்படுவதில் வெட்கப்படுவதைத் தவிர
வேறு எதுவும் இருந்ததில்லை
வேறு ஏதாவது இருக்கும் என்பதுகூட
அப்போதெனக்குத் தெரிந்ததில்லை
இன்றுமாலை
பேசிக்கொண்டிருக்கையில்
சட்டென்று நீ
என் கையை பிடித்து விட்டபோது
உன் கைக்குள் இருக்கும் என் கையை
இழுக்கத் துடிக்கும் என் பெண்மையிலும்
"வேண்டாம் இருக்கட்டும்" என்ற காதலிலும்
மாறி மாறித் தவித்த தவிப்பில்......
அப்பா...
வெட்கப்படுவதில்
என்னென்ன இருக்கிறது.</i>

நன்றி - கவிஞர் தபு சங்கர் http://groups.yahoo.com/group/dokavithai/


- shanmuhi - 06-04-2004

Quote:ஐயோ என் மகனே..!
பெற்ற மகனையேஇ
பேரு சொல்லி
அழமுடியாப்
பாவியாப் போனேனே!.

உன்னை
ஈன்ற பொழுதிலும்....
பெரிதும் வலிக்கிறதே!

நிஜத்தின் அவலம் கவியாக உருப்பெற்றது கண்டு மகிழ்ச்சி.

வாழ்த்துக்கள்....


- Mathan - 06-05-2004

உண்மைதான் சண்முகி. அதனுடன் நீங்கள் உங்கள் விமர்சங்களை குடில் உரிமையாளரின் பக்கத்திலேயே எழுதினீட்கள் என்றால் அது அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாய் அமையும். இந்த கவிதையை எழுதியவர் ஈழநாதன் ... குடில் முகவரி ... http://kavithai.yarl.net/archives/001024.html#more


- Mathan - 06-05-2004

பெண்ணாயுணரும் தருணங்கள்

சின்னஞ்சிறுவயதில்
இன்னொரு குழந்தையை
நிர்வாணமாய் பார்க்க நேர்ந்து
விவரம் கேட்ட போதும்

குசுகுசுப்பாய் பேசிக் கொண்டிருந்த
பள்ளித்தோழிகளுடன்
கூட்டுச் சேர்ந்த போதும்

விளையாட்டுத் தோழனின்
பார்வை தாழ்ந்த போதும்

அம்மா தன்னுடையதைப் போன்றதொரு
உள்ளாடை தந்து
அணிந்து கொள்ளச் சொன்னபோதும்

சேர்ந்து விளையாட
தடை விதிக்கப் பட்ட போதும்
எனத் தொடர்ந்து

பருவமெய்தி
வெறுத்திருந்த போதும்
விளக்கம் தரப்பட்டு
தளர்ந்திருந்த போதும்

இன்னும்
தனிவழி போக
தயங்கிய போதும்
தைரியம் வளர்த்து
தனிநடந்த போதும்

பழக்கிய பெண்ணுடை
பற்பல சமயங்களில்
சிற்சிறு பணிகளில்
குறுக்கிட்டு
தடங்கள்கள் விளைவித்த போதும்

பெண்ணென்பதாலேயே
என் சாதாரணச் செயல்கள்
அசாதாரணமாய்
அறிவிக்கப் பட்ட போதும்

பெண்ணென்பதாலேயே
என் முயற்சி முனைப்புகள்
மறுக்கப்பட்ட போதும்

மறுப்புகள் தாண்டி
ஜெயித்தெழுந்த போதும்

காதல் கடிதங்களின்
கற்பனை வர்ணனைகள்
சலிப்பைத் தந்து
சங்கடப் படுத்திய போதும்

கனிந்த காதலில்
களித்திருக்கையிலும்
தாய்மையை என்னில்
தரித்திருக்கையிலும்

நான் பெண்ணென்றுணர்ந்தோ
உணர்த்தப்பட்டோ
வளர்ந்து வந்திருக்கிறேன்

மற்றபடி
நானொரு பெண்ணென்ற நினைவை
நெஞ்சில் இருத்தி
நித்தமும் உழன்று
தவித்ததில்லை

ஆனாலும்
தன்னுணர்வோடும்
தப்பித்தல்களோ
தயக்கமோ இன்றியும்
தாழ்வுணச்சிகள் ஏதுமின்றியும்
கெஞ்சி நிற்காமலும்
இவர்களால் வகுக்கப்பட்டிருக்கும்
வரையரைகளைத் தாண்டியும்
நான் 'பெண்' என்பதை உணர்ந்தே
வாழக்
கற்றுக் கொண்டிருக்கிறேன்.


நன்றி - உதயா/தோழியர்


- shanmuhi - 06-05-2004

Quote:உண்மைதான் சண்முகி. அதனுடன் நீங்கள் உங்கள் விமர்சங்களை குடில் உரிமையாளரின் பக்கத்திலேயே எழுதினீட்கள் என்றால் அது அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாய் அமையும். இந்த கவிதையை எழுதியவர் ஈழநாதன் ... குடில் முகவரி ...http://kavithai.yarl.net/archives/001024.html#more

ஐயோ சுட்டகவியைப் பற்றி ஒரு வரி இங்கு எழுதவிட மாட்டீர்களோ..????


- Mathan - 06-11-2004

<b>பரிநிர்வாணம்!!</b>

இந்த அரசு
சிங்கள
"பௌத்த"
பேரினவாத அரசு
என்று தான்
இது நாள் வரை
நினைத்திருந்தோம்
நேற்று
பௌத்தனொருவனால்
புத்தரின் சீடன்
நிர்வாணமாக்கப்படும் வரை.

http://kavithai.yarl.net/


- Mathan - 06-23-2004

பறவைகள் - ஈழநாதன்

<img src='http://www.thatstamil.com/images22/cinema/aircrafts-300.jpg' border='0' alt='user posted image'>

எங்கள் ஊரின்
விடிகாலைப் பொழுதுகளில்
வானத்தில் வட்டமிடும்
வெள்ளைப்பறவைகள்!!
சிலவேளை
இரண்டிரண்டாய்,
சிலவேளை
கூட்டமாய்...

எப்போதும் தனியாகப் பார்த்தில்லை.
அவை வருமுன்பே கட்டிங்கூறும்
கர்ணகொடூரச் சத்தம்.
சில வேளைகளில்
சப்தம் மட்டுமே கேட்கும்!!
வானம்
பறவைகளின்றி
நிர்மலமாய்த் தோன்றும்.

இறக்கை அடிக்காமல்
வழுக்கிக் கொண்டே
ஒன்றை ஒன்று
துரத்தும்.
எதிரும் புதிருமாய்
வட்டமிடும்.
பனை மரங்களை முட்டிவிடுமாறு
தாழப் பறக்கும்.

பதிவதும்
எழுவதும்
போவதும் வருவதுமாய்
வானவெளியில் சாகசங்கள் தொடரும்.

இந்த உலோகப் பறவைகளை
இன்னும் ரசிக்கலாம்
என்று தோன்றுகிறது.
அவை மட்டும்...
குத்திப் பதிந்து
மேல் எழும்போதெல்லாம்
குண்டுகளைப்
பீய்ச்சாது விட்டால்...!!


- kavithan - 06-24-2004

ஜயோ BBC வந்திட்டீங்களா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

கவிதை அருமை.


- vallai - 06-24-2004

அவருக்கென்ன ஐயோ பீ.பீ.சி யெண்டே பெயர்


- Mathan - 06-24-2004

<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin-->ஜயோ BBC வந்திட்டீங்களா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  Big Grin  Big Grin  

கவிதை அருமை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நன்றி. கவிதை என்னுடையதல்ல ஈழநாதனுடையது.


- Mathan - 06-24-2004

இது பழைய கவிதைதான். முன்பு யாழில் பிரசுரித்திருக்கிறார்களோ தெரியவில்லை இபோதுதான் நான் படித்தேன்.

சுகமான நினைவு

செங்கொண்டைச் சேவல்
குரலெடுத்துக் கூவ
செம் மஞ்சட் கதிர்களை
கதிரவன் வீச
பறவையினம் சிறகடிக்க
வண்டினங்கள் ரீங்கரிக்க
குயிலினங்கள் இசைபாட
மெல்லென விடிந்தது
அங்கெனது காலை

மாட்டு வண்டி கடகடக்க
மாடு இரண்டும் விரைந்தோட
சலங்கைகள் கிலுகிலுக்க
பால் காரன் மணியோசை
வீதிகளில் ஒலித்து நிற்க
கோயில் மணி ஓசையிலே
கலகலத்தது அக்காலை

சூரியக் கதிர் பட்டு
கிணற்று நீர் பளபளக்க
துலாபதித்து நீர் மொண்டு,
சிரித்து நிற்கும்
செம்பருத்தி வேலி
மறைத்து நிற்க
மனங்குளிரக் குளிக்கையிலே
சிலிர்த்து நின்றது
அங்கெனது காலை

ஆர்ப்பரிக்கும் கடலோசை
காற்றலையோடு தவழ்ந்து வர
அரசு உதிர்த்த இலைகள்
சரசரக்கக் கால் பதித்து-எனது
ஆத்தியடி வீதியிலே நடந்து
நெடிதுயர்ந்த பனையுதிர்க்கும்
பனம் பூவை நுகர்ந்த படி
பனங் கூடல் வழியேகி
காணிக் கந்தோர்
கறுத்தக் கொழும்பானும்
வேலாயுதன் காணி
புளியங்காயும்
களவாய்ப் பிடுங்கி
பள்ளியைத் தொடுகையிலே
கலகலத்த மாணவரின்
கள்ள மற்ற சிரிப்பினிலே
மகிழ்ந்திருந்தது அக்காலை

பாணி ஊற்றி பக்குவமாய்
பாட்டி செய்த பனாட்டும்
கொடியினிலே அரைகுறையாய்
காய்ந்திருந்த பனங்கிழங்கும்
நினைவினிலே வந்து
பசி கிளப்ப
பள்ளிக் கூட மணியும்
பார்த்து ஒலிக்க
துள்ளியெழுந்து ஓடுகையிலும்

வைரவர் கோயில்
இலந்தைக் காய்க்காய்
வழியினிலே மெனக்கெட்டு
முனி யென்று ஒருத்தி கத்த
குடல் தெறிக்க ஓடி
சுடச் சுட அம்மா வடித்த
சுடு சாதமும்
பொரியலும் வறுவலும்
தொட்டுக் கொள்ள
துவையலுமாய்
சுவையும் மணமுமாய்
ஆறுசுவையாய் நகர்ந்தது
அங்கெனது மதியம்

நகரும் மதியத்தை விட்டு
நகரா மனமோ
நொட்டு நொறுக்குக்காய்
சட்டிகளையும் சாடிகளையும்
தட்டியும் தடவியும்
தொட்டுத் தேடியும்
கிண்டிக் கிளறியும்
அதை நோண்டி
இதை நோண்டி
அரை குறையாய்
ஒவ்வொன்றிலும்
அணில் கோதல் கோதியும்
அடங்காது,
வேலிகளில்
அண்ணா முண்ணா
பூவும் தேடி----!

மாலையானதும் மாங்கொட்டையும்
கூடி இருந்து
கொக்கானும் வெட்டி
அம்மா திட்ட
விட்டுச் செல்ல மனமின்றி
கால் முகம் கழுவி
படிப்பதாய் சொல்லி
தங்கைமாருடன்
பலகதை பேசி
இரவு உணவுக்காய்
அம்மா அழைக்க
இதுதான் சமயமென்று
புத்தகத்தை மூடி
இரவுப் படுக்கையின் முன்
மணக்கும்
மல்லிகைப் பந்தலின் கீழ்
நிலவின் ஒளியில்
ஒய்யாரமாய் அமர்ந்து
உடன் பிறப்புகளுடன்
ஓராயிரம் அளந்து---

நினைவே சுகமாகும்
இந்த நினைவே நனவானால் ..
நிறைகிறது மனது
மீண்டும்
நிஜமாகுமென்ற கனவில்..!


<b>நன்றி - சந்திரவதனா </b>


- kavithan - 06-24-2004

<!--QuoteBegin-BBC+-->QUOTE(BBC)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kavithan+--><div class='quotetop'>QUOTE(kavithan)<!--QuoteEBegin-->ஜயோ BBC வந்திட்டீங்களா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  Big Grin  Big Grin  

கவிதை அருமை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நன்றி. கவிதை என்னுடையதல்ல ஈழநாதனுடையது.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
தெரியும் BBC , தலைப்பே சுட்டகவிதை அதுக்குள்ளை நீங்கள் ...............
நான்கவிதைதான் அருமை எண்டனான்......................
சரி.....சரி வேறையொண்டு எழுதுங்கோவன் அங்காலை, சொல்லுறன் உங்களுக்கு........... :?: :?: :?:

இண்டையான் கவிதையும் நல்லாய்த்தான் இருக்கு.