Yarl Forum
சந்திரமுகி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: சந்திரமுகி (/showthread.php?tid=4875)

Pages: 1 2 3 4 5 6 7 8


- Danklas - 04-27-2005

kuruvikal Wrote:அவையின்ர முழக்கம் அங்க தமிழ்நாட்டில தான்...இஞ்ச எடுபடாது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


குருவீ அவயின்ர பவர் இங்கையும் எடுபடுது போல தெரிது... எனெண்டால் சந்திரமுகி மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய இருபடங்களையும் லங்காசிறி இனையத்தில் காணவில்லை.. 2 நாட்களுக்குமுன்னம் இருந்தது.. :?:

எண்டாலும் நான் அந்த படத்தை பார்த்திடனுங்கோ..(பாரட உந்த இந்தியனிண்ட லொள்ளை.. கோடிகோடியா பணம் சம்பாதிச்சதுபத்தாதாம்,, ஜோவ்வ் ஒசமா என்னய்யபார்த்துகொண்டு இருக்கிறீர்.. 2 ஒட்டகத்தை கோடம்பாக்கத்துக்கு அனுப்பு ராசா) :evil: :evil: :oops:


- vasisutha - 04-27-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Eswar - 04-27-2005

நாங்க பார்க்கிறதால அவர்களுக்கு நேரடியான பாதிப்பு இல்லை. ஆனா எங்கட இணையத்தளத்தினை தமிழ்நாட்டிலுள்ளவர்கள் பார்க்கக் கூடாது. திருட்டு விசீடி கூட அவர்களுக்குத்தான். எங்களுக்கில்லை.


டிபன் பாக்ஸில் சந்திரமுகி - vasisutha - 04-28-2005

டிபன் பாக்ஸில் சந்திரமுகி

போலீஸாரின் கழுகுக் கண்களில் இருந்து தப்பிக்க சந்திரமுகி சி.டி.க்களை டிபன் பாக்ஸில் வைத்து விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

புதிய படங்களின் திருட்டு சி.டி.க்களை கண்டுபிடிக்க தமிழகம் முழுவதும் போலீஸார் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். சி.டி. விற்றால் குண்டர் சட்டம் உறுதி என்று தெரிந்திருந்தும் பலர் இன்னும் இந்த விபரீத வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழப் புத்தாண்டுக்கு வெளியான ரஜினியின் சந்திரமுகி, கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் நன்றாக ஓடுவதால் இந்தப் படங்களின் சி.டி.க்களுக்குத் தான் மார்க்கெட்டில் கடும் கிராக்கி நிலவுகிறது.

கடைகளில் வெளிப்படையாக விற்க முடியாது என்பதால் பல மறைவான இடங்களில் வைத்து விற்பனை செய்து வந்தனர். அப்படியும் போலீஸாரிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் சச்சின் ஆகிய படங்களின் திருட்டு சி.டி.க்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

போலீஸாரிடமிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்த சென்னையை சேர்ந்த முகமது சாதிக் அலி என்ற ஒரு திருட்டு சி.டி.விற்பனையாளர் ஒரு புதிய டெக்னிக்கை பயன்படுத்தினார். தினமும் வேலைக்கு செல்வது போல செல்லும் இவர், தன்னுடைய கையில் ஒரு டிபன் பாக்ஸ் வைத்திருப்பார்.

ஆனால் அதற்குள் சாப்பாட்டுக்கு பதிலாக திருட்டு சி.டி.க்கள் இருக்கும். பலரும் போலீஸுக்கு பயந்து போய் இருக்க, இவர் மட்டும் போலீஸின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு வியாபாரத்தை கன கச்சிதமாக நடத்தி வந்தார்.

இதையும் எப்படியோ போலீஸார் மோப்பம் பிடித்து விட்டனர். முகமது சாதிக் அலிக்கு போலீஸார் வலை விரித்தனர். அவரும் வலையில் வசமாக சிக்கினார். இப்போது இவர் இருப்பது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில்.

இதற்கிடையே இணையதளம் மூலம் சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ், சச்சின் ஆகிய புதிய படங்கள் காட்டப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தடுக்கக் கோரி சந்திரமுகி படத்தைத் தயாரித்த சிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை மாநகர ஆணையர் நடராஜிடம் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஒரு இணையதளத்தில் சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ், சச்சின் ஆகிய படங்கள் காட்டப்படுவது தெரியவந்தது.

இந்த இணையதளம், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து நடத்தப்படுகிறது. இலங்கையைச் சேர்ந்த சிவஞானம் என்பவர் தான் இதன் உரிமையாளர். இதுதவிர மேலும் 14 இணைய தளங்களில் இந்தப் புதிய படங்கள் காட்டப்படுகின்றன.

இதுகுறித்து கமிஷனர் நடராஜ் கூறுகையில், இணையதளங்கள் மூலம் புதிய படங்களை காட்டுவதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இம்மாதிரி இணையதளம் மூலம் புதிய படங்களைக் காட்டுவோர் மீது சைபர் கிரைம் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

சந்திரமுகி படத்தை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட இணையதளத்தை தடை செய்யுமாறு வி.எஸ்.என்.எல். நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டுள்ளோம். மத்திய அரசின், இணையதள கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குநர் அப்பாசிக்கும் கடிதம் எழுதி சம்பந்தப்பட்ட 14 இணையதளங்களையும் தடை செய்யுமாறு கோரியுள்ளோம்.

சந்திரமுகி இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இன்டர்நெட் மையங்களில் இப்படங்கள் காசுக்குக் காட்டப்படுகிறதா என்பதையும் போலீஸார் கண்காணித்து வருகிறார்கள் என்றார் நடராஜ்.
thatstamil.com


- தூயா - 04-28-2005

அது யார் சிவஞானம்? உருவாக்கப்பட்ட கதாபாத்திரமா?


- இளைஞன் - 04-28-2005

சிவஞர்னம் என்பது ஒன்றில் இவர்கள் உருவாக்கிய கதாபாத்திரமாக இருக்கும். அல்லது இணையத்தள உரிமையாளரின் பெயரைப் பார்த்து எழுதியிருப்பார்கள். ஆனால், இணையத்தில் திரைப்படத்தை இணைக்கிற இளைஞர்கள் பொதுவில் தமது உண்மைப் பெயரைக் குறிப்பிட்டு இணையத்தள சேவையைப் பெறுவதில்லை. மற்றும் திரைப்படங்கள் இணைக்கப்படும் இணையத்தளங்கள் பெரும்பாலும் இலவசமாக பெற்றுக்கொள்ளப்பட்டவையே, அங்கு உண்மைப் பெயர் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் இவை இப்ப சந்திரமுகி போட்டாப் பிறகுதான் இவ்வளவு பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கினம். இதுக்கு முதல் எத்தினை படங்கள் போட்டாச்சு. நல்ல காவல்துறை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

14 இணையத்தளங்கள் என்பது எந்தளவு சரியென்று தெரியாது. 3-5 இணையத்தளங்களில் தான் படங்கள் தரவேற்றப்பட்டிருக்கும். அவற்றிற்கான இணைப்பு மட்டும்தான் 14 இற்கும் மேற்பட்ட இணையத்தளங்களில் கொடுக்கப்பட்டிருக்கும்.

Quote:சந்திரமுகி இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இன்டர்நெட் மையங்களில் இப்படங்கள் காசுக்குக் காட்டப்படுகிறதா என்பதையும் போலீஸார் கண்காணித்து வருகிறார்கள் என்றார் நடராஜ்.

எவ்வளவோ சிரமத்துக்கு மத்தியில் தங்களின் நேரத்தையும், பணத்தையும் செலவளித்து எந்தவித பிரதி உபகாரத்தையும் எதிர்பாராமல் புலம்பெயர்ந்த இளைஞர்கள் படங்களை இணையத்தில் தரவேற்றி பொதுநலத்தோடு செயற்படுகிறார்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆனால் அங்கே இருப்பவர்கள் இந்தப் படங்களை மற்றவர்களுக்கு ஓசியில் காட்டி காசு சம்பாதிக்கிறார்களா? Cry


- tamilini - 04-28-2005

அது ஒரு படம் என்று.. பெரிய எடுவை எடுக்கினம். ரைம் வேஸ்ட் தான் மிச்சம். :mrgreen: :mrgreen: :mrgreen:


- vasisutha - 04-28-2005

இது சும்மா இருகிறவன உசுப்பேத்திவிட்டு ரஜனியின் அடுத்தபடம் வரும்வரைக்கும் ஒன்லைன் இல இருக்கவைக்கப்போறாங்கள்.


- Danklas - 05-01-2005

தமிழ்நாட்டில்தான் இப்படியென்றால் அமெரிக்காவிலும் ஆடிக்களித்து விட்டார்கள் ரஜினி ரசிகர்கள். அமெரிக்கர்களுக்கே 'ஷாக்'. அமைதியான இந்தியர்களுக்கு இப்படியொரு ஆர்ப்பாட்டமான முகமா?
நியூஜெர்ஸியில் மிகப்பெரிய மல்டிபிள் காம்ப்ளக்ஸில் 'சந்திரமுகி' ரிலீஸ் ஆகியுள்ளது. மொத்த கூட்டமும் 'சந்திரமுகி' தியேட்டரை முற்றுகையிடஇ தியேட்டர் உரிமையாளர் திணறிவிட்டார். படத்தில் ரஜினி தோன்றியதும் விசில் சத்தம் காதை பிளக்கிறது. கூடவே ஜிகினா பேப்பர்கள். பத்துபேர் தேங்காய் கற்பூரத்துடன் ஆரத்திக்காட்ட தமிழ்நாடு டெண்ட் கொட்டாய் தோற்றது போங்கள்.

நியூயார்க் திரையரங்கிலும் கூட்டம் அள்ளிக்கொண்டு போனதாம். "அமெரிக்காவில் இருக்கிறோம் என்ற எண்ணமே இல்லை. ஏதோ தமிழ்நாட்டில் படம் பார்ப்பதுபோல் இருந்தது" என்கிறார் படம் பார்த்த ரஜினி ரசிகர் ஒருவர். காரணம் மொத்தமாக தமிழர்களை பார்த்ததுதான்.

கார்களில் ரஜினிபடம் ஒட்டி வந்தவர்கள் ரஜினி படம் வரைந்த டி.ஷர்ட் அணிந்தவர்கள் என எங்கும் ரஜினி மயம். மொத்தத்தில் அமெரிக்கர்களுக்கே சின்னதாக 'அதிர்ச்சி' கொடுத்துள்ளனர் ரஜினி ரசிகர்கள்இ ஸாரி தமிழர்கள்!

சான் ஜோஸில் உள்ள திரையரங்கில் ஒரு நாளைக்கு மொத்தம் எட்டு ஷோக்கள்.ஆனாலும் கூட்டம் அடங்கவில்லை. தலைவா கோஷம் போடும் படித்த ஐ.டி. தமிழர்களுக்காக, எக்ஸ்ட்ரா சேர்கள் போட்டு ஷோ நடத்தப்பட்டது அமெரிக்க சரித்திரத்தில் முதல் முறையாக
இருக்கலாம்.

=================================================================

அடப்பாவிகள் இந்த லொள்ள பாருங்கப்பா... சினி சவுத் இனையத்தளத்தில இதை ஒரு பெரிய சாதனைய போட்டுஇருக்கிறாங்கள்.....

ஜோவ்வ் சினிசவுத் அண்ட் டமிழ் அமெரிக்க இண்டியண்ஸ்...
அமெரிக்கனுக்கு உங்களைபற்றிதெரியாத. உங்களிட்ட அமைதியானமுகம் இருக்க?? எங்க காட்டுங்கபார்ப்பம்.. சனத்தை உயிரோட வைச்சு ரெயின் பஸ் கார் எண்டு கொழுத்திறது அதுக்க லொள்ளுவேற.. அதைவிட இந்த சந்திரமுகி படத்தோட அமெரிக்கனுக்கு உங்கட லெவல் என்ன எண்டுறது தெரிந்திருக்கும். பின்ன கற்பூரம் தேங்காய் உடைக்கீறீங்க எண்டால் எவ்வளவு பெரிய அறிவாளிகள் நீங்கள்?? அதில வேற அதை சாதனையா சொல்லி பெருமைபடுறீங்களா??ஏன் கின்னஸில பதீறதுக்கு ஜெயாட்ட கேட்டுபாருங்களேன்.. அப்படி என்னதானப்ப அந்தபடத்தில இருக்கு?? வருங்காலத்தில பூமில நடைபெறக்கூடிய விபரீதங்களை உலகுக்கு எடுத்து சொல்லிப்புட்டாங்களோ?? அமெரிக்கனே அப்படியான படங்களை எடுத்துப்புட்டு கம்மென்னு தான் பாடு அடுத்தபடம் பாடு எண்டு திரிறான் நீங்கள் என்னெண்டால்..ம்ம் :oops: :oops: :evil: :evil:

முக்கிய அறிவித்தல்: ஜோர் புஸ் அண்ட் FBI இந்தியனை இப்படியே அமெரிக்காவில வளரவிட்டீங்கள் எண்டால்.. அடுத்த 2,3 படத்தோட அமெரிக்காவில கட்சி ஒன்றை ஆரம்பிச்சு உங்களுக்கு ஆப்பு வைப்பாங்கள் இண்டியன்ஸ்.. மைண்டிற்... Idea


- tamilini - 05-01-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பாவம் ஓல்ட்டு ஸ்ரார் சே சூப்பர் ஸ்ரார்.. போன படத்தில விட்டதை இப்ப பிடிக்கிறார் போல்; லங்கா சிறில மறுபடியும்.. சந்திர முகி போட்டிருக்குப்போல.. நம்ம இன்டிய டமிளர்கள் பெரிய ரசிகர்கள் தான். நம்மாக்கள் நாளைக்கு விஜைக்கு இப்படி செய்யலாம் யார் கண்டது. :wink: :mrgreen: :mrgreen:


- kavithan - 05-01-2005

Quote:``வைரஸ்" நோய் இன்டர்நெட்டில் இதுபோன்ற தமிழ்ப் படங்களை பார்த்தால், அதை பார்க்கப் பயன்படும் கம்ப்யூட்டர்களை ``வைரஸ் நோய்" தாக்கும் அபாயம் உள் ளது என்றும் போலீசார் கூறி னார்கள்.


என்ன யாருக்கப்பா புலுடா விடுறாங்கள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .. இன்னும் சின்னப்பிள்ளையாகவே இருக்கிறாங்களப்பா..


- vasisutha - 05-01-2005

kavithan Wrote:
Quote:``வைரஸ்" நோய் இன்டர்நெட்டில் இதுபோன்ற தமிழ்ப் படங்களை பார்த்தால், அதை பார்க்கப் பயன்படும் கம்ப்யூட்டர்களை ``வைரஸ் நோய்" தாக்கும் அபாயம் உள் ளது என்றும் போலீசார் கூறி னார்கள்.


என்ன யாருக்கப்பா புலுடா விடுறாங்கள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .. இன்னும் சின்னப்பிள்ளையாகவே இருக்கிறாங்களப்பா..

கவிதன் தேங்காய் உடைச்சு பாலூத்துறவங்கள் நம்புவாங்கள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- KATPUKKARASAN - 05-02-2005

:roll: உந்த இந்தியன்கள் சுடு ம் இங்கிலீஷ் படங்களுக்கு யார் காவல்?


- stalin - 05-02-2005

KATPUKKARASAN Wrote::roll: உந்த இந்தியன்கள் சுடு ம் இங்கிலீஷ் படங்களுக்கு யார் காவல்?
அதிகமான தமிழ் திரைப்பட கதாசிரியர்கள் ஹாலிவூட் படங்களை சுட்டுத்தான் படம் பண்ணுகிறார்கள்----------------------கமலகாஸன் சுட்ட ஆங்கிலப்படங்கள் சில----அவ்வை சண்முகி=mrs doubt fire and big moma's மகளிர்மட்டும்=9 to 5 நள தமயந்தி=green card அன்பே சிவம்=planes trains auto mobiles நம்மவர்=the principal தேவர் மகன்=god father இப்படி பல படங்கள் கமல் மட்டுமே சுட்டுள்ளார்-----------------------------------------------------------------------------------------------------------------------------------------ஸ்ராலின்


- kuruvikal - 07-31-2005

<b>தொடர்ந்து 102 நாட்கள் சந்திரமுகியை பார்த்த ரசிகர்</b>

<img src='http://thatstamil.indiainfo.com/images29/chandramukhi_1-200.jpg' border='0' alt='user posted image'>

சந்திரமுகி படத்தை கோவையை சேர்ந்த ஒரு வாலிபர் தொடர்ந்து 102 நாட்கள் பார்த்து சாதனை புரிந்துள்ளார்.

ரஜினியின் சந்திரமுகி 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந் நிலையில் கோவையை சேர்ந்த ரஜினியின் தீவிர ரசிகரான முத்து என்பவர் சந்திரமுகியை தொடர்ந்து 102 நாட்கள் பார்த்து சாதனை படைத்துள்ளார்.

கேவையை அடுத்த சர்க்கார் சாமக்குளத்தை சேர்ந்த இவர், காய்கறிக் கடையில் பணி புரிந்து வருகிறார். சந்திரமுகி வெளியான ஏப்ரல் 14ம் தேதி முதல் கோவை ராம்நகரிலுள்ள குமரன் திரையரங்கில் தினமும் படத்தை பார்த்து வந்துள்ளார்.

ஒரு வாரம் படத்தை தொடர்ந்து பார்த்த பிறகு, இந்தப் படம் 100 நாட்கள் கண்டிப்பாக ஓடும். 100 நாட்களும் நான் தொடர்ந்து படத்தை பார்க்க வருவேன் என்று முத்து தியேட்டர் நிர்வாகியிடம் கூறியுள்ளார்.

முத்து கூறியபடியே தினமும் படத்தை பார்க்க வந்துள்ளார். தினமும் படம் பார்க்க வரும்போது தியேட்டர் நிர்வாகியிடம் சென்று தனது ஆஜரை பதிவு செய்துள்ளார்.

இந் நிலையில் சந்திரமுகி 50 நாட்களை நிறைவு செய்த போது, அடுத்து எத்தனை நாட்களுக்கு படம் ஓடுகிறதோ, அத்தனை நாட்களுக்கும் இலவசமாக படத்தை பார்க்க முத்துவுக்கு தியேட்டர் நிர்வாகம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து தொடர்ந்து 102 நாட்கள் படத்தை பார்த்து முத்து சாதனை புரிந்துள்ளார்.

thatstamil.com


- Rasikai - 07-31-2005

அடடா இப்படி எல்லாம் சாதனை புரிகிறார்களா? ம்ம்ம்ம் பெரிய சாதனை தான் நம்மால் இரு தடவைக்கு மேல் ஒரு படத்தை பார்க்க முடியாது :roll:


- kavithan - 07-31-2005

சா ஒரு தடவையே பார்க்கேலாமல் இருக்கு அதுக்கை 102 தடவை .. ம்ம் சாதனை நிறைவேற்றி என்ன செய்ய ஏதோ யாரோ ஏற்றுக் கொள்ளவா போகினம்...


- அனிதா - 07-31-2005

சிலநேரம், இதை பாராட்டி ரஜினி தங்க மோதிரம் பரிசளிப்பார். பேந்து அதை பார்த்து இன்னொரு ரசிகர் 110 நாள் தலை கீழாக படம் பார்த்து "சாதனை" செய்வார். இப்படியே தொடரும், <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 07-31-2005

Anitha Wrote:சிலநேரம், இதை பாராட்டி ரஜினி தங்க மோதிரம் பரிசளிப்பார். பேந்து அதை பார்த்து இன்னொரு ரசிகர் 110 நாள் தலை கீழாக படம் பார்த்து "சாதனை" செய்வார். இப்படியே தொடரும், <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அடுத்தா ஆளா நீங்கள் இருக்காட்டி சரி.. :wink: அல்லா ஒரு சாதனை போடலாம் நெட்டில் அதிக படங்களை பார்த்த சாதனியாளர் என்று . அது ஏதன் இருக்க,, <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- அனிதா - 07-31-2005

kavithan Wrote:
Anitha Wrote:சிலநேரம், இதை பாராட்டி ரஜினி தங்க மோதிரம் பரிசளிப்பார். பேந்து அதை பார்த்து இன்னொரு ரசிகர் 110 நாள் தலை கீழாக படம் பார்த்து "சாதனை" செய்வார். இப்படியே தொடரும், <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அடுத்தா ஆளா நீங்கள் இருக்காட்டி சரி.. :wink: அல்லா ஒரு சாதனை போடலாம் நெட்டில் அதிக படங்களை பார்த்த சாதனியாளர் என்று . அது ஏதன் இருக்க,, <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சீ சீ அந்த நல்ல பழக்கம்மெல்லாம் நம்மட்ட இல்லை :wink:

கேக்குறத பார்த்தால் நெட்டில கூட படங்கள் பாக்குறனிங்க போல கிடக்கு :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->