Yarl Forum
பேய் கதை சொல்லுங்கோ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: பேய் கதை சொல்லுங்கோ (/showthread.php?tid=3651)

Pages: 1 2 3 4 5 6 7 8 9


- sabi - 11-05-2005

நீங்கள் சொல்வதை நம்ப முடியவில்லை இப்படியும் நடக்குமா (அம்மா எனக்கு பயமாயிருக்கு)


- Vasampu - 11-05-2005

யோவ் ஆதிபன் முதலில் உம்ம காலைக் காட்டுமையா காலிருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். எனக்கென்னமோ பேயே வந்து பேய்க் கதை சொல்லுறமாதிரி ஒரு பீலிங். :roll: :roll:


- aathipan - 11-05-2005

Vasampu Wrote:யோவ் ஆதிபன் முதலில் உம்ம காலைக் காட்டுமையா காலிருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். எனக்கென்னமோ பேயே வந்து பேய்க் கதை சொல்லுறமாதிரி ஒரு பீலிங். :roll: :roll:

கால் எனது சொந்தக்கால்தான் ஆனா கைதான் பேய்கையா இருக்குமோ என பயமா இருக்கு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- aathipan - 11-05-2005

<img src='http://www.castleofspirits.com/Australianghosthunters/nightfig2.jpg' border='0' alt='user posted image'>

முன் எழுதிய தொடர் கதை எழுதும் போது சில தொந்தரவுகள் இருந்தது. ஒரு சமயம் எனது கதிரை உடைந்து போனது. ஒரு சமயம் குசினியில் பாத்திரங்கள் விழுந்து உருண்டன. பல சமயம் யாரோ பின்னால் இருந்து பார்ப்பது போன்ற உணர்வும் ஏற்படும். அதனால் பாதியிலே நிறுத்திவிட்டு தொடரும் எனப்போட்டுவிடுவேன். எல்லாக்கதைகளும் இரவு 11 மணிக்கு மேல்தான் எழுதினேன்.


- Vasampu - 11-06-2005

aathipan wrote:
முன் எழுதிய தொடர் கதை எழுதும் போது சில தொந்தரவுகள் இருந்தது. ஒரு சமயம் எனது கதிரை உடைந்து போனது. ஒரு சமயம் குசினியில் பாத்திரங்கள் விழுந்து உருண்டன. பல சமயம் யாரோ பின்னால் இருந்து பார்ப்பது போன்ற உணர்வும் ஏற்படும். அதனால் பாதியிலே நிறுத்திவிட்டு தொடரும் எனப்போட்டுவிடுவேன். எல்லாக்கதைகளும் இரவு 11 மணிக்கு மேல்தான் எழுதினேன்.

ஓ ஆத்துக்காரி அட்டாக் பண்ணுறதை இப்படி நசுக்காய் சொல்லுறீங்களோ :roll: :roll:


- வெண்ணிலா - 11-07-2005

:roll: :roll: :roll: ஆதிபன் அந்த படத்தில் இருப்பது பேயா? யார் அதை படம்பிடித்தது?


- RaMa - 11-07-2005

வெண்ணிலா Wrote::roll: :roll: :roll: ஆதிபன் அந்த படத்தில் இருப்பது பேயா? யார் அதை படம்பிடித்தது?

பேய் கண்ணுக்கே தெரியதாம்... பிறகு எப்படி படம் எடுப்பதாம் வெண்ணிலா?


- MUGATHTHAR - 11-07-2005

Quote:பேய் கண்ணுக்கே தெரியதாம்... பிறகு எப்படி படம் எடுப்பதாம் வெண்ணிலா?

யார் சொன்னது பேய்களுக்கு பேய்களை நல்லாக் கண்ணுக்குத் தெரியும் பிறகென்ன


- aathipan - 11-07-2005

வெண்ணிலா பேய்கள் பலவிதம் சில பேய்கள் கண்ணுக்குத்தெரியும்.

பேய்கள் பற்றிய ஒரு புத்தகத்தில் இருந்து சில சுவாரசியமான விடயங்களை விரைவில் எழுதுகிறேன்.


- கரிகாலன் - 11-07-2005

விரைவில் எழுதுங்கோ அதிபன் ஆவல் தாங்கவில்லை<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பேய் எண்டால் ஒரு தனி ஈடுபாடுதான்.


- MUGATHTHAR - 11-08-2005

Karikaalan Wrote:பேய் எண்டால் ஒரு தனி ஈடுபாடுதான்

யாருக்குத்தம்பி உங்களுக்கோ அல்லது அதீபனுக்கோ இது சிக்கலிலைதான் போய் முடியப் போது சாத்திரியை எதுக்கும் பக்கத்திலை வைச்சிருக்கிறதுதான் நல்லது


- கரிகாலன் - 11-08-2005

எனக்குத்தான் தாத்தா. :wink:
அதீபனுக்கும் இருக்கு போல கிடக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- aathipan - 11-08-2005

எனக்கு ஈடுபாடு வரக்காரணம் பேய்க்கு வாழ்க்கைப்பட்டது.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- அருவி - 11-08-2005

RaMa Wrote:
வெண்ணிலா Wrote::roll: :roll: :roll: ஆதிபன் அந்த படத்தில் இருப்பது பேயா? யார் அதை படம்பிடித்தது?

பேய் கண்ணுக்கே தெரியதாம்... பிறகு எப்படி படம் எடுப்பதாம் வெண்ணிலா?

டிஸ்கவரி சனலில் பேய்கள் பற்றிய ஆவணங்கள் சில காட்டினார் அதில் படம் கூட எடுத்துள்ளார்கள். :roll:


- aathipan - 11-09-2005

உலகில் பல மாளிகைகளில் பேய்கள் குடிகொண்டிருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அதில் வெள்ளைமாளிகையும் ஒன்றாகும். அங்கு ஒன்றல்ல இரண்டல்ல பல பேய்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. முன்னாள் அமெரிக்க சனாதிபதிகள் மற்றும் பல முக்கியமான நபர்களின் ஆவிகள் அங்கு உள்ளன.

தரைத்தளத்தில் நீள் வட்ட அலுவலகத்திற்கும் படுக்கை அறைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் பலவிதமான சத்தங்களை(காலடி ஓசை சிரிப்பொலி மற்றும் கதவைத்தட்டம் சத்தம்) அங்கு வேலைசெய்பர்கள் கேட்டுள்ளனர்.

முன்னால் சானாதிபதியான தோமஸ் ஜேபர்சனின் ஆவி மஞ்சள் அறையில் வயலின் வாசிப்பதையும் பலர் கேட்டுள்ளார்கள். அது மட்டமன்றி நாட்டின் முன்னால் முதல்பெண்மணியான அபிகையில் அடம்ஸ் அவர்கள் வராண்டாவில் நடப்பதை பலர் பார்த்துள்ளனர்.

முன்னாள் ராணியின் அறைக்கு அன்ட்ரு ஜாக்சனனின் ஆவி
அடிக்கடி வருதை பலரும் அறிவர். ஒரு தடவை ராணியின் அறையில் பார்க்ஸ்என்ற தாதி படுக்கையை விரித்துக்கொண்டிருந்தபோது திடீரென சுற்றுப்புறம் குளிர்ந்துபோனதாம்;. திடீரென குளிர்ந்ததால் வியப்புற்றவர் அருகில் ஒரு ஆவியைப்பார்த்ததாக கூறுகிறார். அன்று பயந்து ஓடியவர் மூன்று வருடம் கழித்தே மீண்டு வேலைக்கு வந்துள்ளார்.

பார்க்ஸ் மட்டுமன்றி பலரும் ஆபிரகமாம் லிங்கனையும் பார்த்ததாக தெரிவித்துள்ளார்கள் ஒருதடவை நெதர்லாந்து ராணி முன்பு ஆபிரகாம் லிங்கன்தங்கிய அறையில் தங்கியுள்ளார். அன்று இரவு கதவு தட்டும் ஓசை கேட்க திறந்து பார்த்துள்ளார். அங்கு லிங்கன் நிற்பதைப்பார்த்து மூச்சையாகி விழுந்துவிட்டார்.

பல வருடம் கழித்து வேறோரு வேலையாள் லிங்கன் கட்டிலில் அமர்ந்து காலணிகளை கழற்றுவதைப்பார்துள்ளார்.

லிங்கன் 14 ஏப்பிரல் 1865ம் ஆண்டு ஜோன் வில்கிஸ் புத் என்பவரால் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டார். அப்போதுதான் போர் முடிவுக்கு வந்த தருணம். போருக்குப்பின் அமெரிக்காவை கட்டியெழுப்பும் பல திட்டங்களுடன் அவர் இருந்துள்ளார். ஆனால் எல்லாம் முடியாமல் போகவே அவர் இன்றும் ஆவியாக அங்கே உலாவுவதாக பேசப்படுகிறது.


- வெண்ணிலா - 11-09-2005

<!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->எனக்கு ஈடுபாடு வரக்காரணம் பேய்க்கு வாழ்க்கைப்பட்டது.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அட பாவிகளா? இப்படியும் ஒரு காரணம் இருக்கா ஈடுபாடு வர :roll:


- Thala - 11-09-2005

இதை ஒருக்காப் பாத்துச் சொல்லுங்கோ உதுதான் பேய் எண்டதோ...


http://s63.yousendit.com/d.aspx?id=046UY11...YB2TDU85RJ0SZFJ


- aathipan - 11-09-2005

பேய் அல்லது ஆவி என்றதும் நாங்கள் சினிமாவில் பார்த்த வெள்ளை ஆடை அணிந்த உருவம் தான் மனதில் எழும். பலர் பேய்களைப் பார்க்காவிட்டாலும் உணர்ந்துள்ளார்கள்; எனக்கூறலாம்.

இறந்து போனவர்களின் ஆத்மா ஏதாவது ஒரு காரணத்திற்காக ஒரு உருவத்தைப்பெற்று நம்முன் வெளிப்படும் போது அந்த ஆத்மா, ஆவி அல்லது பேய் எனப்படுகிறது. அந்த உருவம் எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம். உதாரணமாக புகைவடிவமாகவோ மின்னல் வெளிச்சமாகவோ அல்லது உயிருடன் இருந்த போது இருந்த உருவமாகவோ அல்லது ஒரு மிருகத்தின் உருவமாகவோ இருக்கலாம். இவை மட்டுமன்றி வேறு ஏதாவது ஒரு உருவாகவும் இருக்கலாம். மனித உருவத்தில் பேய்( பார்த்தவர்களின் கூற்றுப்படி) நீளமான ஆடை அணிந்து ஆனால் ரோபோவைப்போன்ற அசைவுகள் கொண்டதாக இருக்கும் என கற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் எந்தப்பேயும் எதாவது உருவத்தைக்கொண்டிருக்கும் என்ற கட்டாயம் இல்லை. பொருட்கள் நகர்வதை வைத்தும் ஒலி ஏழும்புவதை வைத்தும் திடீரென ஏற்படும் குளிர்ச்சியை வைத்தும் புதுவிதமான ஏதாவது ஒரு வாசனையை வைத்தும் உணர்ந்துகொள்ளலாம்.

பேய்களின் செயற்பாடுகள் ஏதோ ஒரு பொதுவான காரணத்திற்கே வெளிப்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அது சிலவேளைகளில் முடிக்கப்படாத ஒரு செயலுக்காவோ அல்லது ஆத்மா வாழ்ந்த காலத்தில் யாராவது தவறுகளை செய்தும் அவர்கள் தண்டிக்கப்படாததாலோ ஆக இருக்கலாம். சில சமயத்தில் இறந்து போனவர்களுக்காக அதிகம் கவலைப்படும் போது அவர்களது ஆவி தாம் மரணத்திற்குப்பின் மகிழ்ச்சியாக இருப்பதைத்தெரிவிக்கவும் வெளிப்படலாம். சில சமயத்தில் இறந்த செய்தி தெரியாதவர்களுக்கு தனது மரணச்செய்தியை வெளிப்படுத்தவாகம் இருக்கலாம்.


- அனிதா - 11-09-2005

<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->இதை ஒருக்காப் பாத்துச் சொல்லுங்கோ உதுதான் பேய் எண்டதோ...

http://s63.yousendit.com/d.aspx?id=046UY11RFDGYB2TDU85RJ0SZFJ<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஹாய் சகோதரம் நலமா? கண நாள் கண்டு...

என்ன இது தான் பேயோ எண்டு கேட்டுக் கொண்டு வாறீங்க .... லீவில போனனீங்க பேயை எங்கயாவது பார்த்திடீங்களோ...? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Thala - 11-09-2005

<!--QuoteBegin-Anitha+-->QUOTE(Anitha)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Thala+--><div class='quotetop'>QUOTE(Thala)<!--QuoteEBegin-->இதை ஒருக்காப் பாத்துச் சொல்லுங்கோ உதுதான் பேய் எண்டதோ...

http://s63.yousendit.com/d.aspx?id=046UY11RFDGYB2TDU85RJ0SZFJ<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஹாய் சகோதரம் நலமா? கண நாள் கண்டு...

என்ன இது தான் பேயோ எண்டு கேட்டுக் கொண்டு வாறீங்க .... லீவில போனனீங்க பேயை எங்கயாவது பார்த்திடீங்களோ...? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

வணக்கம் சகோதரம் நேற்றுத்தான் ஊரில இருந்து வந்தனான்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அது சரி அப்ப உது பேய் இல்லையே..???