Yarl Forum
Breaking News - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: Breaking News (/showthread.php?tid=7412)

- Mathan - 04-02-2004

வடக்கு பகுதியில் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்று ஈ.பி.டி.பி மற்றும் சங்கரியின் சுயேச்சை குழுக்கள் கேட்கின்றன. தேர்தலில் பாரதூரமான் முறைகேடுகள் நடைபெற்றதாக இதுவரை கண்காளிப்பு குழுக்கள் எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Mathan - 04-02-2004

தபால் மூலம் வழங்கப்பட்ட வாக்குகளின் முடிவுகள் இன்னும் ஓரிரு மணித்தியாலங்களில் அறிவிக்கப்படும்

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 20:44 ஈழம் ஸ

மார்ச் மாதம் 24ம் 25ம் திகதிகளில், நாடு தளுவிய hPதியில், தபால் மூலம் வாக்களிப்பு இடம்பெற்றது.

தபால் மூலம் இடம்பெற்ற வாக்களிப்பின் விபரங்கள் ஏற்கனவே எண்ணி முடிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு மணித்தியாலங்களுக்குள், தபால் மூலமான வாக்களிப்பின் இறுதி முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென, தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நன்றி - புதினம்

- Mathan - 04-02-2004

அராலியிலும் முகமாலையிலும் அமைந்திருந்த சில வாக்களிப்பு நிலையங்களில் ஈ.பி.டி.பி.யினர் ரகளை

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 21:01 ஈழம் ஸ

அராலியில் முருகமூர்த்தி வித்தியாலயத்திலும் முகமாலையில் இரு வாக்களிப்பு நிலையங்களிலும் ஈ.பி.டி.பி.யினர் கடும் ரகளையில் ஈடுபட்டதால், சில மணிநேரம் வாக்களிப்பு தடைப்பட்டதாகத் தெரியவருகிறது.

முகமாலையில் அமைந்திருந்த இரு வாக்களிப்பு நிலையங்களில், மக்கள் அடையாள அட்டையில்லாமல் வாக்களிப்பதாக ஈ.பி.டி.பி.யினர் ஆட்சேபித்து ரகளையில் ஈடுபட்டபோது, பொலிசார் தலையிட்டு நிலைமையைச் சீராக்கினர். தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கேட்டபோது, யாரும் அடையாளஅட்டையின்றி அனுமதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்தனர். அதனால் வெளியிலிருந்து சத்தமிட்டபடி, சில மணிநேரத்தில் ஈ.பி.டி.பி.யினர் கலைந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அராலி முருகமூர்த்தி வித்தியாலயத்தில் வாக்களிப்பதற்காகக் கூடியிருந்த மக்களை அணுகிய ஈ.பி.டி.பி.யினரும், ஆனந்தசங்கரி குழுவினரும், தாம் குறிப்பிடும் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி அவர்களைக் கட்டாயப் படுத்தியுள்ளனர். பின்னர் அது வாக்குவாதமாக மாறியபோது, தங்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டுமென துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

அப்படி மிரட்டியபோது, வாக்களிக்க வந்திருந்த மக்கள், திடிரெனப் பாய்ந்து தாக்கியதில், ஈ.பி.டி.பி.உறுப்பினர் இருவர் அடிவாங்கிக்கொண்டு அங்கிருந்து ஓட்டமெடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், சில மணிநேரம் வாக்களிப்பு தடைப்பட்டதாகத் தெரியவருகிறது.

இதற்கிடையில், பருத்தித்துறை வாக்களிப்பு நிலையப் பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு தகராறுகள் காரணமாக 7 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

நன்றி - புதினம்

- Mathan - 04-02-2004

தொடரும் ஒரு வாரத்திற்கு பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் அனைத்தும் தடை: பொலிஸ் திணைக்களம்

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 21:22 ஈழம் ஸ

சிறீலங்காவில் 13வது பொதுத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தொடரும் ஒரு வாரத்திற்கு பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் அனைத்தும் நாடுதளுவிய hPதியில் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக, ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர், பொலிஸ் தேர்தல் அதிகாரி காமினி நவரத்ன அறிவித்துள்ளார்.

நள்ளிரவுக்குப் பின்னர், தேர்தல் முடிவுகள் அறிவிக்க ஆரம்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக, அதிகாலை வரை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாது தடுத்துவைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை எதுவித பாரிய வன்முறைகளும் நிகழவில்லை என்றும், இரவு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கும் முடிவு குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் இதுவரை எட்டப்படவில்லை என்றும் காமினி நவரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

அவசியமேற்படின், திடிர் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமுலுக்கு வரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நன்றி - புதினம்

- Eelavan - 04-02-2004

மக்களை வீணை வாசிப்பவர்களாக மாற்றவோ அல்லது அவர்களது உணர்வுகளுக்குப் பூட்டுப் போட முயன்றாலோ இதுதான் நடக்கும்

ஜனநாயகத்தின் காவலர்களும் அவர்களுக்காகக் கொக்கரிப்பவர்களும் இதனை உணர்ந்தால் சரி

அதுசரி ஆனந்த சங்கரி தானே விருப்பு வாக்குகளின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் தான் தான் முன்னனியில் இருப்பேன் என்று சொன்னாரே அவருக்கும் மிரட்ட வேண்டிய அல்லது கெஞ்ச வேண்டிய நிலமையா?

- Mathan - 04-02-2004

Eelavan Wrote:மக்களை வீணை வாசிப்பவர்களாக மாற்றவோ அல்லது அவர்களது உணர்வுகளுக்குப் பூட்டுப் போட முயன்றாலோ இதுதான் நடக்கும்

ஜனநாயகத்தின் காவலர்களும் அவர்களுக்காகக் கொக்கரிப்பவர்களும் இதனை உணர்ந்தால் சரி

அதுசரி ஆனந்த சங்கரி தானே விருப்பு வாக்குகளின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் தான் தான் முன்னனியில் இருப்பேன் என்று சொன்னாரே அவருக்கும் மிரட்ட வேண்டிய அல்லது கெஞ்ச வேண்டிய நிலமையா?

யாராக இருந்தாலும் மக்கள் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும். இது அவர் தேர்தல் முடிவுகளின் பயத்தில் கூறுவதாக இருக்கலாம்

- Eelavan - 04-02-2004

விடுதலைப் புலிகளோடு மட்டுமே பேச வேண்டும் என்பதை தீவிரமாக எதிர்ப்பவர்கள் PLOTE, E.P.D.P சங்கரி

வன்னி நிலைமைகள் PLOTE இற்கு சாதகமாக இல்லை யாழில் சங்கரி,E.P.D,P, இருவருமே தோல்வியைத் தழுவினால் எதை மறுத்தார்களோ அதுவே உண்மை என்று ஆகிவிடும்

- Mathan - 04-02-2004

Eelavan Wrote:விடுதலைப் புலிகளோடு மட்டுமே பேச வேண்டும் என்பதை தீவிரமாக எதிர்ப்பவர்கள் PLOTE, E.P.D.P சங்கரி

வன்னி நிலைமைகள் PLOTE இற்கு சாதகமாக இல்லை யாழில் சங்கரி,E.P.D,P, இருவருமே தோல்வியைத் தழுவினால் எதை மறுத்தார்களோ அதுவே உண்மை என்று ஆகிவிடும்

உண்மைதான், யுத்தத்தை நிறுத்தி பிரைச்சனையை தீர்ப்பதற்கு நிச்சயம் புலிகளுடன் பேசவேண்டும். ஒரு தீர்வௌ உருவாக்கியவுடன் தேர்தல் மூலம் பிரதிநிதிகளை தேர்வு செய்யலாம். இதுவே என் கருத்து.

- Eelavan - 04-02-2004

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒவ்வொன்றுடனும் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால்
அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முதலில் தாம் அங்கம் வகிக்கும் கட்சியுடன் பேசி அவர்களது பேச்சுக்கான திட்ட வரைபை தயார் செய்ய உதவலாம் அரசுடனும் கூட்டு வைத்துக் கொண்டு அதே அரசுடன் பேச்சு வார்த்தை மேசையில் பேசித்தான் தீர்க்கவேண்டும் என்றால் இவர்களின் அரசியல் கூட்டு கேலிக்கிடமாகவே உள்ளது

அதனை விட இப்படி ஆளுக்கொருவரை பாராளுமன்றத்தில் வைத்திருக்கும் கட்சிகள் எல்லாவற்றினுடனும் பேசுவது இன்னொரு திம்புப் பேச்சுவார்த்தையாகத் தான் இருக்கும் நிச்சயமாக பிரச்சனையைத் தீர்க்க உதவாது

- Eelavan - 04-02-2004

இது புதினத்தின் செய்தி

ஆட்சியமைக்கும் பெரும்பான்மைப் பலம், எந்தக் கட்சிக்கும் கிடைக்கப்போவதில்லை: ஆய்வு
காவலுர் கவிதன்
சிறீலங்காவில் பொதுத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்குத் தேவையான 113 ஆசனங்களை எந்தக் கட்சியும் பெறப் போவதில்லையென ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியும், சந்திரிகா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஆட்சியமைப்பதற்கான பலப் பாPட்சையில் இறங்கியுள்ள நிலையில், இரு கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 113 ஆசனங்கள் கிடைக்கப்போவதில்லை என்று பிந்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ரணில் கட்சியை விட, ஐ.ம.சு.மு., ஒரு சில ஆசனங்கள் அதிகமாகப் பெறுமென்றும், இருந்தாலும், ஆட்சியமைக்கும் விடயத்தில் ஐ.தே.முன்னணிக்கே அதிக வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கின்றது.

எதிர்பார்த்ததைவிட அதிக அதிகாரங்களையும் உரிமைகளையும் புலிகளுக்கு வழங்கியதாக ரணில் கட்சியின் மேல் சிங்களப் பேரினவாதிகள் குற்றம் சாட்டும் அதே வேளையில், Nஐ.வி.பி.யுடன் கூட்டுச் சேர்ந்ததால், சந்திரிகா கட்சியின் மீதும் கடும் அதிருப்தி சிங்கள மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அதனால், பெரும்பான்மைப் பலம்பெற்று, ஆட்சியமைக்க இரு கட்சிகளுக்கும் வாய்ப்புக் கிட்டாது என்று கூறப்படுகிறது.

ஐhதிஹ ஹேல உருமய, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் கூட்டமைப்பு ஆகியன, ஆளும் கட்சியைத் தீர்மானிக்கும் முக்கிய கட்சிகளாக இம்முறை அமையுமென அக்கணிப்புத் தெரிவிக்கிறது.

புளொட், ஈ.பி.டி.பி., ஏனைய சிறு முஸ்லிம் கட்சிகள், மலையகக் கட்சிகள் போன்றவை, தங்களது கட்சிக்குக் கிடைக்கும் பதவிகளைப் பொறுத்தே யார் பக்கம் சார்வதென்று தீர்மானிப்பார்களென்றும், எப்படிப் பார்த்தாலும், தமிழ் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற இரு பிரதான கட்சிகளும் முந்தியடிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றும் அந்த ஆய்வு மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.

பெரும்பான்மை பற்றிய செய்திகள் முண்ணுக்குப் பின் முரணாக உள்ளன சில ஊடகங்கள் ரணில் கட்சியென்றும் சில சந்திரிகா கட்சியென்றும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருக்கின்றன
இன்னும் சில மணிநேரத்தில் முடிவு தெரிந்துவிடும்

- Mathan - 04-02-2004

Eelavan Wrote:பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒவ்வொன்றுடனும் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால்
அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முதலில் தாம் அங்கம் வகிக்கும் கட்சியுடன் பேசி அவர்களது பேச்சுக்கான திட்ட வரைபை தயார் செய்ய உதவலாம் அரசுடனும் கூட்டு வைத்துக் கொண்டு அதே அரசுடன் பேச்சு வார்த்தை மேசையில் பேசித்தான் தீர்க்கவேண்டும் என்றால் இவர்களின் அரசியல் கூட்டு கேலிக்கிடமாகவே உள்ளது

அதனை விட இப்படி ஆளுக்கொருவரை பாராளுமன்றத்தில் வைத்திருக்கும் கட்சிகள் எல்லாவற்றினுடனும் பேசுவது இன்னொரு திம்புப் பேச்சுவார்த்தையாகத் தான் இருக்கும் நிச்சயமாக பிரச்சனையைத் தீர்க்க உதவாது

அது உண்மைதான், புலிகளின் பேசித்தான் தீர்வை உருவாக்கவேண்டும். அதன் பின்பு தேர்தலை நடத்தினால் சரி.

- Mathan - 04-02-2004

ஆட்சியமைக்கும் பெரும்பான்மைப் பலம், எந்தக் கட்சிக்கும் கிடைக்கப்போவதில்லை: ஆய்வு

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 22:01 ஈழம் ஸ

சிறீலங்காவில் பொதுத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்குத் தேவையான 113 ஆசனங்களை எந்தக் கட்சியும் பெறப் போவதில்லையென ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியும், சந்திரிகா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஆட்சியமைப்பதற்கான பலப் பாPட்சையில் இறங்கியுள்ள நிலையில், இரு கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 113 ஆசனங்கள் கிடைக்கப்போவதில்லை என்று பிந்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ரணில் கட்சியை விட, ஐ.ம.சு.மு., ஒரு சில ஆசனங்கள் அதிகமாகப் பெறுமென்றும், இருந்தாலும், ஆட்சியமைக்கும் விடயத்தில் ஐ.தே.முன்னணிக்கே அதிக வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கின்றது.

எதிர்பார்த்ததைவிட அதிக அதிகாரங்களையும் உரிமைகளையும் புலிகளுக்கு வழங்கியதாக ரணில் கட்சியின் மேல் சிங்களப் பேரினவாதிகள் குற்றம் சாட்டும் அதே வேளையில், Nஐ.வி.பி.யுடன் கூட்டுச் சேர்ந்ததால், சந்திரிகா கட்சியின் மீதும் கடும் அதிருப்தி சிங்கள மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அதனால், பெரும்பான்மைப் பலம்பெற்று, ஆட்சியமைக்க இரு கட்சிகளுக்கும் வாய்ப்புக் கிட்டாது என்று கூறப்படுகிறது.

ஐhதிஹ ஹேல உருமய, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் கூட்டமைப்பு ஆகியன, ஆளும் கட்சியைத் தீர்மானிக்கும் முக்கிய கட்சிகளாக இம்முறை அமையுமென அக்கணிப்புத் தெரிவிக்கிறது.

புளொட், ஈ.பி.டி.பி., ஏனைய சிறு முஸ்லிம் கட்சிகள், மலையகக் கட்சிகள் போன்றவை, தங்களது கட்சிக்குக் கிடைக்கும் பதவிகளைப் பொறுத்தே யார் பக்கம் சார்வதென்று தீர்மானிப்பார்களென்றும், எப்படிப் பார்த்தாலும், தமிழ் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற இரு பிரதான கட்சிகளும் முந்தியடிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றும் அந்த ஆய்வு மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.

நன்றி - புதினம்

- Mathan - 04-02-2004

Police decides not to impose curfew due to the prevailing peaceful environment

Alladin Hussein in Colombo, April 2, 2004, 11.39 pm. Inspector General of Police Indra de Silva today announced that due to the prevailing peaceful atmosphere in the country, there is no necessary to impose curfew. He also said that even though there had been some disturbances in the North and East province and a few other districts, the situation has seemingly returned to calm after the polling ended at 4.00 p.m. Analysts pointed out that this is one of the most calmest elections ever in recent history.
He however indicated the possibility of curfew in several areas in the North East province, if the situation takes a turn for the worse; however sources from the North East said that the situation is quite peaceful now.

Security has also been tightened at all major areas around the country, to enforce law and order and prevent any unwanted incidents.

- Mathan - 04-02-2004

மட்டக்கிளப்பில் இருந்து செய்தி குறிப்பு ஒன்று ...

http://www.worldtamilradio.info/election4.ram

நன்றி - தமிழ் வெப் ரேடியோ

- Mathan - 04-02-2004

BBC Wrote:Police decides not to impose curfew due to the prevailing peaceful environment

Alladin Hussein in Colombo, April 2, 2004, 11.39 pm. Inspector General of Police Indra de Silva today announced that due to the prevailing peaceful atmosphere in the country, there is no necessary to impose curfew. He also said that even though there had been some disturbances in the North and East province and a few other districts, the situation has seemingly returned to calm after the polling ended at 4.00 p.m. Analysts pointed out that this is one of the most calmest elections ever in recent history.
He however indicated the possibility of curfew in several areas in the North East province, if the situation takes a turn for the worse; however sources from the North East said that the situation is quite peaceful now.

Security has also been tightened at all major areas around the country, to enforce law and order and prevent any unwanted incidents.

தேர்தல் அமைதியாக நடைபெற்றதால் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது இல்லை என்று பொலிஸ் தீர்மானித்துள்ளது.

- Mathivathanan - 04-02-2004

அனேகமா மட்டக்களப்பு அல்லது அம்பாறை தொகுதியிலை ஒண்டுதான் முதல் வரும்.. ஒண்டும் இன்னமும் வரேல்லையே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathivathanan - 04-02-2004

Mathivathanan Wrote:அனேகமா மட்டக்களப்பு அல்லது அம்பாறை தொகுதியிலை ஒண்டுதான் முதல் வரும்.. ஒண்டும் இன்னமும் வரேல்லையே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
மௌனம் சாதிக்கிறியள்..என்ன..?
:?: :?: :?:

- Kanthar - 04-02-2004

ஓம் ஓம் அதோட
பாரராஜசிங்கத்தார் தேசிய பட்டியலாலதான் வாருவார் எண்டு நினைக்கிறன்

- Mathivathanan - 04-02-2004

Kanthar Wrote:ஓம் ஓம் அதோட
பாரராஜசிங்கத்தார் தேசிய பட்டியலாலதான் வாருவார் எண்டு நினைக்கிறன்
என்ன கந்தர் இப்பிடிச் சொல்லுறியள்..?
பெடியள் அவர்தான் முதன்மை வேட்பாளரா வருவார் எண்டு சொன்னாங்கள்.. அவரும் அப்பிடித்தான் சொன்னவர்.. எதுவெண்டாலும் பொறுத்திருந்து பார்ப்பம்..
Idea :!: :?:

- Mathivathanan - 04-02-2004

http://www.theacademic.org/elect/