![]() |
|
சுட்ட கவிதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சுட்ட கவிதை (/showthread.php?tid=7322) |
- Mathan - 05-20-2004 உண்மைதான். இந்த கவிதையை எழுதியவர் யார் என்று தெரிந்தால் அறியத்தாருங்கள். - ishwari - 05-22-2004 நேற்றிருந்த சொந்தமெல்லாம் நேரினிலே இன்று இல்லை யதார்த்தமான வரிகள் - tamilini - 05-23-2004 <!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->அருமையான கவிவரிகள் கொண்ட பாடல். கேட்கும்போது மனதை சற்றே கலங்க வைக்கின்ற நம்மவர் பாடல் இது.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> - sOliyAn - 05-24-2004 <!--QuoteBegin-BBC+-->QUOTE(BBC)<!--QuoteEBegin-->உண்மைதான். இந்த கவிதையை எழுதியவர் யார் என்று தெரிந்தால் அறியத்தாருங்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> புதுவை இரத்தினதுரை அவர்கள்தான்! - kuruvikal - 05-24-2004 அப்ப ஈழநாதன் என்பது புதுவையா...????! உரிமம் போடாமல் கவிதை போட்டிருக்கார்....சொந்தக்காரன் தானே அப்படி செய்யலாம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
- sOliyAn - 05-24-2004 ஈழத்துக் கவிஞர் ஒருவரின் வரிகளென மேலே உள்ளதே?! - kuruvikal - 05-24-2004 அப்படி மொட்டையாச் சொன்னா எப்படி....ஆகும்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Eelavan - 05-24-2004 புதுவையிடமிருந்து அவர் சுட,அவரிடமிருந்து பி.பி.சி சுட்டுக்கொண்டுவந்து தந்துள்ளார் போலிருக்கிறது - sOliyAn - 05-25-2004 ஏதோ..!! நல்ல காரியங்களில் ஈடுபட்டிருப்போரை சோர்வடையச் செய்யாமல் (தோளில்) தட்டிக் கொடுப்போம்! (குருவிக்கு தோள்..?! ) - Mathan - 05-26-2004 மூன்றாவது மனிதன்! <img src='http://kavithai.yarl.net/archives/hands.jpg' border='0' alt='user posted image'> நண்பனே...! உஸ்மான். உன்னை, நண்பனென்று அழைக்கும் தகுதி எனக்கு.... இன்னமும் எஞ்சியிருக்கிறது, என்றுதான் தோன்றுகின்றது. இதுவே, ஐந்தாறு வருடங்கள் முன்பென்றால்.... 'சகோதரா'வென்றோ, 'நானா'வென்றோ 'தம்பி'யென்றோ உறவு சொல்லியழைத்திருப்பேன் அழைக்கின்ற அளவுக்கு, நாங்களும் விடவில்லை. அழைக்கப்படும் அளவு, நீங்களும்... இணங்கவில்லை. தன் கையே... தன் கண்ணைக், குத்துவது போல, உன்னை நானும்.. என்னை நீயும்... குதறிக் கொண்டோம். ஏவி விட்டுக், காத்திருக்கும், எவற் பேய்களுக்கு... எதுவித மிச்சமுமின்றி, என் காயத்தின் குருதியை, நீயும்... உன் காயத்தின் ஊனத்தை, நானும்... குடித்துக் கொண்டோம். இருவருமே துருவங்களானபின், நட்பு மட்டும்... சாட்சியாய். அதன் பெயரில் அழைக்கின்றேன் நண்பனே...! (தொடரும்) நன்றி - http://www.kavithai.yarl.net - Mathan - 05-26-2004 மூன்றாவது மனிதன்! 2 நண்பனே..! எனக்கு, இன்னமும் ஞாபகமிருக்கிறது. சிறுவயதில்.. உன் 'வாப்பா' கடையில், என் அப்பாவும், உன் 'வாப்பா'வும் வியாபாரம் பேச.. நாமிருவரும், கைகோர்த்துத் திரிந்த, "ஜும்மா" பள்ளிவாசல் வீதியை.. பலகாரம் சுட்டு, பாசத்துடன் தந்த உன்; 'உம்மா'வை... நண்பனே, எனக்கு இன்னமும் ஞாபகமிருக்கிறது. அப்போதெல்லாம், நீ.. எமக்கு அந்நியனாகத் தெரியவில்லை. உன் 'வாப்பா'வுக்கு நான்.. 'மவன்'!! என் அப்பாவுக்கு நீ.. 'மகன்'!! வெள்ளிக் கிழமைகளில், ஒன்றாகப் போய்... பிரிவோம்! தொழுகைக்காகவும், கோயிலுக்காகவும். உன் சாமியும், என் சாமியும், அடுத்தடுத்த தெருவில் தானே. அப்போதெல்லாம், நீ.. அந்நியனாகத் தெரியவில்லை. எங்கள் மண்ணை கீறிக் கிழித்த யுத்தம். உன் வூட்டிலும், என் வீட்டிலும், ஒரே வடுவையே தந்தது. என் வீட்டில் குண்டு விழுந்த அதே காலைப் பொழுது, உன் தங்கை ஷெல்லுக்குப் பலியானாள். அப்போதெல்லாம், நீ... அந்நியனாகத் தெரியவில்லை. (தொடரும்) http://www.kavithai.yarl.net - Mathan - 05-27-2004 அதி மேதாவிகள் அற்புதமான அறிவு அந்தக் காகத்துக்கு ஒரு பக்கம் தலைசாய்த்து ஒரு கண்ணால் பார்க்கும்போது ஓராயிரம் அர்த்தங்கள் எதிர்பாராத கணத்தின் விளிம்பில் கொத்திப் பிடுங்குவதும் சப்தங்கள் கேட்டவுடன் சரேலெனக் கிளம்புவதும் எந்த வலையிலும் சிக்காமல் ஏகாந்தமாய்ப் பறப்பதும் கறுப்புத் தொழில் நுட்பம் கடைசியில் பாவம் குப்பையைக் கிளறி அழுகியதையும் அசிங்கத்தையும் செத்ததையும் மத்ததையும் உண்கிறது உயிர்வாழ. நன்றி - நாகூர் ரூமி - Mathan - 05-27-2004 நமக்கு அது அசிங்கமாய் தெரிந்தாலும் காகத்தின் உயிர்வாழ்தலுக்கு அது அவசியம். அதன் பார்வையில் அசிங்கமாக தெரியவில்லை. - Mathan - 05-27-2004 நட்பாகுமா? தேர் நேராய் செல்லாமல் திசை கொஞ்சம் மாறினால் தடைப் போட்டுத் திருப்பாமல் தடம் புரளச் செய்யவோ! நீர்மூடிய சேற்றினில் - நீ நீராட இறங்கையில் 'நில்' என்று சொல்லாமல் நீந்தென்று தள்ளவோ! கள்ளினுள் விழும் வண்டாய் - நரிவால் கவ்விடும் வயல் நண்டாய் - நீ தொல்லையைத் தேடிப்போய் 'தொப்' பென்று விழுகையில் தூரத்தே ஓடுதல் நட்பாகுமா?! நன்றி - பனசை. நடராஜன் - Mathan - 05-29-2004 BBC Wrote:மூன்றாவது மனிதன்! 2 இந்த கவிதையின் 3வது 4வது பகுதிகள் வெளிவந்திருக்கின்றன, http://kavithai.yarl.net/archives/000951.html http://kavithai.yarl.net/archives/000966.html - Mathan - 05-29-2004 பிரிவு இந்தக் கவிதையின் எளிமையும், நேர்மையும் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னைத் தூண்டின. மனிதன் பொய்களற்று இருந்தபோது பிறந்த கவிதை இது. காதலை மிக நேர்மையுடன் அணுகி அதன் மீது தெய்வீகச் சாயமெதையும் பூசாமல் நிர்வாணமாய் தரிசிக்கிறது கவிதை. அதனால் அப்போது காதல் தான் எவ்வளவு ஆழமாய் சுழித்துக்கொண்டு அவனை உள்வாங்கிக் கொள்கிறது! இப்போது என் படுக்கை எவ்வளவு இருட்டாயிருக்கிறது. உனது உடம்பு நிலவு. உனது கண்கள் கலைமான்களுடையவை. எனது வைரமே, உனது கூந்தல் நீளமானது. நீ என்னை இரண்டு நாள் காதல் செய்தாய். இப்போது உனது நிலத்துக்குப் போய்விட்டாய். இப்போது என் படுக்கை எவ்வளவு இருட்டாயிருக்கிறது. மாமரக்கிளையில் குயில் அழுகிறது. காட்டில் மயில் அழைக்கிறது. நதிக்கரையில் கொக்கு குரல் கொடுக்கிறது. இவற்றின் இசையை நான் காதலியின் குரலாகத் தவறாகப் புரிந்து கொள்கிறேன். இப்போது என் படுக்கை எவ்வளவு இருட்டாயிருக்கிறது. சூரியனின் வெளிச்சத்தைத் திருடி சந்திரன் எழுகிறது. அவள் தொடைகளுக்கிடையில் அவன் அமிர்தத்தைத் திருடுகிறான். மாமரக்கிளையை நீ உலுக்குகிறாய். நீ அதை கீழே இழுத்து முறித்துவிட்டாய். நீ என்னைக் காதலுக்காக அழ வைத்துவிட்டாய். நீ ஒரு கயிற்றை வெட்டி கிளையோடு கட்டினாய். அதை அசைத்து அசைத்து கீழே தள்ளிவிட்டாய். சிக்னிமுகி கிராமத்தின் ஒல்லியான பெண் எனது வீட்டில் என்னோடு காதல் வார்த்தைகள் பேசுகிறாள். வா, நாம் காட்டிற்கு போவோம். நிலா மேலே வருகிறது நிறைய நட்சத்திரங்களால் சூழப்பட்டு. உனக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால் உன் விருப்பம்போல் செய். ஆனால் உன்மேல் உள்ள காதலால் நான் தூரத்துக்கு விலகிப் போகமாட்டேன். உன் பழக்க வழக்கங்கள் பற்றி எனக்குக் கவலை இல்லை. உன்நீதிநெறிகளைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. உனது நாக்கு இனிப்பாக இருக்கும் வரையிலும் நீ என்னைக் கவனித்துக் கொள்ளும் வரையிலும் எதைப் பற்றியும் கவலை இல்லை. உனது கிணற்றிலிருந்து கொஞ்சம் தண்ணீர் கொடு. எனது மனதைக் கழுவிக்கொண்டு "மனமே அமைதியாக இரு" என்று சொல்லிவிடுவேன். ஆனால் இதுபோன்ற ஒன்றை என் உடம்பிற்கு நான் எப்படிச் சொல்லமுடியும்? பெண்ணே, நான் உன்னை விடவே மட்டேன். இங்கு என்ன இருக்கிறதோ அதை நாம் இருவரும் சேர்ந்து சுவைக்கலாம். பூமித்தாய் முதலில் பிறந்தால். மனிதன் பிறகு தான் பிறந்தான். ஒவ்வொரு வேலியிலும் அவர்கள் கொம்புகளை நடுகிறார்கள். உனக்குப் புரியாது பெண்ணே உன்னை நான் விடவே மாட்டேன். நிலவுக்கு வயது இரண்டு ஆகிறது. அவர்கள் வீட்டில் விளையாடுகிறார்கள். காதலியே, உன்னைக் கனவில் கூடக் காண முடியவில்லை. நடு இரவில் கண்விழித்து உன்னைத் தேடிப் பார்த்தும் என்னால் உன்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை, -சட்டிஸ்கார்ஹி மலையினப்பாடல் (நன்றி - கடவுளுக்கு முன் பிறந்தவர்கள் - ஆதிவாசிக் கவிதைகள், தமிழில்: இந்திரன். வெளியீடு: INDP, பாண்டிச்சேரி.) நன்றி - Thangamani - Mathan - 05-30-2004 எங்கே போகிறோம்..........? உலகம் இருபத்தோராம் நூற்றாண்டில் காலடி வைக்கக் காத்திருக்கும் போது நாம் பதினேழாம் நூற்றாண்டின் புழுதிக்குள்ளே மல்லாந்து கிடக்கின்றோம். செவ்வாய்க் கிரகத்திலிறங்கி சோதனை நடத்துகிறது பாத்ஃபைன்டர் இங்கே மன்னார்த் தடைமுகாம் தாண்டும் தேதியறிய பத்திரிகைகளுள் பரபரக்கிறோம். எங்கே போகிறோம் நாம்?! எங்கே போகிறோம் நாம்?! கத்தியில்லாமல் இரத்தமில்லாமல் மூளைக்குள்ளேயே லேசர்க் கதிரினால் நுட்பமான சத்திரசிகிச்சை நடக்கிறது ஆனால் நாமோ தலையிடிக்குப் போடப் பனடோலுக்கும் வழியின்றி.......! எங்கே போகிறோம் நாம்?! அனல் மின்சாரம் புனல் மின்சாரம் நியோன் ஒளிவெள்ளம் எலெக்ரோனிக் மின்நடனம் என நகரங்களெல்லாம் பிரகாசித்துப் பளபளத்து நர்த்தனமாட...... நாம் குப்பி விளக்கிற்கு எண்ணெய் தேடி குடும்பக் காட்டுடன் கியூ வில் நிற்கிறோம் உண்மையில் நாம் எங்கே போகிறோம்?! மரங்களை வெட்டாதே மலர்களைக் கொய்யாதே உயிர்களைக் வதைக்காதே மயில்களைச் சுடாதே சூழலைக் கெடுக்காதே என்றெல்லாம் உலகெங்கும் குரல்கள் கேட்கிறதே!!! இங்கே பள்ளிக்குப் போன பயிர் சுள்ளியாய் முறிந்து கிடக்கிறதே! தட்டோடு பூ வேந்திப் போனவள் பட்டாடை சிவப்புறப் புறபாதையிலே கிடக்கிறாளே! மொட்டாக மலராக பூங்கொத்தாக பிஞ்சாக கனியாக கனிக்கொத்தாக எத்தனை குடும்பங்கள் வாழ்வழிந்து போயினவே! எங்காவது எமக்காகக் குரல்கள் கேட்கிறதா?! சத்தியமாக நாம் எங்கே போகிறோம்?! - <b>தீட்சண்யன்</b> - - shanmuhi - 05-30-2004 சுட்ட கவிதைகள் அனைத்தும் அருமை.... - Eelavan - 05-31-2004 அருமையான "அக"விதைகளை சுட்டுக் கொண்டுவந்து சுவைபடத் தரும் அன்பு நண்பரும் யாழ் களத்தின் தூணும் கருத்துக்களத்தின் பிரச்சாரப் பீரங்கியுமான திருவாளர் BBC அவர்களுக்கு கருத்துகக்ளம் சார்பில் பொன்னாடை வழங்கி பொற்கிழியும் அளிக்கிறோம்(பொற்கிழியை எமது சார்பில் மோகன் அண்ணாவிடம் பெற்றுக் கொள்ளவும்) - Mathan - 05-31-2004 ஈழவன் என்னுடன் என்ன கோபம்? அது பரவாயில்லை அந்த பொற்கிழியை வாங்கி தர முடியுமா? மோகன் அண்ணா தர மாட்டேன் என்று சொல்கின்றார். (பொற்கிழி என்றால் பொன்னால் செய்த கிளி தானே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> )
|