![]() |
|
வான் புலிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வான் புலிகள் (/showthread.php?tid=7132) |
- Mathan - 05-29-2005 விமானங்களால் போர் நிறுத்தத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே கண்காணிப்பு குழு அதுபற்றி பேச முடியும் இப்போது கருத்து தெரிவிக்க உரிமையில்லையென புலிகள் அறிவிப்பு போர்நிறுத்த காலத்தில் புலிகளின் விமானங்கள் மூலம் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே அதுபற்றி அரசு தரப்போ அல்லது போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவோ கதைக்க முடியுமே தவிர, பாதிப்பெதுவும் ஏற்படாத நிலையில் அதுபற்றி எவரும் கதைக்க உரிமையில்லையென விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். தங்கள் வசம் விமானங்கள் பலவும் புதிய விமான ஓடுபாதையுமிருப்பதாக அண்மைக்காலமாக அரசும் படையினரும் பெரும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவது குறித்தும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். புலிகள் வசம் விமானங்களிருப்பதானது இலங்கைக்கு மட்டுமல்லாது இந்தியாவின் பாதுகாப்புக்கும் ஆபத்தாயிருக்குமெனவும் தெரிவித்துள்ள போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பதில் தலைவர் ஹக்ரப் ஹொக்லண்ட், அரசு என்ற ரீதியில் இலங்கை அரசானது ஆயுதங்களை வாங்கிக் குவிக்க முடியுமென்றும் எனினும், அதனைப் புலிகள் செய்ய முடியாதென்றும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார். இது பற்றி விடுதலைப் புலிகள் கூறுகையில்; விடுதலைப் புலிகளிடம் மிகப்பெரிய இராணுவ அமைப்புள்ளது. இரு தரப்பினதும் சம பல நிலையிலேயே போர் நிறுத்த உடன்பாடே உருவானது. இந்த உடன்பாடு உருவாவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே எம் வசம் விமானப் படையும் விமான ஓடுபாதையுமுள்ளன. இது உலகமறிந்த விடயம். இன்று போர் நிறுத்த உடன்பாடு அமுலிலுள்ளது. அதனைப் புலிகள் முறையாகக் கடைப்பிடிக்கின்றனர். ஆனால், எமது விமானப்படை பற்றியும் விமான ஓடு பாதை பற்றியும் அரசும் படையினரும் பெரும் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். போர் நிறுத்த காலத்தில் எம் மூலம் ஏதாவது பாதிப்புக்கள் ஏற்பட்டால் மட்டுமே அதுபற்றி கதைக்கும் உரிமையுள்ளது. இல்லையேல், அது கண்காணிப்புக் குழுவென்றாலும் சரி அது பற்றி கதைக்க முடியாது. நாம் விமானப்படையை உருவாக்கி நீண்ட காலமாகிவிட்டது. காலத்திற்குக் காலம் தொழில் நுட்ப ரீதியில், ஏனைய படையணிகளைப் போன்று அதுவும் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால், அதனை இவர்கள் இன்று பூதாகரமாக்கி அதன் மூலம் வெளிநாடுகளிலிருந்து போர்த்தளபாடங்களைப் பெற முயற்சிக்கின்றனர். எமது விமான ஓடுபாதையை பார்க்க வேண்டுமென கண்காணிப்புக் குழு கேட்கிறது. ஆனால், அதற்கு அனுமதி வழங்கப்படாதென தெளிவாகக் கூறிவிட்டோம். இராணுவ இரகசியங்களை எவருக்கும் காண்பிக்க வேண்டிய தேவை எமக்கில்லை. இவ்வாறான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை எனவும் தெரிவித்துள்ளனர். Thinakkural - jeya - 05-29-2005 இப்ப இலங்கை இந்தியா hock: காணிப்புக்குழு க்கு திருப்தியான பதில் கிடைத்திருக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- hari - 05-29-2005 அருமையான பதில்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 05-31-2005 ஆலவாய் (கேரளா) : விடுதலைப் புலிகளால் நாட்டில் ஆபத்து அதிகரித்துள்ளது. கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானத்தைக் கடத்த அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கொச்சி விமான நிலையத்தில் புலிகள் ஊடுருவக் கூடும் என்று மத்திய புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. இதனால், விமான நிலையத்துக்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்குள் பார்வையாளர்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் மூன்று ஆண்டுகளாக சண்டை நிறுத்த ஒப்பந்தம் நீடிக்கிறது. சுனாமி நிவாரணப் பணியில் இலங்கை அரசு பாரபட்சம் காட்டுவது, புலித் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக செயல்படும் மட்டக் களப்பு மாவட்ட மாஜி புலித் தளபதி கருணாவுக்கு ராணுவம் உதவுவது போன்ற பல்வேறு பிரச்னைகளால் புலிகள் கோபத்தில் உள்ளனர். இதனால், எப்போது வேண்டுமானாலும் சண்டை நிறுத்தம் முறியும் அபாயம் உள்ளது. அரசுடன் மோத புலிகளும் தயாராகி வருகின்றனர். அதற்காக, படை பலத்தை அதிகரிக்கவும், பலப்படுத்தவும் பல்வேறு முயற்சிகளில் ரகசியமாக இறங்கியுள்ளனர். புலிகளின் நடவடிக்கையை மத்திய புலனாய்வு அமைப்புகள் உன்னிப்பாக கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. நாட்டிற்குள் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக, தமிழகம் உட்பட பல்வேறு கடலோர மாநிலங்களை உள்துறை அமைச்சகம் உஷார் படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கைக்கு பெட்ரோல், டீசல் கடத்தும் தலமாக தமிழகத்தை புலிகள் பயன்படுத்துகின்றனர்' என்று திடுக்கிடும் தகவல் கூறப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இதை மறுத்துள்ளார். மேலும், புலிகள் நடமாட்டத்தை தடுக்க எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசுக்கு அவர் பட்டியலிட்டு காட்டினார். மத்திய அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே இந்த சர்ச்சை ஒருபுறம் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு திடுக்கிடும் தகவலை புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. கொச்சியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இதில், ஊடுருவ புலிகள் முயற்சிப்பதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இந்த ஊடுருவல் முயற்சி மூலம், இந்திய விமானத்தை கடத்தும் சதித் திட்டத்திலும் புலிகள் ஈடுபடக் கூடும் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பதட்டம் ஏற்பட்டுள்ளது. புலிகள் ஊடுருவலைத் தடுக்க, கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று முதல் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. பல்வேறு உஷார் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விமான நிலையத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். விமான நிலையத்திலும், அதைச் சுற்றிலும் இப்படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். தொழில் பாதுகாப்புப் படையின் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் விமான நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. பல்வேறு கட்ட கடும் சோதனைக்குப் பிறகே, பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அடுத்த மாதம் 7ம் தேதி வரை, இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அமலில் இருக்கும் என்று தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். நன்றி : தினமலர் - vasisutha - 06-01-2005 Quote:கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானத்தைக் கடத்த அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - paandiyan - 06-01-2005 Mathan Wrote:புலிகள் விமானப்படையால் இந்தியாவுக்கு ஆபத்து: நார்வே தூதுக்குழு எச்சரிக்கை இவ்வளவு காலமும் என்னத்த கிழிச்சுப் போட்டாங்களோ தெரியாது அமைதிப்பேச்சிலிருந்து விலகுவதற்கு. - hari - 06-04-2005 புலிகளின் வான்படை: அமெரிக்காவிடம் சிறிலங்கா புகார் [சனிக்கிழமை, 4 யூன் 2005, 19:17 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை குறித்து அமெரிக்காவிடம் சிறீலங்கா புகார் கூறியுள்ளது. வாசிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா றைசை சந்தித்த சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் வான்படை குறித்து புகார் கூறியுள்ளார். இதற்குப் பதிலளித்த கொண்டலீசா றைஸ் அம்மையார், இது குறித்து நாங்கள் அதிகமாக கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம் என்று பதிலளித்துள்ளார். இதனிடையே சிறிலங்கா ஜனாதிபதியின் இந்திய பயணத்தையொட்டி வெளியிடப்பட்ட இந்தியா-சிறிலங்கா கூட்டறிக்கையில் வான்படை குறித்து மறைமுகமாக இந்தியாவும் தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கிறது. puthinam - hari - 06-05-2005 திருமலையிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானத்தளம்! [ஞாயிற்றுக்கிழமை, 5 யூன் 2005, 09:23 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழத் தலைநகரான திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் விமான ஓடுபாதை ஒன்றை அமைத்து வருகின்றனர் என்று கொழும்பிலிருந்து வெளியாகும் 'சண்டே ரைம்ஸ்' வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தென் திருகோணமலையில் சம்பூரின் தெற்குப் பகுதியில் தகரவாடியில் 25 ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பெரும் எண்ணிக்கையிலான சீமெந்து மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன. இந்த அமைவிடமானது திருகோணமலை துறைமுகத்தை நோக்கியதாக உள்ளது. இந்தச் சூழலானது திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் விமானத்தளம் ஒன்றை அமைக்கும் முயற்சியாக இருக்கக்கூடும். இது குறித்து கடந்த மாதம் சிறிலங்கா புலனாய்வுத்துறை அரசுக்குத் தகவல் அனுப்பியிருக்கிறது. இந்த விமான ஓடுபாதை கட்டமைக்கப்பட்டு வருவது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் இறுதியான முடிவு எதையும் கூறவில்லை. சிறிலங்காவின் ஆளில்லா வேவு விமானங்கள் மட்டுமே அப்பகுதியில் துப்பரவாக்கப்பட்டு வருவதை உறுதி செய்து இருக்கிறது. அப்பிரதேச மக்கள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பகுதியில் துப்பரவுப் பணியில் ஈடுபட்டு வருவதை உறுதி செய்துள்ளதை அறிகிறோம். லொறிகளில் சீமெந்தும் இரும்புகளும் இறக்குவதை சிலர் பார்த்துள்ளனர். நூற்றுக்கணக்கான லோடு கட்டுமானப் பொருட்களுக்கு சம்பூரை அண்டியுள்ள மொத்த விநியோகஸ்தர்களிடம் கொள்வனவு செய்ய ஓர்டர் கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த விமான ஓடுபாதை திருகோணமலையில் அமைந்துவிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நகர்வுகள் அனைத்தும் திருகோணமலையை நோக்கியதாகவே இருக்கும். இதன்மூலம் தமிழீழத் தனியரசின் தலைநகராக திருகோணமலையை பிரகடனப்படுத்துவார்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சம்பூர் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்த தமிழீழ விடுதலைப் புலிகள், இந்த பாதுகாப்பு நகர்வுகள் அனைத்தும் திருகோணமலையை நோக்கியதாக இருக்குமாறு அமைத்தனர். இந்த விமான ஓடுபாதை தொடர்பான செய்தி உறுதிப்படுத்தப்பட்டு விட்டால் கிளிநொச்சியையும் திருமலையையும் வான்வழியே விடுதலைப் புலிகள் இணைக்கக் கூடும். தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் தம்மை வலுப்படுத்திக்கொண்டுள்ளனர் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்க, சுவிஸ் விமான நிறுவனங்களில் பொறியியலாளர்களாக கடமையாற்றும் தமிழர்கள் இருவர் மூன்று வாரங்களுக்கு முன் கட்டுநாயக்க வழியாக கொழும்பு சென்று ஓமந்தை சோதனைச் சாவடியூடாக கிளிநொச்சி சென்று சுமார் இரண்டு வாரங்களாக அங்கு தங்கியிருந்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட இரு பொறியியலாளர்களும் இலங்கையை விட்டுச் சென்ற பின்னர்தான் அவர்களின் வருகை பற்றிய உண்மையான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. puthinam - Nitharsan - 06-05-2005 பயம் என்றால் தமிழீழத்தை தந்திட்டு பொறதுக்கு இவனுகள் எல்லோரும் சேர்ந்த இப்பவே ஒப்பாரி வைக்க வெளிக்கிட்டாங்க... - வியாசன் - 06-05-2005 அவையள் பயப்பிடாமல் என்ன செய்யிறது. விடுதலை இயக்கமாக இருக்கின்றபோதே இவ்வளவு வேலையள்( உலகிலேயே விமானப்படை வைத்துள்ள முதல் விடுதலை இயக்கம்) செய்கின்றவை இவையள் தனிநாடு கிடைச்சால் என்ன என்ன செய்வினம் எண்ட பயம் வாறது இயற்கைதானே? தம்பி உள்ளான் படைக்கு அஞ்சான் இவ்வளவு தம்பிகள் உள்ள தம்பி எப்படி அஞ்சுவான் அமெரிக்காவிடமும் கோள்மூட்டி பாத்திட்டினம் அவையள் அமைதியாக இருக்கிறதைப்பார்த்தால் அவை இதை ஆசீர்வதிக்கிறமாதிரி கிடக்கு கத்தட்டும் கத்தட்டும் அவையளாலை இதற்குமேல் என்ன செய்யமுடியும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 06-07-2005 விமான போக்குவரத்து தொடங்குவோம்: விடுதலை புலிகள் ஜூன் 7, 2005 கொழும்பு: கிளிநொச்சியில் இருந்து தாங்களே விமானப் போக்குவரத்தை தொடங்கப் போவதாக விடுதலைப் புலிகள் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே கடந்த 3 வருடங்களாக போர் நிறுத்தம் அமலில் இருந்து வருகிறது. இந்த போர் நிறுத்தத்தை கண்காணிக்க நார்வே தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அமைதி முயற்சியின் ஒரு பகுதியாக தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் வழியாக விமானப் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் இந்தக் கோரிக்கைக்கு இலங்கை அரசு இன்னும் செவி சாய்க்கவில்லை. விமானப் போக்குவரத்தை ஏற்படுத்துவதில் காலம் தாழ்த்தி வருகிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சியிலிருந்து கிழக்குப் பகுதியிலுள்ள திரிகோணமலைக்கும், இதர பகுதிகளுக்கும் விமானப் போக்குவரத்தை ஏற்படுத்த புலிகள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் இலங்கை அரசுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பாக போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், எங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து விமானங்களை இயக்க இலங்கை அரசு தயக்கம் காட்டி வருவது ஏமாற்றம் அளிக்கிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாதிக்கும் வகையில் இது உள்ளது. இதனால் வேறு வழிகளை நாங்கள் கையாள வேண்டி வரும். கிளிநொச்சியில் இருந்து நாங்களே விமானப் போக்குவரத்தை தொடங்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதுவரை ஆவின் விஜிலென்ஸ் அதிகாரியாக இருந்து வந்த டிஐஜி பிரதீப் பிலிப் மாற்றப்பட்டு போலீஸ் பயிற்சி மைய டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். போலீஸ் பயிற்சி மைய டிஐஜியாக இருந்து வந்த சீமா அகர்வால் சென்னை காவல்துறை தலைமையக நிர்வாக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். தட்ஸ்தமிழ் புலிகளின் விமானப்படை. - கோமதி - 10-03-2005 நேரடி அனுபவம். புலிகளின் விமானப்படை பற்றிப் பத்திரிகைகளும் செய்தி நிறுவனங்களும் ஆய்வாளர்களும் அடிக்கடி கதைத்து வருகிறார்கள். கொஞ்சக் காலத்தின் முன் ஓங்கி வீசிய அலை இப்போது ஓய்ந்துள்ளது. அவரவர் தமது கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டு, பிராந்திய அரசியல்களுடன் எங்காவது ஒரு இடுக்கைப் பார்த்துப் பொருத்தி ஆய்வுகள் செய்தார்கள். ஏதோ இப்போது தான் புலிகள் புதிதாக விமானம் செய்தார்கள், வாங்கினார்கள், ஓடுபாதையமைத்தார்கள் என்ற வகையில் அவ்வாய்வுகள் அமைந்திருந்தன. சிறிலங்கா அரசாங்கம்கூட தாம் ஆறு வருடங்களின்முன்பு புலிகளின் விமானப்படை பற்றிப் புலம்பியதையோ, கொழும்பு மாளிகைகளில் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் பொருத்தியதையோ மறந்தது போலப் பிதற்றியது. உண்மை என்னவெனில் புலிகள் தமது வான்படை பற்றி அதிகாரபூர்வமாகவே 1998 நவம்பரில் வெளிப்படுத்தியிருந்ததோடு மக்களின் காட்சிக்கும் கொண்டுவந்திருந்தார்கள். புலிகளின் விமானப்பறப்பைப் பார்த்தவர்களில் ஒருவனான எனது அனுபவமே இந்தப் பதிவு. முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டும். முதன்முதலில் புலிகளால் வெளிப்படுத்தப்பட்ட பறப்பு, 1998 நவம்பர் மாவீரர் நாளுக்கு முள்ளயவளை மாவீரர் துயிலுமில்லத்தில் உலங்குவானூர்தி மூலம் பூத்தூவிய சம்பவமே. அதைக்கூட சிலர் மட்டுமே பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் இந்தப் பகிரங்க அறிவித்தலுக்கு முன்பேயே சிலருக்குப் புலிகளின் பறப்பு முயற்சியைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. அதில் நானுமொருவன். இதில் என்னபெரிய விசயமிருக்கிறது என்று நிறையப் பேருக்குக் கேள்வியெழும்பலாம். புலிகளின் விமானம் பற்றி இத்தனைபேர் (அரசாங்கங்கள் உட்பட) வயித்தால போற அளவுக்குப் பிதற்றும்போது அம்மாதிரியொரு முயற்சியைப் பற்றிக் கேள்விப்படும் ஓர் ஈழத்தமிழன் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியுமா? முதன்முதலில் ரைட் சகோதரர்கள் பறந்தபோது அதைப்பார்த்த ஒருவனுக்கு ஏற்பட்ட உணர்விற்குச் சற்றும் சளைத்ததன்று புலிகளின் பறப்பைப் பார்த்த ஈழத்தமிழனின் குதூகலிப்பு. அந்தக் குதூகலிப்பை இன்று ஏழு வருடங்களின் பின் மீட்டுப்பார்க்கிறேன். இப்போதும் புல்லிரிக்கிறது. 1998 செப்ரெம்பர் மாதம் நடுப்பகுதி. புலிகளின் வான்பறப்பு முயற்சி பற்றி மக்களிடையே குறிப்பாக இளமட்டத்தில் சிலரிடையே அரசல் புரசலாகக் கதைகள் இருந்த காலம். 19 ஆம் திகதி நான் முல்லைத்தீவை அடுத்துள்ள சிலாவத்தைக் கிராமத்தில் நிற்கிறேன். மாலை ஐந்து மணியிருக்கும். வானில் உலங்கு வானூர்திச் சத்தம். அதுவும் தாழ்வாக பறப்பது போன்ற உணர்வு. அப்போதெல்லாம் உலங்குவானூர்தி அங்கால் பக்கம் வாறதேயில்லை. அது அபூர்வமான நிகழ்வுதான். நீண்டகாலத்தின்பின் உலங்குவானூர்திச் சத்தத்தைக் கேட்டோம். என்னோடு இன்னுமிரண்டு பேர் நின்றார்கள். பார்ப்பதற்கு வசதியாக வெட்டைக்கு வந்தோம். என்ன ஆச்சரியம்? தாழ்வாக ஓர் உலங்குவானூர்தி. கரைச்சிக்குடியிருப்பை அண்டிப் பறந்து கொண்டிருந்தது. இது நிச்சயம் சிறிலங்கா அரசாங்கத்தினதாக இருக்க முடியாதென்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அப்படியானால்???? நெஞ்சுக்குள் இனம்புரியாத உணர்வு. 5 நிமிசத்தின் மேல் அதைப்பார்க்கவில்லை. இதை யாரிடமாவது சொல்லியாக வேண்டும். அதுவும் மற்றவர்கள் வழியாக அறியமுதல் நான்தான் அவர்களுக்குச் சொல்லும் முதல் ஆளாக இருக்க வேணும். நான் வந்த வேலை இன்னும் முடியவில்லை. அப்படியே சைக்கிளை மிதித்தேன் புதுக்குடியிருப்புக்கு. வரும்வழியில்தான் எத்தனை கற்பனைகள்? "எமது வானூதிகள் குண்டுமாரி பொழிய எதிரிப்படைகள் சிதறுகிறது; எதிரியின் கட்டங்கள் பொடிப்பொடியாகிறது; மரங்களின்கீழ் ஆண்டவனைப் பிரார்த்தித்துக்கொண்டு குப்புறப்படுத்திருக்கும் படையினர்; வெட்டையில் எந்தக் காப்புமில்லாமல் 'எமது' வான்தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாமல் சுருண்டுவிழும் படையினர்; அடுத்தடுத்து விழும் முகாம்கள்; மிகக் குறைந்த இழப்புக்களுடன் மீட்கப்படும் எமது நிலங்கள்; என்று என் கற்பனை தறிகெட்டுப் போகிறது. இனியென்ன? நாங்களும் விமானப்படை வைத்துள்ள பலம் வாய்ந்த அமைப்புத்தான்." புதுக்குடியிருப்புக்கு வந்துவிட்டேன். என் கூட்டாளிகள் யாரையும் உடனடியாகக் காணவில்லை. உறவினர் வீட்டுக்குச் செல்கிறேன். மெதுவாகக் கதை கொடுக்கிறேன். "உங்கால முல்லைத்தீவுப் பக்கத்தால ஏதும் அறிஞ்சனியளே?" "இல்ல. என்ன விசயம்?" "ஒண்டுமில்ல.... ஹெலி ஏதோ பறந்ததாமெண்டு சனம் கதைக்குது..." "என்னது ஹெலியோ? என்ன துணிவில வந்தவன்? அடிச்சு விழுத்தாம விட்டவங்களே?" "சீச்சீ.. உது ஆமியின்ர ஹெலியில்லயாம்..." ஒரு மாதிரிப் பார்த்தார்கள். "இயக்கத்தின்ர ஹெலியாம்" "டேய்! உனக்கார் சொன்னது? சனம் சும்மா தேவையில்லாம கதைகட்டிவிடும். உதுகளக் காவிக்கொண்டு இஞ்ச வாறாய். நீ இண்டைக்கு முல்லைத்தீவு தானே போனனீ? நீ பாக்கேலயோ?" "இல்ல இல்ல. நான் பாக்கேல... சனம் தான் கதைச்சிது." எண்டு அவசரப்பட்டுச் சொன்னேன். பொதுவாக எங்கட சனத்தின்ர செய்தி கடத்திற வேகம் அபாரமாயிருக்கும். ஆனா இந்த ஹெலி விசயம் பரவாதது எனக்கு ஆச்சரியமாத்தான் இருந்திச்சு. அதோட பயமும் வந்திட்டுது. அங்க ஒரு பிரச்சினை இருக்கு. கண்டபடி உந்தக் கதைகள் கதைச்சுக் கொண்டு திரிய ஏலாது. அப்பிடிக் கதைச்சாலும் ஆரேன் இனியில்லயெண்டு நம்பிக்கையான கூட்டாளியளோட தான். அதால நான் உந்தக்கதைய அதோட விட்டிட்டன். ஒருத்தரும் நம்பின மாதிரித் தெரியேல. எனக்கு உறுதியா அது புலிகளின்ர ஹெலிதான் எண்டு தெரிஞ்சிருந்திச்சு. சரி, எப்பவோ ஒருநாள் எல்லாருக்கும் தெரியவரத்தானே வேணும் எண்டு பேசாமல் பம்மிக்கொண்டு இருந்திட்டன். நான் ஹெலி பாத்தது ஒரு ஞாயிற்றுக் கிழமை. சரியா அடுத்த ஞாயிற்றுக்கிழமை, திலீபன் அண்ணையின்ர நினைவுநாள். அண்டைக்குத்தான் ஓயாத அலைகள்-2 என்ற பெயரில் கிளிநொச்சி நகர மீட்புக்கான பெருஞ்சமர் புலிகளால் தொடக்கப்பட்டது. சண்டை இரவு தொடங்கியவுடனேயே நான் புலிகளின் விமானப்படைப் பயன்பாடு பற்றி எதிர்பார்த்தேன். அதிகாலை கூட்டாளிகளுக்குச் சாடைமாடையாகச் சொன்னேன். "இந்த முறை விசேசமான சாமானெல்லாம் இயக்கம் பாவிக்கப்போகுது"எண்டு சொன்னன். ஒருத்தருக்கும் நான் சொன்னது விசேசமாத் தெரியேலப் போல. அவங்கள் அலட்டிக்கொள்ளேல. "இந்த முறை மேலாலையெல்லாம் அடிவிழும் ஆமிக்கு" எண்டன். இப்பிடியிப்பிடி சொல்லி ஒரு கட்டத்தில "இயக்கம் வான்படையப் பாவிக்குமெண்டு நினைக்கிறன்" எண்டன். விழுந்து விழுந்து சிரிச்சாங்கள். அதோட நானும் சத்தம்போடாம வாயப்பொத்திக் கொண்டு இருந்திட்டன். உண்மையில புலிகள் அப்படியெதுவும் பாவிக்கவில்லை. இன்றுவரையும் பாவித்ததாகத் தெரியவில்லை. நான் பார்த்த ஹெலி யுத்தத்துக்குப் பயன்படுத்த முடியாதென்பது என் கணிப்பாயிருந்தாலும் எதிலும் உச்சப் பயன்பாட்டைப் பெறும் புலிகளின் திறன் என்னை அப்படிச் சிந்திக்க வைத்தது. அதன்பின் வேறிடத்தில் வேறு சந்தர்ப்பத்தில் வான்பறப்பைப் பார்த்தவர்களோடு கதைக்கும்போது நான் பார்த்ததுக்கும் அவர்கள் பார்த்ததுக்கும் வித்தியாசங்கள் இருந்தன. சிலர் ஹெலி அல்லாமல் கிளைடர் ரகத்தைப் பார்த்ததை அறிந்தேன். அதன் பின் நவம்பர் மாவீரர் நாளில் வான்படை பூத்தூவியதுடன் புலிகளின்குரலில் அன்றிரவே பகிரங்கமாக வான்படை பற்றி அறிவிக்கப்பட்டது. "<b>அமிர்தலிங்கம் ஏந்திய வாளும் பிரபாகரன் உயர்த்திய ஹெலியும்"</b> என்ற தலைப்பில் மறுவாரமே தினமுரசு கட்டுரை எழுதியது. சிறிலங்காவின் அனைத்துப் பத்திரிகைகளிலும் இதுதான் பேச்சு. அலரிமாளிகைமுதல் கூட்டுப்படைத்தலைமையகம் வரை அனைத்திடங்களிலும் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் பொருத்தப்பட்டன. இன்று புதுப்புதுப் பெயர்களிலெல்லாம் புலிகளின் விமானப்படைப்பலம் பற்றிக் கதைக்கிறார்கள். உண்மையோ பொய்யோ தெரியாது. நான் பார்த்தது ஆரம்பகட்ட முயற்சி. உள்ளூர் உற்பத்தி. என்ன இருந்தாலும் அதுவொரு பாய்ச்சல்தான். அதன் தொடர்ச்சியான முன்னேற்றமும் வளர்ச்சியுமே இறுதி வெற்றிக்கான திறவுகோல். ---------------------------------------------------------------------------------- இன்னொரு விசயம். இன்று புலிகளின் விமானத்தளம் இருப்பதாகச் சொல்லப்படும் காட்டுப்பகுதியானது நீண்டகாலமாக புலிகளின் தளம். நானறிய 1997 இல் இருந்து அக்காட்டுப்பகுதியும் அதனை அண்டிய பகுதிகளும் புலிகளால் தடை செய்யப்பட்ட பிரதேசம். வன்னி தெரிந்தவர்களுக்கு, பழைய கண்டிவீதி என்ற பெயரிலுள்ள இராமநாதபுரம்-கரிப்பட்ட முறிப்புப் பாதை முன்பே பாவனைக்குத் தடுக்கப்பட்ட பகுதி. இன்று அந்தப் பகுதியைத்தான் புலிகளின் ஓடுதளம் இருப்பதாகவும் அவற்றைத்தாம் பரிசோதிக்க வேண்டுமென்று கேட்கின்றனர். நான் ஆசிப்பது இதைத்தான். இன்று பத்திரிகைகளும் ஆய்வாளர்களும் புலிகளின் விமானப்படை பற்றிக் கூறும் அத்தனைக் கதைகளும் (இவற்றிலிருக்கும் புளுகுகளையும் சாத்தியப்பாடற்ற விசயங்களையும் உணர்ந்து கொண்டிருந்தாலும்) உண்மையாக இருக்க வேண்டுமென்பதே. ----------------------------------------------------- என்னை எழுது எழுது என்று நச்சரித்தவர்களுக்கு....... எழுதியது வன்னியன். http://pooraayam.blogspot.com/2005/10/blog-post.html ------------------------------------- தமிழ்மணம் என்ற பக்கத்துக்கு இப்போதுதான் செல்லத் தொடங்கியுள்ளேன். நிறைய பயனுள்ள, சுவாரசியமான விசயங்கள் எழுதுகினம். இப்பதான் அதில வன்னியன் எண்டவரின்ர பக்கம் பாத்தன். அவர் வன்னியில் ஹெலி பாத்த சம்பவத்தை எழுதியிருந்தார். உடன சுடச்சுட இங்க கொண்டு வந்து தாறன். இந்தப் பதிவப் பாக்கேக்குள்ள எனக்கும் அந்த ஹெலியப் பாத்த ஞாபகம் வருது. ஆனா நான் பாத்தது முள்ளயவளையில பூப்போட்ட ஹெலியத்தான். வன்னியன் அதுக்கு முதலே புலிகளின்ர ஹெலியப் பாத்திட்டார். நானும் புலிகளின் ஹெலி பறக்கேக்க பாத்தனான் எண்டதில பேச்சந்தோசம் எனக்கு. - yarlmohan - 10-03-2005 இக்கருத்தினைத் தொடர்ந்து selvanNL, kurukaalapoovan, viyasan, கோமதி ஆகியோர் எழுதிய கருத்துக்கள் கருத்துக்களின் நம்பகமற்ற தன்மை காரணமாக நீக்கப்பட்டுள்ளது. - Netfriend - 10-03-2005 8) - Nitharsan - 10-04-2005 1998ம் ஆண்டு பறப்பு தொடர்பாக தாயகக் கவிஞர் புதுவை இரத்தின துரையவர்கள் ஒரு கவிதையை ஈழநாதத்தில் எழுதியிருந்தார்.. அந்த கவிதை யாரிடமும் இருக்கா....? - sri - 10-04-2005 சம்பூரில் புலிகளின் விமான ஓடுபாதை: சிங்கள ஊடகம் தகவல் [திங்கட்கிழமை, 3 ஒக்ரொபர் 2005, 15:43 ஈழம்] [கொழும்பிலிருந்து தி.இராஜேஸ்வரி] திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் விமான ஓடுபாதையொன்றை அமைத்திருப்பதாக பாதுகாப்புத் தரப்பிற்குத் தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி: ஆழிப்பேரலை நிவாரணப் பணியை பயன்படுத்தி இதற்குத் தேவையான பொருட்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து எதுவித தடையுமின்றி கொண்டு செல்லப்படுகிறது. இதில் சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் தொடர்புள்ளன. ஒரு கிலோ மீற்றர் நீளமும் 500 மீற்றர் அகலமும் உடைய இந்த ஓடுபாதையில் எச் வடிவில் அமைக்கப்பட்ட இரு உலங்குவானூர்த்தி தரிப்பிடங்களும் உள்ளன. இவற்றின் பாதுகாப்பிற்கென பல பங்கர்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விமான ஓடுபாதையின் பாதுகாப்பிற்கென 100 தாக்குதல் உறுப்பினர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த விமான ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ள பகுதி விடுதலைப் புலிகளின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்தப் பிரதேசத்திற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மைய காலங்களில் வடக்கிலிருந்து கடல் மார்க்கமாக தாக்குதல் விமானத்தின் பாகங்கள் சம்பூர் பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டு சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் யுத்த சூழ்நிலையொன்று ஏற்படுமானால் இந்த சம்பூர் விமான ஓடுபாதையானது திருகோணமலை கடற்படை முகாம், துறைமுகம் மற்றும் ஏனைய பாதுகாப்பு தளங்களுக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும் என பாதுகாப்புத்தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி புதினம் - SANKILIYAN - 10-05-2005 வணக்கம் தம்பி மோகன், மதன் உங்கள் உதவிக்கு நன்றி மதன் நீர் கிழப்பிய தமிழீழ விமானப்படைதொடர்பான கருத்தில் சிலர் ஒவறாக தங்களை மேன்மைப் படுத்த புழுகுகிறார்கள் போல் இருக்கிறது இதைக்கவனத்தில் தருகிறேன் நன்றி சங்கிலியன் நல்லூர் - Thala - 10-06-2005 SANKILIYAN Wrote:வணக்கம் எதைப் புளுகு எண்டுறீங்க சங்கிலியன்... இங்க எல்லாரும் வலைத்தளச் செய்திகளைதான் போட்டு இருக்கிறார்கள்... அது எப்படிப் புளுகு ஆகும்....... இல்லை புலிகளிடம் விமானங்கள் இல்லை எண்டுறீங்களா??? அரசாங்கத்துக்கு 1997லயே தெரியும் புலிகளிடத்தில ஹெலி ஒண்டு இருக்கெண்டு... அதான் ரத்வத்தை வந்து பழுதடந்து நெடுங்கேணி சேமமடுப் பகுதீல( புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதீல) தரையிறக்கி கைவிட்டு ஓடினபோதே தெரியும் அது இப்ப புலிகளிடம்தான் இருக்கு எண்டு.......... பிறகு எப்பிடிப் புளுகு ஆகும்???... - SANKILIYAN - 10-07-2005 40 ளுயுNமுஐடுஐலுயுN எழுதியது: வணக்கம் தம்பி மோகன்இ மதன் உங்கள் உதவிக்கு நன்றி மதன் நீர் கிழப்பிய தமிழீழ விமானப்படைதொடர்பான கருத்தில் சிலர் ஒவறாக தங்களை மேன்மைப் படுத்த புழுகுகிறார்கள் போல் இருக்கிறது இதைக்கவனத்தில் தருகிறேன் நன்றி சங்கிலியன் நல்லூர் எதைப் புளுகு எண்டுறீங்க சங்கிலியன்... இங்க எல்லாரும் வலைத்தளச் செய்திகளைதான் போட்டு இருக்கிறார்கள்... அது எப்படிப் புளுகு ஆகும்....... இல்லை புலிகளிடம் விமானங்கள் இல்லை எண்டுறீங்களா??? அரசாங்கத்துக்கு 1997லயே தெரியும் புலிகளிடத்தில ஹெலி ஒண்டு இருக்கெண்டு... அதான் ரத்வத்தை வந்து பழுதடந்து நெடுங்கேணி சேமமடுப் பகுதீல( புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதீல) தரையிறக்கி கைவிட்டு ஓடினபோதே தெரியும் அது இப்ப புலிகளிடம்தான் இருக்கு எண்டு.......... பிறகு எப்பிடிப் புளுகு ஆகும்???... வணக்கம் தலா புலிகளிடம் விமானப்படை இருக்கிறதென்பதை நான் மறுக்கவில்லை அதைவைத்து கூடுதலாக புளுகுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் - Birundan - 10-07-2005 SANKILIYAN Wrote:40 ளுயுNமுஐடுஐலுயுN எழுதியது: புளுகெண்டால் புளுகெண்டு நிருபியுங்கள், இல்லை என்றால் அதுபற்றிய உங்கள் கருத்துகளை எழுதுங்கோவன். எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கொண்டு, அது புளுகு இது புளுகு என்று கொண்டு, அய்யா நம்பகத்தன்மை அற்ற கருத்துக்கள் இங்கு களநிர்வாகிகளால் நீக்கப்படுகிறது. :wink: |