![]() |
|
அறிவில் சிறந்தவர் யாரிங்கே? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: அறிவில் சிறந்தவர் யாரிங்கே? (/showthread.php?tid=6998) |
- kavithan - 07-02-2004 வாழ்த்துக்கள் ஈழவன் அண்ணா ஒரே மூச்சில் எல்லாதுக்குமே விடை சொல்லி விட்டீர்களே. இதுக்கு பரிசு இல்லையோ மருமகளே .....
- tamilini - 07-02-2004 Quote:வாழ்த்துக்கள் ஈழவன் அண்ணா ஒரே மூச்சில் எல்லாதுக்குமே விடை சொல்லி விட்டீர்களே.அது தான் ஈழவன் அண்ணா.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Eelavan - 07-02-2004 நன்றி நன்றி நான் நேரத்துக்கும் நன்றி சொல்லவேண்டும் நிச்சயம் எல்லோரும் விடையை ஆயத்தப்படுத்தியிருப்பீர்கள் இலகுவானதென்பதால் நான் முந்திவிட்டேன் போட்டிகள் வைத்து சுவாரசியத்தைக் கூட்டும் வெண்ணிலாவுக்கும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் உறவுகள் மாமா,மாமி,மச்சாள்,அண்ணா,தம்பி,தங்கை அனைவருக்கும் பாராட்டுக்கள் - kavithan - 07-02-2004 நன்றி ஈழவன் அண்ணா...எனக்கு ஒன்று இரண்டுக்கு தெரியும் எல்லாத்துக்குமல்ல... மருமகளைக் காணவில்லை, வருவர்கள் விடை சொல்ல ஆவலாய் இருப்பார்கள். அதனால் நானும் சில பொது அறிவு வினாக்களை இங்கு தருகிறேன். இலகுவானவை தான், ம்.....ம் யார்தான் பொது அறிவில் சிறந்தவர் எனப் பார்ப்போம்? [b] 1. பொற்கோயில் நகரம்............... 2. பொன்வாயில் நகரம்.......... 3. ஏழு குன்றுகளின் நகரம்......... 4. இருண்ட கண்டம்.......... 5. நைலின் கொடை........ 6. முதலில் சூரியன் உதிக்கும் நாடு............. 7. நள்ளிரவுச் சூரியநாடு............... 8. புனித நாடு.................... 9. சீனாவின் துயரம்............. 10. ஜரோப்பாவின் நோயாளி............. 11. தெற்கே உள்ள பிரித்தானியா..... 12. உலகத்தின் கூரை.................. 13. மத்திய தரைக்கடலின் திறவுகோல்........ 14. ஜரோப்பாவின் விளையாட்டு மைதானம் .......... இவ்வாறு அழைக்கப்படும் நாடுகளையும், நகரங்களையும் சொல்லுங்களேன் பார்ப்போம். - வெண்ணிலா - 07-02-2004 Eelavan Wrote:நன்றி நன்றி நான் நேரத்துக்கும் நன்றி சொல்லவேண்டும் நிச்சயம் எல்லோரும் விடையை ஆயத்தப்படுத்தியிருப்பீர்கள் இலகுவானதென்பதால் நான் முந்திவிட்டேன் <b>நன்றி ஈழவன் அண்ணா. எனது கேள்விகளுக்கு சிரமம் பார்க்காது பதில் சொன்னமைக்கு சுட்டி வெண்ணிலாவின் நன்றிகள். பரிசு எப்படி தரமுடியும். ஆகவே என்னை மன்னிக்கவும்.</b> :oops: :oops:
- வெண்ணிலா - 07-02-2004 <b>1. பொற்கோயில் நகரம்............... 2. பொன்வாயில் நகரம்.......... 3. ஏழு குன்றுகளின் நகரம்......... 4. இருண்ட கண்டம்.......... 5. நைலின் கொடை........ 6. முதலில் சூரியன் உதிக்கும் நாடு............. 7. நள்ளிரவுச் சூரியநாடு............... 8. புனித நாடு.................... 9. சீனாவின் துயரம்............. 10. ஜரோப்பாவின் நோயாளி............. 11. தெற்கே உள்ள பிரித்தானியா..... 12. உலகத்தின் கூரை.................. 13. மத்திய தரைக்கடலின் திறவுகோல்........ 14. ஜரோப்பாவின் விளையாட்டு மைதானம் .................... இவ்வாறு அழைக்கப்படும் நாடுகளையும், நகரங்களையும் சொல்லுங்களேன் பார்ப்போம்.</b> <b> 5) எகிப்து 6)ஜப்பான் 7)நோர்வே 9)கொயங்கோ நதி 10)துருக்கி 11)நியுசிலாந்த் 12)பமீர் 13)ஜிப்ரல்டர் நீரிணை</b> :?: - வெண்ணிலா - 07-02-2004 Quote:14.ஜரோப்பாவின் விளையாட்டு மைதானம்............ . <b>14)சுவிட்ஸ்லாந்த்</b> [i]<b> கவிதன் மாமா சுட்டி வெண்ணிலாவின் பதில்கள் சரியானவையா?</b> hock: :roll:
- kavithan - 07-02-2004 vennila Wrote:<b>1. பொற்கோயில் நகரம்............... நன்றி மருமகளே கேள்வி கேட்ப்பதில் தான் நீங்கள் ஆர்வம் எண்டு நினைத்தேன் பதில் சொல்வதிலும் ஆர்வமாகத்தான் இருக்கிறீர்கள். நன்றி . மிகுதிக்கும் முயற்சி செய்யலாமே. - Eelavan - 07-03-2004 1. பொற்கோயில் நகரம்............... 2. பொன்வாயில் நகரம்.......... 3. ஏழு குன்றுகளின் நகரம்......... 4. இருண்ட கண்டம்.......... 5. நைலின் கொடை........ 6. முதலில் சூரியன் உதிக்கும் நாடு............. 7. நள்ளிரவுச் சூரியநாடு............... 8. புனித நாடு.................... 9. சீனாவின் துயரம்............. 10. ஜரோப்பாவின் நோயாளி............. 11. தெற்கே உள்ள பிரித்தானியா..... 12. உலகத்தின் கூரை.................. 13. மத்திய தரைக்கடலின் திறவுகோல்........ 14. ஜரோப்பாவின் விளையாட்டு மைதானம் .................... இவ்வாறு அழைக்கப்படும் நாடுகளையும், நகரங்களையும் சொல்லுங்களேன் பார்ப்போம். 1)அமிர்தசரஸ் 2)சான் பிரான்சிஸ்கோ 3)ரோம் 4)ஆபிரிக்கா 5)எகிப்து 6)ஜப்பான் 7)நோர்வே 8)வத்திக்கான் 9)குவாங்கோ 10)துருக்கி 11)தென்னாபிரிக்கா 12)திபெத் 13)துருக்கி 14)சுவிஸ் - வெண்ணிலா - 07-03-2004 <b>1)இரகசியக் குறியீட்டு மொழியில் எழதப்பட்டுள்ள நான்கு வாக்கியங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஆனால் இரகசியக் குறியீட்டு மொழியில் ஆங்கில எழுத்துக்கள் அதே ஒழுங்கில் எழுதப்படவில்லை. குறிப்பிட்ட இடத்துக்கு நேரத்துக்கு வருக . SNYM குறிப்பிட்ட நேரத்துக்கு சந்தித்துக் கதைப்போம். TQSM வருக நாளை குறிப்பிட்ட இடத்துக்கு வருக YYNKM நாளை அன்பாகக் கதைப்போம் QKZ பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்குக. (I)நாளை சந்தித்துக் கதைப்போம் (II)நேரத்துக்கு குறிப்பிட்ட இடத்துக்கு வருக (III)நாளை குறிப்பிட்ட நேரத்துக்கு சந்தித்துக் கதைப்போம். வாக்கியத்தை எழுதுக. (IV) KZQ (V) YYSY</b> <b>2) குருவிகள் ஒரு தோப்புக்குச் சொந்தக்காரன். அங்கு மா வாழை பலா ஆகிய மரங்கள் இருந்தன. தோப்பில் 1/3 பகுதி மா மரங்கள் 1/4 பகுதி வாழை மரங்கள் பலா மரங்களோ 30 இருந்தன. அப்படியானால் குருவிகளின் தோப்பில் இருந்த மொத்த மரங்கள் எத்தனை</b>? <b> 3) விழிப்புலனற்றோருக்கு உதவி செய்யும் நோக்கில் நிதி வசூலிக்கப்பட்டது. ஒருவர் ஒரு தொகையை உண்டியலில் போட்டார். இரண்டாவது நபர் முதல் நபரை விட 2 மடங்கு தொகையை போட்டார். மூன்றாவது நபர் இரண்டாவது நபரை விட 3 மடங்கு தொகையையும் நான்காவது நபர் மூன்றாவது நபரை விட 4 மடங்கு தொகையையும் உண்டியலில் போட்டனர். நான்கு (1 2 3 4 ) பேரும் போட்ட மொத்தத் தொகை 8250/=. ஆகும் ஒவ்வொரு நபரும் உண்டியலில் போட்ட தொகை எவ்வளவு?</b> <b>கண்டுபிடியுங்கள்</b> - kavithan - 07-03-2004 vennila Wrote:<b>1)இரகசியக் குறியீட்டு மொழியில் எழதப்பட்டுள்ள நான்கு வாக்கியங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஆனால் இரகசியக் குறியீட்டு மொழியில் ஆங்கில எழுத்துக்கள் அதே ஒழுங்கில் எழுதப்படவில்லை. என்னால் முடிந்தவை <b>1) </b> 1-KTQ 2-SMNY 3-KMSTQ 4-நாளை அன்பாகக் கதைப்போம் 5-வருக வருக நேரத்துக்கு வருக 2) 72 நன்றி நித்திரை வருகின்றது நாளை பார்ப்போம் மற்றையதை. - Eelavan - 07-03-2004 (i)நாளை சந்தித்துக் கதைப்போம் KTQ (ii)நேரத்துக்கு குறிப்பிட்ட இடத்துக்கு வருக SMNY (iii)நாளை குறிப்பிட்ட நேரத்துக்கு சந்தித்துக் கதைப்போம். KMSTQ வாக்கியத்தை எழுதுக. (iv) KZQ நாளை அன்பாகக் கதைப்போம் (V) YYSY வருக வருக நேரத்துக்கு வருக 2)72 மரங்கள் 3)250 ரூபா - kavithan - 07-03-2004 ஒரு வினாவைத்தவிர மற்றைய எல்லா வினாக்களுக்கும் சரியாகப் பதிலழித்த சுட்டி வெண்ணிலவுக்கும் , ஈழவன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள். <b>அதற்கான விடைகள் இங்கு</b> 1. பொற்கோயில் நகரம்--அமிர்தசரஸ் 2. பொன்வாயில் நகரம்.-.சானஸ்பிரான்ஸ்கோ 3. ஏழு குன்றுகளின் நகரம்--உரோம் 4. இருண்ட கண்டம்-- ஆபிரிக்கா 5. நைலின் கொடை-- எகிப்து 6. முதலில் சூரியன் உதிக்கும் நாடு-ஜப்பான் 7. நள்ளிரவுச் சூரியநாடு.-- நோர்வே 8. புனித நாடு.--பாலஸ்தீனம் 9. சீனாவின் துயரம்-குவாங்கோ 10. ஜரோப்பாவின் நோயாளி--துருக்கி 11. தெற்கே உள்ள பிரித்தானியா-- நியூசிலாந்து 12. உலகத்தின் கூரை--திபெத் 13. மத்திய தரைக்கடலின் திறவுகோல்-- ஜிப்ரோல்டர் 14. ஜரோப்பாவின் விளையாட்டு மைதானம்-- சுவிற்சர்லாந்து - வெண்ணிலா - 07-03-2004 Quote:3)250 ரூபா <b>ஒவ்வொரு நபரும் உண்டியலில் போட்ட தொகை எவ்வளவு? </b> - kirubans - 07-03-2004 இதனையும் முயற்சி செய்து பாருங்கள். ஒரு மேசையில் மூன்று கொள்கலன்கள் முறையே 300 ml, 500 ml, 800 ml அளவுகளில் உள்ளன. முதல் இரண்டு கொள்கலன்களும் வெற்றுக் கொள்கலன்கள். மூன்றாவதில் 800 ml தண்ணீர் உள்ளது. தண்ணீரை வீணாக்காமல் (வெளியே சிந்தாமல்) மாற்றி மாற்றி இந்தக் கொள்ள்கன்களுக்குள் ஊற்றி எப்படி 400 ml தண்ணீரை ஏதவது ஒரு கொள்கனுக்குள் கொண்டு வருவது? 300 500 800 ----------------------------- 1. 0 0 800 2. 3. 4. . . - Eelavan - 07-03-2004 250,500,1500,6000 சரிதானே வெண்ணிலா - Eelavan - 07-03-2004 1)முதலில் 500ml கொள்கலனுக்குள் நீரை ஊற்றுதல் 2)அதிலிருந்து 300ml கொள்கலனுக்கு நீரை ஊற்றுதல் இப்போது 500 கொள்கலனுக்குள் 200ml நீர் இருக்கும் 800ml கொள்கலனுக்குள் மிகுதி 300ml நீர் இருக்கும் 3)இப்போது 300ml இலிருக்கும் நீரை திரும்பவும் 800ml கொள்கலனுக்குள் ஊற்றிவிட்டு 500ml கொள்கலனுக்குள் இருந்த 200ml ஐ 300ml கொள்கலனுக்குள் ஊற்றுதல் இப்போது 300ml கொள்கலனுக்குள் 200ml உம் 800ml கொள்கலனுக்குள் 600ml உம் எஞ்சும் 4)மறுபடியும் 800 இலிருக்கும் நீரை 500ml கொள்கலனுக்குள் நிரப்புதல் இப்போது 800ml கொள்கலனுக்குள் 600- 500=100ml எஞ்சியிருக்கும் 500 இலிருக்கும் நீரை 300 இற்குள் நிரப்பி அதனை திரும்பவும் 800 இற்குள் ஊற்றிவிட்டால் 100+300= 400ml ஆகிவிடும் - Eelavan - 07-03-2004 யாருக்காவது தலை சுற்றினால் அதற்கு நான் பொறுப்பில்லை - வெண்ணிலா - 07-03-2004 Eelavan Wrote:250,500,1500,6000 சரிதானே வெண்ணிலா <b>ம்ம்ம் வாழத்துக்கள்</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kirubans - 07-03-2004 வாழ்த்துக்கள் ஈழவன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|